"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

16 March 2017

துடிப்புள்ள கறையான்கள்

அறிமுகம்
பல்வேறு பண்புகளில் கறையான்கள் சிறப்புப் பெறுகின்றன. தோற்ற அமைப்புகூட்டமைப்புவாழ்க்கை முறை என நிறையக் கூறலாம். அல்லாஹ்வின் இச்சிறு படைப்பில் இருக்கும் மகத்தான அற்புதங்கள் என்னவென்று இத்தொடரில் கற்றுக்கொள்வோம். கறையான்கள் Termites என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன. எறும்புதேனி போன்று கறையான்களும் கூட்டமாகசமூகமாக வாழும் பூச்சியினமாகும் (Social insect). கரையான்கள் Isoptera (சம இறகிகள்) என்ற வரிசையைச் சேர்ந்தன. Iso என்றால், ‘ஒரே மாதிரி ‘ என்றும் Ptera என்றால், ‘இறக்கை ‘ என்றும் பொருள். அதாவதுகரையான்களின் ஒரு வகையான ஈசல்களின் முன் மற்றும் பின் இறக்கைகள் ஒரே மாதிரி இருப்பதால்இந்தப் பெயர் வந்துள்ளது. கறையான்கள் வெள்ளை எறும்புகள்  என்றும் அழைக்கப்படுகின்றன. காரணம் அவற்றின் வெளித்தோற்ற அமைப்புதான்.

தோற்றமும் வகைகளும்.

எங்காவது உக்கிப்போயிருக்கும் ஒரு மரக் குற்றியைத் தூக்கிப் பாருங்கள். நிச்சயமாக அதன் கீழ் ஏகப்பட்ட கறையான்களைக் கண்டுகொள்வீர்கள். கறையான்கள் எறும்புகளைப்போன்று அளவில் சிறியவை. என்றாலும் எறும்புகளிலிருந்தும் அவற்றின் வாழ்க்கை முறையிலிருந்தும் வித்தியாசமானவை. உடலின் இரு பக்கங்களிலும் மூன்று மூன்று வீதம் ஆறு கால்கள் காணப்படுகின்றன. ஒரு புற்றில் வாழும் சில கரையான்களுக்கு தலை பெரிதாகவும் உடல் சிறிதாகவும் இருக்கும். இன்னும் சில வற்றுக்கு இது மறுதலையாக இருக்கும். கொட்டும் கொடுக்கிகளும்சிறகுகளும் மாறி மாறி இருக்கும். நிறம் கூட வெள்ளை நிறம்கபில நிறம் என்ற அமைப்பில் இருக்கும். அளவிலும் வித்தியாசமான பருமன்களைக் கொண்டிருக்கும்.

உலகம் முழுதும் கரையான்களில்  சுமார் 275 பெரி இனங்களும்சுமார் 2750 வகையான சிறிய இனங்களும் உள்ளன. இவற்றில் ஒரு சில சிற்றினங்கள்மரங்களில் மன் கூடு செய்து வாழும். அவை மறித்த மரங்களைஅரித்து தின்று விடும். அநேகமானவை மண்ணில் புற்று அமைத்து வாழும்.கறையான்கள் கூட்டமாக வாழ்கின்ற படியால் சாதாரணமாக ஒரு கூட்டத்தில் 500 முதல் 500,000 வரை கறையான்கள் இருக்கும். பொதுவாக ஒரு கூட்டத்தில் நான்கு வகையான கறையான்கள் இருப்பதை அவதானிக்கலாம். இராணிக் கறையான் (Queen), ஆண் கறையான் (King), சிப்பாய்க் கறையான்கள் (Soldiers) மற்றும் வேலைக்காரக் கறையான்கள் (Workers) என்பனவாகும். இவை ஒவ்வொன்றைப் பற்றியும் சற்று நோக்குவோம்.

