"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

06 December 2018

சூரியனைச் சுற்றும் சூரியகாந்தி

பலரும் அறிந்த ஒரு பூச் செடிதான் சூரியகாந்தி. ஆங்கிலத்தில் Sunflower என்று அழைப்பர். இப்பெயர் வரக் காரணம் சூரியகாந்திப் பூ சூரியனது தோற்றத்தில் இருப்பதாலாகும். இதன் அறிவியல் பெயர் ஹீலியாந்துஸ் (Helianthus). கிரேக்க மொழியில் ஹீலியா என்பது சூரியனையும்ஆந்துஸ் என்பது பூவையும் குறிக்கும்.

சூரிய காந்தியின் தாயகம் வட அமெரிக்காவாகும். அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தின் மாநிலப் பூவாகவும் இது விளங்குகின்றது. உக்ரேன் நாட்டின் தேசிய மலரும் சூரியகாந்திதான். பசுமைக்கொள்கையின் அடையாளமாக சூரியகாந்தி அடையாளப்படுத்தப்படுகின்றது. அத்தோடு உலகப் பிரபல ஓவியர் வான்கோவின் ஓவியங்களின் கருப்பொருளாக சூரியகாந்திகள்தான் அமைந்துள்ளன. இவ்வாறு சூரியகாந்திகள் எமது வாழ்வில் பிரதான இடத்தைப் பிடித்துள்ளன.

தாவரத்தின் அமைப்பு

சூரியகாந்தி செடிவகையைச் சேர்ந்தது. அதிலும் செடியினங்களிலேயே மிகவும் பெரியது இதுதான். சூரியகாந்திச் செடி 10 அடி உயரத்திற்கு வளரக்கூடியது. மிக வேகமாக வளரக்கூடிய செடியும் இதுதான். சாதாரண மனித உயரத்தைவிட நான்கு அல்லது ஐந்து அடிகள் உயரமாக வளரும். அந்த உயரமான தண்டில் இலைகள் வளரும். செடியின் உச்சியில் பூ பூக்கும். பூ 30 செ.மீ. அகளத்தில் இருக்கும். ஒரு செடியில் ஒரு பூ மாத்திரமே பூக்கும். ஆனால் ஆயிரக்கணக்கான சந்த்திகளுக்கான விதைகளை விதைத்துவிட்டே மடியும். சூரியகாந்திப் பூ ஒன்றை எடுத்து நோட்டமிட்டால் அதில் இன்னும் சின்னஞ்சிறிய ஆயிரக்கணக்கான பூக்களைக் கண்டுகொள்ளலாம். ஆக சிறு சிறு பூக்களாலான பெரிய ஒரு பூதான் சூரியகாந்திப் பூ.

மகரந்தச் சேர்க்கை

அமெரிக்காரஷ்யாஇந்தியா போன்ற நாடுகளில் இலாபமீட்டும் நோக்கில் ஏக்கர் கணக்கான நிலத்தில் சூரியகாந்திச் செடிகள் பயிரிடப்படுகின்றன. காய்ந்த விதைகளை மண்ணில் புதைத்துபசளையும் நீரும் ஊற்றிப் பராமறிக்கவேண்டும். இரண்டு வாரங்களில் விதை பூமியுடன் மோதி வெளியே தலைகாட்ட ஆரம்பிக்கும். ஆறு மாதங்களில் எட்டு அல்லது 10 அடியைத் தொட்டுவிடும். அதற்குள் மொட்டுக்கள் அரும்பி பூவாக மலர ஆரம்பித்திருக்கும். சூரியகாந்திப் பூ வந்ததும் அயல் மகரந்தச் சேர்க்கையை ஏற்படுத்தி அதிக விதை உற்பத்தி செய்யலாம். அதாவது ஒரு பூவை மற்றதொரு பூவுடன் உராயும்படி செய்யவேண்டும்.

இதற்கு உகந்த பொருத்தமான நேரம் காலை 9 மணியிலிருந்து 11 மணிவரைதான். தொடர்ந்து 10 நாட்களுக்குள் இவ்வாறு செய்ய வேண்டும். விவசாய நிலங்களாக இருந்தால் அங்கு காற்றடிக்கும்போது பக்கத்து பக்கத்திலிருக்கும் பூக்கள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து மகரந்தச் சேர்க்கை செய்துகொள்கின்றன. அல்லது தேன் பூச்சிவண்டுவண்ணாத்தி போன்றவற்றால் மகரந்த மணிகள் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு கடத்தப்பட்டு சேர்க்கை நடைபெறுகின்றன.

சூரியகாந்தி விதைகள்.

சூரியகாந்திப் பூவின் நடுப்பகுதியை உற்று நோக்கினால் அங்கும் சிறிய சிறிய பூக்கள் இருப்பதை காணலாம். அவைதான் சூரியகாந்தி காய்ந்துபோகும்போது விதைகளாக மாறுகின்றன. சாதாரணமாக ஒரு சூரியகாந்திப் பூவில் 2000 வரையான விதைகள் காணப்படுகின்றன. பூக்களில் விதைகள் முதிர்ச்சி அடையும்போது பச்சைக் கிளிகள் அவற்றை உண்பதற்காக அலகால் கொத்தி சேதத்தை உண்டாக்கும். எனவே கிளிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக அவ்வப்போது தகரப் பெட்டிகளில் அடித்து சப்தம் எழுப்பி கிளிகளைத் துரத்துவார்கள் விவசாயிகள்.

