உலக மக்கள் தொகை 7 பில்லியன்களாக அதிகரித்திருக்கும் வேலை உலகளவில் முஸ்லிம்களின் சனத்தொகையும் பெருகிக்கொண்டே செல்வதாக அமெரிக்க ஆய்வொன்று சுட்டிக்காட்டுகின்றது. அதிலும் பெரும்பான்மை முஸ்லிம்களைக்கொண்ட நாடாக விளங்கும் இந்தோனேசியாவை முந்திக்கொண்டு அந்த இடத்தைப் பாகிஸ்தான் பிடிக்கவுள்ளதாகவும் மேற்படி ஆய்வு குறிப்பிடுகின்றது.
இதுதொடர்பாக வொஷிங்டனைச் சேர்ந்த மத, பொது வாழ்க்கை தொடர்பான ஆய்வு மையம் நடாத்திய ஆய்வொன்றில் அடுத்த 20 வருடங்களில் உலகிலுள்ள முஸ்லிமல்லாதவர்களின் எண்ணிக்கையின் இரு மடங்கு அதிகமாக முஸ்லிம்களின் எண்ணிக்கை இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்பெருக்கம் தொடரின் 2030ம் ஆண்டில் இருக்கும் 8.3 பில்லியன் மக்கள்தொகையில் கால்வாசிக்கும் அதிகமானவர்களாக அதாவது 26.4 வீதத்தினராக முஸ்லிம்கள் இருப்பார்கள் என கணிப்பிடப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் குடும்பத்திட்டமும் அதிகமானவர்கள் இஸ்லாத்தின்பால் கவரப்பட்டு இஸ்லாத்தைத் தம் வாழ்க்கை நெறியாக ஏற்று அவர்களது குடும்பத்தினரையும் இஸ்லாத்தில் இணையச் செய்வதற்காக முயற்சிப்பதும் முஸ்லிம்களின் வளர்ச்சிவேத்திற்கு காரணிகளாக இருக்கும் என நான் கருதுகின்றேன். 2030 ஆம் ஆண்டாகும்போது மற்றைய நாடுகளை விட ஐரோப்பிய நாடுகளில் முஸ்லிம்கள் அதிகமிருப்பதாகவும் ஐரோப்பிய நாடுகளைவிட அமெரிக்காவில் அதிக இஸ்லாமியர்கள் இருப்பார்கள் எனவும் அவ்வாய்வு சுட்டிக்காட்டுகின்றது.
1990 இலிருந்து 2010 வரை உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக 2.2 வீதத்தால் அதிகரித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி : எங்கள்தேசம்
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...