ஆலிப் அலி (இஸ்லாஹி)
தொலைக்காட்சியின் பரவலாக்கம் இன்று உலகம் பூராகவும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. நாளுக்கு நாள் நவீன தொழிநுட்ப முறைகளைக் கொண்டு புதுப்புது வடிவிலான தொலைக்காட்சிகள் வடிவமைக்கப்படுகின்றன. அவற்றுடன் சேர்ந்தாற்போல் தொலைக்காட்சி அலைவரிசைகளின் பெருக்கமும் அவற்றுக்கிடையில் நிகழும் போட்டித்தன்மையும் தம்பால் ரசிகர்களை ஈர்க்கவேண்டும் என்பதற்காகப் புதுப்புது நிகழ்ச்சிகளைத் தயாரித்து அறிமுகம்செய்கின்றன. எவ்வாறாயினும் உலக நடப்புகளைப் பார்த்தறிவதற்கும் அறிவை விருத்து செய்வதற்குமான சிறந்த ஊடகம் தொலைக்காட்சி என்பது ஒரு பொதுவான நோக்கு!
எனினும் இன்றைய தொலைக்காட்சிகளினால் விளையும் அனுகூலங்களைவிடவும் பிரதிகூலங்களே அதிகமென சமூகவியலாளர்களும் உளவியலாளர்களும் கருதுகின்றனர். இன்று தொலைக்காட்சிகள் ஒவ்வொரு வீட்டையும் ஆக்கிரமித்து ஆட்டிப்படைக்கின்றன. மனிதனின் உடை, நடை, பாவனைகள்கூட தொலைக்காட்சியினாலேயே தீர்மானிக்கப்பட்டு வருகின்றது. சமூகத்தில் தொலைக்காட்சியின் பிரதிகூலங்களினால் பெருவாரியாகப் பாதிக்கப்படுவது சிறுவர்களென நவீன ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. எனவே இது குறித்து இக்கட்டுரையில் சற்று ஆராய்வோம்.
தொலைக்காட்சியின் பரவலாக்கம் இன்று உலகம் பூராகவும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. நாளுக்கு நாள் நவீன தொழிநுட்ப முறைகளைக் கொண்டு புதுப்புது வடிவிலான தொலைக்காட்சிகள் வடிவமைக்கப்படுகின்றன. அவற்றுடன் சேர்ந்தாற்போல் தொலைக்காட்சி அலைவரிசைகளின் பெருக்கமும் அவற்றுக்கிடையில் நிகழும் போட்டித்தன்மையும் தம்பால் ரசிகர்களை ஈர்க்கவேண்டும் என்பதற்காகப் புதுப்புது நிகழ்ச்சிகளைத் தயாரித்து அறிமுகம்செய்கின்றன. எவ்வாறாயினும் உலக நடப்புகளைப் பார்த்தறிவதற்கும் அறிவை விருத்து செய்வதற்குமான சிறந்த ஊடகம் தொலைக்காட்சி என்பது ஒரு பொதுவான நோக்கு!
எனினும் இன்றைய தொலைக்காட்சிகளினால் விளையும் அனுகூலங்களைவிடவும் பிரதிகூலங்களே அதிகமென சமூகவியலாளர்களும் உளவியலாளர்களும் கருதுகின்றனர். இன்று தொலைக்காட்சிகள் ஒவ்வொரு வீட்டையும் ஆக்கிரமித்து ஆட்டிப்படைக்கின்றன. மனிதனின் உடை, நடை, பாவனைகள்கூட தொலைக்காட்சியினாலேயே தீர்மானிக்கப்பட்டு வருகின்றது. சமூகத்தில் தொலைக்காட்சியின் பிரதிகூலங்களினால் பெருவாரியாகப் பாதிக்கப்படுவது சிறுவர்களென நவீன ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. எனவே இது குறித்து இக்கட்டுரையில் சற்று ஆராய்வோம்.
அண்மைக்காலமாக வெகுசன ஊடகங்கள் தொலைக்காட்சியின் விபரீதங்கள் குறித்து பல அதிர்ச்சிதரும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அவை சிறார்களை தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்கத்தான் வேண்டுமா? என்ற அச்சத்தைத் தோற்றுவித்துள்ளன.
