"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

26 March 2010

இஸ்லாஹிய்யா அதிபர் உஸ்தாத் ரம்ஸி அவர்களுடன் ஒரு நேர்காணல்.

இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரியை இலங்கைவாழ் முஸ்லிம் சமூகத்தின் ஒரு சொத்தாகவே நாம் கருதுகின்றோம்.

...ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)...

1987 இல் ஆரம்பிக்கப்ட்ட மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி 2010 ம் கல்வி ஆண்டிலிருந்து முற்றிலும் புதிய முறையிலான  கல்வித்திட்டத்தின் பிரகாரம் இயங்கவுள்ளது. இப்புதிய கல்வித்திட்டம் குறித்தும் பொதுவாக இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி குறித்தும் அதன் அதிபர் உஸ்தாத் ரம்ஸி அவர்களுடனான நேர்காணலை வாசகர்களுடன் பரிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

கேள்வி :     இஸ்லாஹியா அரபுக்கல்லூரியின் அதிபர் என்ற வகையில் இஸ்லாஹிய்யா பற்றி வாசகர்களுக்கு ஓர் அறிமுகத்தைச் சுருக்கமாக வழங்க முடியுமா?

பதில் :     இஸ்லாஹியா அல்லாஹ்வின் அருளால் 1987ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி மாதம்பை பழைய நகரில் ஆரம்பிக்கப்பட்டது. மாதம்பை ஜும்ஆப் பள்ளி வாயிலுக்கு உரித்தான அதனோடு இணைந்த சிறியதொரு கட்டிடத்தில் 25 மாணவர்களுடனும் இரண்டு ஆசிரியர்களுடனுமே இக்கல்லூரி தனது பயணத்தைத் ஆரம்பித்தது. அன்றுமுதல் 1999ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதிவரை அக்கட்டிடத்திலேயே இயங்கிய இஸ்லாஹிய்யா 2000ஆம் ஆண்டு தற்போது கல்லூரி அமைந்துள்ள, தனக்கே சொந்தமானதொரு வளாகத்திற்கு 
இடம்பெயர்ந்தது.

இன்று இஸ்லாஹிய்யாவில் 145 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஆரம்பத்தில் காணப்பட்ட வளப்பற்றாக்குறை காரணமாக இரண்டு, மூன்று வருடங்களிற்கு ஒரு முறைதான் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். எனினும் படிப்படியான மனித மற்றும் பௌதீக வளர்ச்சிக்கு ஏற்ப 2004ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கேள்வி :   இஸ்லாஹிய்யா ஆரம்பிக்ப்பட்ட காலப்பிரிவில் இலங்ககையில் நூற்றுக்கும் மேற்பட்ட அரபுக் கல்லூரிகள் காணப்படத்தான் செய்தன. இந்நிலையில் மற்றுமொரு கல்லூரியை உருவாக்க எந்தவகையில் அவசியம் ஏற்பட்டதென நீங்கள் கருதுகிறீர்? 

பதில் :     பொதுவாக அரபுக் கல்லூரிகள் சமூகத்திற்குத் தேவையான ஆலிம்களை உருவாக்கும் நோக்கிலேயே இன்றளவில் இயங்கிவருகின்றன. இது சமூகத்தின் இன்றியமையாத தேவையும் கூட. ஆனாலும் இஸ்லாம் ஒரு பூரண வாழ்க்கைத் திட்டம் என்றவகையில் வாழ்க்கையின் பல்வேறு துறைகளிலும் இஸ்லாமிய அடிப்படையிலான மாற்றங்களை, செயற்றிட்டங்களைக் கொண்டுவரும் இகாமதுத்தீன் பணியில் இஸ்லாமிய அறிவு, ஆன்மீகப் பலம், ஆளுமைகள் என்பனவோடு அர்ப்பணத்துடன் செயல்படக்கூடிய தாஈக்களான, சமூகத் தலைவர்களான ஆலிம்களை உருவாக்குவது சமூகத்தின் மற்றுமொரு இன்றியமையாத தேவையாகும். இத்தேவையைப் பூர்த்திசெய்யும் உயர்ந்த இலட்சியத்திலேயே இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

கேள்வி   :     இந்த உயர்ந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றப் போதுமான வளங்களை இஸ்லாஹிய்யா கொண்டுள்ளதா?