இராணிக் கறையான்.
ஒரு கறையான் கூட்டத்தின் முக்கிய கதாபாத்திரமே இவர்தான். ஒரு கூட்டத்தில் ஒரு இராணி மட்டுமே இருக்கும். இராணிக் கறையான் இல்லாமல் கறையான்கள் கூட்டம் சேர்வதில்லை. ஏனைய கறையான்களைவிடவும் இராணிக் கறையான் அளவில் பெரியது. சம அளவிலான நான்கு இறகுகளும் இருக்கும். கறையான் புற்றுக்குள் இராணிக் கறாயனுக்கு என்று ஒரு தணி அறை இருக்கும். அதில்தான் இராணி சொகுசாக இருப்பார். அவருக்கு வேலா வேலைக்குத் தேவையான உணவுகள் வேலைக்காரக் கறையான்களால் பகிரப்படும்.

ஆண் கறையானுடன் இணை சேர்ந்து கருக்கொண்ட இராணி 15 வினாடிகளுக்கு ஒரு முட்டை விகிதம் ஒரு நாளைக்கு 2000 வரையில் முட்டைகளை இடும். இராணிக்கறையான்களின் வாழ்நாள் 15 - 25 ஆண்டுகள் ஆகும். கட்டளை பிறப்பிக்கும் அதிகாரத்தை இராணியே வைத்தள்ளது. அதன் கட்டளைக்கு அமைவாக ஏனைய கறையான்கள் பணியாற்றும். சூரா அந்நம்லில் சுலைமான் (அலை) அவர்களது சம்பவத்தில் எப்படி இராணி எறும்பு மற்றைய எறும்புகளுக்கு கட்டளை பிறப்பித்ததோ அது போன்று. (அல்குர்ஆன் - 27:18) இப்படி ஒரு திட்டமிடப்பட்ட ஆட்சி முறை கறையான்களிடம் உள்ளது.

ஆண் கறையான்.

இராணிக் கறையானுடன் இணை சேருமளவுக்குத் தகுதிவாய்ந்த ஆண் கறையான் ஒன்றே இக்கூட்டத்தில் இருக்கும். அதற்கு இராஜாக் கறையான் என்பார்கள். இது தவிர மற்ற ஆண்பெண் கறையான்கள் எல்லாம் மலட்டுத் தன்மையுள்ளனவாக இருக்கும். சில சிற்றினங்களில் மட்டுமேஆண் கறையான் இறந்தல்மற்றொரு ஆண் கறையான்இராணிக்கறையானுடன் இணை சேரும். இராணிக்கறையானின் முட்டைகளிலிருந்து பொரிந்து வரும் குஞ்சுகளைமுதலில் ஆண் கறையான் பாதுகாக்கும். பின்பு கறையான்கள் பெருகியவுடன்குஞ்சுகளைப் பாதுகாக்கும் பணியினை  வேலைக்காரக் கறையான்கள் செய்கின்றன. ஆண்இராணிக் கறையான்கள் எளிதில் வெளியே சஞ்சரிப்பதில்லை. அதனால் இவற்றைப் பார்ப்பதும் அரிதாகவே இருக்கும்.

சிப்பாய்க் கறையான்கள்
சிப்பாய்க் கறையான்கள்தான் புற்றை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் பணியைச் செய்கின்றன. ஏனைய கறையான்களிடமிருந்தும்எறும்புபல்லிஓணான்தேள் போன்ற எதிரிகளிடமிருந்தும் இவைதான் புற்றையும் தமது ஏனைய உறுப்பினர்களையும் பாதுகாக்கின்றன. சிலபோது எதிரிகளுக்கு இடையில் நடக்கும் போரில் அதிகமான சிப்பாய்க் கறையான்கள் இறக்கவும் நேரிடுகின்றன. தமது கூட்டத்தைப் பாதுகாக்க அவை உயிர்த்தியாகம் செய்து போராடுகின்றன. களத்தைவிட்டு என்றும் பின்வாங்குவதில்லை. சிப்பாய்கள் குறைந்தால் உடனே அந்த இடத்தை நிரப்ப இராணிக் கறையான் முட்டைகளை இட்டு சிப்பாய்களை உருவாக்குகின்றது.

