"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

23 August 2010

“மஹ்மூத் தர்வீஷ்” பலஸ்தீனின் தேசியக் கவிஞர்.

கவிஞர் மஹ்மூத் தர்வீஷ் மரணித்து இம்மாதம் ஒன்பதாம் திகதியுடன் இரண்டு வருடங்களாகின்றன. அதனனை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது.

பேரழிவு ஆயுதங்களை ஒத்த அச்சத்தை எதிரிகளுக்குப் பேனா முனையில் ஊட்டியதென்றால் அது மஹ்மூத் தர்வீஷின் கவி வரிகள்தாம். பலஸ்தீன மண்ணின் விடுதலைக்காகப் பலர் ஆயுதம் தரித்துப் போராடியபோது மஹ்மூத் தர்வீஷ் தனிமரமாக நின்று பேனா மைகொண்டு போராட்டம் நடாத்தினார். பேனாமையின் வீச்சுக்கும் வீரியத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டு மஹ்மூத் தர்வீஷ்தான்.

தர்வீஷ் 1941 ஆம் ஆண்டு பலஸ்தீனின் அக்ரே நகரை அண்டியுள்ள பீர்வா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். அவரது ஏழாவது வயதிலேயே இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களின் அடக்குமுறையினாலும் அடாவடித்தனத்தினாலும் பிறந்த மண்ணைத் துறந்து சொந்த தாயகத்தை விட்டு லெபனானுக்குப் புலம்பெயரவேண்டி ஏற்பட்டது. இஸ்ரேலர்கள் பலஸ்தீன மண்ணில் புரிந்த அராஜகங்கள் இளவயதிலேயே அவரது நெஞ்சத்தில் ஆறாத வடுவை ஏற்படுத்திவிட்டது. அது முதலே பலஸ்தீன விடுதலை குறித்த புரட்சிகர சிந்தனைகள் அவர் உள்ளத்தில் எழத்துவங்கின.

இதன் அமைவாகத்தான் தர்வீஷின் கவிவரிகளின் கருப்பொருளாக பலஸ்தீனம் மீதான நேசமும் அதனை இழந்த துயரும் அதனை மீட்பதற்கான ஆவேசமும் கொப்பளித்துப் பிரவாகிப்பதைக் காணமுடிகின்றனது. இது அவரது உள்ளத்தின் உணர்வலைகளைத் துலாம்பரமாகத் துலக்குகின்றன.

மஹ்மூத் தர்வீஷ் சிறகிழந்த பறவைகள்என்ற தனது முதற் கவிதைத் தொகுப்பை 19ஆம் வயதில், 1960 ஆம் ஆண்டளவில் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து 1964 இல் ஒலிவ் இலைகள், 1966 இல் ஒரு பலஸ்தீனக் காதலன்,  1967 இல் இரவின் முடிவு, 1970 இல் கலீலியில் பறவைகள் மடிகின்றன,  1972 இல் நான் உன்னை நேசிக்கின்றேன் - நான் உன்னை நேசிக்கவில்லை, 1975 இல் ஏழாவது முயற்சி,  1977 இல் திருமணங்கள், 1980 இல் மனித மாமிசத்தின் இசை, 1986 இல் மண்ணும் ஏனைய கவிதைகளும் மற்றும் 2003 இல் நீ செய்ததற்கு மன்னிப்புக் கேளாதே போன்ற கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டார்.

இக்கவிதைகள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பேசப்படுமளவுக்கு 20 இற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளன. தமிழிலும் பல கவிதைகள் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பலஸ்தீனின் அவலத்தை உலகெங்கும் எடுத்தியம்புதற்கான சிறந்த ஊடகமாக அவர் தனது கவித்துவ ஆற்றலைப் பயன்படுத்தியமை மெச்சத்தக்கதே! இப்படைப்புகள் மக்களது போராட்ட உணர்வுகளுக்கு நீர்ப்பாய்ச்சி உத்வேகமளித்ததோடு இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சக்திகளுக்குப் பெரும் இடர்பாட்டையும் நெருக்கீட்டையும் ஏற்படுத்தின. இதனால் அவர் பலமுறை சிறைவைக்கப்படவும் தடுப்புக்காவலுக்கு உட்படுத்தப்படவும் நேர்ந்தார். இதற்கு அவரது கவிவரிகளில் காணப்படுகின்ற அபார ஆற்றலே காரணம் எனலாம். அவரது கவி வீச்சுக் குறித்து அவரே இவ்வாறு கூறுகின்றார்.

நான் வாளும்வரை என் சொற்களும் வாழும்

சுதநிதிரப் போராளிகளின் கைகளில்

ரொட்டியாகவும் ஆயுதமாகவும் என்றும் இருக்கும்…” என்கிறார்.

தர்வீஷின் உலகப் புகழ்பெற்ற கவிதைகளுக்காக 1969 ஆம் ஆண்டு அவரது 28ஆம் வயதில் ஆசிய ஆபிரிக்க எழுத்தாளர் ஒன்றியம்,  தாமரை விருதையும் 1983 இல் சோவியத் யூனியன்,  லெனின் விருதையும் 1997 இல் பிரான்ஸ்,  தமது அதி உயர் விருதையும் 2001 இல் மொறோக்கோ,  லன்னான் விருதையும் வழங்கி தமக்கான புகழைப் பெற்றுக்கொண்டன.

மஹ்மூத் தர்வீஷ் பலஸ்தீன விடுதலைக்கான தனது அர்ப்பணங்களை கவிதைகளில் மாத்திரமன்றி வேறுபல செயற்பாடுகளிலும் வழங்கியுள்ளார். 1986 காலப்பகுதிகளில் பலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் நெருங்கிப் பணியாற்றினார். அத்தோடு 1988 ஆம் ஆண்டில் பலஸ்தீன சுதந்திரப் பிரகடணத்தையும் வரைந்தார். 2000-2001 வரையிலான காலப் பகுதிகளில் இஸ்ரேலின் அடக்குமுறைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பலஸ்தீனின் இன்திபாழாப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியதோடு அதுபற்றிய கவிதைகளையும் எழுதி,  நிலவரத்தை உலகறியச்செய்தார்.

உலக மக்களின் உணர்வலைகளை உசுப்பிவிட்ட கவிஞர் மஹ்மூத் தர்வீஷ் பலஸ்தீனின் தேசியக் கவிஞர் மட்டுமல்ல அவர் உலக மக்களின் சர்வதேசியக் கவிஞருமாவார். இளவயது முதலே இஸ்ரேலின் நெருக்கீட்டினால் தலைமறைவு வாழ்வை வாழ்ந்த அவர் 2008 – 08 – 09 ஆம் திகதி இதயநோயினால் பீடிக்கப்பட்டு அமெரிக்காவில் மரணமாயினார்.

அவர் மரணித்தாலும் அவர் விட்டுச்சென்ற கவிதைகளும் அவற்றின் குமுரல்களும் வரலாறு பேசப்படுமட்டும் மீள்வாசிப்புச் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கும்
(ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)                              

உங்கள் கருத்து:

1 comments:

Anonymous said...

fathima..........
ithu enaku puthu vidayam.... ithai sirapaha thohuthu thanthamaiku nantri

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...