சூரியகாந்தி விதைகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று கருப்பு. மற்றையது வெள்ளைக் கோடுகளிடப்பட்ட விதைகள். சமையல் எண்ணெய்க்காக கருப்பு விதைகள் பயன்படுத்தப்படுகின்றன. மாஜரீன் தயாரிப்பதற்காகவும் சிற்றுண்டிகள் செய்வதற்காகவும் வெள்ளை நிற விதைகள் பயன்படுத்தப்படுகின்றன. சூரியகாந்திகளிலும் வெவ்வேறு வகை இருப்பதனால் தாவர வகைகளுக்கு ஏற்ப விதைகளும் பூவின் நிறங்களும் வித்தியாசப்படுகின்றன.

சூரியனைச் சுற்றும் சூரியகாந்தி

சூரியகாந்திப் பூவில் இருக்கும் அற்புதமே இதுதான். காலையில் கிழக்கு நோக்கும். மதிய நேரத்தில் நேராய் வானை அன்னாந்து பார்க்கும். மாலையில் மேற்கை நோக்கும். சூரியன் மறைந்ததும் தலையைத் தொங்கப்போட்டு நிற்கும். இப்படி ஒவ்வொருநாளும் சூரியனை எதிர்பார்த்துக் காத்திருந்து சூரியன் போகும் திசையெல்லாம் பின்துயரும் சூரிய காந்திப் பூக்கள் பெரியதொரு அற்புதம்தான். இங்குதான் அல்லாஹ் அவற்றுக்கு வழங்கியுள்ள இல்ஹாம் எனும் உள்ளுணர்வு உதிப்புவேலைசெய்கின்றது.

அதுவல்லாமல் சூரியனைப் பின்துயரவேண்டுமென்ற எந்த சுய புத்தியும் இல்லை அதற்கு. தாவரங்கள் ஒளித்தொகுப்பின் மூலம் உணவுற்பத்தி செய்துகொள்ள சூரியஒளி மிக அவசியம். அதிலும் சூரியகாந்திக்கு சூரிய வெப்பம் சரியாகக் கிடைத்தாகவேண்டும். அதனால்தான் வெப்ப வலயப் பிரதேசங்களில் சூரியகாந்தி நன்றாக வளர்கின்றது. எனவேதான் தனது முகத்தை சூரியனைநோக்கியே திருப்பிக்கொள்கின்றது. சூரிய காந்திச் செடியை நெருப்பிட்டுக் கொழுத்தினாலும் மீண்டும் அது தன் விதைகளைக்கொண்டு பீனிக்ஸ் பறவைபோன்று முளைத்துவிடும். வெப்பத்தைத் தாங்கும் சக்தி அதற்கு உண்டு.

மருத்துவ நலன்கள்

உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் மருத்துவ பயன்களையும்  சூரியகாந்தியின் முழுத்தாவரமும் உள்ளடக்கியிருக்கின்றது. சிறந்த மருத்துவ குணம் கொண்டவை. சூரிய காந்தி எண்ணெயில் கல்சியம்கொழுப்பு உட்பட பல்வேறு விதமான சத்துகள் அடங்கி உள்ளன. மேற்கு நாடுகளில் 80 சதவிகித சமையலறைகளை சூரிய காந்தி விதை எண்ணெய் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. விட்டமின்கள்அமிலங்கள்வேதிப்பொருட்கள் என அனைத்தையும் தன்னகம்கொண்டுள்ளன இவை. எண்ணெய் அதிக கொழுப்புச்சத்தை குறைக்கும். இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும்.

விதையில் உள்ள பொட்டாசியம் சத்து மிகுந்த பயனளிக்கக் கூடியதாகும். ஒரு கோப்பை சூரிய காந்தி விதையில் ஆயிரத்து 300 மில்லி கிராம் பொட்டாசியம் காணப்படுவதாக உணவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதன் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயை உபயோகிப்பதன் மூலம் பக்கவாத நோய் தாக்குதலும்சிறுநீரகத்தில் கல் உருவாவதும் தடுக்கப்படுகிறது. சிறிதளவு சூரிய காந்தி விதையில் 32 சதவிகிதம் மெக்னீசியம் காணப்படுகிறது. இது நரம்பு செல்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தசை தொடர்பான நோய்கள் வராமல் தடுப்பதில் மெக்னீசியத்தின் பங்கு முக்கியமானது. இதயம் தொடர்பான நோய்கள்இரத்த அழுத்தம் போன்ற நோய்களையும் சூரிய காந்தி விதைகள் கட்டுப்படுத்துகின்றன. ஆஸ்துமா தொடர்பான நோய்களையும் குணப்படுத்துகின்றன.

சிகரட் பிடிப்பதற்கு அடிமையாகியுள்ளோரை அதிலிருந்து மீட்பதற்கு சூரியகாந்தி விதைகள் மிகவும் உபயோகமாகின்றன. கறுப்புத்  தோல் நீக்கிய விதைகளைத் தினமும் உண்டுவந்தால் புகைபிடிக்கும் எண்ணம் கூட மாறும் என்று வைத்தியர்கள் கூறுகின்றனர். மலேரியா காய்ச்சலை போக்கக் கூடிய சிறந்த மருந்தாகவும் சூரியகாந்தி விளங்குகிறது. இப்படி மலர் எனப் பார்த்தால் அழகையும் மருந்தெனப் பார்த்தால் குணத்தையும் தரும் அல்லாஹ்வின் அற்புதமானதொரு படைப்புதான் சூரியகாந்தி. நீங்களும் வீட்டில் நட்டிப்பாருங்களேன்!

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...