சிப்பாய்க் கறையான்களில் இரண்டு வகைத் தொழிநுட்பங்களைப் பயன்படுத்தும் கறையான்கள் உள்ளன. ஒன்று உடலைவிடப் பருத்த தலையுடன்வாயின் அருகில் அரிவாள் போன்ற இரண்டு கொடுக்குகளுடன் இருக்கும்.  இவை எதிரிகளைக் கொட்டி விசத்தைக் கக்கி தாங்க முடியாத வலியை ஏற்படுத்தி அந்த இடத்தை விட்டு ஓடச் செய்யும். இவை Mandibulate Soldiers எனப்படும் இரண்டாவது எதிரிகளின் மீதுதுர்நாற்றம் மிக்க சுரப்பியினைத் தெளித்து விடும். இவை Nasute Soldiers எனப்படும். இதன் துர் நாற்றத்தை சிலபோது நீங்களும் அனுபவித்திருக்கலாம்.

வேலைக்காரக் கறையான்கள்
இவர்கள்தான் புற்றை கட்டுவதிலும் அதனை விஸ்தரிப்பதிலும் பராமறிப்பதிலும் பாடுபடுபவர்கள். மிகத் திறமை வாய்ந்த கட்டிடக் கலைஞர்கள். தங்கள் உமிழ் நீரை மண்ணுடன் கலந்து அதனைப் பிசைந்துபதப்படுத்தி உருண்டை தயாரித்து புற்றைக் கட்டுவார்கள். அதன் உமிழ் நீரில் உள்ள இரசாயனக் கலவை எமது கையால் கூட இலகுவில் உடைக்க முடியாத புற்றுக்களை உருவாக்குகின்றது. புற்று எங்காவது சேதமடைந்தால் அதனை அறியும் ஒரு கறையான் தன் தலையை சுவற்றில் மோதி மற்ற கறையான்களை விழிப்படையச் செய்யும். உடனே அனைத்து வேலைக்காரக் கறையான்களும் அந்த இடத்தை சீரமைக்கும் பணியில் களமிறங்குகின்றன. வேலைக்காரக் கறையான்களில் இன்னுமொரு பகுதியினர் உணவு பரிமாறுபவர்களாகவும் இராணி கறையான் இடும் முட்டைகளையும் அதிலிருந்து வரும் குஞ்சுகளையும் பாதுகாக்கும் பணிகளையும் செய்கின்றன.

இந்த சிப்பாய் மற்றும் வேலைக்கார கறையான்களின் ஆயுள் காலம் ஒன்று முதல் இரண்டு வருடங்கள் வரைதான். மட்டுமன்றி இவற்றுக்கு கண்பார்வையும் இல்லை. பார்வைச் சக்தியின்றி இவை எத்தகைய வேலைகளையெல்லாம் செய்கின்றனவென்று பாருங்கள். அல்லாஹ்வின் இல்ஹாம்” எனும் முன் வழிகாட்டுதலின் அடிப்படையில் மிகக் கட்சிதமாக இவை பணியாற்றுகின்றன. சுப்ஹானல்லாஹ்!

