"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

15 November 2011

போர்க்களம் கண்டுள்ள இயந்திர ரோபோக்கள்

ஆலிப் அலி (இஸ்லாஹி)

Humanoid எனும் சொல் தமிழில் மனிதப்போலி என வழங்கப்படுகின்றது. அதாவது மனிதனைப்போலவே தோற்றத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் அனைத்தும் இதில் அடங்கும். வன்பொருட்களாளும் கணினி மென்பொருள் செய்நிரல்களாளும் மேம்படுத்தப்படும் ரோபோக்களும் மனிதப்போலிகளாகவே கொள்ளப்படுகின்றன.

ரோபோ – Robot” குறித்து பல்வேறு வரைவிலக்கனங்கள் காணப்பட்ட போதிலும் சர்வதேச நியமக்குறியீடான ISO – 8373 இன்படி தன்னியக்கமாகக் கட்டுப்படுத்தப்படும் மற்றும் மீள் செய்நிரலாக்கத்திற்கு உட்படும் பல்நோக்குடைய மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அச்சுக்களில் தொழிற்படக்கூடிய நிலையான அல்லது அசையும் தகவுள்ள தொழிற்துறை மாதிரிகளே ரோபோக்கள் எனப்படுகின்றனஎன்கின்றது.

கணினியால் கட்டுப்படுத்தப்பட்டு காரியங்களைச் சுயமாகவே செய்யக்கூடிய வகையில் அமைந்திருக்கும் இயந்திரம்தான் ரோபோ என The Cambridge Advanced Learner’s  Dictionary விளக்குகின்றது.

தானியங்கி ரோபோக்களின் உருவாக்கம் 20ம் நூற்றாண்டில்தான் ஆரம்பமானது. என்றாலும் அதற்கான அத்திவாரம் ஆரம்பங்களிலேயே இடப்பட்டுள்ளது. 1206ம் ஆண்டு அரேபிய கண்டுபிடிப்பாளர் அல் ஜஸாரி என்பவர் உலகின் முதலாவது செய்நிரலாக்கம் மூலம் இயங்கும் மனிதப்போலி ரோபோக்களை உருவாக்கியுள்ளார். அதன்பின்னர் 1495ல் மனிதப்போலி வடிவமைப்பொன்று லியானாடோ டாவின்ஸியின் குறிப்புக்களிலிருந்து பெறப்பட்டுள்ளது.

இன்று உலகம் முழுதும் ஏதோ ஒருவிதத்தில் பொருள் உற்பத்தி, போக்குவரத்து, நில அகழ்வு, விண்வெளி ஆய்வு, மறுத்துவ உபகரணங்கள் மற்றும் அறுவைச் சிகிச்சைகள், ஆயுத உற்பத்தி, ஆய்வுகூட ஆராய்ச்சி, எரிமலை ஆய்வுகள், அறுவடை, கால்வாய்கள் சுத்திகரிப்பு, முதலுதவி, அனர்த்த முகாமை, உயிர்க்காப்பு, முதியோர் மற்றும் சிறுபிள்ளைப் பறாமறிப்பு, வீட்டு செல்லப்பிராணி என்றெல்லாம் பல்வேறு பல்வேறு பணிகள் நிமித்தம் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. ரோபோக்களின் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அவற்றை மூன்றாக வகைப்படுத்த முடியும்.

