"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

19 January 2012

அல்குர்ஆன் கூறும் பிரம்மிப்பூட்டும் கருந்துளைகள்

ஆலிப் அலி (இஸ்லாஹி)
பிரம்மாண்டமான இப்பிரபஞ்சத்தின் அற்புதங்களில் அதிகமாக மனிதனின் கவனத்தை ஈர்துள்ள விடயம் விண்வெளியில் குவிந்துகிடக்கும் பேரற்புதங்கள்தாம். 20ம் நூற்றாண்டில் விண்வெளியில் கண்டுபடிக்கப்பட்ட ஆச்சரியமான அதிசயங்களில் பிரதானமாக விளங்குவது கருந்துளைகளென விண்வெளி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதனால்தான் கருந்துளை என்பது வான் பௌதிக விஞ்ஞானிகளின் புதிய சிந்தனை (Astro Physics) என்று கூறப்படுகின்றது. கருந்துளைகள் இறை வல்லமைக்குச் சாட்சியம் கூறுகின்றன.

விண்ணில் காணப்படுகின்ற Black Holes  எனும் கருந்துளைகள் மிகப் பிரம்மாண்டமான ஈர்ப்புச் சக்தியைத் தம்மகத்தே கொண்டுள்ள ஒரு வகை வான்பொருட்களாகும். Black என்பது இருட்டு, கருமை, வண்ணமே இல்லதது என்று பொருள்படுகின்றது. அதேபோன்று Hole என்பது துளை, வெறுமை, பள்ளம் என்று அர்த்தப்படுகின்றது.  இவை இரண்டையும் சேர்த்தே Black Hole கருந்துளைஎன்று அழைக்கின்றோம்.

மற்றுமோர் வகையில் சொல்வதாயின் ஒளியை வெளியிடாது கருமையாக இருப்பதனாலும் மின்காந்த அலைகளையும் ஒளியலைகளையும் ஏனைய விண் பொருட்களையும் இழுத்து விழுங்கிக்கொள்ளும் புதைகுழிகள் அல்லது பெருந்துளைகள் போன்று செயற்படுவதாலும் இவை கருந்துளைகள் எனப்படுகின்றன.

விண்ணில் மிதக்கும் விண்கற்களையும் வாயுக்கள் தூசுப்படலங்கள் கதிர்கள் கிரகங்கள் போன்றவற்றையும் ஈர்த்துக்கொள்ளும் அபார சக்திபடைத்தவையே கருந்துளைகள். அவற்றின் அருகில் செல்லும் பிரம்மாண்டமான நட்சத்திரங்கள், வால் நட்சத்திரங்களையும் உள்ளே ஈர்த்துக்கொள்கின்றன. சில கருந்துளைகள் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களுக்கு நிகரான சக்தியைக் கொண்டுள்ளன. கருந்துளை என்பது அவ்வளவு பிரம்மாண்டமான சக்தியைக்கொண்டு இயங்கிக்கொண்டிருக்கின்றது. ஆனால் அதற்குள் என்ன நடக்கின்றது என்பது இன்னும் அறியப்படாத புதிராக உள்ளது.

1915ம் ஆண்டு பிரபல விஞ்ஞானி அல்பர்ட் ஜன்;ஸ்டைன் முதற்தடவையாக விண்வெளியில் இவ்வாறானதொரு பகுதி இருக்கும் என தனது கருதுகோளை முன்வைத்தார். அத்தோடு கருந்துளைகள் ஒளி, வாயு, தின்மப்பொருள்கள் என அனைத்தையும் உள்ளிழுத்துக்கொள்ளும், எனவே அவற்றின் அடர்த்தியும் கனதியும் மிக அதிகமாக இருக்கும் என்றும் விளக்கினார். இக்கூற்றை ஜெர்மனிய வாணியலாளரான Karl Schwarzschild என்பவர் 1916ல் ஆராய்ந்து நிரூபித்தார்.

