"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

22 February 2012

உயிர் வாழ்க்கைக்குச் சவால்விடும் மரபணுப் பொறியியல்

அணு முதல் அண்டம்வரை பல்வேறு துறைகளிலும் பரந்து விரிந்து வளர்ந்துள்ள விஞ்ஞானத்தின் மற்றுமொரு அதீத வளர்ச்சியாக மரபணுப் பொறியியல் (Genetic Engineering) கருதப்படுகின்றது. மரபணுப் பொறியியல் பற்றி விளங்குவதற்கு மரபணு பற்றிய சிறியதொரு விளக்கத்தைப் பெற்றுக்கொள்வது அவசியம்.

உயிரிகளின் அடிப்படை அலகுகளாகக் கலங்கள் (Cells) காணப்படுகின்றன. மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களும் இக்கலங்களினால் ஆனவையாகும். அமீபா, கிளமிடோமோனஸ் போன்ற தனிக்கல அங்கி முதல் பல கலங்களைக்கொண்ட பெரிய உயிர்கள்வரை அனைத்திலும் இக்கலங்கள் காணப்படுகின்றன. ஒரு கலம் 10 முதல் 20 மைக்றோ மீற்றர் (1000 மைக்றோ மீற்றர் = 1mm) விட்டமுடையது. ஒரு கலத்தினுள் அதன் உட்கரு (Nucleus) காணப்படுகின்றது. அதற்குள் குரோமோசோம்கள் காணப்படுகின்றன. அவற்றில் DNA கள் காணப்படுகின்றன. அங்கியொன்றின் பாரம்பரிய இயல்புகளைத் தாங்கியிருக்கும் மரபணுக்கள் (Genes) இந்த DNA களில்தான் காணப்படுகின்றன. DNA இனுள் Codons எனப்படும் பண்புக்கூறுகள் காணப்படுகின்றன. உயிரினங்களின் உடலியல் கூறுகளைத் தீர்மானிப்பவையாக இப் பண்புக்கூறுகளே திகழ்கின்றன. அத்தோடு பரம்பரை இயல்புகளையும் இவையே கடத்துகின்றன.

ஒவ்வெரு உயிரினமும் தமக்கெனக்கொண்டுள்ள பரம்பரை இயல்புகளைக் கடத்தக்கூடிய Codons எனப்படும் இப்பண்புக் கூறுகளைத் தனியாகப் பிரித்தெடுத்து வேறு ஒரு உயிரினத்தின் Codons இல் பொறுத்தி புதியதொரு பரம்பரை அலகைக்கொண்ட உயிரினத்தை உருவாக்குவதை சாத்தியப்படுத்துவதே இச்செயன்முறையாகும். மரபணுத் தொழில்நுட்பம் (Genetic Technology)> உயிரியல் தொழில்நுட்பம் (Bio Technology) என்றும் இது அழைக்கப்படுகின்றது.

இதன்மூலம் நாம் விரும்பும் ஒரு உயிரினத்தை உருவாக்க முடியுமெனவும் வேண்டப்படாத ஒரு பண்பை நீக்கி, வேறு ஒரு பண்பைச் சேர்த்து அற்புதமான விதத்தில் உயிரினங்களை உருவாக்கமுடியுமெனவும் விஞ்ஞானிகள் கருத்துத்தெரிவிக்கின்றனர்.விஞ்ஞானத்தின் ஒருபடிவளர்ச்சியாகக் கருதப்படும் இந்த மரபணுப் பொறியியல் தொழில்நுட்பத்தை வளர்ச்சியடைந்த நாடுகளும் பன்னாட்டு வியாபார நிறுவனங்களும் இலாப நோக்கம் பருதி பிழையாகப் பயன்படுத்திவருகின்றன. இதனால் புவிவாழ் உயிரினங்களும் சுற்றுக் சூழலும் மண்வளமும் அதிகளவு பாதிப்புக்குள்ளாகிவருகின்றன.