1.            வீட்டு வேலைகளுக்காக (Domestic Robots)
2.            தொழிற்சாலை வேலைகளுக்காக (Industrial Robots)
3.            இராணுவ நடவடிக்கைகளுக்காக (Combat Robots)

2006ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கணிப்பீட்டின்படி உலகளவில் 3,540,000 எண்ணிக்கையான சேவை ரோபோக்களும் 950,000 எண்ணிக்கையான தொழிற்துறை ரோபோக்களும் பயன்பாட்டில் இருந்ததாக அக்கணிப்பீடு சுட்டுகின்றது. மற்றுமொரு மாறுபட்ட அளவீட்டின்படி ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரோபோக்கள் உலகெங்கிலும் இயக்கப்பட்டுவருவதாக 2008ம் ஆண்டின் அறிக்கையொன்று குறிப்பிடுகின்றது. அவற்றில் அரைவாசி ரோபோக்கள் ஆசியாவிலும் 32 % ஐரோப்பாவிலும் 16 % வட அமெரிக்காவிலும் 1 % ஆஸ்த்ரேலியாவிலும் ஆப்ரிக்காவிலும் மீதமாகவுள்ள மொத்த எண்ணிக்கையில் 30% ஜப்பானில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது. ஆழமாகப் பார்த்தால் முழு உலகிலும் ஜப்பானில்தான் அதிகளவிளால ரோபோக்கள் காணப்படுகின்றன. ரோபோ உருவாக்கத்தில் ஜப்பான்தான் முன்னோடி நாடாகத் திகழ்கின்றது. 2025 ஆம் ஆண்டாகும்போது எமது வாழ்க்கையின் முக்கால்பகுதி வேலைகளை ரோபோக்கள் மூலமே நிறைவேற்றிக்கொள்ளும் நிலை தோன்றுமென ஜப்பானிய ரோபோ பொறியியளாளர்கள் கூறுகின்றனர்.

தென்கொரிய ரோபோ தெரிழில்நுட்பச் சங்கம் 2015-2020 காலப்பகுதிக்குள் வீட்டுக்கு ஒரு ரோபோ என்ற விகிதத்தில் ரோபோ உற்பத்தியை முடுக்கிவிடத் தீர்மானித்துள்ளது. அப்போதுதான் ஜப்பான் நாட்டைத் தொழில்நுட்ப ரீதியாகப் பிடிக்க முடியும் என்று தென்கொரியா நம்புகின்றது. அவ்வாறே ஜப்பானும் 2025ம் ஆண்டாகும்போது தமது ரோபோ சேவைகளை முழு அளவில் வணிகமயமாக்குவதில் நம்பிக்கை வைத்துள்ளது. எனவே வருங்காலங்களில் ரோபோக்களின் பயன்பாடு இன்னும் வீரியம் பெறப்போகின்றது என்பது தவிர்க்கமுடியாதவொன்று.

ஜப்பானின் மனிதவியல் ரோபோக்கள் நிறுவனமான மிட்சுபிஷி குழுமம் இது ஒரு புதிய யுகம் மலரும் தருணம். மனிதர்களும் ரோபோக்களும் ஒருங்கிணைந்து வாழும் நிலை உருவாகியுள்ளதுஎன்ற கருத்தை வெளியிட்டு ரோபோக்களுக்கும் மனிதர்களுக்குமிடையிலான நெருக்கமான ஒரு கட்டமைப்பைத் தோற்றுவிக்க முயற்சிக்கின்றது.

அபரிமிதவேகத்தில் வளர்ச்சியடைந்து செல்லும் ரோபோத் தொழில்நுட்பம் எதிர்காலங்களில் பல்வேறு விதங்களிலும் மனித குலத்துக்குப் பாரிய சவாலாக அமையப்போகின்றது என்று பலதரப்பட்ட பகுதிகளிலிருந்தும் எதிர்ப்புக் கோசங்கள் கிளம்பியுள்ளன. Terminator, Transformers, I Robot, The Chase போன்ற விஞ்ஞான ஹொலிவுட் புனைக்கதைத் திரைப்படங்களில் மனிதனாலேயே உருவாக்கப்பட்ட இம் மனிதப்போலிகள்  மனிதகுலத்துக்கே  சவால்விடும் காட்சிகள் பயங்கரமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவும் வழமைபோன்று காதல் என்ற வட்டத்துக்குள் இருந்துகொண்டே எந்திரன் என்றொரு திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இதுபோன்ற திரைப்படங்களிலும் வீடியோ விளையாட்டுக்களிலும் பார்த்துப் பழகியிருக்கும் இக்கற்பனைகள் நிஜத்திலும் நடக்கக்கூடும் என்ற ஆச்சரியமும் அச்சமும் தற்போது பலரையும் ஆட்கொண்டுவருகின்றது. ஏனெனில் வினோதங்களுக்காகவும் கேளிக்கைகளுக்காகவும் உருவாக்கப்பட்டு வந்த ரோபோக்கள் இனி இராணுவ நடவடிக்கைகளுக்காக அதிசக்திவாய்ந்த அமைப்புகளில் உற்பத்திசெய்யப்படவுள்ளன. வினோதத்துக்காகத் தயாரிக்கப்பட்ட ரோபோக்கள் இனி மனித குலத்துக்கு எதிரான பாரிய சவாலாக அமையப்போகின்றது.

