"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

05 December 2011

ஆமைகளில் காணப்படும் இறை அத்தாட்சிகள்

ஆலிப் அலி (இஸ்லாஹி)
WWF இவ்வாண்டை (2011) ஆமை ஆண்டாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

ஆமைகள் பார்ப்பதற்கு மிகவும் சாதுவான தோற்றத்தை உடையவை. இவற்றின் செயற்பாடுகள்கூட மிகவும் மெதுவாகவே இடம்பெறும். சிறிய தலையையும் சற்று நீண்ட நான்கு கால்களையும் குறுகிய வாலையும் முதுகிலே ஒரு ஓட்டையும் ஆமைகள் கொண்டுள்ளன. ஆமைகள் குளிர் இரத்தமுடைய உயிரினம் என்பதால் இடைவெப்ப வளயப் பிரதேசங்களிலேயே அதிகம் வாழ்கின்றன.

தமது வாழ்நாளில் அதிக காலத்தை நீரிலும் சற்று நிலத்திலும் கழிக்கும் தன்மை கொன்டனவென்பதால் ஈரூடகவாழி என்றும் ஆமைகளை அழைக்கின்றோம். ஊர்வன இனத்தைச் சேர்ந்த விலங்குகளின் பட்டியலிலும் இவை அடங்குகின்றன. குலம், ஆறு, ஏரி, கடல் என அனைத்து நீர் நிலைகளிலும் இவ் ஆமைகள் பரவலாக வாழ்கின்றன. ஆமைகள் சுமார் 200 மில்லியன் வருடங்களுக்கும் மேலாக பூமியில் வாழ்ந்துவருவதாக படிம ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

காலாகாலமாக ஆமைகள் பற்றிய பல மூட நம்பிக்கைகளும் இருந்து வந்துள்ளன. உலகம் ஒரு இராட்சத ஆமையின் முதுகில் நிறுத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகாலங்கிளில் மனிதன் நம்பிவந்தான். இன்றும் சில பிரதேசங்களில் இந்நம்பிக்கைகள் காணப்படுகின்றன. ஒரு வீட்டிற்குள் ஆமை நுழைந்துவிட்டால் அந்த வீடு ஏதோ ஒரு துக்ககரமான அபசகுனமான நிகழ்வுக்கு ஆட்படப்போகிறது என்று எண்ணுகின்றனர்.

கரைப் பிரதேசங்களில் வாழும் மீனவக் குடும்பங்கள் அவர்கள் வசிக்கும் குடிசைக்குள் ஆமை நுழைந்தால் அது அதிஷ்டத்தின் அரிகுறி எனவும் அது எழுப்பும் ஒரு வகை கரகரப்பான ஓசை மங்களமான ஓசை என்று அதனை வணங்கவும் செய்கின்றனர்.

உலகில் 300 வகையான ஆமைகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அவற்றில் கடலாமை, பூ ஆமை, சேற்று ஆமை, பாலாமை, நட்சத்திர ஆமை, பெருந்தலை ஆமை ஆகிய ஆறும் மிகவும் பிரசித்தமானவை. இவற்றுக்குப் பொருத்தமான வாழ்வாதாரத்தையும் வாழ்விடத்தையும் வித்தியாசமான குணவியல்புகளையும் தோற்ற அமைப்பையும் அல்லாஹ்வே கொடுத்துள்ளான். Leatherback எனப்படும் ஆமைகளே உலகிலேயே மிகப்பெரிய ஆமைகளாகும். இவை சுமார் 1 முதல் 2.5 மீட்டர்கள் வரை வளர்கின்றன. இவை அதிகமாக பசுபிக் பெருங்கடலில்தான் வசிக்கின்றன. அதேபோன்று வடஅமெரிக்காவில் உள்ள Common Bog எனும் 10cm நீளமுடைய ஆமைகளே உலகிலேயே மிகச்சிரிய ஆமைகளாகும்.

