"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

27 March 2017

குடிகாரனுக்கு 40 கசயடி, அவதூறு பரப்புரவனுக்கு 80 கசயடி.

---------------------------------------------------------------------------------------------------------------------------------
*. "ஹாய் பிரண்ட்ஸ்! இந்தப் பையன் யாரு தெரியுமா? நேத்து நடந்த விபத்துல இவனோட கண்ணு ரெண்டும் பழுதாப் போச்சு. சோ! இந்த மெசேஜ நீங்க செயார் பண்ணினா வட்ஸ்அப் கம்பனி அவங்க எக்கவுண்டுக்கு 1 ரூபா போடுவாங்க."
*. "அவசரம்! அவசரம்! ஐந்து வயதுப் பிள்ளை ஒன்றுக்கு AB+ இரத்தம் மிக அவசரமாகத் தேவை. இந்த மெசேஜ உடனடியா செயார் பண்ணி உதவி செய்ங்க."
*. "ஹெலோ காய்ஸ்! இவங்க என்னா சொல்றாங்கன்னா இந்த சின்ன பாப்பா சேப்டி பின்ன முழுங்கிட்டு. அதுக்கு ஆபரேசன் பண்ணனுமாம். சோ இந்த மெசேஜ செயார் பண்ணினா வட்ஸ்அப் கம்பனி அவங்களுக்கு எட்டு ரூபா கொடுக்குறாங்க."
*. ”லா இலாஹ இல்லல்லாஹ்! முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்” இந்த மெசேஜ பத்து குரூப்புக்கு இப்பவே செயார் பண்ணுங்க. விடியிறதுக்குள்ள நல்ல செய்தி வரும். இல்லயா ரத்தம் கக்கி சாவீங்க…"
அய்யய்யோ அய்யய்யய்யோ! தாங்க முடியல.
யாரோ ஒருத்தன் முசுப்பாத்திக்கு இப்படி ஒரு மெசேஜ க்ரியேட் பண்ணி அனுப்புவான். அதோட ஒரு சின்னப் புள்ளய்ட போட்டவயும் ஒரு பொம்புள புள்ளய்ட போட்டவயும் ஒரு வொய்ஸ் மெசேஜயும் கூடவே சேத்து அனுப்புவான். இது கெடச்சதும் எங்கடவங்க உண்மயா? பொய்யா? என்று ஒன்னும் பாக்காம சமூகசேவ செய்ற நோக்குல அவ்வளவு மெசேஜயும் செயார் பண்ண ஆரம்பிப்பாங்க. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
சகோதரர்களே!
சகோதரிகளே!
இவை அனைத்தும் வெறும் பொய்கள் மட்டுமே!
வெறும் வத்தந்திகள் மட்டுமே!
இட்டுக்கட்டப்பட்ட அவதூறுகள் மட்டுமே.
சாராயம் குடிச்சவனுக்கு இஸ்லாத்துல 40 கசயடிதான். ஆனால் இதுபோன்ற வதந்திகளைப் பறப்புபவனுக்கு 80 கசையடிகள் கொடுக்கவேண்டும். நாம் வதந்திகளை மட்டுமல்ல பொய், வதந்தி, அவதூறு என எல்லாத்தையும் ஒன்றாகக் கலந்தல்லவா சேயார் செய்கிறோம். இதுக்கு எத்தனை கசையடிகளோ தெரியாது?
நபி (ஸல்) அவர்கள் “ஒரு மனிதன் தான் கேட்டதையெல்லாம் (ஆராயாது அப்படியே பிறருக்கு) சொல்வது அவன் ஒரு பொய்யன் என்பதற்குப் போதுமானதாகும்” என்று கூறினார்கள் (முஸ்லிம்)💓
நான் செயார் செய்யும் தகவலை யாரெல்லாம் படிக்கின்றார்களோ, படித்துவிட்டு அவர்கள் அதனை யாருக்கெல்லாம் செயார் செய்வார்களோ இப்படி எவ்வளவு காலத்திற்கு இது தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் செயார் ஆகிக்கொண்டே இருக்குமோ நான் கபுருக்குப் போனாலும் இந்த வதந்திகளை, அவதூறுகளை, பொய்களைப் பரப்பிய பாவம் இடைவிடாது தொடர்ந்தும் என்னை வந்து சேர்ந்துகொண்டே இருக்கும்.
எவ்வளவு ஆபத்தானதொரு பாவம் என்று பார்த்தீர்களா?
சகோதரர்களே!
சகோதரிகளே!
தயவுசெய்து சிந்தனையுடன் செயற்படுங்கள். நாம் செய்யும் ஓரிரண்டு நன்மைகளையும் இதுபோன்ற தகவல்களை பகிர்வதன் மூலம் அநியாயமாக வீணடித்துக்கொள்ளவேண்டாம். நன்மை கிடைக்கும் என்று பகிர்கின்றோம். ஆனால் பாவம் வந்து குவிகின்றது.
என்னையும் உங்களையும் வல்லவன் அல்லாஹ் பாதுகாப்பானாக. ஆமீன்!
----------------------------------------------------
அஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி)
B.A. (Cey) Dip. in Psychological Counseling.

உங்கள் கருத்து:

1 comments:

Anonymous said...

Really an important message sir.

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...