"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

11 February 2011

ஒடுக்குமுறைக்கு எதிரான மக்கள் புரட்சி

ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)
அரபு நாடுகளின் சர்வாதிகார அடக்குமறை ஆட்சிக்கெதிராக வீருகொண்டெழுந்துள்ள மக்கள் புரட்சி இன்னும் இன்னும் சூடுபிடித்துக்கொண்டே வருகின்றது. முப்பதுஇ நாட்பது  வருடங்களாக உள்ளுக்குள்ளே அமுக்கப்பட்டு, அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வந்த மக்களின் உளக் குமுரல்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து எரிமலையாக வெடித்துச் சிதறிப் பெருக்கெடுத்துப் பிரளயமாய் ஓடுவதை இன்று உலகமே பார்த்துக்கொண்டிருக்கின்றது.
டியுனீஸியாவில் ஸைனுல் ஆப்தீன் பின் அலியின் 23 வருட அடக்குமறை ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி (ஜெஸ்மின் புரட்சி) வெடித்ததிலிருந்து காட்டுத்தீபோல் பிற நாடுகளுக்கும் புரட்சிச் சிந்தனைகள் பரவிவருகின்றன.
யெமனில் அலி அப்துல்லாஹ் சாலிஹின் 32வருடகால சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து மக்கள் திரள் திரளாய்த் திரண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஜோர்தானில் பிரதமர் சமீர் ரிபாய்க்கு எதிராக மக்கள் வெகுண்டெழுந்துள்ளதோடு அவரைப் பதவி விலகுமாறு கோசமிட்டுவருகின்றனர்.
எகிப்தில் ஹ{ஸ்னி முபாரக்கிற்கு எதிராக சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வீதியெங்கும் ஒன்றுதிரண்டுள்ளனர். 30 வருட அராஜக ஆட்சி ஒழிய முபாரக் பதவி விலகவேண்டுமென்பதே மக்களின் ஒரே கோசமாக உள்ளது. எகிப்தின் நிலவரம் மிகிவும் தீவிரமடைந்து வருகின்றது.
இதேபோன்று அல்ஜீரியா நைஜீரியா போன்ற நாடுகளிலும் மக்கள் புரட்சிக்கான ஆரம்ப நகர்வுகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
இப்புரட்சியினைப் பல்வேறு நாடுகளும் சிந்தனையாளர்களும் ஆதரித்து ஊக்கமளித்து வருகின்றனர். துருக்கிய பிரதமர் அர்துகான் எகிப்திய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஹ{ஸ்னி முபாரக்கைப் பதவி விலகுமாறு கூறுயுள்ளார்.
கலாநிதி யூசுப் அல்கர்ழாவி அவர்கள் அல்ஜெஸீரா செய்தி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின்போது ஆக்ரோசமான முறையில் பின்வருமாறு கருத்துத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி முபாரக்கே! எகிப்தைவிட்டு வெளியேறிச் செல்லுமாறு நான் உமக்கு ஆலொசனை கூறுகின்றேன்... முபாரக் பதவி விலகுவதே இப்பிரச்சினைக்குரிய ஏகதீர்வு என்றார்.
அதேசமயம் மேற்கு நாடுகளும் அவர்களது அடிவருடிகளும் இப்புரட்சியைக் கண்டித்துள்ளனர்.
இஸ்ரேல் முபாரக்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதோடு முபாரக் பதவி விலகினால் ஏற்படும் பாரதூரமான விளைவுகள் குறித்து இஸ்ரேல் அஞ்சுவதாகவும் எகிப்தின் நிலவரங்களை மிக விழிப்புடனும் வருத்தத்துடனும் அவானித்து வருவதாகவும் இஸ்ரேலியப் பிரதமர் நெதன் யாஹ{ கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் பிரான் என்பனபுரட்சியாளர்களுக்கு சார்பாகக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளபோதிலும் இவர்கள் மறைமுகமாக ஆட்சியாளர்களின் நலனையும் இறுப்பையும் இஸ்திரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் குறியாயிருப்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
