"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

10 October 2009

“ரிப்கா பாரி” வெளிக்கொணரப்படாது மூடிமறைக்கப்படும் உண்மைகள்

…..ஆலிப் அலி…..

ரிப்கா பாரிஅண்மையில் பத்திரிகைகளினதும் தொலைக்காட்சி, வானொலிச் செய்தியறிவிப்புளினதும் இணையத் தளங்களினதுமாக சர்வதேச பேசுபொருளாகக் காணப்பட்ட ஒரு பெயர். நாமனைவரும் அறிந்த விடயம். இவ்வாறு இப் பதினேழு வயது யுவதி உலகளவில் பிரபலமாவதற்கு பெரிதாக ஒன்றும் சாதனைகள் செய்துவிடவில்லை. இஸ்லாத்தை விட்டு விட்டு கிறிஸ்தவ மதத்தைத் தழுவிக்கொண்டமைதான் இவ்வாறு இவர் பிரபல்யம் பெறக் காரணம். இந்த யுவதி மதம்மாறிச் சென்றதைச் சாட்டாகவைத்துக்கொண்டு ஊடகங்கள் இஸ்லாம் மிகப் பயங்கரமானதொரு கொள்கை. பெண்களுக்கு அதில் எந்த சுதந்திரமுமில்லை. அதனால்தான் மக்கள் இஸ்லாத்தைவிட்டும் விரண்டோடுகின்றார்கள் போன்ற புரளிகளை மக்கள் மத்தியில் கிளப்பிவிட்டுள்ளன.
தூய இஸ்லாமிய பயிற்றுவிப்பின்கீழ் வளர்க்கப்படாத, இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்கள் குறித்தும் அது வளர்ந்து வந்த வரலாற்றுப் படிமங்கள் குறித்தும் அதனால் இம்மையிலும் மறுமையிலும் கிடைக்கும், கிடைக்கவிருக்கும் நற்பாக்கியங்கள் குறித்தும் அறிவுபுகட்டப்படாத யாராக இருந்தாலும் நவீன மேற்குலகின் சிந்தனைகளில் சலவைசெய்யப்பட்டு அடிபட்டுச்செல்வது சாத்தியத்திலும் சாத்தியம்தான். ஏன் தெரியுமா? அந்த அளவிற்கு இஸ்லாமிய எதிர்ப்பு சிந்தனையாளர்கள் இஸ்லாத்தைக் கருவறுப்பதற்காக மிக நுணுக்கமான முறைகளிலும் பலமாகவும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
இதற்காக உச்சபட்ச அளவில் ஊடகங்களைப் பயன்படுத்துகின்றார்கள். இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் பொய்க் குற்றச்சாட்டுகளையும் அபாண்டங்களையும் சுமத்துகின்றார்கள். தீவிரவாதம், தீவிரவாதி (Terrorism, Terrorist) போன்ற பிரயோகங்களை அதிகமாகப் பயன்படுத்துகின்றார்கள். இது இவ்வாறிருக்க ஒரு தனிமனிதனின் மதமாற்ற விடயத்திற்கு ஊடகங்கள் இந்தளவு முக்கியத்துவம் கொடுத்து அதனை மக்கள்முன் ஜனரஞ்சகப்படுத்திவிட்டாலும் அதே ஊடகங்களால் வெளிக்கொணரப்படாது மூடி மறைக்கப்படுகின்ற மற்றுமொரு அம்சமும் இருக்கின்றது. அதுபற்றி சற்று ஆராய்ந்தால் ரிப்கா பாரி, தஸ்லிமா நஸ்ரின், சல்மான் ருஸ்திபோன்றவர்களுக்கு இவ்வூடகங்கள் ஏன் அதிமுக்கியத்தும் கொடுக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
வேறு ஒன்றுமல்ல, இன்று உலகில் இஸ்லாம் எழுச்சிபெற்று வருவதை, குறிப்பாக அது மேற்குலக நாடுகளில் துரிதகதியில் பரவிப் படர்ந்து வருவதை ஜீரனிக்க முடியாத காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள்தாம் இவ்வாறான சதிவேலைகளைச் செய்கின்றனர். அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மன், பிரான்ஸ் எனப் பல்வேறு நாடுகளிலும் இஸ்லாத்தைத் தழுவுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. சமீபத்திய ஆய்வுகளும் புள்ளிவிவர அறிக்கைகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன. 
பிரித்தானியாவில் இஸ்லாம் :
பிரித்தானியாவில் கிறிஸ்தவத்திற்கு அடுத்து இரண்டாவது மிகப்பெரிய மதமாக இஸ்லாம் வளர்ச்சிகண்டுள்ளது. அதிகமான இளைஞர்கள் இஸ்லாத்தால் கவரப்பட்டுள்னர். பிரித்தானியாவில் இன்று இரண்டு மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அவர்களில் அரை விழுக்காட்டினர் பிரித்தானியாவில் பிறந்து வளர்ந்தவர்களாவர்.