ஈசல்கள்
ஈசல்கள் என்பதும் கறையான் வகையாகும். மழை காலங்களில் புற்றுகளிலிருந்து வெளிக்கிளம்பி வருமே அவைதாம். அல்லாஹ் அல்குர்ஆனிலும் ஈசலை (101:4) குறிப்பிடுகின்றான். இராணிக் கறையான் மார்ச்ஏப்ரல் பருவங்களில் அடுத்த இராணிச் சந்ததிகளை உருவாக்கவென்று பிரத்தியேக முட்டைகளை இடுகின்றது.  அதிலிருந்து வெளிவருபவையே ஈசல்கள். சுமார் ஐந்து மாதங்களில் இவை பறக்கும் நிலைக்கு வளர்ந்து விடும். நன்கு மழை பெய்து புற்றும் பூமியும் நன்கு ஈரமானவுடன் புற்றின் மேல் பகுதியில் 2CM நீளத்தில் பிறை வடிவில் வாயில்கள் அமைத்து இரவில் அவற்றை திறந்து வைத்து வாயிலில் ஏனைய கறையான்கள் வந்து ஈசல்களை வழியனுப்பக் காத்துக்கொண்டிருக்கும். பூமியில் நல்ல ஈரமும் சீரான காற்றும் நல்ல நிலா ஒளியும் உள்ள இரவில் ஈசல்கள் படை படையாக வெளியேற ஆரம்பிக்கின்றன. ஒரு புற்றிலிருந்து ஆயிரக் கணக்கான ஈசல்கள் வெளியேறும். அவற்றுக்கு சிறகுகள் இருப்பதால் இவை பறக்கின்றன. பின்பு சுற்றித் திரிந்து ஒரு நாளைக்குள் ஜோடி சேர்ந்துகொண்டு நிலத்தில் உள்ள வலைகளுக்குள் சென்று முட்டையிட்டு தனி கறையான் சாம்ராஜ்யத்தை உருவாக்கும் பணியை ஆர்பிக்கின்றன.

ஆனால் வெளியேறும் எல்லா ஈசல்களாளும் இவ்வாறு செய்ய முடிவதில்லை. காரணம்  புற்றிலிருந்து வெளியே வந்ததும் சிறகுகள் களன்றுமுட்டிமோதிபல்லிஉடும்புகோழிவௌவால்என எதிரிகளால் வேட்டையாடப்பட்டு அதிகமானவை இறந்து விடுகின்றன. சிலது மட்டும்தான் புற்றுக்களை உருவாக்குகின்றன. இது அல்லாஹ்வின் ஒரு கட்டுப்பாட்டுத் திட்டமிடலாகும். ஏனெனில் ஒரு நாளைக்கு பூமியின் புற்றுகளிலிருந்து வெளியேறும் ஈசல்கள் அனைத்தும் இறந்துவிடாமல் புற்றுகளை அமைக்குமென்றால் பூமியெங்கும் புற்றுக் காடாக மாறிவிடும். இது வாழ்வின் சமநிலைத் தன்மையைப் பாதிக்கும். அத்தோடு இதில் பிற உயிர்களுக்கு உணவையும் அவன் வைத்துள்ளான். எனவேதான் இந்த இறை ஏற்பாடு.

கறையான்களின் உணவு

கறையான்களின் பிரியமான உணவு காளான்கள்தான். அடுத்தபடியாக இறந்துபோன தாவரங்களின் கலங்கள் (செல்கள்). உயிருள்ள தாவரங்களை கறையான்கள் அறிப்பதில்லை. உலர்ந்தஉக்கிய மரங்களை அறிக்கும்போது அவற்றின் வாயில் சுரக்கும் ஒருவகை இரசாயனத் திரவம் மரத்தை மென்மையாக்குகிறது. அதனால் மரத்தை எளிதாக அறித்து சிறு சிறு துண்டுகளாக்க முடிகிறது. அவற்றை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைக்கிறது. பின்பு அவற்றின் மீது காளான்கள் முளைக்க ஆரம்பிக்கின்றன. அப்போது அவற்றை உணவாக உட்கொள்கின்றன.