சிறுவர்கள் நேரவரையறையின்றி சுதந்திரமாகத் தொலைக்காட்சி பார்ப்பது அவர்களில் நினைத்துப் பார்க்க முடியாதளவு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகின்றது. இதற்கு அண்மையில் எமது நாட்டில் இடம்பெற்ற ஒரு கவலைக்கிடமான சம்பவத்தை நினைவு கூறலாமென நினைக்கின்றேன். 'தொலுகொள்ள பிரதேசத்தைச்சேர்ந்த ஒன்பது வயதுச் சிறுவனொருவன் கடந்த தேர்தல் காலத்தின்போது திரையிடப்பட்ட ஹிந்தி சினிமாவொன்றைப் பார்த்துள்ளான். அதிலே தூக்கிட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளும் ஒரு காட்சியைப் பார்த்த அச்சிறுவன் அதனைச் செய்துபார்க்க முற்பட்டு பரிதாபகரமாக இறந்துள்ளான்"
இது தொலைக்காட்சியின் விபரீதத்தால் ஏற்பட்ட முதலாவது அனுதாபச்சம்பவமல்ல. இதற்கு முன்பு பல நாடுகளிலும் இது போன்ற பல நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இதற்குக் காரணம் தொலைக்காட்சியை முழுமையாக உண்மையென நம்பி நேர வரையறையின்றி அவற்றுக்கு முன்னால் காலம்கடத்துவதே. இன்று சர்வதேச ரீதியாக குழந்தைகள் தொலைக்காட்சிக்கு அடிமையாகிவருகின்றனர். இதனைத் தொலைக்காட்சிக்கு முன்னால் அவர்கள் செலவிடும் நேரத்தைக் கணிப்பதன் மூலம் விளங்கலாம். சர்வதேச ரீதியிலான சில தரவுகள் இதனை மேலும் வலுப்படுத்துகின்றன.
அமெரிக்காவில் ஒரு குழந்தை ஓராண்டுக்கு சுமார் 900 மணி நேரங்களைப் பாடசாலையிலும் 1023 மணிநேரங்களைத் தொலைக்காட்சி பார்ப்பதிலும் செலவிடுகின்றது.
*> பிரித்தானியாவைச் சேர்ந்த 11-15 இடைப்பட்ட வயதுடைய சிறார்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் 7½மணி நேரங்களைத் தொலைக்காட்சி பார்க்கச் செலவிட்டுள்ளார்கள். இவ்வாறு அவர்கள் ஒரு வருடத்திற்கு 3½ மாதங்களைத் தொலைக்காட்சிக்கு முன்னால் கழித்துவருவதாக அறியப்பட்டுள்ளது.
*> கலிபோனியாவில் செண்டியாகோ நகரில் விவசாயம் செய்யும் குடும்பங்களில் உள்ள மூன்று வயதுக்கும் ஆறு வயதுக்குமிடைப்பட்ட குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பது பற்றி எடுக்கப்பட்ட ஆய்வில் ஒரு வாரத்தில் அவர்கள் 35 மணி நேரங்களைத் தொலைக்காட்சி பார்ப்பதற்கு ஒதுக்குவதாகத் தெரியவந்தது.
இவ்வாறு அதிகமான ஆய்வுகள் சர்வதேச ரீதியில் குழந்தைகள் தொலைக்காட்சிக்கு அடிமைப்பட்டிருப்பதையும் அவர்களின் வாழ்நாளின் பெரும்பகுதியைத் தொலைக்காட்சிக்கு முன்னால் கழித்துவருவதையும் உறுதிப்படுத்துகின்றன.