பதில் :     ஆரம்ப காலத்துடன் ஒப்பிடுகையில் இன்றளவில் தாராளமான வளங்களை இஸ்லாஹிய்யா தன்னகம் கொண்டுள்ளது. இஸ்லாஹிய்யாவில் தற்போது 10 முழுநேர விரிவுரையாளர்களும் பகுதி நேர விரிவுரையாளர்களாக ஐந்து பேரும் கடமைபுரிகின்றனர். இவர்களில் பலரும் எகிப்து, யெமன் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உயர் பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டம்பெற்றவர்களாவர். இதுதவிர அல்அஸ்ஹர் பல்பலைப்கழகத்தால் அனுப்பிவைக்கப்பட்ட எகிப்து நாட்டைச் சேர்ந்த விரிவுரையாளர் ஒருவரும் கடமையாற்றுகின்றார். 

மேலும் இஸ்லாஹிய்யாவின் விரிவரையாளர்களில் ஒருவர் யெமன் ஜாமிஅதுல் ஈமான் பல்பலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டப்படிப்பையும் மற்றொருவர் அங்கேயே முதுமானிப் பட்டப் படிப்பையும் மற்றுமெருவர் சூடானின் ஜாமிஆ அல்அப்ரீகிய்யா அல்ஆலமிய்யா பல்பலைக்கழகத்தில் முதுமானிப் பட்டப் படிப்பையும் தொடர்வதற்காக கற்றல் விடுமுறையில் சென்றுள்ளனர்.

இஸ்லாஹிய்யாவின் வாசிகசாலை இலங்கையில் உள்ள மிகப்பெரிய இஸ்லாமிய வாசிகசாலைகளுள் ஒன்றாகும். இதில் சுமார் 10,000 இற்கும் மேற்பட்ட நூல்கள் காணப்படுகின்றன. இஸ்லாஹிய்யாவின் ஊடக மையத்தைப் பொறுத்தவரை அது நவீன தொழிநுட்பத்தை கல்வியிலும் இஸ்லாமிய அழைப்புப் பணியிலும் பயன்படுத்தும் நோக்கில் செயற்படுகின்றது. இதில் நாளாந்த நாட்டு நடப்புகளைத் தெரிவிக்கும் செய்தி நிகழ்ச்சிகள், சர்வதேச செய்திகள் என்பனவும் பாடத்திட்டத்துடன் தொடர்பான வீடியோ மற்றும் ஓடியோ நாடாக்கள் என்பனவும் மாணவர்களுக்காக நேரசூசி அடிப்படையில் காண்பிக்கப்படுகின்றன.

இஸ்லாஹிய்யாவின் துணை நிறுவனமான தகவல் தொழிநுட்பத்திற்கான இஸ்லாமிய நிறுவனம் - Islamic Institute of Information Technology (iiit)  இஸ்லாஹிய்யா மாணவர்களது தகவல் தொழிநுட்பத்துறை அறிவை மேம்படுத்துவதற்கான கற்கைகளை வழங்குவதோடு அதற்கான பயிற்சிகளையும் வழங்குகின்றது. இதில் இஸ்லாஹிய்யா மாணவர்கள் மாத்திரமன்றி வெளிவாரியாகவும் சுமார் 3000 இளைஞர் யுவதிகள் பயிற்சி நெறிகளை முடித்து வெளியேறியுள்ளனர். 1997 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் Tertiary and Vocational Education Commission இனால் அங்கீகரிக்கப்பட்தாகும்.

கேள்வி   :     இவற்றுக்குப் பொருத்தமாக இஸ்லாஹிய்யாவின் பௌதிக வளங்கள் எந்த அளவில் காணப்படுகின்றன?

பதில் :     தற்போது இஸ்லாஹிய்யா பௌதீகரீதியிலும் கணிசமானளவு வளர்ச்சியடைந்துள்ளதைக் காணமுடிவதையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்.  வளாகத்தினுள் நுழையும்போது தோன்றும் பிரதான இரு மாடிக்கட்டிடம் அலுவலகத்தையும் வகுப்பறைகளையும் கொண்டிருக்கின்றது. அதனை அடுத்துள்ள மூன்று மாடிக்கட்டிடத்தின் மேல் மாடியில் கேட்போர் கூடமும் இரண்டாம் மாடியில் வாசிகசாலை, ஊடக மையம் என்பனவும் கீழ்ப்பகுதியில் மேலும் இரு வகுப்பறைகளும் காணப்படுகின்றன. அதனை அடுத்துள்ள இரண்டு மாடிக்கட்டிடத்தின் மேல் மாடியில் மாணவர்களுக்கான விடுதியும் கீழ் மாடியில் இஸ்லாஹிய்யாவின் துணை நிறுவனமான தகவல் தொழிநுட்பத்திற்கான இஸ்லாமிய நிறுவனமும் அமையப்பெற்றுள்ளன.