பிரித்தானியாவின் முன்னாள் உள்நாட்டுச் செயலாளர் பாகிஸ்தானுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தபோது பிரித்தானிய முஸ்லிம்கள் நாட்டில் எல்லாத் துறைகளிலும் பங்களிப்புச் செய்வதாகக் குறித்துக்காட்டினார். அண்மைய புள்ளிவிபர அறிக்கையொன்றின்படி பிரித்தானிய முஸ்லிம்கள் அந்நாட்டுப் பொருளாதார வளர்ச்சிக்கு கடந்த வருடம் (2008) மாத்திரம் 31 பில்லியன் பவுன்களைப் பெற்றுக்கொடுத்துள்ளனர். 
பிரித்தானிய முஸ்லிம்கள் இஸ்லாமிய விழுமியங்களை நல்ல முறையில் ஒழுகி நடப்பதாலும் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் இவ்வாறான பங்களிப்புகளைப் புரிவதாலும் அந்நாட்டின் நன்மதிப்பை வென்றுள்ளதோடு அவர்கள் இஸ்லாத்தின்பால் கவரப்படுவதற்கும் காரணமாக உள்ளனர்.
ஜேர்மனியில் இஸ்லாம் :
ஜேர்மனிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கருத்துத்தெரிவிக்கையில் 2007ம் ஆண்டு மாத்திரம் ஜேர்மனியில் சுமார் 1000 பேர் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர் என்கிறார். ஜேர்மனியில் வாழும் 3.4 மில்லியன் முஸ்லிம்களில் 15 ஆயிரம்பேர் புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர்களாவர் என 2008ம் ஆண்டின் கணிப்பீடொன்று சுட்டிக்காட்டுகின்றது. 2004 இற்கும் 2006 இற்குமிடைப்பட்ட காலத்தில் 3000 இற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். அதிலும் அதிகம் இஸ்லாத்தில் இணைபவர்களாக பெண்களே காணப்படுகின்றனர்.
ஜேர்மனியின் பெண் ஆய்வாளரான மேரி எலிஸபத் போமன்என்பவர் பெண்கள் இஸ்லாத்தை நோக்கிச் சென்ற பாதைகள் என்ற தனது நூலில் இஸ்லாத்தில் நுழைவோரில் 80% ஆனவர்கள் கிறிஸ்தவர்களென்றும் 20% ஆனவர்கள் இறைமறுப்பாளர்களான நாஸ்திகர்களென்றும் குறிப்பிடுகின்றார். 
ஜேர்மனியின் பிரபல எழுத்தாளரும் ஊடகவியலாளருமான ஹென்றிக் ப்ரோடர்கூறுகையில் ஜேர்மனியர்களே! நான் கூறுவதைத் தெளிவாகக் கேளுங்கள். நான் உண்மையாகவே இஸ்லாத்தை ஏற்றுவிட்டேன். அதற்குக் காரணமாயிருந்தது பள்ளிவாயில் இமாமுடனான எனது தொடர்புதான்என்று தான் இஸ்லாத்தை ஏற்றதைப் பகிரங்கப்படுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து இவருக்கெதிராக ஜெர்மனிய ஊடகங்கள் கடுமையான விமர்சனங்களைக் கொட்டியுள்ளன.
பிரான்ஸில் இஸ்லாம் :
அண்மையில் பிரான்ஸ் நாட்டு ஜனாதிபரி நிக்கொலஸ் சர்கோஸி” “பர்தா மதத்திற்கான அடையாளமல்ல அடிமைத்துவத்திற்கான அடையாளம்என்று பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டு உலக முஸ்லிம்களின் எதிர்ப்பைச் சம்பாதித்துக்கொண்டார். இவர் இவ்வாறு கூறக்காரணம் பிரான்ஸில் அதிகமான பெண்கள் இஸ்லாத்தை ஏற்று இஸ்லாமிய முறைப்படி பர்தா அணிந்து தம் வாழ்வை அமைத்துக்கொள்ளத் தலைப்பட்டுள்ளமையே.
ஒவ்வொரு வருடமும் பிரான்ஸில் 3600பேர் இஸ்லாத்தில் நுழைவதாகவும் இதுவரை 53377பேர் முஹம்மத் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டுள்ளதாகவும் அந்நாட்டின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. அத்தோடு இங்கு புதிதாக இஸ்லாத்தை ஏற்றோரில் 80% ஆனோர் யூதர்களாவர். வருடத்திற்கு 2000 பேரிற்கும் அதிகமானவர்கள் அமெரிக்காவில் இஸ்லாத்தின்பால் கவரப்படுகின்றனர். அதுமட்டுமன்றி செப்டம்பர் 11 இன்பின் அமெரிக்காவில் அதிகமான அல்குர்ஆன் பிரதிகள் விற்பனையாகிவருவதும் குறிப்பிடத்தக்கவொன்று.
இன்று மேற்கின் சில அறிவுஜீவிகள் இஸ்லாம் குறித்த நல்ல சிந்தனையைப் பெற்று மக்கள்முன் பிரஸ்தாபிப்பவர்களாகவும் காணப்படுகின்றனர். அமெரிக்காவின் முன்னாள் அட்டானி ஜெனரல் ராம்சே க்ளார்க்கூறுகையில்; “பொருளாதார மேலாதிக்கமும் பேராசையும் அடாவடித்தனமும் கோலோச்சுகின்ற இக்கால சூழலில் மனித வாழ்வை மேம்படுத்துகின்ற மாற்றுத்திட்டமாக இஸ்லாம் திகழ்கிறதுஎன்கிறார்.