மரபணுப் பொறியியலின் வரலாறு -
கிரிகர் மெண்டல் என்ற துறவியொருவர் பட்டானிச் செடிகளில் ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றின் நிறம், உயரம் போன்ற பண்புகள் அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகின்றமையைக் கண்டறிந்தார். அதன் மூலம் பட்டானிச் செடிகளில் மரபியல் காரணிகள் தொழிற்படுவதை அவர் முதன் முதலில் உலகிற்கு வெளியிட்டார். அதன்பின் 1940களில் கணடாவைச் சேர்ந்த மருத்துர் அஸ்வோல்ட் ஆவரி என்பவர் மெண்டலின் மரபியல் கண்டுபிடிப்பை விஞ்ஞானபூர்வமாக ஆய்வுகூடப் பரிசோதனை மூலம் நிறுவினார். ஒரு நுண் உயிரியிலிருந்து மற்றுமொரு நுண் உயிரியிற்கு மரபணுக் காரணிகளை மாற்ற முடியும் என்பதை 1953ம் ஆண்டு ஆய்வு முடிவாக வெளியிட்டார்.

1950 முதல் 1960 வரையான காலப்பகுதி மரபணுத் தொழில்நுட்பத்தில் முக்கியமானதொரு காலகட்டமாகும். இக்காலப்பகுதியில் ஒரு மரபணுவில் பரம்பரை அலகுத் தகவல்கள் எவ்வாறு பதிவுசெய்யப்பட்டுள்ளன? அவை எவ்வாறு பெருக்கமடைகின்றன? தலைமுறை தலைமுறையாக உவ்வாறு கடத்தப்படுகின்ற? போன்ற பல அம்ஷங்கள் கண்டறியப்பட்டன. இது மரபணுப் பொறியியலின் மற்றுமொரு பாய்ச்சலுக்குக் காரணியாக அமைந்தது.

இந்த ஆய்வுகளின் விளைவாக 1970 முதல் 1980 வரையான காலப்பகுதியில் ஒரு விலங்கிலிருந்து மற்றுமொரு விலங்கிற்கு மரபணுவை மாற்றிப் பொருத்த முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு முன்பெல்லாம் நுண் உயிரிகளில்தான் இவ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. விலங்குகளிலும் மரபணு மாற்றத் தொழில்நுட்பம் ஆரம்பிக்கப்பட்டதும் DNA இலிருந்து Codons களைப் பிரித்தெடுப்பதற்காகவென்றே 1970களில் விசேடமான கட்டுப்பாட்டு நொதியங்கள் (Restriction Enzymes) கண்டுபிடிக்கப்பட்டன. இதன்மூலம் ஆய்வுகள் இன்னும் இலகுவாகின.

நுண் உயிரிகளில் மரபணுமாற்றம் வெற்றிகரமாக நிறைவேறியதும் அறிவியலாளர்களது கவணம் அடுத்தபடியாக தாவரங்களின்பால் நகர்ந்தது. எனினும் நுண் உயிரிகள் போன்றல்லாது இம்முறை கடிணமாக அமைந்தது. காரணம் தாவரங்கள் நுண் உயிரிகளைவிட அதிகமான கலங்களைக்கொண்டிருப்பதும் அவற்றின் கலச்சுவர்களைத் துளைத்து ஊடுருவுவது கடிணமாக இருப்பதுமேயாகும். எனவே எந்த உயிரின் கலச்சுவர்களையும் துளைப்பதற்கென விசேடமாகத் துளைக்கும் கருவியொன்றைக் கண்டுபிடித்தனர். இதன்மூலம் கலச்சுவரைத் துளைத்து Codons களைப் இணைக்க, நீக்க முடியும். இந்தத் துளைக்;கும் கருவியின் உரிமையை டூபாண்ட் என்ற பன்னாட்டு நிறுவனம் வைத்துள்ளது. இக்கருவி கண்டுபிடிக்கப்பட்டதும் அறிவியலாளர்கள் பல விபரீதமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள  ஆரம்பித்தனர்.

மரபணு ஆராய்ச்சியின் பாதக விளைவுகள்
மரபணுப் பொறியியலின் வருகையோடு பல தனியார் நிருவணங்கள் இலாபமீட்டிக்கொள்வதற்காக பொய்ப்பிரச்சாரங்களையும் விளம்பரங்களையும் செய்து மரபணு மாற்றத்திற்குட்படுத்தப்பட்ட உற்பத்திப்பொருட்களின் அதீத விற்பனையை முடுக்கிவிட்டுள்ளனர். இதனால் பல்வேறு பாதிப்புகளையும் இன்று நாம் எதிர்நோக்கியுள்ளோம். இதுவரை நுண் உயிரிகளையும் தாவரங்களையும் ஆய்வுக்குட்படுத்தி வந்த அறிவியலாளர்கள் விலங்குகளிலும் மனிதனிலும் இத்துறையைப் பரீட்சித்துப் பார்க்க ஆரம்பித்தனர். அதன்படி மிக நுண்ணிய ஊசி மூலம் விலங்குகளின் கருமுட்டையில் காணப்படுகின்ற மரபணுவை மாற்றிப் பார்த்தனர்.