இது குறித்து குழந்தை மன நல மறுத்துவர் பமீலா மாஸா கூறுவதாவது 'ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கார்டூனுக்கும் நிஜமான நடிகர்களுக்குமிடையே வித்தயாசம் காணமுடியாது. தொலைக்காட்சியில் காணும் அனைத்தையும் உண்மை என்றே நினைக்கின்றனர்" ஆகவே அக்குழந்தை சமூகத்தில் நடப்பவைதான் தொலைக்காட்சியில் நடக்கின்றன என்றும் தொலைக்காட்சியில் நடப்பவைதான் சமூகத்தில் நடக்கின்றன என்றும் நம்புகின்றன.
இவ்வாறு தொலைக்காட்சியில் காட்டப்படும் அடி தடி, சண்டை, கொலை, கொள்ளை, ஆபாசம் போன்ற மோசமான காட்சிகளைப் பார்த்து வளரும் குழந்தைகள் இவை சமூகத்தில் இயல்பாகவே நடப்பவையென்று சர்வ சாதாரணமாக எண்ணி இவற்றுக்கு பழக்கப்பட்டுவிடுகின்றனர்.
எந்த அளவுக்கு குழந்தைகள் தொலைக்காட்சியில் பார்க்கின்றவற்றை அப்படியே பின்பற்றுகின்றார்கள் என்பதனை ஆராயும் விதமாக வொஷிங்டன் நகரில் 'என்ட்ரூ மெல்ட்ஷோப்" என்ற விஞ்ஞானி மேற்கொண்ட ஆய்வை இங்கு குறிப்பிடலாமென நினைக்கின்றேன். 14மாதங்களுக்கும் 24மாதங்களுக்கும் இடைப்பட்ட வயதுடைய குழந்தைகள் சிலரை அவர் அவ்வாய்வுக்காகப் பயன்படுத்தினார். ஒவ்வொரு குழந்தைக்கும் முன்னால் ஒரு தொலைக்காட்சியை வைத்து, அதிலே விளையாட்டுப் பொருளொன்றைப் பல துண்டுகளாகப் பிரித்து வேறாக்கிக்கொண்டிருந்த ஒருநிகழ்ச்சியை ஒளிபரப்பினார். அதேசமயம் தொலைக்காட்சியில் காணப்பட்ட குறித்த அதே பொருள் குழந்தைகளிடமும் வழங்கப்பட்டது. தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த குழந்தைகள் தம்மிடம் வழங்கப்பட்ட குறித்த விளையாட்டுப் பொருளை அவ்வாறே பல துண்டுகளாகப் பிரித்து வேறாக்கினர். சில மாதங்களின் பின்பு அதேபோன்ற விளையாட்டுப் பொருட்களை அக்குழந்தைகளிடம் வழங்கியபோது மீண்டும் அவர்கள் அதனை அவ்வாறே பிரித்து வேறாக்கினர்.
இந்நிகழ்வு ஆய்வாளர்களைப் பெரிதும் வியப்புக்குள்ளாக்கியது. பல மாதங்கள் கடந்தாலும் அழியாத தாக்கத்தை தொலைக்காட்சிகள் குழந்தைகளின் மனதில் ஏற்படுத்துகின்றன. குழந்தைகளைத் தொலைக்காட்சிகள் உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் பலமாகப் பாதிப்படையச் செய்கின்றன என்பதனை Dr.மெல்ட்ஷோப்பின் ஆய்வு சுட்டிக்காட்டுகின்றது.
1. குழந்தைகள் தாங்கள் பார்க்கும் வன்முறைக் காட்சிகளைக் கண்டு பயப்படுவர்.
2. அவர்கள் தாம் பார்த்ததை நிஜ வாழ்வில் கொண்டுவர முயற்சிப்பர்.
3. ஏனையவர்களிடம் வன்மையாக நடக்க முயற்சிப்பர்.
4. நன்மை எது, தீமை எது என்பதனை பிரித்தறிய முடியாமலே போய்விடுவர்.
