கண்ணுக்கு மை அழகு…. கவிதைக்கு
பொய் அழகு… கவிதையில் சுவை ததும்ப வேண்டுமெனில் அதில் பொய் கழத்தல் இன்றியமையாதது என்பது
கவிஞர் பெருமக்களின் ஒன்றித்த கருத்து. இயற்கையின் அழகுப் பதுமைகளையெல்லாம் பெண்ணுக்கு
ஒப்புவிப்பதில் கவிஞர்களின் திருவிளையாடல்கள் வானுயர்ந்து நிற்கின்றன.
இவ்வாறிருக்க அல்குர்ஆனும் “அஷ்ஷுஅறா
- கவிஞர்கள்” என்ற பெயரில் ஒரு அத்தியாத்தை இறக்கியருளியுள்ளது. இதில் கவிஞர்களை இரண்டு வகையினராகப் பிரித்து நல்ல,
உண்மையான கவிஞர் யார் என்பதையும் வழிகெட்ட மோசமான கவிஞர் யார் என்பதையும் விளக்கிக்
கூறுகின்றது.
“இன்னும் கவிஞர்கள்
(எத்தகையோரென்றால்) அவர்களை வழிகேடர்கள் தாம் பின்பற்றுகிறார்கள். நிச்சயமாக அவர்கள்
ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் (பாதையிலும்) அலைந்து திரிவதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? இன்னும் நிச்சயமாக, தாங்கள் செய்யாததைச் (செய்ததாக) அவர்கள் சொல்லுகிறார்கள்.” [26:226]
இந்த ஆரம்ப
வசனங்கள் மோசமான, பொய் கூறித்திரிகின்ற கவிஞர்களைத் தூற்றுகின்றது. ஆனால் பின்வரக்
கூடிய அதன் இறுதி வசனங்கள் நல்ல கவிஞர்களைப் புகழ்ந்துரைக்கின்றது.
“ஆனால், எவர்கள்
ஈமான் கொண்டு, (ஸாலிஹான)
நற்செயல்கள் செய்து அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்து (தங்களுக்கு) அநியாயம் செய்யப்பட்ட
பின்னர் (அதற்காக) பழிதீர்த்துக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தாம்)
அநியாயம் செய்தவர்கள், தாங்கள்
எங்கு திரும்பச் செல்லவேண்டு மென்பதையும் திட்டமாக(ப் பின்னர்) அறிந்து கொள்வார்கள்.” [26:227]
“ஆனால் எவர்கள்”
என்று ஆரம்பிக்கும் வசனம் மேற்கூறிய பொய்களுக்கு மாற்றமாக யார் நன்முறையில் உண்மைகளுடன்
கவிதை பாடுகிறார்களோ அவர்களைக் குறித்துப் பேசுகின்றது. உண்மையுடன் வரையறையுடன் விரசங்கள்,
ஆபாசங்கள் தவிர்த்து கபி பாடும் கவிஞர்கள் பாராட்டப்படவேண்டியவர்களே!
நபி(ஸல்) அவர்களின் வீட்டிலே
சிறுமிகள் பெருநாள் தினத்தில் பாட்டுக்களை
படித்துக் கொண்டிருக்கும் போது, அபூபக்ர்(ரலி) அவர்கள் அதை
தடுக்க முயன்றார்கள். அப்போது, நபி(ஸல்) அவர்கள், இது அவர்களின்
பெருநாளுடைய தினம், பாடவிடுங்கள் என அனுமதி வழங்கினார்கள்
(புகாரி, முஸ்லிம்)
மற்றும் நபி(ஸல்) அவர்களை
குறைஷி கவிஞர்கள் கவிதை மூலம் வசைபாடிய போது, ஹஸ்ஸான்
இப்னு ஸாபித் (ரலி) அவர்களுக்கு
கவிதை மூலம் பதிளடி கொடுக்கும்படி நபியவர்கள் கூறினார்கள். அதே
போன்று,
அகழ் போரில் நபித்தோழர்கள், பசியோடு வயிற்றிலே கற்களை கட்டியவாறு சில கவிதைகளை பாடினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் அகழ் தோண்டப்படும்
இடத்திற்கு சென்றபோது, முஹாஜிரீன்களும் அன்சாரிகளும்
குளிரான காலை நேரத்தில் அகழ் தோண்டிக் கொண்டிருந்ததைப் பார்த்தார்கள். அவர்களின் கஷ்டத்தையும்
பசியையும் பார்த்த நபி(ஸல்) அவர்கள் (பின்வரும் கவிதைகளை பாடினார்கள்) “இறைவா! உண்மையான வாழ்க்கையென்பது, மறுமை வாழ்க்கையாகும் அன்சாரிகளுக்கும் முஹாஜிரீன்களுக்கும்
நீ மன்னிப்பு வழங்குவாயாக!” என்று நல்ல கவிதைகள் பாட
அனுமதியளித்துள்ளார்கள்.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...