வேர்நோர் வின்ஸ்ஜே எனும் ரோபோப் பொறியியலாளர் எதிர்காலத்தில் கணினிகள் மற்றும் ரோபோக்கள் இரண்டும் மனிதர்களைவிடவும் மிகவும் வினைத்திறன்கொண்டனவாகத் திகழும் என்றும் ஒருவேளை அது மனித குழத்துக்கே ஆபத்தாகவும் அமைந்துவிடக்கூடும்என்றும் குறிப்பிட்டார்.

அமெரிக்கக் கடற்படையின் நிதி உதவி பெற்ற ஓர் அறிக்கை இராணுவ ரோபோக்கள் அதிக சிக்கல் வாய்ந்ததெனவும் அவற்றுக்கு சுயாட்சி அளிக்கும் தீர்மானங்களை நிறைவேற்றும்பொழுது மிகுந்த கவனம் செலுத்தப்படுதல் இன்றியமையாதது எனவும் குறிப்பிடுகின்றது. ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளில் ரோபோக்களில் பாதுகாப்பு முறைமைகள் மற்றும் சட்டங்களின் தொகுப்புகள் என்பன தயாரிக்கப்படல் வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ரோபோ உலகில் பரவலாகப் பிரயோகிக்கப்படும் ஒரு பதம்தான் ASIMO. ஐசக் அஸிமோ என்ற அறிஞர் ரோபோக்களுக்கான மூன்று விதிமுறைகளை அமைத்துள்ளார். உலக வல்லரசு நாடுகள் யுத்த நடவடிக்கைகளுக்கா ரோபோக்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ஏவுகணைகளை ஏவவும் எதிரிகளின் இலக்குகளைத் தாக்கி அழிக்கவும் அணு உலைகளில் பணிசெய்யவும் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது மனித குலத்துக்குப் பெரும் பாதிப்பாக இருக்கப்போகின்றது. இதனால்தான் இவ்வாறான விதிமுறைகள் உருவாக்க வேண்டி ஏற்பட்டது. உலகில் உருவாக்கப்படும் ரோபோக்கள் இவ்விதிமுறைகளுக்குட்பட்டே உருவாக்கப்படல் வேண்டும். இவைதான் அம்மூன்று விதிமுறைகளுமாகும்.

1.ரோபோக்கள் மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடாது.
2.சட்டத்திற்குப் புறம்பாக அல்லாமல் மனிதர்கள் விதிக்கின்ற அனைத்து கட்டளைகளுக்கும் ரோபோக்கள் கட்டுப்படவேண்டும்.
3.முதல் இரண்டு விதிகளுக்கும் பாதிப்பு ஏற்படாமல் ரோபோக்கள் தம்மைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