அத்தோடு சிறியதொரு மறுத்துவ நிலையமும் இஸ்லாஹிய்யாவை அண்மித்ததாகக் கட்டப்பட்டுள்ளது. மாணவர்களது விளையாட்டுச் செயற்பாடுகளில் கவனம்செலுத்தி இரண்டு கரப்பந்தாட்ட மைதானங்களும் அவர்களுக்காக அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து இஸ்லாஹிய்யாவின் பள்ளிவாயில் அமைந்துள்ளது. பள்ளிவாயிலுக்கு மேலாக இன்னும் இரண்டு மாடிகள் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளன. அதனை அண்மித்ததாக இன்னும் இரண்டு பெரிய விடுதிகளும் காணப்படுகின்றன. அத்தோடு ஆசிரியர்கள் தங்குவதற்கான விடுதிகளும் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளன.
கேள்வி   :     இன்றைய காலவோட்டத்தில் அதிலும் கல்வி உலகில் பாரிய அபிவிருத்திகள் நிகழ்ந்து வருவதைக் காணக்கூடியதாய் உள்ளது. இத்தகையதொரு சூழ்நிழையில் கற்றல் கற்பித்தல் முறைகளை இஸ்லாஹிய்யா எவ்வாறு கையாள்கிறது?

பதில் :     உண்மையில் இஸ்லாஹிய்யாவின் பாடத்திட்டம் மிகவும் நவீனமயமானது. காலமாற்றத்திற்கேற்ப மாணவர்களினதும் சமூகத்தினதும் நலன் கருதி அதில் பல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் செய்து வந்துள்ளோம். அந்தவகையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்ட முறைமையை இங்கு அறிமுகப்படுத்துவது சிறந்ததென நினைக்கின்றேன்.

ஆசிரியர் மையக் கல்வி முறையுடன் இணைந்த பாடத்திட்டத்திலிருந்து மாறி மாணவர் மையக் கல்வி முறைமையுடன் அமைந்த நவீன கற்பித்தல் முறைமை தற்போது இஸ்லாஹிய்யாவில் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கவொன்று. மேலும் நவீன கல்வி முறைமைகளின் அடிப்படையில் Semester System, Unit System, Continents  Assessment ஆகிய முறைமைகளே தற்போது இஸ்லாஹிய்யாவில் பின்பற்றப்படுகின்றன.

இவ்வருடம் முதல் இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரியின் புதிய கலைத்திட்டத்தின்படி கல்லூரியின் கற்கை நெறியானது ஏழு வருடங்களைக்கொண்டதாகும். இது இரண்டு கட்டங்களை உள்ளடக்கியுள்ளது. அதன் முதற் கட்டம் Diploma in Arabic and Islamic Studies; என்றும் இரண்டாம் கட்டம் Licentiate Certificate in Arabic and Islamic Studies என்றும் அறிமுகப்படுத்தப்படுகின்றது.

இதன் முதற்கட்டம் மூன்று வருடங்களைக் கொண்டது. இதில் அரபு மொழி, அல்குர்ஆன், அல்ஹதீஸ், பிக்ஹ், அகீதா, தஃவா மற்றும் தர்பிய்யா போன்ற ஷரீஆத் துறைப்பாடங்களும் ஆங்கிலம், தகவல் தொழிநுட்பம், வாழ்க்கைத் திறன் போன்ற இதர பாடங்களும் கற்பிக்கப்படும். இம்மூன்று வருட கற்கை நெறியை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்யும் மாணவர்களுக்கு Diploma in Arabic and Islamic Studies; சான்றிதல் வழங்கப்படும்.

அதேவேளை மாணவர்கள் கலை மற்றும் வர்த்தகத் துறைகளில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கும் தயார்படுத்தப்படுவார்கள். அவர்களால் இப்பரீட்சைக்குத் தோற்றுவதற்கு கணக்கியல் அல்லது அரசியல், பொருளியல், வணிகக் கல்வி அல்லது அரபு மொழி ஆகிய பாடங்களைத் தெரிவசெய்ய முடியும்.

