"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

07 April 2011

மக்கள் புரட்சியில் facebook, twitter

ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)
நாளுக்கு நாள் இணையப் பாவனையாளர்களின் வீதம் துரித கதியில் அதிகரித்துக்கொண்டே பெருகிக்கொண்டே செல்கின்றது. இதனால் பாரியதொரு அறிவியல் புரட்சி உலகளவில் எழுச்சியுற்று வருவதனை தெளிவாகவே அவதானிக்க முடிகின்றது. எந்தவொரு பொதுமகனும் இலகுவழியில் இணைய இணைப்பைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் இன்றளவில் கைவரப் பெற்றுள்ளமையே இதற்குக்காரணம்.
2000 மாம் ஆண்டில் 72 மில்லியனாக இருந்த இணையப் பாவனையாளர்களின் எண்ணிக்கை இன்றளவில் 470 மில்லியன்களாக அதிகரித்துள்ளது. அமெரிக்கர்களே உலகளவில் இணையத்தினை அதிகம் பயன்படுத்துகின்றனர். 300 மில்லியனைக்கொண்ட அமெரிக்காவின் மொத்த சனத்தொகையில் 72 வீதமானோர் அன்றாடம் இணையத்தில் உலாவருகின்றனர்.
அறபுலகத்தில் தொற்றிக்கொண்ட அண்மைய மக்கள் புரட்சிக்கும் வித்திட்டது ஒரு வகையில் இந்த இணையம்தான். அதிலும் குறிப்பாக facebook மற்றும் twittor என்பனவே. எனவேதான் அரபுலகின் இப்புரட்சியினை பேஸ்புக் புரட்சி (facebook Revolution) டுவிட்டர் புரட்சி (twitter Revolution) என்று அழைக்கின்றனர்.
டியுனீஸியாவில் புரட்சி ஆரம்பிக்க முன்னபே பேஸ்புக் மற்றும் டுவிட்டர் வழியாக மக்கள் இப்புரட்சியைத் திட்டமிட்டு ஒழுங்குபடுத்தியுள்ளனர். பின்புதான் களத்தில் குதித்தனர். அநேகமானோர் களத்திலிருந்துகொண்டே பேஸ்புக், டுவிட்டர் வழியாக அங்கு நடப்பவற்றை புகைப்படங்களாகவும் வீடியோக் க்ளிப்களாகவும் உடனுக்குடன் குறித்த சமூக வலையமைப்புக்களினூடாக உலகறியச் செய்தனர். எனவே ஊடகங்களின் இருட்டடிப்பு, மறைப்பு, ஊகங்களை விட்டும் நம்பகத்தன்மை வாய்ந்த செய்திகள் உலகமக்களை வந்தடைந்தன.
எகிப்திய ஆா்ப்பாட்டம் வெற்றியீட்டிய பின்பு புரட்சியாளர் ஒருவர் இவ்வாறு கூறினார். ”பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுகேபார்க் ஐ நேரில் சந்தித்து அவருக்கு நன்றி கூறவேண்டும்” என்று. அந்தளவு இவ்வலையமைப்புகள் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றுவிட்டன.
2008 இன் கணக்கெடுப்பின்படி பேஸ்புக்கின் பாவனையாளர்கள் தொகை 100 மில்லியனாக இருந்தது. ஆனால் இன்று அது 600 மில்லியனுக்கும் அப்பால் அதிகரித்துள்ளது. உலகிலுள்ள 14 நபர்களில் ஒருவர் பேஸ்புக் பாவனையாளர் என்ற விகிதத்தில் அமைந்துள்ளது.
இணையத்தை சிறப்பாக நல்ல செயல்களுக்காகப் பயன்படுத்துவதனூடாக இதுபோன்ற பல்வேறு பயன்தரும் விடயங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அதேசமயம் இதனை முறைகேடாகப் பயன்படுத்தப் பலரும் முனைப்புடன் செயலாற்றுவதால் எதிர்காலத்தில் தனியன்கள் முதல் சமூகம்வரை பல்வேறு விபரீதங்களை எதிர்நோக்கவேண்டிவரும் என்பது கண்கூடு.

உங்கள் கருத்து:

1 comments:

Himma said...

அருமையான‌ சில‌ த‌க‌வ‌ல்க‌ளை திர‌ட்டி உள்ளீர்க‌ள்,masha allah and jazakallahu hair. இத‌ற்குத்தானா இர‌த்த‌ம் சிந்தாம‌ல் செய்யும் ந‌வீன‌ப்புர‌ட்சி என்ப‌து!!
உண்மையில் இணைய‌ம் எந்த‌ள‌வு சிற‌ப்பான‌ ப‌ய‌ன் ப‌ட்டிற்காக‌ உட்ப‌டுத்த‌ப்ப‌டுகின்ற‌தோ அந்த‌ள‌வு ப‌ய‌ன்க‌ளை உல‌க‌ ம‌க்க‌ள‌ அனைவ‌ரும் அடைந்து கொள்வார்க‌ள்.

அனைவ‌ரும் ந‌வீன‌ தொழில் நுட்ப‌ங்க‌ளை சிற‌ந்த‌ ப‌ய‌ன்பாடுள்ள‌ வ‌ழிக‌ளில் ப‌ய‌ன் ப‌டுத்தி, ந‌ன்மைய‌டைய‌‌ வேண்டும் என‌ பிரார்த்திக்கிறேன்!!

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...