ரோபோத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் விளைவாக தற்போது அவற்றுக்கு மனித உணர்வுகளை வழங்கும் நடவடிக்கைகளில் விஞ்ஞானிகள் ஆர்வமாக ஈடுபட்டுவருகின்றனர். இதனால் ரோபோக்கள் சுயமாக இயங்கும் வாய்ப்புள்ளதாக நம்பப்படுகின்றது. மனித மூளையின் ஆற்றலைக்கொண்ட அல்லது அதனையும் மீறிய அற்றல் படைத்த ரோபோக்கள் சுயமாக இயங்கத் துவங்கினால் அதன் இயக்கத்தை யாராலும் நிறுத்த முடியாது மனித குலத்தின்மீது வைக்கப்பட்ட அணுகுண்டாக அது இருக்கும் அதன் பின்னர் ரோபோக்களின் பயணம் நிறுத்த முடியாத நீண்ட பயணமாக இருக்கும்” என மைக்கல் கார்னால்ஸ் என்ற அறிஞர் அறிவு நிலைக்கான போட்டி (The race to the Intelligent state) என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.

எது எப்படியோ இன்றளவில் தொலை தூரம் பறந்து செல்லும் ஆளில்லா ரோபோ விமானங்கள் ராணுவத்தில் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது. இவை நிலம் நீர் நெருப்பு என இலக்குகளைத் தேடிச் சென்று தாகக்குதல் நடாத்த வல்லன. நூற்றுக்கணக்கான பாக்பாட்மற்றும் போஸ்டர் மில்லர்தலான்வகையிலான ரோபோக்கள் ஈராக், ஆப்கான் நாடுகளில் குண்டுகள் வலுவிழக்கச் செய்வதற்காக அமெரிக்க இராணுவத்தால் தற்போதே அதிகளவு பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

ஈராக், ஆப்கான் போர்களின் அடுத்த தொடராக தற்போது அமெரிக்காவின் கழுகுப் பார்வை பாகிஸ்தான் யெமன் மீது விழுந்துள்ளது. இப்போர் நடவடிக்கைகளைத் தொடர்வதற்காக ஆளில்லா உளவு விமானங்கள், நவீன ரக தாக்குதல் விமானங்கள், சிப்பாய்களுக்குப் பதிலாக யுத்தம் செய்யும் ரோபோக்கள் என்பவற்றை உருவாக்குவதில் அமெரிக்கத் தேசியப் பாதுகாப்புத் துறை கூடிய கவனம் செலுத்திவருகின்றது.

அவுஸ்ரேலிய அரசும் இராணுவத்தில் ரோபோக்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைப் பரீட்சித்து வருகின்றது. அவுஸ்ரேலிய அறிவியல் தொழில்நுட்ப அமைப்பு இவ்விடயத்தில் தனது முழு ஆதரவையும் வழிங்கியுள்ளது. இதில் பொதுமக்களது ஆர்வத்தையும் ஈடுபடுத்துவதற்காக சிறந்த இராணுவ ரோபோக்களைத் தயாரிக்கும் போட்டியொன்றையும் ஒழுங்குசெய்திருந்தது. அதில் வெற்றிபெருவருக்கு பத்து லட்சம் டாலர் பணத்தொகை வழங்கப்படுவதாகவும் அறிவித்திருந்தது.

அதேபோன்று சிங்கப்பூரின் தேசிய தினக் கொண்டாட்டத்தின்போது நடைபெற்ற இராணுவ அணிவகுப்பில் ஆபத்தான கட்டங்களில்  உள்நாட்டு பாதுகாப்பு எவ்வாறு நடைபெறுகின்றது என்பது தொடர்பான ஒரு நிகழ்ச்சியும் பொதுமக்கள் பார்வைக்கு எடுத்துக்காட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்வதில் இயந்திர ரோபோக்களின் பயன்பாடு குறித்தும் காட்டப்பட்டது. சீனாவும் இராணுவ ரோபோக்களை உற்பத்திசெய்வதில் முன்னேரி வருகின்றது. இப்போதே சீனாவில் நிறைய ரோபோ ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