பொதுவாக ஆமைகளின் செயற்பாடுகள் மந்தகதியிலேயே நடைபெறுகின்றன. தரையில் நடப்பதாயினும் உணவுண்பதாயினும் மெதுவாகவே தொழிற்படும். ஆமைகளின் இதயமும் மிகவும் நிதானமாகவே துடிக்கின்றது. ஆமைகள் ஒரு முறைக்கு 4 நிமிடங்கள் எடுத்துக்கொண்டு மிகவும் மெதுவாகவே சுவாசிக்கின்றன. அத்தோடு இவற்றின் நுரையீரல் பெரிதாக இருப்பதால் ஒருமுறை கடலின்மேல் தளத்திற்கு வந்து தேவையான ஒக்ஸிஜனை நுழையீரலில் நிரப்பிக்கொண்டு கடலுக்கடியில் பல மணிநேரங்கள் பயணிக்கின்றன. ஆமைகள் மிக மெதுவாக சுவாசிப்பதாலும் மிக மெதுவாக அவற்றின் இதயம் துடிப்பதாலும் இவை அதிக காலம் உயிர்வாழ்வதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆமைகள் சுமார் 100 வயதுக்கும் மேலாக உயிர்வாழக்கூடியன.

அனேகமான ஆமைகள் எமது கண்களுக்கு சாதுவாகக் தென்பட்டாலும் சிலவகை தமக்குள் மூர்க்கமாகச் சண்டையிட்டுக்கொள்கின்றன. Leather Back எனப்படும் இராட்சத ஆமைகள் அவற்றுக்குக் கோபம் வந்தாலோ அல்லது பசிவந்தாலோ இன்னொரு ஆமையுடன் கடுமையாகச் சண்டையிடும். கழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஓட்டின் இரு முனைகள் மூலம் அவை ஒன்றை ஒன்று குத்தித் தாக்கிக்கொள்ளும். எப்படியாவது மற்ற ஆமையை வீழ்த்தி மல்லாக்கக் கவிழ்த்திவிட்டுத் தன்பாட்டுக்குச் சென்றுவிடும். இவற்றின் முதுகு ஓடுகள் பெரிதாகவும் உயரமாகவும் இருப்பதன் காரணத்தால் தமது கால்களையோ தலையையோ பயன்படுத்தி இவற்றால் மீண்டும் சரியாக எழுந்துகொள்ள முடியாது. எனவே அவ்வாறே நீண்ட நாட்கள் இருந்து தாகத்தாலும் பசியாலும் இறந்துவிடுகின்றன.

ஒவ்வொரு வகையான ஆமைகளினதும் பாதங்கள் வித்தியாசமாகப் படைக்கப்பட்டுள்ளன. தரைப் பாங்கான பிரதேசங்களில் வாழும் ஆமைகளின் கால் பாதங்களில் விரல்களும் நகங்களும் காணப்படுகின்றன. எனவே அவற்றால் தரையில் சுலபமாக நடக்க முடியும். ஆமையால் தரையில் மணிக்கு 70 மீட்டர் வேகத்தில்தாம் பயணிக்க முடியும். ஆனால் நீரில் மிக வேகமாக நீந்திச் செல்லும் ஆற்றலுடையன. நீரில் வாழக்கூடிய ஆமைகளின் கால்கள் துடுப்புபோன்று அமைந்திருப்பது இதற்கு ஒரு காரணமாகும். இவை நீரில் மணிக்கு 40 மைல் வேகத்தில் நீந்திச் செல்கின்றன. ஆனால் மணற் தரையில் அவற்றால் விரைவாகச் செல்ல முடியாது ஊர்ந்துதான் செல்கின்றன.

