"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

10 December 2013

பூமியும் இயற்கையின் சமநிலைத்தன்மையும்.

நாம் வாழும் பூமி சமநிலைத் தன்மையுடனேயே படைக்கப்பட்டுள்ளது.  பூமியைத் தவிர மற்ற கோள்களில் உயிர் வாழ முடியாமைக்கு இந்த சமநிலைத் தன்மை இன்மையும் ஒரு காரணமாகும். ஆனால் பூமி மற்ற கிரகங்களிலிருந்து வேறுபட்ட அமைப்பில் சிறந்த சமநிலைத் தன்மையைப் பெற்றிருக்கின்றது. தாவரங்கள், விலங்குகள் என மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளும் ஒரு குழுவாக இயங்குகின்றன.  இதனை இயற்கையின் சமநிலை (Natural Balance) என்று கூறுவர்.

உண்மையில் இதை இயற்கையின் சமநிலை என்று கூறிய போதிலும் இயற்கை எப்படி இப்படியானதொரு சமநிலையைக் கடைபிடிக்கிறது? எப்படி இந்த சமநிலையைத் தீர்மானிக்கிறது? அரைகுறை இல்லாத ஏற்பாடுகள் எப்படி ஏற்பட்டன? போன்ற கேள்விகள் தான் இறைவன் என்ற ஒற்றை நிலையை (வஹ்தானிய்யத் கோட்பாட்டை) எடுத்து வைக்கின்றது.

இந்த சமநிலையை தீர்மானிப்பதில் குறிப்பிட்ட உயிரினங்கள் மட்டுமல்லாமல் அதற்கு காரணமாக உயிரற்ற பொருள்கள், சூழ்நிலைகள், காலநிலை மாற்றங்கள், இயற்கை அழிவுகள் கூட முக்கியமான காரணிகளாக அமைந்து விடுகின்றன.

இப்பூமியில் உயிர் வாழ்வதற்கு ஏற்ற இடமாகவும் உயிரினங்களின் தொடர்புகளை சீற்படுத்துவதற்கும் முக்கியமான அம்சமாக விளங்குவது உணவுச் சங்கிலி (Food Chain). இந்த உணவு சங்கிலி அமைப்பைப் பார்க்கும் பொழுது அது ஒரு அதிசயமிக்க மனித அறிவை மிஞ்சிய செயலாகவே காணப்படுகிறது. கண்ணுக்கு தெரியாத உயிரினங்கள் முதல் பெரிய உயிரினம் வரை ஒரு ஏற்பாட்டுடன் செயற்படுகின்றன. சிறு பூச்சிகளை தவளை இனம் உண்கிறது, தவளைகளை உண்ணும் பாம்பை கழுகு உட்கொள்கின்றது இவ்வாறு அதிகபட்சம் ஐந்து அல்லது ஆறு சுழற்சிகளை உணவுச் சங்கிலி மேற்கொள்கின்றது. இது குறிப்பிட்ட வகையான விலங்குகளின் உணவு சங்கிலி முறை. இதேபோன்ற பல உணவுச் சங்கிலி அமைப்பு முறைகள் எந்த வித சலனமும் இல்லாமல் அழகாக நடந்துகொண்டிருக்கின்றன.

இதேபோன்று கடலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுண்ணுயிரிகளை உட்கொண்டு சிறு உயிரிகள் வாழ்கின்றன, அந்த சிறு உயிரிகளை உட்கொண்டு பெரிய மீன்கள் வாழ அவைகளை உட்கொண்டு திமிங்கிலம் போன்ற மிகப் பெரிய உயிரினங்கள் வாழ்கையை நடத்துகின்றன. இந்த உணவுச் சங்கிலிகள் மூலம் இயற்கை அதன் தன்மையை தக்க வைத்து கொள்வதுடன் ஒவ்வொரு உயிரினமும் மற்றொரு உயிரினத்தை சார்ந்தே வாழ்க்கை நடத்த முடியும் என்பதை எடுத்துரைக்கிறது.