2020ஆம் ஆண்டிற்குள் இராணுவத்திலிருக்கும் துருப்புக்களில் 30 % ஆன படையினரை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக ரோபோக்களை நியமிக்கவிருப்பதாக அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் செய்தியறிவித்திருந்தது. தற்போது அதற்கான பல்வேறு நடவடிக்கைகளும் முட்கொண்டு நடாத்தப்பட்டு வருகின்றன. இப்போதே ஈராக்கிலும் ஆப்கானிலும் பாகிஸ்தானின் எல்லைப் புறங்களிலும் ஆளில்லா விமானங்கள் மூலம் குண்டுமலை பொழிந்துவருகின்றது அமெரிக்கா. அதேபோன்று ஈராக், ஆப்கானில் கண்ணிவெடி அகற்றும் பணிகளிலும் ரோபோக்கள் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற சாதாரண விடயங்களையும்தாண்டி இனிவரும் காலங்களில் போர்க்களங்களில் நேரடியாகவே ரோபோக்கள் களமிறங்கி யுத்தம்செய்யவிருக்கின்றன என்பதே ஆச்சரியமான விடயமாக உள்ளது.

இவற்றை தானியங்கிக் கட்டளைகளை சிறப்பாக நிறைவேற்றும் இயந்திர ரோபோக்கள் என்று இவற்றின் வடிவமைப்பாளர்கள் கூறுகின்றார்கள். கவச வாகனங்களை ஓட்டுதல் வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்தல், களத்தில் முன்னின்று தாக்குதலில் ஈடுபடுதல் என இதன் செயல்பாடுகள் நீண்டுசெல்கின்றன.

இந்த இயந்திரங்களுக்கு சுடுஎன்று கட்டளையிட்டால் அதனை அப்படியே செய்து முடிக்கும். இதில் உள்ள பிரச்சினை எதிரில் வருவது பொதுமக்களா? எதிரிகளா? சிறுவர்களா? முதியவர்களா? ஆடு மாடா? அல்லது தமது தரப்பினரா? என்பதெல்லாம் தெரியாது. சுட்டுத்தள்ளிக்கொண்டே போகும். இவற்றையெல்லாம் சுயமாக உணர்ந்து செயல்படும் விதத்தில் இதுவரை எந்திரங்கள் தயாரிக்கப்படவில்லை. எனவே இது மனிதகுலத்துக்குப் பெரும் ஆபத்தாக அமையப்போவது என்னவோ உண்மைதான்.

வீடியோ கேம்களை விளையாடுவதனைப்போன்று ரோபோக்களை அனுப்பிவிட்டு அவற்றைத் தூரத்திலிருந்து மனிதன்தான் ரிமோட்கன்ரோலின் ஊடாகச் செயற்படுத்தப்போகிறான் என்பதால் பாரிய ஆபத்து ஏதும் ஏற்படாது என அமெரிக்கப் பொறியியலாளர்கள் கூறுகின்றனர். ரோபோக்கள் சுடுகின்றதா இல்லையா என்பது ஒருபுறமிருக்க தற்போது போரில் ஈடுபட்டுவரும் அமெரிக்க சிபப்பாய்கள் பொதுமக்களை ஈவிரக்கமின்றி கொலைசெய்யாமலா இருக்கின்றார்கள்? ஜப்பானில் ஹிரோசிமா, நாகசாசி என்ற இருநகரங்கள் மீதும் அணு குண்டுபோட்டு வேறோடு அறுத்தெரிந்தது இயந்திரமல்லவே? அமெரிக்கன்தானே! வியட்டநாமில் பல ஆயிரம் உயிர்களை விசமருந்து தெளித்தே கொலைசெய்தது யார்? வியட்நாமியப் பெண்களை ஊர் ஊராகச் சென்று கர்ப்பளித்தது, ஆண்களைச் சித்தறவதை செய்து கொன்றது மனிதனா? ரோபோக்களா? அதுபோக இன்று ஈராக், ஆப்கானில் அமெரிக்க இராணுவம் பல இலட்சம் மக்களைப் படுகொலை செய்துள்ளதே. செய்வதையெல்லாம் செய்துவிட்டு தெரியாமல் நடந்துவிட்டது, தவறுதலாக நடந்துவிட்டது என்றெல்லாம் கதையும் விடுவார்களே! இதே சிப்பாய்கள்தானே ரோபோக்களையும் வழிநடாத்தப்போகிறார்கள்.