ஏனைய மதங்களின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டதுபோல் இஸ்லாமிய அடிப்படைச் சட்டங்களின் சில பகுதிகளையேனும் ஏற்று நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பிரிட்டிஷ் அரசு ஆலோசிக்கவேண்டும். சவுதி அரேபியாவிலோ அல்லது வேறு முஸ்லிம் நாடுகிளிலோ உள்ளதுதான் இஸ்லாமிய சட்டம் என்ற எண்ணத்தை விட்டொழிக்கவேண்டும்.என்று பிரித்தானிய ஆங்கிலிகன் திருச்சபைகளின் தலைவர் னுச.ரொவான் வில்லியம்ஸ் அழைப்பு விடுக்கின்றார்.
இவ்வாறு மேற்குலகில் மாத்தரமன்றி உலகளாவிய ரீதியில் மக்கள் இஸ்லாத்தை நோக்கி விரைந்துகொண்டிருக்கின்றார்கள். இதனைச் சகித்துக்கொள்ள முடியாதவர்கள், மக்கள் இஸ்லாத்தில் பிரவேசிப்பதைத் தடுப்பதற்காக இஸ்லாத்தை பிற்போக்கு சிந்தனையாகவும் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கின்றனர். டென்மார்க்கில் நபியவர்கள் குறித்து கேலிச்சித்திரம் வெளியிட்டது, அமெரிக்காவில் புனித கஃபாவை ஒத்தவடிவில் மதுக்கடை திறக்கப்பட்டது, இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக பிஃத்னா (Fitna) என்ற குறுந்திரைப்படம் தயாரிக்கப்பட்டது, அல்குர்ஆன் என்று கருத்துத் திரிபுபடுத்தப்பட்ட போலியான குர்ஆன்களை மக்கள்மத்தியில் வினியோகித்தது, பிரான்ஸில் பர்தா அணியத் தடைவிதிக்க முனைப்புக் காட்டுவது, ஜேர்மனில் பர்தா அணிந்தமைக்காக மர்வா ஷொபினி எனும் கர்பினித்தாயை நீதிமன்றில்வைத்து நீதிபதிகளுக்கு முன்னால் 18 தடவைகள் கத்தியால்குத்திக் கொலைசெய்தது, ஈவிரக்கமற்ற முறையில் சில முஸ்லிம்கள் ஒரு மனிதனை கதறக்கதற தக்பீர் கோஷங்களோடு கழுத்தை அருத்தெரிவதுபோன்ற காட்சிகளைத் தயாரித்தது, அவற்றை இணையத்திலும் கையடக்கத் தொலைபேசிகளிலும் பரவவிட்டது…… இன்னும் இதுபோன்ற பல்வேறு நாசகாரச் செயல்களையெல்லாம் செய்தது எதற்காக? மக்களை இஸ்லாத்திலிருந்தும் தூரப்படுத்துவதற்காகவே…..!
ஆனால் இன்று இதன் விளைவுகள் தலைகீழாக மாறி அமைந்துள்ளன. இவ்வாறான துவேச, வஞ்சக செயல்களின் மூலம் இஸ்லாம் பற்றி அறியப்படாத பலரிடத்திலும் இஸ்லாம் அறிமுகமாகி இதுபற்றி அவர்கள் தீவிரமாகத் தேடி, ஆராய்ந்து, கற்று இறுதியில் உண்மையை உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் நிலமையே இறுதிமுடிவாகியுள்ளது.
தற்போது  ஒரு விடயத்தை சற்று சிந்தித்துப் பாருங்கள். ஒரு தனிநபர் வேறு மதம் மாறிச்சென்றதை பூதாகரமாக ஊதிப் பெருப்பித்துக் காட்டும் ஊடகங்கள் ஏன் அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் பிரான்ஸிலும் ஜேர்மனிலும் ஸ்பைனிலும் வேறு பல நாடுகளிலும் ஆயிரக்கணக்கானவர்கள் இஸ்லாத்தின்பால் வந்துகொண்டிருப்பதை இம்மியளவேனும் முக்கியத்துவம்கொடுத்து செய்திவெளியிடாமல் மூடி மறைக்கின்றார்கள்? இஸ்லாம்குறித்த செய்தி மக்கள் மத்தியில் செல்லக்கூடாது என்ற கீழான நோக்கம்தான்.
எவ்வளவுதான் மூடி மறைத்தாலும் இஸ்லாம் ஓங்கி வளர்கின்றதென்பதை யாராலும் மறுக்க முடியாது. இஸ்லாம் எதிர்கொள்ளும் சவால்களையும்விட மிக மிக வேகமாக வியாபகமாகிவருகின்றது. எல் ஒஸர்வடர் ரோமாஎனும் பத்திரிகை வெளியிட்ட செய்தியின்படி இன்று உலகின் பெரிய சமயமாக இஸ்லாம் விளங்குகிறது. கத்தோலிக்க மதத்தை 17.4% ஆன மக்கள் பின்பற்றிவரும் அதேவேளை 19.2% ஆனவர்கள் இஸ்லாத்தைப் பின்பற்றிவருகின்றனர். இதுமட்டுமன்றி இன்று மேற்கில் அதிகமான கிறிஸ்தவ ஆலயங்கள் மூடப்பட்டு அவை இரவு விடுதிகளாகவும் உணவகங்களாகவும் வியாபாரஸ்தளங்களாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. போப்பாண்டவர் தான் மூன்று விடயங்களுக்கு அஞ்சுவதாக தனது நூலொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது பலரையும் சிந்திக்கவைத்துள்ள அதேநேரம் இஸ்லாத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதாகவுமுள்ளது. அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