ஆமைகளின் ஓடுகள் உண்மையில் ஓர் விசேடமான படைப்புதான். ஒவ்வொரு ஆமையின் ஓட்டிலும் காணப்படுகின்ற வித விதமான சித்திரங்களின் அழகே அந்த படைப்போ(விய)னின் புகழ்பாடச் சொல்கின்றன. பெரும்பாலும் ஓட்டின் வடிவங்களைவைத்தே ஆமைகள் வகைப்படுத்தப்படுகின்றன.

இவ் ஓடுகள் மிகவும் கடினத்தன்மை வாய்ந்தவை. இது ஆமைளுக்கானதொரு பாதுகாப்புக் கவசமாகக் காணப்படுகின்றது. எதிரிகளிடம் ஆமைகள் மாட்டிக்கொண்டால் உடனே தமது தலையையும் கால்களையும் வாலையும் ஓட்டினுள்ளே இழுத்துக்கொள்ளும். அதனால் எதிரியால் அக்கடினமான ஓட்டைக்கடித்து உடைக்க முடியாது. ஓட்டின் வெளிப்பகுதி தடிப்பாக, கடினமாக இருப்பினும் அதன் உட்பகுதி ஆமைக்குச் சொகுசான முறையில் மென்மையாக அமைந்திருக்கும். அனைத்து ஆமைகளாலும் இவ்வாறு தமது ஓட்டுக்குள் அடங்கிவிட முடியாது. ஏனெனில் சிலவற்றின் உடல் அவற்றின் ஓட்டைவிடவும் பெரிதாக இருக்கும்.

அனேகமாக ஆமைகள் தாவரங்களையே உணவாகக் கொள்கின்றன. நீர் நிலைகளில் காணப்படும் சிறு தாவரங்களையும் பாசித்தாவரங்களையும் உட்கொள்ளும் அதே சமயம்; சிறிய மீன்களையும் முட்டைகளையும் உட்கொள்ளவும் செய்கின்றன. இதனை ஆய்விற்காக எடுத்துக்கொண்ட டினா ஓல்சன் என்ற பல்லுயிர் ஆய்வாளர், “கடலுக்கடியில் விளையும் புற்களையும் இவை உணவாகக் கொள்கின்றன. அவை தொடர்ச்சியாக வெட்டப்படும்போதுதான் புதிதாகத் தழையும், பெருகும். ஆமைகளின் எச்சம், புற்களின் வளர்ச்சிக்கு முக்கியமாகிறது. இவை கடலின் ஆதாரசக்தி என்று கூறினால் மிகையாகாதுஎன தமது ஆய்வுக்கட்டுரையை முடிக்கின்றார்.

ஆமைகள் முட்டையிட்டே குஞ்சுகளைப் பொறிக்கின்றன. முட்டையிடும் தருவாயை அடையும் ஓர் கடல் ஆமை கரைப்பகுதியை வந்தடைந்து பாதுகாப்பான ஒரு மனற்பிரதேசத்தில் ஆழமானதொரு வளைதோண்டும். பின்பு அதனுள் முட்டையிட்டுவிட்டு வளையைத் தம் கால்களாலேயே மூடிவிட்டுச் சென்றுவிடும். சாதாரண ஆமைகள் ஒரு தடைவையில் சுமார் 50 – 100 வரையில் முட்டைகளை இடுகின்றன. கடலாமைகள் 40 முதல் 200 முட்டைகளையும் இடும்.