சவுதி மன்னர் அப்துல்லாஹ்வும் லிபிய ஜனாதிபதி கடாபியும்கூட மக்கள் புரட்சியைக் கண்டித்துள்ளனர்.
டியுனீஸியா, யெமன், எகிப்து, ஜோர்டான், அல்ஜீரியா... போன்ற மக்கள் புரட்சி கிளம்பியுள்ள நாடுகளை முன்மாதிரியாக வைத்து பிற அரபு நாடுகளிலும் மக்கள் கிளர்ச்சி ஆட்சியாளர்களுக்கு எதிராக வெடிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் அவதானிகள் கருத்துத்தெரிவித்துள்ளனர். எனவே அரபு நாட்டு மன்னர்கள் விழிப்படைந்துகொண்டு இதனைத் தவிர்ப்பதற்காக மாற்று நடவடிக்கைகளை ஆராய்ந்து வருகின்றனர்.
இதனடிப்படையில்தான் குவைத் மன்னர் தம் நாட்டு மக்களுக்கு இலவசமாக கோடி பணங்களைக்கொடுத்து கௌரவிக்கப்போவதாக அறிவித்துள்ளார். உண்மையில் இது கௌரவிப்பல்ல பணத்தைக் காட்டி மக்கள் வாயை மூடுவதற்கானதோர் ஏற்பாடே என்பது n;தட்டத்தெளிவு.
ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாஹ் புரட்சியை அடக்குவதற்காக அவசரமாக பிரதமர் சமீர் ரிபாயைப் பதவி விலக்கிவிட்டு அவ்விடத்திற்கு மஹ்மூத் பாஹித் என்பவரை நியமித்ள்ளார்.
மக்கள் புரட்சி வெள்ளமெனப் பிரவாகிக்கும் குறித்த நாடுகளின் ஆட்சியாளர்கள் அடுத்து மூன்று முக்கிய தேர்வுகளின்பால் கவனம் சலுத்தும் நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
1     ஆட்சியாளர்கள் டியுனீஸிய ஜனாதிபதியைப் போன்று (கொல்லையடிக்காமல்) நாட்டைவிட்டுத் தப்பியோட வேண்டும்
2     முப்படைகளினதும் பலத்தைப் பிரயோகித்து மக்கள் புரட்சியை அடக்கவேண்டும்
3     பதவியிலிருந்து விலகி ஜனநாயக ஆட்சிக்கு ஒத்துழைக்க ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். ஆட்சியாளர்களைத் தெரிவுசெய்யும் அதிகாரம் மக்களிடம் வழங்கப்படல் வேண்டும்.
முதலாவதும் மூன்றாவதுமான தெரிவுகளே தற்போதைக்குச் சாதகமாக உள்ளன. படைபலத்தைப் பிரயோகிப்பதால் உலகளவில் அது பாரிய தாக்கத்தினை ஏற்படு;தும். இராணுவம் கூட மக்களுடன் இருப்பதால் இரணடாவது நிலை தற்போதைக்கு சாத்தியமில்லை.
அடுத்துவரும் நிலைமைகள் அடக்குமறை ஆட்சியை ஓரங்கட்டி பொதுமக்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு ஆட்சியமைக்கப்படல் வேண்டும். இது சாத்தியமாகும் சாத்தியங்கள் அதிகமாகவே உள்ளன. சாத்தியமாயின் அது உலகளாவிய இஸ்லாமிய எழுச்சிக்கான மிகப் பெரிய வெற்றியாகவும் தூண்டுதலாகவுமே இருக்கப்போகின்றது. அதன்பின் மேற்குலகச் சக்திகள் வாய் மூடவேண்டியதுதான்.
எதிர்பார்த்திருப்போம்....

உங்கள் கருத்து:

1 comments:

thamizhavel nalapathy said...

மக்கள் விழிப்புணர்வு பெறுவதை ஆட்சியாளர்கள் விரும்புவதில்லை.
எதிரிகளை விட தன் தலைவர்களிடம் - தனது நண்பர்களிடமும் தான் மக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்.

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...