முதலாம் கட்டத்தில் ஷரீஆத் துறைப் பாடங்களில் விஷேட சித்திபெறும் மாணவர்கள் மாத்திரமே இரண்டாம் கட்ட கற்கை நெறிக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஏனைய மாணவர்கள் வேறு துறைகளில் பிற நிறுவனங்களில் தமது உயர்கல்வியைத் தொடர வழிகாட்டப்படுவார்கள்.

எமது கலைத்திட்டத்தின் இரண்டாம் கட்ட கற்கைநெறி நான்கு வருடங்களைக் கொண்டுள்ளது. இதில் அரபு மொழி, பிக்ஹ், அகீதா, உலூமுல் குர்ஆன், உஸ{லுல் ஹதீஸ், உஸ{லுல் பிக்ஹ், உஸ{லுத் தஃவா மற்றும் ஸீரா, தாரீஹ் போன்ற ஷரீஆத் துறைப் பாடங்களும் ஆய்வு முறைமைகளும் ஆழமாகக் கற்பிக்கப்படும்.

மேலும் ஏனைய தனியார் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து ஆங்கிலம், தகவல் தொழிநுட்பம், முகாமைத்துவம் போன்ற பாடங்களில் டிப்ளோமா  பயிற்சி நெறிகள் நடாத்தப்பட்டு அவற்றுக்கான பிரத்தியேகமான சான்றிதழ்களும் வழங்கப்படும். அதேசமயம் இம்மாணவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாக கலைமானிப் பட்டப்பரீட்சைக்கும் தயார்படுத்தப்படுவார்கள். அதுமாத்திரமன்றி ஷரீஆத் துறையில் விசேடதிறமையும் ஈடுபாடுமுள்ள மாணவர்களுக்கு வெளிநாட்டுப் பல்பலைக்கழகங்களில் தமது உயர் கல்வியைத் தொடர்வதற்கான புலமைப் பரிசில்களும் ஏற்பாடுசெய்து கொடுப்பதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்வோம்.

இத்திட்டத்தின் கீழ் நாம் ஏற்படுத்தியுள்ள மற்றுமொரு விசேட அம்சம் யாதெனில் வேறு அரபுக்கல்லூரிகளில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிவிட்டு ஷரீஆக்கற்கைகளையும் முடித்து பட்டம்பெற்று வெளியேறிய மாணவர்களுக்கு தமது அடுத்தகட்ட உயர்கல்வியைத் தொடர இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி வழியமைத்துக்கொடுத்துள்ளது. இன்ஷா அல்லாஹ் இதற்கான மாணவர்கள் இன்னும் மூன்று வருடங்களின் பின்பே அனுமதிப்பரீட்சையொன்றின் மூலம் சேர்த்துக்கொள்ளப்படுவர். இவர்கள் இஸ்லாஹிய்யாவின் இரண்டாம் கட்ட பாட நெறிக்குள் அனுமதிபெற்று தமது உயர்கல்வியைத் தொடர்வார்கள். 
கேள்வி   :     இந்தவகையில் நீங்கள் எதிர்பார்க்கும் விளைவுகளைப் பெறுவதற்கு கல்லூரிக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களது தகைமைகளும் முக்கியம்தானே?

பதில் :     நிச்சயமாக மாணவர்களது தகைமைகளும் நாம் எதிர்பார்க்கும் விளைவுகளில் தாக்கம் செலுத்துகின்றன. இஸ்லாஹிய்யாவின் நோக்கத்தை நிறைவேற்றக்கூடிய, இஸ்லாத்தின் தூதை மக்கள் முன் எத்திவைக்கக்கூடிய சிறந்த தாஈக்களை உருவாக்கவேண்டும் என்றவகையில் இஸ்லாஹிய்யாவில் அனுமதிபெற விரும்பும் ஒரு மாணவனிடம் அடிப்படையாக சில தகைமைகளை நாம் எதிர்பார்க்கின்றோம்.