உதாரணமாக ஒரு சுண்டெலியின் கருமுட்டையில் வேறு ஒரு உயிரின் மரபணுவைச் செலுத்தி புதியவகையான சுண்டெலியொன்றை உருவாக்கினர். அதேபோன்று பிரித்தானிய விஞ்ஞானிகள் சிலர் வெள்ளாட்டையும் செம்மறி ஆட்டையும் மரபணு மாற்றத்திற்குட்படுத்தி அவற்றிலிருந்து வெண்மறி என்ற பெயரில் புதுவகையானதொரு ஆட்டை  உருவாக்கினர்.

பின்னர் இச்செயல்முறை காய், பழவகைகளிலும் மரக்கரி, கீரை வகைகளிலும் செய்யப்பட்டு வித்தியாசமான வடிவங்கள் வித்தியாசமான புதுமைகள் பெறப்பட்டன. உதாரணமாக மல்லிகை வாசத்தையுடைய தாமரைப் பூ, பச்சை நிறத்திலான மல்லிகைப் பூ, சதுர, செவ்வக வடிவிலான பழங்கள், இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு பறித்த தக்காளிப்பழம் தற்போது பறித்ததுபோன்று பளபளப்பாக இருப்பதற்கான ஏற்பாடு, பூனையின் முகத்தோற்றத்தில் மீன்கள், உடலில் மயிரோ இறக்கையோ இல்லாத கோழிகள், வரிக்குதிரையை ஒத்த கங்காருகள் என பலதையும் உற்பத்திசெய்ய முடியுமென விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதில் ஓரிரண்டைச் செய்துபார்த்துமுள்ளனர். இவ்வாறு ஆய்வுகூடங்களில் மரபணு மாற்றி உருவாக்கப்படும் உயிரினங்கள் Genetically Modified Organisms  என்றழைக்கப்படுகின்றன.

தக்காளிப்பழம் என்றும் பளபளப்புடனிருக்கவும் குளிர் சாதனப்பெட்டியில் சேர்த்தால் உறைந்துவிடாதிருக்கவும் அவற்றுக்கு மீனினதும் தவளையினதும் மரபணுக்கள் சேர்க்கப்படுகின்றன. இதேபோல் கத்திரிக்காய், அரிசி, மாதுளை, சோயா, பீன்ஸ், மிளகு, உருளைக் கிழங்கு, நிலக்கடலை, ஏலம், அப்பிள், தோடை என பலவற்றிலும் மரபணு மாற்றங்கள் செய்யப்பட்டு சந்தைக்கு விடப்படுகின்றன. இன்னும் பல்வேறு சுவைகளில் இணிப்புப் பண்டங்கள் தயாரிப்பதற்காக மரபணு மாற்றத்திற்குட்படுத்தப்பட்ட ஸ்டீவியோஸ், மோனெல்லின், தவ்மாட்டின் போன்ற நிறைய இனிப்பப் பண்டங்கள் சந்தைக்கு வரக்காத்திருக்கின்றன.

மரபணு மாற்றத்தினால் விளையும் மற்றுமொரு பாதிப்பு ஒரு இனத்தின் உடல் வெப்பநிலை மற்றொரு இனத்தின் உடல்வெப்பநிலை மற்றும் இதர தன்மைகளோடு வேறுபடுகின்றன. மரபணு மாற்றத்தில் இது பல பக்கவிலைவுகளை உண்டுபண்ணுவதோடு எதிர்பார்க்கப்படும் பலனையும் தாரதுசெல்கின்றது.

ஏற்கனவே கூறியதுபோன்று செம்மறி ஆட்டையும் வெள்ளாட்டையும் கலந்து வெண்மறி ஆட்டை உருவாக்கிய விடயம் மட்டும்தான் ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டதே அல்லாமல் அதன் பின்னர் அவ்வாடு குருடாகி, மலடாகி, நோயுற்ற செய்தி முழுமையாக மறைக்கப்பட்டது.

