"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

06 December 2011

வீடுகளைத் தாக்கிய களுதெல் காடையர்கள்

கொடவெலைக் கிராமத்தில் அசம்பாவிதம்
ஆலிப் அலி (இஸ்லாஹி)
அண்மையில் அநுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம் ஸியாரம் இடிப்பினைத் தொடர்ந்து நாட்டின் பல பாகங்களிலும் ஒரு துண்டுப் பிரசுரம் வினியோகிக்கப்பட்டிருந்தது. அதில் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் அல்லாஹ்வையும் மிகக் கீழ்த்தரமான முறையில் கொச்சைப்படுத்தி தூற்றி எழுதப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் (4/11/2011) கேகாலை மாவட்டத்தில் வரக்காப்பொலை நகரிற்கு அண்மையில் அமைந்துள்ள கொடவெலை எனும் கிராமத்தில் இதுபோன்றதொரு அசம்பாவிதம் நடந்துள்ளது.

இரவு நேரத்தில் அனைவரும் உறங்கியிருக்கும் தருவாயில் சில காடையர்கள் கருப்பு எண்ணைக் கேன்களுடன் (களுதெல்) வந்து ஆரம்பமாக இருக்கும் 10 வீடுகளுக்கும் அங்கு நிருத்தி வைக்கப்பட்டிருந்த வாகனமொன்றிட்கும் பாரிய அளவில் கருப்பு எண்ணை அடித்துவிட்டு அநாகரீகமான முறையில் ஆணையும் பெண்ணையும் நிர்வானமாக, ஆபாசமாக வரைந்த சுவரொட்டிகளையும் ஒவ்வொரு வீட்டுக் கதவுகளிலும் ஒட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

அதிகாலையில் சுபஹுத் தொழுகையை முடித்துவிட்டு பள்ளி வாயிலில் இருந்து வரும்போது இதனைக் கண்ட சில இளைஞர்கள் வீட்டாரைத் தட்டி எழுப்பியபோதுதான் விடயம் அவர்களுக்கே தெரியவந்துள்ளது. அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளையும் சென்று பார்த்தபோதுதான் இது திட்டமிட்டுச் செய்யப்பட்டுள்ள ஒரு வேலை என்பதைப் பொதுமக்கள் உணர்ந்துகொண்டனர்.

ரமழான் மாதத்தில் பல முஸ்லிம் கிராமங்களை இலக்குவைத்து வந்த கிரீஸ் மனிதன், அத்தோடு அநுராத புரத்தில் முஸ்லிம் மஸுதி உடைப்பு, துண்டுப் பிரசுரம் வினியோகம் என்பவற்றின் தொடராகவே இதனையும் மக்கள் கருதி பெரும் பரபரப்புடனும் பீதியுடனும் காணப்படுகின்றனர்.

அதிகாலையிலேயே இதுதொடர்பாக பரபரப்பு ஏற்படவே பொலிஸ் நிலையத்துடன் தொடர்புகொண்டு பொலிஸார் அங்கு வரவழைக்கப்பட்டனர். கருப்பு எண்ணை அடிக்கப்பட்ட வீட்டு உடைமையாளர்களிடமிருந்து வாக்கு மூலங்களைப் பெற்றுக்கொண்டு குறித்த நாள் ஜும்ஆத் தொழுகையின் பின்னர் பொலிஸார் கொடவெலை முஸ்லிம் ஜும்ஆப் பள்ளிவாயிலில் பொதுமக்களுடனான ஒரு ஒன்று கூடலை ஏற்பாடு செய்திருந்தது. அதில் சப்ரகமுவ பிரதேச சபை அமைச்சர் உதேகாந்த அவர்களும் வரக்காப்பொலைப் பிரதேச சபைச் செயலாளரும் கிராமசேவா உத்தியோகத்தரும் சமூகமளித்திருந்தனர். அத்தோடு சில சிங்கள சகோதரர்களும் அங்கு குழுமியிருந்தனர்.