1.            ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் தமக்குள் பிளவுபட்டுக்கொள்கின்றமை.
2.            மேற்கில் அதிகமானோர் இஸ்லாத்தைத் தழுவுகின்றமை.
3.            21ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் ஒரு பகுதி முஸ்லிம் நாடாக   மாறப்போகின்றமை.

ரிப்கா பாரி போன்ற ஒருவரல்ல ஒருநூறுபேர் இஸ்லாத்தைவிட்டுச்சென்றாலும் இஸ்லாத்திற்கு ஒன்றும் குறையேற்படப்போவதில்லை. ஏனெனில் இது இறைமார்க்கம். சத்திய மார்க்கம். சத்தியம் தோற்று அசத்தியம் வெல்வதுபோன்றிருந்தாலும் இறுதியில் வெல்வது சத்தியம்தான் என்பதில் ஐயமில்லை.

 “நபியே கூறுவீராக! சுத்தியம் வந்துவிட்டது. அசத்தியம் அழிந்துவிட்டது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்” 
(அல்குர்ஆன்- 17:81)

…..ஆலிப் அலி…..…..ஆலிப் அலி…..

உங்கள் கருத்து:

2 comments:

aysha said...

yes..Amenna..''But Allah knoweth, and ye know not''

Anonymous said...

first ask parents how they following islam after children s we groving up childrens islamic path if not they answer to Allah judgment day

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...