இஸ்லாஹிய்யாவிற்கு அனுமதிபெற விரும்பும் மாணவன் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் மூன்று பாடங்களில்  C தரச் சித்தியுடன் கணிதம், தமிழ் உட்பட மொத்தம் ஆறு பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். சாதாரண தரப் பரீட்சையில் கணிதப் பாடத்தில் சித்தியடையாத மாணவர்கள் ஐந்து பாடங்களில் C தரச் சித்தியுடன் தமிழ் உட்பட மொத்தம் ஆறு பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும் என்ற நிபந்தனைகளை முன்வைத்துள்ளோம். அதேபோன்று அவர் 1992/01/01ம் திகதிக்குப் பின்னர் பிறந்தவராக இருக்கவும்வேண்டும். விண்ணப்பதாரிகளுக்கு எழுத்துப் பரீட்ச்சை, நேர்முகப்பரீட்ச்சை என்பன நடாத்தப்பட்டு அதிக புள்ளிகள் பொறும் மாணவர்களே தெரிவு செய்யப்படுவர். 

கேள்வி   :     பொதுவாக அரபுக்கல்லூரிகள் 6 முதல் 7 வரையான வருட காலங்களைக்கொண்டதாகவே அமைந்துள்ளன. ஆனால் உங்களது புதிய திட்டத்தின்படி மூன்று வருடங்களைப் பூர்த்திசெய்ததும் அவர்களுக்கான சான்றிதழ்களை வளங்குவதாகக் குறிப்பிட்டீர்கள். உண்மையில் இது இஸ்லாஹிய்யா ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கத்தை பாதிப்பதாக அமையாதா?

பதில் :     ஷரீஆத் துறை அறிவோடு பலதுறைகளையும் மாணவர்கள் கற்கவேண்டும் என்பதே இஸ்லாஹிய்யாவின் நோக்கமாக இருந்தாலும் அதற்கான வாய்ப்புகள் மட்டுப்பாடுடையனவாகவே கடந்த காலங்களில் காணப்பட்டன. மாணவர்களால் கலைத்துறையை மட்டுமே கற்கக்கூடிய நிலைகாணப்பட்டது. அதிலும் சிறிய எண்ணிக்கையினரே இறுதியில் பட்டம்பெற்று வெளியேறுகின்றனர். ஆனால் தற்போதைய பாடத்திட்டத்தினூடாக நியாயமான அளவு அரபு மொழி, அல்குர்ஆன், அல்ஹதீஸ், பிக்ஹ், அகீதா  போன்ற பாடங்களில் போதிய தேர்ச்சிபெற்ற, அதேசமயம் கணக்கியல், முகாமைத்துவம், சட்டம், கட்டடக்கலை போன்ற வித்தியாசமான துறைகளிலெல்லாம் இஸ்லாமிய தாஈக்கள் உருவாக வழியமைத்துக் கொடுக்கிறது. இவர்கள் எங்கு சென்றாலும் இஸ்லாம் பற்றிய அடிப்படை அறிவுள்ளவர்களாக தஃவாக்களத்தில் முன்நின்று பணிபுரிவோராக செயற்படுவார்கள், இன்ஷா அல்லாஹ்.

கேள்வி   :     இவ்வாண்டிற்கான புதிய மாணவர் அனுமதி முறை பற்றி விளக்கமாகக் கூறமுடியுமா?

பதில் :     ஆரம்பத்தில் G.C.E. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் எழுத்துப் பரீட்சை, நேர்முகப் பரீட்சை என்பவற்றின் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். இங்கு O/L பரீட்சையின் பெறுபேறுகள் கவனத்திற்கொள்ளப்படவில்லை. ஆனால் தற்போது O/L பரீட்சையின் பெறுபேறுகள் கருத்திற்கொள்ளப்பட்டு மூன்று திறமைச் சித்திகளுடன் தமிழ், கணிதம் ஆகிய பாடங்கள் உட்பட மொத்தம் ஆறு பாடங்களில் சித்தியடைந்திருத்தல் அவசியம் எனும் விடயம் மாணவர் அனுமதியில் கவனிக்கப்பட்டு வருகின்றமை குறிப்படத்தக்கது.