ஒரு தடவை வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் ஒரு காட்டில் மாமிச உண்ணிகள் தாவர உண்ணிகளை அனியாயமாக வேட்டையாடிக் கெள்கின்றன என பரிதாபப்பட்டு இரண்டு இனங்களையும் பிரித்து நடுவே ஒரு மதிலைக் கட்டினர். தாவர உண்ணிகள் இனப்பெருக்கம் செய்து பல்கிப் பெருகி இனி உண்பதற்குத் தாவரங்கள் இல்லை எனும் அளவுக்கு அவை தாவரங்களை உண்டு பெறுகிவந்தன. சரியான முறையில் மாமிசம் கிடைக்காத மாமிச உண்ணிகள் செத்து மடிய ஆரம்பித்தன. மாமிச உண்ணி தாவர உண்ணியைத் தின்பதும் அவற்றின் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்படுவதும் இயற்கையின் சமநிலை என்பதை அறிந்த ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் அம்மதிலை உடைத்துவிட்டனர். இவ்வாறு பூமியின் சமநிலை அழகான முறையில் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதேபோன்று சில உயிரினங்கள் அவற்றின் சூழலுக்கு இயைந்து போகும் வண்ணத்தில் காணப்படுகின்றன. அத்தோடு பச்சோந்தி போன்ற இன்னும் பல உயிரினங்களால் இடத்திற்கு ஏற்ற விதத்தில் தம் நிறத்தை மாற்றிக்கொள்ளவும் முடியும். இவ் உயிரினங்களை பிற எதிரி விலங்குகளுக்கு எளிதில் கண்டுகொள்ள முடியாத அளவு அவை சுற்றாடலுடன் இணைந்து காணப்படுகின்றன. இது அவற்றுக்கும் அவற்றின் இனத்திற்கும் பாதுகாப்பை வழங்குகின்றது. அத்தோடு தமக்கான இறையை இலகுவாகப் பற்றும் வாய்ப்பையும் வழங்குகின்றது.

அதுபோன்று சில உயிரினங்கள் குறுகிய கால ஆயுளைக் கொண்டிருக்கும். ஆனால் அவற்றின் இணப்பெறுக்கத் தொகை அதி கூட அளவில் இருக்கும். சில உயிரினங்களின் ஆயுள்காலம் மிக நீண்டதாக இருக்கும். ஆனால் அவற்றின் இனப்பெறுக்கத் தொகை மிக குறுகிய எண்ணிக்கையில் இருக்கும். இது இயற்கையின் மற்றுமொரு சமநிலைத் தன்மை பேனலாகும்.

உதாரணமாக ஒரு பெண் நுளம்பு ஒரு இனப்பெருக்க காலத்தில் முன்னூறு முட்டைகளை போடும், அதன் வாழ் நாளில் அதாவது இரண்டே வாரத்தில் முன்னூறு முட்டைகளை இட அதன் மூலம் 360000 நுளம்புகள் உருவாகும். இதே போன்று பிறக்க கூடிய அனைத்து நுளம்புகளும் இன உற்பத்தி செய்து கொண்டிருந்தால் ஆறே மாதத்தில் அந்த நுளம்புகளால் பூமியே மூடப்படும். ஆனால் இது இவ்வாறு நடக்காது சிலந்திகள் அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துகின்றன.

கொசுக்களை போன்று உள்ள லட்சகணக்கான பூச்சிகளை சிலந்திகள் கொன்று திண்கின்றன. குறிப்பாக ஒரு பெண் சிலந்தி தன்னுடைய வாழ் நாளில் 250 கொசுக்களையும் 33 பழப் பூச்சிகளையும் கொன்று தின்கின்றதாம். மேலும் வேறுவகை சிறு பூச்சிகள் அதன் இனத்தையே உண்டு வாழ்கின்றன. இந்த பூச்சிகள் அதன் இனத்தை சாப்பிடுவதை நிறுத்தி விட்டால் ஒரு வருடத்தில் இயற்கையே நடு நிலை தடுமாறி விடும். அவைகள் தாவரங்களை மட்டுமே சாப்பிட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் அதன் ஒரு இனப்பெருக்க காலத்திலேயே தாவர வர்க்கத்தையே இந்த பூமியிலிருந்து அழித்துவிடும். அங்கும் மிக அருமையான முறையில் இயற்கை சமநிலை படுத்த படுகின்றது.