இவ்வாறு ஒவ்வொருவரும் தமது மனோநிலைக்கு ஏற்ப தமக்கு விருப்பமான பாத்திரத்தை தொலைக்காட்சியிலிருந்து எடுத்துக்கொள்கின்றனர். திரைப்படங்களாக இருந்தாலும் சீரியல் நாடகங்களாக இருந்தாலும் அவை வில்லன், கதாநாயகன் என்ற இரு பாத்திரங்களின் அடியாகவே தயாரிக்கப்படுகின்றன. வில்லனின் பாத்திரத்தை விரும்புபவரின் மனோநிலை படிப்படியாக முரட்டு சுபாவமுடையதாக மாறுகின்றது. நல்லவனாகச் சித்தரிக்கப்படும் கதாநாயகனும் சிலபோது எதிரிகளுடன் சண்டைசெய்து அவர்களைக் கொலை செய்வதனாலும் அப்பாத்திரத்தை விரும்புபவர்கள் தமக்கு யார் எதிரியாகத் தோன்றுகிறானோ அற்ப விடயங்களுக்கும் அவனுடன் சண்டையிடவும் கொலைசெய்யவும் முற்படுகின்றனர். மல்டிமீடியா மற்றும் கிரபிக்ஸ் தொழிநுட்பங்களுடன் எடுக்கப்படும் இத்திரைப்படங்கள் ரசிகர்களை மென்மேலும் பிரமிக்கவைத்து அதனைச் செய்துபார்க்கத் தூண்டுகின்றன. இந்த அளவிற்கு தொலைக்காட்சிகள் மனித மனதை வெகுவாகப் பாதிக்கச்செய்கின்றன.
தொலைக்காட்சியில் காண்பிக்கப்படும் கொடூரமான அல்லது ஆபாசமான காட்சிகளைப் பார்த்து வளரும் குழந்தைகளின் மனோநிலை எவ்வாறிருக்கும் என்பதைச் சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இதுதொடர்பாக அமெரிக்க மருத்துவ ஒன்றியம் வெளியிட்ட அறிக்கை இங்கு நோக்கத்தக்கது. 'ஒரு அமெரிக்கக் குழந்தை பெரியவனாகும் போது மிகமோசமான விளையாட்டுகள் ஒரு இலட்சத்து முப்பதாயிரமும் பதினொராயிரம் கொலைக்காட்சிகளையும் தொலைக்காட்சி வழியாகக் கண்டுவளர்கிறது" என அவ்வறிக்கை குறிப்பிடுகிறது. எனவே குழந்தைகளைத் தனிமையிலோ அல்லது சுதந்திரமாகவோ தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்கலாகாது. அவ்வாறு செய்வதால் அவர்கள் தொலைக்காட்சிக்கு அடிமையாகி பல்வேறு நோய்களுக்கும் ஆளாகின்றனர். அதுமட்டுமல்லாது நீண்டநேரம் தொலைக்காட்சிக்கு முன் அமர்வதைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஜேர்மனியின் குழந்தைகள் மருத்துவ ஒன்றியத்தின் தலைவர் இவ்வாறு கூறுகின்றார். 'சிறுவர்கள் கணினி, தொலைக்காட்சி என்பவற்றை அளவுகடந்து உபயோகிப்பது அவர்களது உடல், உள மற்றும் சிந்தனா ரீதியான வளர்ச்சிகளில் ஒரு தழும்பை ஏற்படுத்துகின்றது" இதனை ஸியாடெல் நகர்ப்பகுதியில் உள்ள சிறுவர் வைத்தியசாலையினது மருத்துவ அமைப்பின் தலைவரான 'Dr.டிமிட்ரி கிறிஸ்ட்ரகஸ்" மேற்கொண்ட ஆய்வு உறுதிப்படுத்துகிறது.
Dr.டிமிட்ரி அவர்கள் 1345 குழந்தைகளை இவ்வாய்வுக்கு ஈடுபடுத்தினார். அவர்களுள் நாளாந்தம் மூன்று மணிநேரங்கள் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளிடம் 30% அளவு கவனக்குறைவும் மனக் குழப்பமும் ஏற்பட்டிருந்தது. இதனால் அவர்கள் சிந்திப்பதிலும் ஒரு விடயத்தை முன்வந்து மேற்கொள்வதிலும் அதில் முழுமனதுடன் ஈடுபடுவதிலும் தயக்கம் காட்டுபவர்களாகவும் கிரகிக்கும் வேகம் குறைந்தவர்களாகவும் காணப்பட்டதாக அவர் கூறுகின்றார்.