ஆமைகள் நூற்றுக்கணக்கில் முட்டையிட்டாலும் அவை அனைத்துமே குஞ்சுகளாகப் பிறந்து கடைசி வரை உயிர் வாழ்வதில்லை. சில முட்டைகள் விலங்குகளால் அழிவுக்குள்ளாகின்றன. குஞ்சுகளாக வெளியே வந்ததும் சிலது கடல் பறவைகளாலும் விலங்குளாலும் உணவாக்கப்பட்டு அழிகின்றன. மனிதன்கூட சிலபோது இவற்றை அழிவுக்குள்ளாக்குகின்றான். எனவே இடப்படும் நூற்றுக்கணக்கான முட்டைகளில் ஓரிரண்டு ஆமைகளே எஞ்சி இறுதிவரை உயிர்வாழ்கின்றன. அனைத்துவகையான ஆமைகளையும் பாதுகாக்கவேண்டும் என்ற முயற்சியில் அமெரிக்கப் பண்ணை ஒன்றில் ஆமைகள் பாதுகாப்பாக வளர்க்கப்படுகின்றன. இதன் காப்பாளர் ஜோன் ரூட்ஸ் உலகின் அனைத்து ஆமைகளிலும் 20 சதவிகிதமானவை அழிந்துவிட்டதாகவும் வருடத்திற்கு 2 இலட்சம் ஆமைகள் உலகெங்கும் கொல்லப்படுவதாகவும் கூறுகின்றார்.

ஆமைகள் முட்டையிடும்போது முதலில் ஏழு இடங்களில் வளைகளைத் தோண்டும். பின்னர் அதில் ஒன்றில் மாத்திரம் முட்டைகளை இட்டுவிட்டு மண்ணைக்கொண்டு அதனை மூடிவிட்டுச் செல்கின்றன. கடற் பெண் ஆமைகள் முட்டையிடுவதற்காக கூட்டம் கூட்டமாகக் கரையைநோக்கி வருகின்றன. அத்தோடு இவை இரவு காலங்களில் மட்டுமே முட்டையிடும் இயல்பையும் கொண்டுள்ளன.

சூரிய வெப்பத்தினை ஆதாரமாகக்கொண்டு சிறிது காலத்தில் அல்லாஹ் அம்முட்டைகளில் குஞ்சுகளைப் உருவாக்குகின்றான். பின் அக்குஞ்சுகள் முட்டையை உடைத்துக்கொண்டு வெளியே வருகின்றன. ஆமைகளில் ஆண், பெண் பாலினத்தை நிர்ணயிக்கும் சக்தியாக அதன் வளைகள் விளங்குகின்றன. கதகதப்பாக அவ்வளைகள் காணப்படின் உள்ளே இருக்கும் முட்டைகள் கிட்டத்தட்ட பெண்ணாகப் பொரிகின்றன. மிகவும் குளிர்ச்சியான வளைகலில் அதிக விகிதாசாரத்தில் ஆண் ஆமைகள் பொரிகின்றன.

தற்போதைய கணக்குப்படி பெண் ஆமைகளே அதிகம் உள்ளதாகத் தெரிய வருகின்றது. வெப்பம் எவ்வாறு பாலினத்தை நிர்ணயிக்கின்றது என்பது அறிவியலுக்கு விடப்பட்டுள்ள சவாலாகவே அறிஞர்கள் கருதுகின்றனர். இறை ஆற்றலின் முன் காரண காரிய விதியை நம்பும் மனித அறிவு எவ்வளவு பலவீனமானது என்பதற்கு இதுவும் ஒரு சான்று. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

முட்டையிலிருந்து வெளியேவரும் ஆமைகளிடம் ஓர் அற்புதம்  நிகழ்வதை எம்மால் அவதானிக்க முடியும். வெளியேவரும் குஞ்சுகள் அனைத்துமே ஏழவே யாரோ சொல்லிவைத்தாற்போல் கடல் திசையை நோக்கியே பயணிக்கின்றன. அவற்றை இடைமறித்து வேறு திசையில் திருப்பிவைத்தால்கூட மீண்டும் கடல் திசையை நோக்கித் திரும்பிச் சென்றுவிடும். அப்படியானதொரு இயல்பூக்கத்தை வல்லவன் அல்லாஹ் அவற்றுக்குக் கொடுத்துள்ளான். தாயின் வாசனையை உணர்ந்து அவை கடலைநோக்கிச் செல்வதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சில ஆமைகள் தாம் பிறந்த இடத்திலிருந்து சில கி.மீ. களுக்கு உள்ளேயே வாழ்ந்து மடிகின்றன. ஆனல் அதிகமான ஆமைகள் தாம் பிறந்த இடத்தை விட்டும் ஆயிரக்கணக்கான கி.மீ. களுக்கு அப்பால் தேசாந்திரப் பயணம் செல்கின்றன. பெண் ஆமை எவ்வளவு தூரம் பயணம் செய்தாலும் தான் பிறந்த இடத்துக்கே மீள வந்து முட்டையை இட்டுவிட்டுச் சென்றுவிடுகின்றன.