கருந்துளைகளின் உருவாக்கம்
விண்வெளியில் காணப்படும் நட்சத்திரங்கள் தம்மிடம் எரிபொருளாக பெருமளவு ஹைட்ரஜனையும் சிறுது ஹீலியத்தையும் கொண்டுள்ளன. இவற்றின் மூலம் இந்நட்சத்திரங்களின் உட்பகுதியில் சதாவும் நிகழ்ந்துகொண்டிருக்கும் Nuclear Reaction, அதாவது ஹைட்ரஜன் அணுக்கள் ஹீலியம் அணுக்களாக மாற்றமடையும் செயற்பாட்டின் மூலம் இந்நட்சத்திரங்களிலிருந்து வெளிச்சமும் பெருவாரியான மின்காந்த வெப்பக்கதிர்களும் (Electromagnetic Radiation)  உருவாகின்றன. அவை பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள்வரை தீச்சுவாலைகளாகப் பரவிச் செல்கின்றன.

இந்நட்சத்திரங்களின்  எரிபொருள் தீர்ந்து உறுதியற்றுப்போய்  தமது ஆயுளின் இறுதிக்கட்டத்தை அடைகையில் அவற்றின் அடர்த்தி அதிகரித்து உள் ஈர்ப்பு விசையாற்றல் பன்மடங்கு பெருகிவிடும்.எனவே அவை உட்பகுதியை, மையப்பகுதியை நோக்கி நாலா புறமிருந்தும் இடிந்துவிழ ஆரம்பிக்கின்றன. இவ்வாறு எல்லாப் பகுதிகளிலிருந்தும் மையப்பகுதியை நோக்கித் திரண்டு, இடிந்து விழும்போது உடு கடுமையாக இருக்கமடைகின்றது. பின்னர் அது படிப்படியாக சிவப்பு நிறமாகி, பின்னர் சற்று வெண்மையாகி அதன் பின்பு கறுப்பு நிறமாகி இறுதியில் கருந்துளையாக மாறுகின்றன.

சூரியனைவிட 3 மடங்கு திணிவுடைய உடுக்கள் மாத்திரமே இறுதிக்கட்டத்தில் கருந்துளைகளாக மாறுகின்றன. அதனைவிடவும் திணிவில் குறைந்தவை வெண் குள்ள உடுக்களாகவும் (White Dwarf) அல்லது நியுத்திரன் உடுக்களாக (Neutron Stars) மாற்றமடைகின்றன. உடுக்களுக்கு இடையில் உள்ள Interstellar gas என்ற வாயுக்கள் ஒன்று திரண்டு உள்நோக்கி இறுகுவதினாலும் மிகப் பிரம்மாண்டமான கருந்துளைகள் உருவாவதாகவும் வானியலாளர்கள் கருதுகின்றனர்.

நட்சத்திரங்களின் எரிபொருள் தீர்ந்து அவற்றின் ஒளி மறைந்து இருதியில் அவை கருந்துளையாக மாறும் என்ற விஞ்ஞானத்தின் நவீன செய்தியை அல்குர்ஆன் பல நூறு வருடங்களுக்குமுன்பே அழகாகப் பின்வருமாறு கூறுவிட்டது.

நட்சத்திரங்கள் மறையுமிடங்களின் மீது நான் சத்தியம் செய்கின்றேன். நீங்கள் அறிந்துகொண்டால் இது மகத்தானதொரு சத்தியமென்பதை விளங்கிக்கொள்வீர்கள்” (56:75,76)

கருந்துளையின் அபார ஈர்ப்பு விசையிலிருந்து எப்பொருளும் தப்பித்துச் செல்லமுடியாது. ஒருபொருள் கருந்துளையின் ஈர்ப்பு விசையிலிருந்து தப்பிக்க அடைய வேண்டிய தப்பல்வேகமானது (Escape Velocity) ஒளியின் வேகத்தையும் மிஞ்சவேண்டிய நிலை ஏற்படும். எமது புவியீர்ப்பு விசையைத் தாண்டி ஒரு பொருள் விண்ணைநோக்கிச் செல்ல வேண்டுமாயின் வினாடிக்கு 11 கி.மீ. வேகத்தில் செல்லவேண்டும். தற்போது செலுத்தப்படும் ரொக்கெட்டுகள் இந்த வேகத்திலேயே விண்னில் ஏவப்படுகின்றன. அதேபோன்று கருந்துளையின் ஈர்ப்பு விசையிலிருந்து ஒரு பொருள் வெளியேற அதன் ஈர்ப்பு விசையையும் விட அதிகூடிய சக்தியைப் பெற வேண்டும்.