மற்றுமொரு எச்சரிக்கையாக பிரித்தானிய உளவியல் மருத்துவர் 'Dr.எரிக்ஸெஜ்மன்" 2007 ஏப்ரல் மாதத்தில் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் இவ்வாறு கூறினார். 'மூன்று வயதுக்குக் கீழ்ப்பட்ட குழந்தைகளை சுதந்திரமாகத் தொலைக்காட்சி பார்க்க அனுமதிப்பதால் அவர்களது ஆரோக்கியமான உறக்கமும் உள வளர்ச்சியும் எதிர்காலத்தில் சமூகத்துடனான ஒத்திசைவுகளும் சிக்கலுக்குள்ளாகின்றன" என்றார்.
மேலும் சுவீடனைச் சேர்ந்த 'இன்ங்கா ஸோன்ஸன்" என்ற பெண் சமூகவியளாலர் 6 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட பல்வேறு சமூக மட்டங்களிலிருந்தும் சில குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து நடாத்திய ஆய்வில் 'நாளொன்றுக்கு இரண்டு மணி நேரங்களுக்கு அதிகமாகத் தொலைக்காட்சி பார்ப்பவர்களிடம் அசாதாரன நடத்தை இருப்பது தென்பட்டதாகவும் அவர்களது அவதான சக்தி மிகக் குறைந்திருந்ததாகவும் தொலைக்காட்சியில் பார்ப்பவற்றைப் பாடசாலையில் செய்துபார்க்க முற்படுவதால் பல குழப்பங்களை விளைவிப்பதாகவும் அவர்களைக் கட்டுப்படுத்த சிரமப்பட வேண்டியிருந்ததாகவும் அவர் கூறினார்.
இது மாத்திரமன்றி தொலைக்காட்சியினால் உடல்ரீதியாகவும் பலத்த பாதிப்புகள் ஏற்படுகின்றன. உணவுட்கொள்ளும் நேரத்தில் கூட அநேகம்பேர் தம்மையே மறந்து தொலைக்காட்சியில் மூழ்கிவிடுகின்றனர். உணவுட்கொள்ளும்போது தொலைக்காட்சியைப் பார்த்தவாறு உட்கொள்வதால் கூடிய கவனம் தொலைக்காட்சியிலேயே செலுத்தப்படுகின்றது. இதனால் உணவை சீராக மென்று விருப்பத்தோடு உண்ண முடிவதில்லை. இவ்வாறு தொடர்ந்தும் செய்துவருவதால் உடல் அபரிமிதமாகப் பருத்துச் செல்கின்றதென வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். நியூஸிலாந்தில் 1/3 பகுதி குழந்தைகளின் அபரிமித உடற்பருமனுக்கான காரணம் அவர்கள் தொலைக்காட்சி பார்த்தவாறே உணவுட்கொள்வதெனக் கண்டறியப்பட்டுள்ளது. அத்தோடு பிரித்தானியாவில் இந்நிலை ஒரு மில்லியனை எட்டியுள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.
தொலைக்காட்சித் திரையைத் தொடர்ந்து நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருப்பதால் பல்வேறு நோய்களுக்கும் முகங்கொடுக்க நேர்வதாக ஜப்பானியக் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள ஒரு கணிப்பீடு சுட்டிக்காட்டுகின்றது. நீண்ட நேரத்துக்கு தொலைக்காட்சி பார்ப்பதால் பெரும்பாலான ஜப்பானியக் குழந்தைகளின் பார்வைத் திறன் அருகிவருவதாக அக்கணிப்பீடு சுட்டிக்காட்டுகின்றது.
*> 1980களில் 6-12 வயதுக்கு இடைப்பட்ட வயதுடைய பாடசாலைப் பிள்ளைகளின் கண்பார்வைக்கோளாறு 3/100 ஆக இருந்தது. இது 1993இல் 5/100 ஆக அதிகரித்தது.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...