அவர்கள் பேசியதில், இக்கிராமத்தைப் பொறுத்தவரை முஸ்லிம்களும் சிங்கள, பௌத்த மக்களும் மிகவும் ஒற்றுமையுடன் வாழ்வதாகவும் இந்த மோசமான செயலைச் செய்திருப்பது சிங்கள முஸ்லிம் மக்களுக்கிடையே பிணக்குகளை உண்டுபண்ணவேண்டும் என்று ஆர்வம்கொண்டிருக்கும் சில காடையர்கள்தாம் என்றும் இந்த அநாகரிகமான செயலோடு தொடர்பு பட்டவர்களைக் குருகிய காலத்திற்குள் கண்டுபிடித்து சட்டத்தின் கீழ் தகுந்த நடிவடிக்கை எடுப்பது எமது கடமை என்றும் அதற்கு பொதுமக்கள் எமக்கு ஒத்துழைக்கவேண்டுமென்றும் இதற்காக நாம் பொதுமக்களிடம் மன்னிப்புக் கோறுவதாகவும் கேட்டுக்கொண்டார்கள்.

சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து  கருப்பு எண்ணை கொண்டுவந்த களன் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு ஒட்டப்பட்ட சுவரொட்டிகளின் கீழ் சில சிங்களவர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தன. சுவரொட்டியில் உள்ள எழுத்துக்கள் கூட கையெழுத்தைவைத்து கண்டுபிடிக்க முடியாவண்ணம் கட்டம் கட்டமான எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்தது. இவற்றை வைத்து ஏதும் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மக்கள் எதிர்பார்ப்புடன் இருந்தாலும் இதுவரை இவ்விசாரனைகளில் எந்த முன்னேற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை.

வெள்ளிக் கிழமையன்று கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தருவாயில் அங்கு சமூகமளித்த பௌத்த விகாரையின் தலைமைப் பிக்கு, கருப்பு எண்ணை அடித்து சேதமாக்கப்பட்ட வீடுகளை விகாரையின் செலவில் திருத்தித்தர தான் பொறுப்பேற்பதாகக் கூறினார். ஆனால் கூட்டம் முடிந்து அனைவரும் கலைந்து சென்றதன் பின்னர் சம்பவம் நடந்த ஒரு வீட்டின் முன்னாள் பாதிப்புக்குள்ளானவர்களை அழைத்து இன்னுமொரு சிறு ஒன்றுகூடலை ஏற்படுத்தி அதில் சேதத்திற்குள்ளான வீட்டு உடமையாளர்கள் கருப்பு எண்ணை படிந்துள்ள சுவர்களை நன்கு கழுவி, தேவையான நிறப் பூச்சையும் பிரஷ்ஷையும் எடுத்துவைக்கவேண்டும் என்றும் பின்னர் அதனை பௌத்த விகாரையூடாக சிங்கள சகோதரர்கள் வந்து வர்ணம் பூசித்தருவார்கள் என்றும் கூறப்பட்டது. அனைத்தையும் நாம் வாங்கிக்கொடுத்து வர்ணமடிப்பதை மாத்திரம் அவர்கள் செய்வதானால் அதனையும் எமக்கே செய்துகொள்ள முடியும் என்ற காரணத்தால் முஸ்லிம்கள் அதற்குச் சம்மதிக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து அடுத்தநாள் கொடவலை பௌத்த விகாரையில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒரு ஒன்றுகூடல் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து சில சிங்கள சகோதரர்கள் சிறிதளவு சேதமடைந்த வீடுகளை அவர்களாகவே முன்வந்து ஆனால் அரைகுறையாத் திருத்திவிட்டுச் சென்றுள்ளனர். என்றாலும் கூடுதல் அளவில் சேதமடைந்த வீடுகள் அப்படியே இன்னும் காட்சியளிக்கின்றன.

அண்மைக்காலமாக நாடளாவிய ரீதியில் முஸ்லிம்கள் பல சவால்களையும் நெருக்கீடுகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு பிரதேசத்திலும் இதுமாதிரியான விசமச் செயல்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்நிகழ்வைக்கூட பத்திரிகைகளில் பிரசுரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் அவை மௌனம் காத்துள்ளன. நாம், எமது சந்ததியினர் முகங்கொடுக்கவிருக்கும் வருங்காலங்களில் இதனைவிடவும் இன்னும் மோசமான பிரச்சினைகளைச் சந்திக்கவேண்டிவரும் என்பதை இப்போதே ஊகிக்க முடிகின்றது. வெள்ளம் வந்தபின்னர் அணைகட்டாது இப்போதே முஸ்லிம்களும் முஸ்லிம் தலைமைகளும் சிந்தித்து செயல்படுவதுதான் காலத்தின் தேவை.
படங்கள் கீழே...ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...