அண்மைக்காலமாக ஒவ்வொரு ஆண்டிலும் சுமார் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றிவருகின்றமை மிகவும் மகிழ்ச்சியைத் தருகின்றது. எனினும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் நாம் எதிர்கொள்ளும் வளப்பற்றாக்குறை காரணமாக ஒரு வருடத்திற்கு நாற்பது மாணவர்களை மாத்திரமே கல்லூரிக்கு அனுமதிக்க முடியுமாயுள்ளது. ஏனைய மாணவர்கள் பல்வேறு திறமைகளையும் தகைமைகளையும் பெற்றிருந்தும் அவர்களை இஸ்லாஹிய்யாவினுள் உள்வாங்க முடியாத ஒரு இக்கட்டான நிலை எமக்குப் பெரும் வேதனையைத் தருகின்றது.

எனவே இதனை ஈடுசெய்து திறமைபெற்ற இன்னும் பல மாணவர்களை உள்வாங்கி அவர்களுக்கும் இத்துறையில் கற்பதற்கு அணுமதியளிக்கும் வகையிலும் மேலும் சில அடைவுகளை நோக்காகக்கொண்டும் இவ்வாண்டுக்கான மாணவர் அனுமதியில் பாரிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளோம்.

சேர்த்துக்கொண்டோம். அல்லாஹ்வின் அருளால் தற்போது எமக்குப் போதுமான வளங்களும் வளவாளர்களும் கிடைக்கப்பெற்றுள்ளனர். எனவே இதன் பிறகு இஸ்லாஹிய்யாவில் எண்பது மாணவர்கள்வரை சேர்த்துக்கொள்ள இஸ்லாஹிய்யா நிர்வாகம் தீர்மாணித்துள்ளது. அதற்கேற்றவாறு முன்பு கூறியதுபோல் பாடத்திட்டத்திலும் பல புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

கேள்வி   :     இஸ்லாஹிய்யா ஆரம்பிக்கப்பட்டு இவ் ஆண்டுடன் 23 வருடங்கள் நிறைவுபெருகின்றன. அந்தவகையில் இதுகாலவரைக்கும் எவ்வாறான அடைவுகளை இஸ்லாஹிய்யா பெற்றுக்கொண்டுள்ளது?

பதில் :     இலங்கையில் தஃவாக் களத்தில் இஸ்லாஹிய்யாவின் பங்களிப்பு மிகவும் வெளிப்படையானது. ஊடகத் துறை, கல்வி, இஸ்லாமியப் பயிற்சி (தர்பிய்யா), இதர சமூகப் பணிகள் மற்றும் முஸ்லிமல்லாதோரின் மத்தியில் தஃவாப் பிரசாரம் என பல்வேறு துறைகளிலும் இஸ்லாஹிய்யா பட்டதாரிகள் பாரிய பங்களிப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமன்றி உயர் கல்விகளிலும் பட்டதாரிகளின் ஈடுபாடு குறிப்பிடத்தக்கது.

இஸ்லாஹிய்யாவின் ஆறு வருட கற்கை நெறியைப் பூர்த்திசெய்த முதலாவ மாணவர்க்குழு 1993ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பட்டம் பெற்று வெளியேறியது. ஆரம்பத்தில் இரண்டு, மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மாணவர்கள் இஸ்லாஹிய்யாவுக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டுவந்ததையும் கருத்திற்கொண்டு பார்த்தால் இதுவரை 134 மாணவர்கள் இஸ்லாஹிய்யாவில் ஆறு வருட கற்கை நெறியைப் பூர்த்திசெய்து இவர்களில் சிலர் பாகிஸ்த்தானில் உள்ள சர்வதேச இஸ்லாமிய பல்கழைக்கழகம், யெமன் ஜாமிஅதுல் ஈமான் பல்பலைக்கழகம்,பேராதெனிய பல்கழைக்கழகம் கிழக்குப் பல்கழைக்கழகம், என்பவற்றில் முதுமானிப்பட்டங்களைப் பெற்றுள்ளனர். மேலும் பலர் எகிப்து அல்-அஸ்ஹர், யெமன் ஜாமிஅதுல் ஈமான், மக்காவின் உம்முல் குரா, மதீனாவின் ஜாமிஆ அல்-இஸ்லாமிய்யா போன்ற பல்கலைக்கழகங்களில் தமது உயர்படிப்புகளைத் தொடர்ந்துகொண்டிருக்கின்னர். இவர்கள் யாவரும் இஸ்லாஹிய்யாவின் பட்டதாரிகள் சங்கமாக இணைந்து இஸ்லாஹிய்யாவின் வளர்ச்சிக்காகப் பங்காற்றி வருகின்றனர்.

