"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

15 August 2011

Facebook குறித்து அதிகரிக்கும் முறைப்பாடுகள்

ஆலிப் அலி (இஸ்லாஹி)

கடந்த பத்து மாதங்களில் மாத்திரம் பேஸ்புக் முகநூல் (Facebook Social Network) இணைய தளம் குறித்து இலங்கை மக்களால் ஆயிரம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத் தொடர்பு இணைய கண்காணிப்பு மையம் செய்தியறிவித்துள்ளது.

பேஸ்புக் போன்ற சமூக வலையமைப்புகளை எவ்வாறு பயன்படுத்தவேண்டுமென்பது எம்மில் அநேகம்பேர் அறியாதுள்ளனர். முறையறியாது பயன்படுத்துவோரே பல்வேறு பிரச்சினைகளிலும் மாட்டிக்கொள்கின்றனர்.

தமது சொந்த புகைப்படங்களையும் பிறரது புகைப்படங்களையும் Facebook wall இல் இடுவதையும் கட்டாயம் தவிர்ந்துகொள்ளவேண்டும். ஏனெனில் அதனை யார்வேண்டுமானாலும் பார்க்கவும் Copy செய்துகொள்ளவும் முடியும். எனவே எமது புகைப்படங்களைவைத்து மோசடிகள் செய்து எம்மை பிரச்சினைக்குள் வீழ்த்தப்பலரும் நாட்டம்கொள்வார்கள்.

மேலும் பேஸ்புக் முகவரியையும் அதன் ரகசிய இலக்கத்தையும் திருடி அதில் ஆபாசமான புகைப்படங்களையும் வீடியோக் க்ளிப்பளையும் போட்டு எமது பெயரையே நாரடிக்கும் வேலைகளும் பரவலாக நடந்துள்ளன. பேஸ்புக் கணக்கின் மீது மற்றைய தளங்கள் போன்றல்லாது இலகுவாக ஹெகிங் தாக்குதல் நடாத்தவும் முடியும். ஒருவரது கணக்கை எவ்வாறு உடைத்துக்கொண்டு போகலாம் என்பதற்கென்று வழிகாட்டல்கள் வழங்கும் இணைய தளங்களும் உண்டு.

இதுபோன்று இன்னும் ஏராலமான மோசடிகள் இதன் மூலம் நடக்கின்றது. பேஸ்புக் பற்றிய முறைப்பாடுகள் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக இலங்கை தொலைத் தொடர்பு இணைய கண்காணிப்புக் குழு அறிவித்துள்ளது. எமது பேஸ்புக்கை யாரும் தாக்கி உள் நுழையாமலிருக்க சில பாதுகாப்பு முறைகள் இருக்கின்றன. உதாரணமாக Facebook Security System. இவற்றைப் பயன்படுத்தி எமது கணக்குகளை மாத்திரமல்ல எமது மானத்தையும் காத்துக்கொள்ள வேண்டும்.

எனவே அன்பர்களே! விழிப்போடு பயன்படுத்துங்கள்…

உங்கள் கருத்து:

2 comments:

Anonymous said...

Masha Allah

fathima said...

facebook il anna use irukkirazu pls sollavum

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...