அண்மையில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு விடயம்தான் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி Dr. ஆபியா சித்தீகி அவர்களது விவகாரம். அல்கைதாவுக்கு அணு ஆயுதம் தயாரிப்பது தொடர்பான பல தகவல்களை வழங்கியுள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் 2008 ஆம் ஆண்டு அவர் பாகிஸ்தான் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு அமெரிக்க இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.
38 வயதான இப்பெண்மனி மூன்று குழந்தைகளின் தாயாருமாவார். இவரைக்கைது செய்து அமெரிக்க இராணுவம் பக்ரம் என்ற சிறைச்சாலையில் அடைத்து வைத்து உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பல்வேறு சித்திரவதைகளையும் அவர் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
இவ்வருடம் (2010) பெப்ரவரி மாதத்தில் இவரை FBI அதிகாரிகளும் நேட்டோப் படை உயர் அதிகாரிகளும் விசாரணைக்குட்படுத்தியிருந்தபோது இவர்களைக் கொலைசெய்யும் நோக்கில் ஒரு கைத்துப்பாக்கியை ஏழவே இவர் சிறையிலிருந்து திருடி மறைத்து வைத்திருந்தார் என்று குற்றம் சுமத்தியுள்ளனர். இவ்விசாரனைக்காக நியுயோர்க் கொண்டுசெல்லப்பட்ட Dr. ஆபியா சித்தீக்கி அவர்களுக்கு நியுயோர்க் நீதிமன்றம் 86 வருட சிறைதண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
இவ்வழக்கை கடந்த வியாழனன்று நியுயேர்க் நீதிமன்றில் நீதிபதி ரிச்சர்ட் போர்மன் ஆராய்ந்து தீர்ப்பு வழங்கியுள்ளார். இதனை அடுத்து கராச்சியிலும் இன்னும் சில இடங்களிலும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் கிளம்பின.
பொய்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி சொல்ல முடியாத சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கியதன் பின்னர் தற்போது ஆபியா அவர்களுக்கு சிறைதண்டனையும் விதித்துவிட்டது ஏகாதிபத்திய அரசு. இது கருத்த இருட்டில் வழங்கப்பட்ட குறுட்டுத் தீர்ப்பு என்பது தௌ;ளத் தெளிவு...
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...