கேள்வி   :     புத்தக அறிவைவிடவும் திறன்விருத்தி, முகாமைத்துவம், தலைமைத்துவ ஆற்றல், ஆளுமைப் பண்புகள் எனபனவே செயற்களத்தில் முக்கியம்பெறுகின்றன. எனவே இதுபோன்ற விடயங்களை விருத்திசெய்துகொள்வதற்கு இஸ்லாஹிய்யா எவ்வாறான வாய்ப்புகளை மாணவர்களுக்கு அமைத்துக்கொடுத்துள்ளது?

பதில் :     இஸ்லாஹிய்யாவில் தற்போது கல்வி கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களால் நிர்வகிக்கப்படும் சில கழகங்கள் இஸ்லாஹிய்யாவினுள் காணப்படுகின்றன. இவை மாணவர்களிடையே மறைந்து கிடக்கும் பல்வேறு திறன்களையும் ஆளுமைப் பண்புகளையும் வெளிக்கொணர்வதற்காகப் பல்வேறு வேலைத்திட்டங்களைச் செய்கின்றன. இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரியின் ஆரம்ப வரலாற்றிலிருந்தே இவை இயங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கல்விச் செயற்பாட்டுக்கெனவும் கலை மற்றும் இலக்கிய விருத்திக்கெனவும் மாணவர்களது ஆன்மிக வழிகாட்டலுக்கெனவும் விளையாட்டு மற்றும் உடல் விருத்திக்கெனவும் இஸ்லாஹிய்யாவின் சூழல் முகாமைத்துவத்திற்கெனவும் தனித்தனியான கழகங்கள் இயங்கிவருகின்றன. இவை அவற்றுக்கெனப் பெறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் ஆலோசனையின் கீழ் சிறப்பாக இயங்கிவருகின்றன.

இவைமட்டுமன்றி, ஒவ்வொரு கிழமைக்குமான மன்றங்களும் தணைக்கொரு மாணவர் மன்றமும் கலைவிழாக்களும் மாணவர்களால் நடாத்தப்படுகின்றன. மேலும் ஒவ்வொரு தவணையிலும் மாணவர்களுக்கிடையிலான கரப்பந்தாட்ட மற்றும் கால்பந்தாட்ட போட்டிநிகழ்ச்சிகளை வைத்து பரிசில்களும் வழங்கப்படுகின்றன. இதுவல்லாத இன்னும் பலவிடயங்கள் மாணவர்களது திறன்களையும் ஆளுமைப் பண்புகளையும் வெளிக்கொணர வழியமைத்துக்கொடுக்கின்றன.

மேலும் முகாமைத்துவ ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. இதில் மாணவர்கள் திட்டமிடல், ஒழுங்கமைத்தல்,குழு முயற்ச்சி,நேர முகாமைத்துவம் போன்ற பல துறைகளிலும் பயிற்றுவிக்கப்படுகின்றனர்.

இறுதி ஆண்டில் அவர்கள் மேற்கொள்ளும் கள ஆய்வுகள் அவர்களது ஆளமை விருத்தியிலும் பாகுப்பாய்வு செய்யும் ஆற்றலிலும் பெறும் பங்கு கொள்கின்றனர்.இத்தகைய ஆய்வு முயற்ச்சிகளை பல்கழைக்ழக மூத்த விரிவுரையாலர்களே வழிநடாத்துகின்றனர்.

கேள்வி   :     இலங்கைவாழ் முஸ்லிம் சமூகத்துக்கு இஸ்லாஹிய்யா எவ்வாறான செய்தியை முன்வைக்க விரும்புகிறது?

பதில் :     இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரியை இலங்கைவாழ் முஸ்லிம் சமூகத்தின் ஒரு சொத்தாகவே நாம் கருதுகின்றோம். எனவே இச்சொத்தின் மூலம் தமது பிள்ளைகள் பயன்பெற வழிசெய்வதும் இதன் முன்னேற்றத்தில் பங்குகொள்வதும் ஆதரவளிப்பதும் ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகக் கருதி செயற்பட்வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும் வேண்டுகோளுமாகும்.

 மார்ச் 15-31, 2010   எங்கள் தேசம் பத்திரிகையில்  பிரசுரமாகிய ஆக்கம்.

உங்கள் கருத்து:

1 comments:

Anonymous said...

good Ijas

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...