இது போன்று ஆயிரம் ஆயிரம் பூச்சிகள் மற்ற பூச்சி இனங்களை தின்று அதை பெருக விடாமல் இயற்கை சமநிலையை சரிசெய்கின்றன. இருப்பினும் அந்த இனம் முழுமையாக அழிந்து விடாமல் அந்த இனங்களே தற்காத்து கொள்கின்றன, அல்லது அதை சாப்பிடும் இனங்கள் அந்த இனத்தை அழிவிலிருந்து பாதுகாக்க அதை வளர விட்டு விடுகின்றன. இதுபோன்ற நிகழ்வு அனைத்து இடங்களிலும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

கடலில் வாழக்கூடிய முட்டை இடும் உயிரினங்களுள் அதிகமான முட்டையிடும் வகை மீனான oceans sunfish அதன் ஒரு இனபெருக்க காலத்தில் முப்பது கோடி முட்டைகள் வரை இடும், அதே போன்று ஒரு சிப்பியானது (oyster) அதன் வாழ் நாளில் 20 லட்சம் முட்டைகள் வரை இடும், அப்படி இருந்தும் கடலை மூடக்கூடிய அளவிற்கு மீன்கள் இல்லையே ஏன்? ஏனெனில் அந்த மீன்களை உணவாக்குகின்ற மற்ற மீன்கள் இருக்கின்றன, அந்த வேறொரு இன மீன்கள் இந்த வகை மீன்களை அதன் எண்ணிக்கைக்கு மேல் அதிகமாகி விடாமல் இருக்க சமநிலையைத் தக்க வைத்து கொள்கின்றன.

உயிரோடு இருக்கும் போது மட்டுமல்ல, ஒரு விலங்கோ அல்லது தாவரமோ இறந்த பின்பு அதை உண்பதர்காகவே சில பாக்டீரியா (Bacteria), பன்கஸ் (Fungus) போன்ற நுண்ணுயிரிகளை இறைவன் உருவாக்கி வைத்திருக்கிறான். இவற்றை இயற்கையின் பாதுகாவலர்கள் என்றும் அழைப்பர். குறிப்பாக Burying beetle என்ற வண்டு இனம் தொலை தூரத்தில் இறந்த விலங்குகளையும் அறிந்து உண்டு தீர்கக் கூடிய ஆற்றல் பெற்றுள்ளது. இது போன்று இன்னும் பல, இறந்த உயிரினங்களை இவைகள் உண்ணவில்லை என்றால் இப்பூமியில் அடுத்த சந்ததிகள் வாழ்வதே இயலாத காரியமாக ஆயிருக்கும்.

தாவரங்களும் விலங்குகளும் மனிதனுடன் இணைந்து இயற்கையை நடுநிலை படுத்த காரணமாய் இருக்கின்றது. மனிதன் ஒக்சிஜன் வாயுவை சுவாசித்து கார்பன் டை ஒக்சைடை வெளியிடுகிறான். ஆனால் தாவரங்களோ கார்பன் டை ஒக்சைடை உட்கொண்டு மனிதனுக்கு தேவையான ஒக்சிஜனை வெளியிடுகின்றன, அப்படியல்லாது அனைத்து தாவரங்களுக்கும் ஒக்சிஜன் தான் வேண்டும் என்றால் உயிர் வாழ்வே சிதைந்திருக்கும்.

இறைவனின் படைப்புகள் அனைத்திலும் இந்த சமநிலைத் தன்மையைக் காணமுடியும். அவ்வாறுதான் அல்லாஹ் அனைத்தையும் படைத்திருப்பதாக அல்குர்ஆனில் (54:49) கூறுகின்றான். இவற்றை சரியான முறையில் பயன்படுத்தும் காலமெல்லாம் நம்மால் இயற்கைக்கு ஆதரவான நடுநிலைபாட்டை ஏற்படுத்த முடியும், இதை அலட்சியபடுத்தும் போது அது இயற்கையாக அமையபெற்ற நடுநிலை தன்மையை சீர்குலைப்பதாகவும் எமக்கு சீர்கேடுகளை விளைவிப்பதாகவும் இருக்கும்.

திருமறை கூறுகின்றது – “மனிதர்களின் கைகள் தேடிக்கொண்ட தீங்குகளால் கடலிலும் தரையிலும் குழப்பங்கள் தோன்றிவிட்டன” (30:41)

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...