நேரடியாக போர்க்களத்தில் குதிக்காமல் வீடியோகேம்ஸ் விளையாடுவதுபோன்று ரோபோக்கள் மூலம் அனைவரையும் கொன்று குவிப்பர். அது ஒரு பொழுதுபோக்காகக் கூட இவர்களுக்கு இருக்கலாம். பலஸ்தீனை நோக்கி வீசப்படும் பாரிய குண்டுகளில் யூத சிறுவர்கள் கையெழுத்திட்டுப் பழகுவதுபோன்று நன்றாக வீடியோ கேம்ஸ் விளையாடக்கூடிய சிறுவர்களிடம் ரோபோக்களின் ரிமோட்டைக் கையில்கொடுத்தாலும் கொடுத்துவிடுவார்கள் அமெரிக்கர்கள்.

விண்வெளி ஆய்வுகளின் செலவீணத்துக்கு நிகரான செவீனத்தைத் தரும் இந்த ரோபோ உருவாக்கத்தில் அமெரிக்க களமிறங்கியிருப்பதன் பின்னால் பல்வேறு அரசியல் பொருளாதாரக் காரணிகளும் இருக்கின்றன. இராணுவ வீரர்களாக மனிதனைப் பயன்படுத்தும்போது வரும் செலவினங்கள் அதிகரிக்கும். அவர்களுக்குத்தேவையான உடைகள், உணவு, சம்பளம் என்று நீண்ட செலவினங்கள் வரும். அவ்வாறான செலவினங்கள் ரோபோக்களுக்கு செல்வதில்லை. போர்க்களங்களில் எப்படியும் சிப்பாய்கள் இறக்கத்தான் செய்கிறார்கள். ஈராக், ஆப்கானிலிருந்த ஆயரக்கணக்கான அமெரிக்க சிப்பாய்கள் பலியானார்கள். இது நாட்டு மக்களிடம் போரெதிர்ப்பு உணர்வைத் தோற்றுவிக்கும். வியட்நாம் யுத்தத்திலிருந்து அமெரிக்கா பின்வாங்கியமைக்கும் இதுவே காணரம். அமெரிக்காவின் நீண்டுசெல்லும் போர்த்திட்டங்களுக்கு மக்களது போர் எதிர்ப்பு உணர்வு பெறும் ஆபத்தாக அமையும். எனவே அரசு வீரர்களின் இறப்பு வீதத்தைக் குறைக்கவேண்டும். ரோபோக்கள் சிதைவடைந்தன என்று யாரும் கவலைகொள்ளப்போவதில்லை. எனவே போர்க்களங்களில் ஈவிரக்கமற்ற ரோபோக்கள் பயன்படுத்தப்படப்போகின்றன.