பிரபஞ்சத்தில் அதிகூடிய வேகத்தில் பயணிப்பது ஒளி. (ஒளியை விடவும் Neutrinos வேகமாக பிரயாணிப்பதாக மிக அண்மையில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.) ஒளி வினாடிக்கு 3 இலட்சம் கி.மி. வேத்தில் பிரயாணிக்கின்றது. கருந்துளையின் ஈர்ப்பு விசையும் வினாடிக்கு 3 இலட்சம் கி.மீ. என்ற வேகத்தில் உள்ளது. எனவே கருந்துளையின் ஈர்ப்புவிசை அளவும் ஒளி பியாணிக்கும் வேகமும் சமமாக உள்ளதால் ஒளியால் கூட கருந்துளையிடமிருந்து தப்பிக்க முடியாது.

கருந்துளைகளைக் கண்டறிவது எவ்வாறு?
பூமியில் இருந்தவாறு எவ்வாறு கருந்துளைகளைப் பார்க்கமுடியும் என்ற கேள்வி உங்களிடம் எழுந்திருக்கக் கூடும். பூமியில் இருந்தோ நேரடி ஒளியியல் தொலைகாட்டிகளினூடாகவோ அல்லது ரேடியோத் தொலைக்காட்டிகளினூடாகவோ நேரடியாக கருந்துளைகளைப் பார்க்க முடியாது. ஏனென்றால் அவை கருமையாகவும் பிரகாசமற்றும் இருப்பதனாலாகும்.

கருந்துளைகளை நாம் கண்களால் காண முடியாதுபோனாலும் அவற்றின் நிகழ்வெல்லைக்கு (Event Horizon) அப்பால் இருக்கும் பிற நிட்சத்திரங்கள், பிற விண் பொருட்கள் போன்றவற்றின் துணையுடன் கருந்துளைகளின் இருப்பிடத்தைக் கண்டுகொள்ளலாம். உதாரணமாக விண்மீன் கூட்டங்கள் கருந்துளையின் ஈர்ப்புக்கு உட்பட்டு அதன் மையத்தைச் சுற்றிவரும்போது கண்டுகொள்ளலாம்.சிலபோது கருந்துளைகள் அண்டவெளியில் காணப்படும் விண்பொருட்களையும் தூசுப் படலங்களையும் கவர்ந்து ஈர்த்தெடுக்கும்போது அவை அதி வேகத்தில் கருந்துளையைச் சுற்றி உள்ளே செல்லும்போது வெப்பநிலை அதிகரிப்பதால் பெருமளவு x கதிர்வீச்சுகள் வெளிப்படுகின்றன.இதன்போது தொலைநோக்கிகளால் இக்கதிர்களைக் கண்டு கருந்துளைகளின் இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

பிரம்மாண்டமான சில கருந்துளைகள்
இம்முறையின் மூலம்தான் 1971ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் Cygnus என்ற உடுத்தொகுதியில் கருந்துளையொன்று இருப்பதாக வானியலாளர்கள் கண்டுபிடித்தனர். அண்டவெளியில் உள்ள வெள்ளுடுத் தொகுதிகளின் (Galaxies) மத்தியில் இவை இருக்கின்றன. எமது ஞாயிற்றுத்தொகுதி அமைந்துள்ள பாழ்வீதி (Milky way)  எனும் வெள்ளுடுத் தொகுதியின் மத்தியில் சூரியனைவிடவும் 2.6 மில்லியன் மடங்கு தினிவுடைய கருந்துளை ஒன்று இருப்பதாக நம்பப்படுகின்றது.