கரையான் புற்றின் அதிசயம்

கண் பார்வை அற்ற கறையான்கள் புற்றுகளை நிர்மாணிப்பதில் வல்லவை. தாம் வாழும் சூழ்நிலைக்கேற்பதமது இடத்தைத் தேர்ந்தெடுக்கின்றன. எனவேமண்ணின் கீழ்மண்ணின் மேல்மரக்கிளைகளில் என வேறுபட்டு வாழும் இயல்பைப் பெற்றிருக்கின்றன. இவற்றில்ஏதேனும் ஒன்றினைத் தேர்ந்தெடுத்துஅதற்கு தகுந்தபடி தமது இருப்பிடத்தை அமைத்துக் கொள்கின்றன. அவைகளின் நிலவசிப்பிடத்தினைப் "புற்று" என்பர். சாதாரணமாக ஒரு அடி முதல் 20 அடி உயரம் வரை 30 மீட்டர் விட்டம் வரை இவை புற்றுகளைக் கட்டும். அத்திவாரம் உறுதியாக இருந்தால்தான் கட்டுமானம் உறுதியாக இருக்கும். எனவே புற்றின் உயரம் போலவே இரு மடங்கு அதன் கீழாலும் இருக்கும். ஒரு புற்றில் இரண்டு பகுதிகள் இருக்கும். ஒன்று பூமிக்குக் கீழே உள்ள அடுக்கு. இரண்டாவது பூமிக்கு மேலே உள்ள அடுக்கு. பூமிக்குக் கீழே குழிதோண்டி அந்த மண்ணைக் கொண்டு பூமிக்கு மேலே சுவரெழுப்புகின்றன. கரையானின் அளவுக்கு அது கட்டும் புற்றின் அளவை ஒரு மனிதனுக்கு ஒப்பிட்டால் அதாவது ஒரு கறையான் மனிதனின் உயரம் இருக்குமென்றால் அது கட்டும் புற்றின் அளவு துபாயில் உள்ள புர்ஜ் கலீபாவைவிட உயரமாக இருக்குமாம். சுபஹானல்லாஹ்!

நில மட்டத்திலிருந்து ஆழம் செல்லச் செல்ல ஒக்ஸிஜனின் அளவு குறையும். கறையான்களில் எண்ணிக்கையும் பல ஆயிரக்கணக்கில் இருப்பதால் இன்னும் ஒக்ஸிஜனின் அளவு குறைந்து கார்பன் அதிகரித்து உஷ்னமும் கூடி பெரும் சிக்கலை ஏற்படுத்தும். அதற்காக ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் இப்புற்றுகளில் சுவாசம் நடைபெறுகின்றது. பகற் பொழுதில் ஒரு தடவை வெளியிலிருந்து காற்று புற்றின் அடி ஆழம் வரை உள் இழுக்கப்படுகின்றது. இரவில் மீண்டும் அக்காற்று வெளியே தள்ளப்படுகின்றது. எனவே புற்றினுள் எப்போதும் குளிராக இருக்கும். அப்படியான காற்றோட்ட (Ventilation System) அமைப்பைபும் உண்டு.

சுருக்கமாக

கறையான்களின் வாழ்க்கை முறைகூட்டமைப்புடன் செயற்படும் தன்மைகட்டுப்பாடுதுடி துடிப்பான செயற்பாடுதமது சமூகத்தைப் பாதுகாக்க சண்டையிடுதல்உயிர்த் தியாகம் செய்தல்இணப் பெருக்கம்பார்வை இல்லாவிடினும் அற்புதமாக புற்றுகளை நிர்மாணிக்கும் ஆற்றல்எளிதில் பொருள்கள் உக்கிப்போக உதவுதல் என பல்வேறு சிறப்பியல்புகளுடன் கறையான்கள் எம்மைச் சுற்றி வாழ்ந்துகொண்டிருக்கின்றன. மனித அறிவே பிரம்மிக்கும் தொழில் நுட்பங்களைக் கொண்டு தமது வாழ்க்கையை ஓட்டும் இவை அல்லாஹ்வின் மாபெரும் அத்தாட்சிதான். அல்ஹம்துலில்லாஹ்!
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...