ஒரு பெண் ஆமையின் ஓட்டுப் பகுதியில் ட்ரான்ஸ்மீட்டர் கட்டிவிடப்பட்டு செய்மதி ஒன்றின் மூலம் அதன் பயணம் கண்காணிக்கப்பட்டது. அது தான் முட்டையிடும் பிரதேசமான பாப்புவா நியுகினியா கடற்கரைக்கு 647 நாட்கள் பயணித்து 12,744 மைல் தொலைவு கடந்துசென்று சரியான இலக்கை அடைந்தது. செல்லும் வழியெங்கும் சொல்லொணாத் துன்பங்களையும் ஆபத்துக்களையும் சந்தித்தவாறே சென்றமை அவாதானிக்கப்பட்டது.

ஆமைகளில் அல்லாஹ் பல அற்புதங்களை வைத்துள்ளான். ஆமைகளின் பாதுகாப்புக் கவசமாகத் காணப்படும் கடினமன ஓடு, நீண்ட நேரம் சுவாசிக்காமல் நீரிற்கு அடியில் பயணிக்கும் ஆற்றல், பல ஆயிரம் மைல்கள் பிரயாணித்தாலும் பிறந்த இடத்திற்கே மீண்டும் வந்து முட்டையிடும் ஞாபக சக்தி, எதிரி விலங்குகளால் இனங்கான முடியாது ஏழு வளைகளைத் தோண்டிவிட்டு ஒன்றில் மாத்திரம் முட்டையிடும் தந்திரம், பாலினத்தை நிர்ணயிப்பதில் வெப்பசக்தி வகிக்கும் பங்கு, முட்டையிலிருந்து வெளியேவரும் குஞ்சுகள் நேராக கடல் திசையை நோக்கியே பயணிக்கிகும் தன்மை இவையாவும் இறைவனின் படைப்பாற்றலின் அற்புதங்களை எடுத்துக்காட்டுகின்றன. அவன் யாவற்றையும் அறிந்தவன், சர்வ வல்லமை மிக்கவன்.

குறிப்பு : அகரம் சஞ்சிகையில் பிரசுரமானது.

உங்கள் கருத்து:

1 comments:

kaleel rahman said...

படைப்பாளனின் படைபின் விசித்திரம் ஆமைகள் அலிப் இந்த பதிவை மீல் பதிவு செய்து இருக்கிறேன். http://www.kaleel.net.in/2013/06/blog-post_4949.html

ஏசுநாதரை பூமிக்கு திருப்பி அனுப்ப வேண்டிய அவசியம்?. இதுவும் கூட படைத்தவன் மனிதனுக்கு காட்டும் அருள் என்பதே என் கருத்து ஏனெனில் தஜ்ஜால் என்று ஒரு அற்புதமான படைப்பு (நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் இறுதிக் காலத்தில் வரவிருக்கும் மகா பொய்யனான) தஜ்ஜாலையும் கண்டேன். இவையெல்லாம் அல்லாஹ் எனக்குத் காண்பித்த அவனுடைய சான்றுகளில் அடங்கியவை. நீங்கள் அவனை (தஜ்ஜாலை)ச் சந்திக்கவிருப்பதில் சந்தேகம் ஏதும் கொள்ள வேண்டாம். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புஹாரி ஹதீஸ் எண் 7408 )http://www.kaleel.net.in/2013/05/blog-post_29.html

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...