2007 ஆம் வெளியான The Nature சஞ்சிகையில் அமெரிக்கா நாஸா விஞ்ஞானிகள் புதிய பிரமாண்டமானதொரு கருந்துளையைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்திருந்தனர். இதன் பருமன் சூரியனைப் போல 15.65 மடங்கு விசாலமாகும்.இந்த கருந்துளைக்கு அண்மையில் சூரியனைப்போன்று 70 மடங்கு பெரிய நட்சத்திரம் ஒன்றும் உண்டு. இது சுற்றும்போது வெளியாகும் x கதிர்களைவைத்தே கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த 2008 மார்ச் 18ல் இதுவரை கண்டறியப்பட்ட கருந்துளைகளையும் விடப் பிரம்மாண்டமானதொரு கருந்துளையை ஆய்வாளர்கள் கண்டுபடித்துள்ளனர். அதற்கு Galaxy Classic எனப் பெயரிட்டுள்ளனர். நமது சூரியனின் விட்டம் 1,39,0000 மைல்களாகும். இதனையும் விட 1800 கோடி மடங்கு மிகப்பெரியதுதான் இந்த Galaxy Classic எனும் கருந்துளை. பூமியில் இருந்து 3.5 பில்லியன் (350கோடி) ஒளி ஆண்டு தொலைவில் இக்கருந்துளை காணப்படுகின்றது.

சூரியனும் கருந்துளையாக மாறும்.
மறுமைநாள் உருவாக ஆரம்பிக்கும்போது அதன் ஒரு கட்டமாகப் பிரபஞ்சத்திலுள்ள நட்சத்திரங்கள் அனைத்தும் கருந்துளைகளாக மாறும் என அல்குர்ஆன் கூறுகின்றது. நட்சத்திரங்களில் ஒரு நட்சத்திரமான எமது பூமிக்கு அண்மையில் இருக்கும் சூரியனும் அவ்வாறே கருந்துளையாக மாறும் என்பதனை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.

சூரியன் (ஒளி நீக்கப்பட்டு) சுருட்டப்படும்போது. நட்சத்திரங்களும் (ஒளியிழந்து) உதிர்ந்துவிடும்போது” (81:1,2)

கருந்துளைகள் பிரதானமாக இரண்டு வேளைகளைச் செய்கின்றன. ஒன்று அவை தமது உட்பகுதியை நோக்கி சுருங்கிக்கொண்டே இருக்கும். மேற்கூறிய திருமறை வசனமும் சூரியனின் ஒளி நீக்கப்பட்டபின் அது சுருட்டப்படும் என்பது கருந்துளை தனது மையப் பகுதியை நோக்கி சுருளும் என்ற உண்மையையே கூறுகின்றது. கருந்துளையின் மற்றைய தொழில் வெளியே உள்ள பிற பொருள்களைத் தன்னுள் ஈர்த்துக்கொள்வதாகும்.

சந்திரன், சூரியன் மற்றும் பூமியின் ஆயுள் காலம் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்ட விண்வெளி ஆய்வாளர்கள் ஒரு கட்டத்தில் சூரியன் பிரகாசமிழந்து விடும் என்றும் சந்திரன் சூரியனோடு இணைந்துவிடும் என்றும் கூறுகின்றனர். சூரியனின் எரிபொருளான ஹைட்ரஜன் வாயுக்கள் தீர்ந்ததும் அதன் இறப்பும் ஆரம்பமாகிவிடும். அப்போது சூரியனின் ஈர்ப்பு விசையில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து அதனால் சூரியனைச் சுற்றி வருகின்ற சந்திரன், எமது பூமி உட்பட கோள்கள், உப கோள்கள், எண்ணற்ற விண்கற்கள் அனைத்தையும் சூரியன் தன்னுள் ஈர்த்துக்கொள்ளும்.

