1995ம் ஆண்டு இஸ்தாபிக்கப்பட்ட யாகூ நிறுவனத்தின் இஸ்தாபகத் தலைவர்களுள் ஒருவரான ஜொ்ரி யாங் பேஜ் நேற்று முன்தினம் (17/ 01/ 2012) நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இருந்தும், பிற பதவிகளில் இருந்தும் விலகிக்கொண்டுள்ளார்.ஆரம்பத்தில் நல்ல நிலையில் சென்று கொண்டிருந்த இந்த நிறுவனம் கூகுளின் அசுர வளர்ச்சியால் பின்னோக்கி சரியத்துவங்கியது.
ஆரம்பத்தில் யாகூ இணைய தளத்தை மைக்ரோசாப்ட் ரூ. 2.3 லட்சம் கோடி விலைக்கு வாங்கக் கோறியபோதும் அதனை ஜொ்ரி பேஜ் மறுத்துவிட்டார். அதே போல சீனாவின் முன்னணி இணையத்தளமான அலிபாபாவில் உள்ள யாகூவின் 40 சதவீத பங்குகளை நல்ல விலைக்கு வாங்க பலர் முன் வந்தபோதும் யாங் விற்க மறுத்துவிட்டார். அதே போல யாகூவின் ஜப்பானிய பிரிவுக்கு முதலீடுகள் வந்தபோதும் அதை ஏற்க மறுத்துவிட்டார்.
இதுபோன்ற பல காரணங்களால் ஜொ்ரி பேஜ் விலக வேண்டுமென்ற கோசம் உள்ளுக்குள் எழ ஆரம்பித்தது. அதனைத்தொடர்ந்து கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஸ்காட் தாம்சனை நிறுவன செயல் அதிகாரியாக யாகூ நியமித்தது. எனவே ஜொ்ரி பேஜ் நேற்று முன்தினம் பதவி விலகிக்கொண்டார். அவர் பதவி விலகியதும் அமெரிக்க சந்தையில் யாகூவின் பங்கு விலைகள் உடனடியாக 3.4 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...