ஆலிப் அலி (இஸ்லாஹி)
அரபுப் புரட்சிக்கு முன்னதாக உலகில் பாரியதொரு புரட்சியை விக்கிலீக்ஸ் இணையதளம் ஏற்படுத்தியிருந்தது. அமெரிக்காவினதும் இன்னும் பல நாடுகளினதும் இராஜதந்திரத் தகவல் பொக்கிஷங்களை இவ்விணையதளம் பிரசுரித்து உலக ஆட்சியாளர்களின் போலி முகங்களை அம்பலப்படுத்திய விடயம் யாவரும் அறிந்ததே!
அதனைத்தொடர்ந்து பலரும் விக்கிலீக்ஸ் இணையதளத்தை முடக்க முணைந்து வருவதனால் அதனது செயற்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளதாக அதன் நிறுவனரு ஜுலியன் அசான்ஜே தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் வங்கிகள் விக்கிலீக்ஸுக்கு எதிராக நிதி கையாளுதலைத் தடைசெய்துள்ளன. அதன் கடனட்டைப் பறிமாற்றமும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் விக்கிலீக்ஸ் இணையதளத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்ல முடியாத நிலை உருவெடுத்துள்ளது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...