உலகளவில் இயங்கும் ரோபோக்கள் யாவும் வௌ;வேறு விதமான கிணினி மென்பொருள் செய்நிரல்களினால்தான் இயங்குகின்றன. ஒருவரால் தயாரிக்கப்பட்ட ரோபோவின் செய்நிரல் இன்னுமொருவரால் உருவாக்கப்பட்ட ரோபோவுக்குப் பொருந்தாது. இதனால் கூடிய பயன்பாட்டை ரோபோக்களிடமிருந்து பெற முடியாதுள்ளதாகக் கூறி உலகனைத்து ரோபோக்களுக்குமான ஒரே வகையான செய்நிரலாக்கத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் மிக அண்மையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சுவிட்சர்லாந்து பெடரல் தொழிலுட்ப நிறுவனத்தின் (Swiss Federal Institute of Technology) பேராசிரியர் மாகஸ் வய்பல் உலகெங்கிலும் காணப்படுகின்ற ரோபோக்களுக்கான பொலிஸ் அமைப்பொன்றை உருவாக்கவுள்ளதாக செய்தியறிவித்துள்ளார். உலகிலுள்ள அனைத்து ரோபோக்களையும் கட்டுப்படுத்தக்கூடிய கட்டுப்பாட்டு மையமாகவும் இது இருக்குமென அவர் தெறிவித்துள்ளார். தற்போது இப்பணி RoboEarth என்ற பெயரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரனையுடன் 35 விஞ்ஞானிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

உண்மையில் இது மிகவும் ஆபத்தான ஒரு முன்னெடுப்பென்றுதான் கூறவேண்டும். ஏனெனில் இன்று உலகிலுள்ள மிகவும் இரகசியமான, மிகமிகப் பாதுகாப்பான நிறுவனங்கள், அமைப்புகள், அரசாங்கங்கள் என நாம் கருதியிருக்கின்ற அனைத்தினதும் வலையமைப்புகளைத் தாக்கி அவற்றின் தகவல்களையும் கட்டுப்பாடுகளையும் தம்வசம் கொண்டுவரும் பாரிய துருவித்தாக்குதல்கள் நடைபெற்றுவருகின்றன. (உலகை அச்சுருத்தும் ஹெகிங் தாக்குதல்கள்...) எனவே அவ்வாறான நாசகார துருவிகள் ரோபோக்களைக் கட்டுப்படுத்தும் கட்டுப்பாட்டுமையத்தை வலையமைப்பு வழியாகவேதாக்கி முழு ரோபோக்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து நாசகார வேலைகளைச் செய்ய மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. இதனால் மனிதன் இன்னும் பல அழிவுகளைச் சந்திக்கநேருவான்.

இதனுடன் தொடர்புபட்ட மற்றுமொரு விடயத்தையும் இங்கு குறிப்பிட்டாகவேண்டும். அதாவது மனித மூளையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தாம் நினைத்தனை அவன் மூலம் சாதிக்கும் ஒரு தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுதான் Beast System.  இதன் மூலம் எதிரி தேசத்திலிருந்து மனித வளங்களைப் பெற்று அவர்களை Beast System மூலம் தம்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து எதிரிக்கு அதிராக அவர்களைப் பயன்படுத்துவதற்கும் அதி நவீன இராணுவத் துறைக் கண்டுபடிப்புகள் மூலம் புதிய ஆக்கிரமிப்பு ஒழுங்குகளைச் செய்வதற்கும் அமெரிக்கா தனது நகர்வுகளைச் செய்து வருகின்றது என்பது ஒரு கசப்பான உண்மை.

முன்னெல்லாம் காட்ரூன்களில் ரோபோக்களைப் பார்த்து மகிழ்ந்த நாம் தற்போது அவை திரைப்படங்களாகக் காட்சி தருவதைக் காண்கின்றோம். வீடியோ விளையாட்டுக்களில் எமது பிள்ளைகள் அவர்களது கைகளாலேயே ரோபோக்களை இயக்குவதனையும் பார்த்திருப்போம். ஆனால் இன்றளவிலே நிஜமாகவே போர்க்களங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் ரோபோக்களின் ஆதிக்கம் நாளை என்னவாக இருக்கப் போகின்றது என்பது பெரும் அச்சத்துக்கும் குழப்பத்துக்கும் இடம்பாடான விடயம். இன்னும் நாம் பார்வையாளர்களாகவே இருக்கின்றோம். பங்காளர்களாகக் களமிறங்குவது எப்போது???

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...