தற்போது சூரியனின் சில இடங்களில் கருப்புப் புள்ளிகள் (Black Spots) தோன்றியிருப்பதாகவும் அவ்விடங்களில் ஏனைய இடங்களைவிடவும் வெப்பம் குறைந்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அவ்விடங்களில் உள்ள ஹைட்ரஜன் எரிபொருள் தீர்ந்துபோயுள்ளமையே அதற்குக் காரணம் என்பதையும் அறிவித்துள்ளனர்.

சூரியன் கருந்துளையாகி அது விண்பொருட்களைத் தன்னோடு இணைத்துக்கொள்ளும் என்ற விஞ்ஞானக் கருத்தை அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது.

சந்திரனும் ஒளியிழந்துவிடுமானால், சூரியனும் சந்திரனும் ஒன்றாக்கப்பட்டு விடும்.” (75:8,9)

சூரியன் கருந்துளையானால் அதனிடமிருந்து ஒளியைப் பெற்றுப் பிரதிபளிக்கும் சந்திரனின் ஒளி தானாகவே மறைந்துவிடும், பின்னர் சந்திரனை சூரியன் இழுத்துக்கொள்ளும். வருடத்திற்கு 3cm அளவு தூரம் பூமியைவிட்டும் சந்திரன் விலகிச்செல்வதாக கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்தும் சந்திரன் விலகிச்செல்ல சூரியனும் கருந்துளையாக மாறிவிட இரண்டும் ஒன்றிணைவது இண்னும் இலகுவாகிவிடும். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
ஆரம்பகால இஸ்லாமிய விஞ்ஞானிகள் அல்குர்ஆனின் நிழலில் இருந்துகொண்டு பிரபஞ்சத்தை  ஆராய்ந்தார்கள். ஆனால் இன்று நாம் யாரோ கண்டுபடித்துக் கூறிய விஞ்ஞானக் கருத்துக்கள் அல்குர்ஆனில் உள்ளனவா என்று தேடிப்பார்க்கின்றோம். சுயமாக ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கு இன்று அநேக முஸ்லிம்களிடம் ஆர்வமும் ஆசையும் இருந்தாலும்கூட அதற்கான வளங்கள் இல்லாதிருப்பது இதுபோன்ற செயல்களுக்கு வழிவகுக்கின்றது.

இதிலிருந்து சிலர் விஞ்ஞானத்தை வைத்து அல்குர்ஆனை ஈமான்கொள்ளும் நிலைமையும் உருவாகியுள்ளது. உண்மையில் இது மிகப் பிழையானது. ஏனெனில் விஞ்ஞர்னம் என்பது மனிதனது சாதாரண அறிவாராய்ச்சிக்கு உட்பட்டதாகும். இன்று ஒரு கருத்தைக் கூறும் விஞ்ஞானிகள் நாளை அதற்கு மாற்றமான ஒரு கருத்தைக் கூறக்கூடும். இதனால் அவர்களைக் குறை கூறவும் முடியாது. ஏனெனில் தமது சக்திக்குட்பட்ட ஆய்வு முடிவுகளாக அவை இருப்பதாலாகும். அல்குர்ஆன் என்றும் எப்போதும் சத்தியத்தையே எடுத்துக்கூறும் உண்மை வேதமாகும்.

அலிப் லாம் மீம் (இதோ) இதுதான் வேதமாகும். இதில் மயக்கங்களுக்கு இடமில்லை. இறையச்சமுள்ளோருக்கு இது நேர்வழியாக இருக்கும்” (2:1,2)
குறிப்பு : ஜனவரி 2012 அகரம் சஞ்சிகையில் பிரசுரமாகியது.
 
உங்கள் கருத்து:

2 comments:

பாவா ஷரீப் said...

super article
nice

kaleelexpress said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இது போன்று ஒரு பதிவை திருக்குர் ஆன் கூறும் அடிப்படையில் பதிய இருந்தேன். உங்கள் பதிவை மீள்பதிவு செய்து இருக்கிறேன்.
http://www.kaleelsms.com/2012/10/blog-post_12.html

மாஷா அல்லாஹ் அருமையான பதிவு

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...