பிரிட்டனில் ஒரு ஆய்வுகூடத்தில் எட்டுக்கால் பூச்சியொன்றுக்கு பறவையின் மரபணு சேர்க்கப்பட்டது. பின்பு சில மணிநேரங்களில் அப்பூச்சியானது இறந்துவிட்டது. வட அமெரிக்காவின் தேசிய அறிவியற்கழகத்தின் அறிக்கை மரபணு மாற்றத்திற்குட்பட்ட பயிர்களை உணவில் சேர்ப்பதால் அவை ஒவ்வாத் தன்மையைத் தோற்றுவிப்பதாகவும் அது எமது உடலில் நஞ்சாக மாற்றமடைய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடுகின்றது.

பூச்சிகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க கிருமிநாசினிகள் தெளிப்பதற்ககுப் பதிலாக மரபணு பொறியியல் மூலம் இயல்பிலேயே பூச்சிகளை எதிர்க்கும் தன்மையைக்கொண்ட P.D. பயிர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.இவ்வகைப் பயிர்களை சுவீடனின் இரண்டு விஞ்ஞான ஆய்வு கூடங்கள் ஆய்விற்கு எடுத்துக்கொண்டன. நோவடீஸ் என்ற சோளப்பயிரின் சோளத்தை உட்கொள்ளும்  ஒரு வகைப் பூச்;சிகளின் இறப்பு வீதம் அதிகரித்துள்ளமை தெரியவந்தது. இந்த வகைத் தாவரங்களில் உள்ள நஞ்சானது பிற உயிர்களைக் கொள்வதோடு எமது உணவிலும் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துமென்றும் நோயெதிர்ப்புச் சக்தியை வழுவிலக்கச் செய்வதோடு நோயெதிர்ப்பு மருந்துகளைக்கூட செயலிழக்கச் செய்துவிடும் எனவும் அவ்வாய்வின் ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.

தாவரங்கள் தமது உடல்முழுதும் இந்நஞ்சை உற்பத்தி செய்வதால் அருவடையின் பின் எஞ்சும் கழிவுகள்கூட மண்ணுடன் கழந்துவிடுவதால் மண்வளமும் மாசுருகிறது. அடுத்து வளரும் மரபணு கலக்காத நல்ல தாவரங்களும் மண்ணிலிருந்து நச்சுத்தன்மையை உறிஞ்சி நச்சுத் தாவரங்களாகவே வளரும். அத்தோடு மண்ணில் உள்ள மண்புழுபோன்ற இதர உயிரினங்களையும் இந்நஞ்சு கொன்றுவிடும். அதனை மேயும் ஆடு, மாடுகளுக்கும் இதே நிலைதான் நேரும். இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் P.D. வகைப் பருத்திச் செடிகளை மேய்ந்த ஆயிரக் கணக்கான ஆடுகளும் மற்றுமோர் இடத்தில் மேய்ந்த 12 மயில்களும் இறந்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.ஆனால் இவ்வுண்மைகள் வெளிவராத வண்ணம் மறைக்கப்பட்டன.

மரபணு மாற்றுத் தாவரங்கள் விரைவாக வளர்வதோடு பரம்பலடைவதாலும் சூழலில் வளரும் ஏனைய நல்ல தாவரங்களுக்கு இடமில்லாதுபோகிறது. ஜேர்மனில் நடாத்தப்பட்ட ஆய்வொன்றில் மரபணுமாற்றி வளர்க்கப்பட்ட பயிர்கள் குறுகிய காலத்தில் 200மீற்றர் வரை பரவியமை அவதானிக்கப்பட்டது. அமெரிக்காவிலும் நோர்வேயிலும் மரபணு மாற்றப்பட்ட சாலமன் மீன்கள் மிக நீளமாகவும் அதிக எடையுடனும் முன்பைவிட 5 மடங்காக அதிகரித்திருந்தன. பயோ டெக்னிகல் இன்டர்நெஷனல் என்ற பன்னாட்டு நிறுவனம் சோயா, பீன்ஸ் வகைகளை இம்முறையில் செய்து பயிறிட்டனர். அதுவும் குறுகிய காலத்திலேயே 4 ஏக்கர் பரப்பிற்கு பரவிவிட்டது. இவ்வாறு மரபணு மாற்றத்திற்குட்பட்டவை இவ்வாறு துரிதமாக வளர்ந்து பரவுவதும் மிகவும் ஆபத்தானதே.

மரபணு மாற்றத்திற்குற்பட்ட தாவரங்கள் நோய் எதிர்ப்புச் சக்தி அற்றுப்போவதால் அவை நோய்த் தாக்கத்திற்குட்பட்டால் வெகு விரைவில் அழிந்துபோய்விடுகின்றன. சில வருடங்களுக்கு முன் மான்சென்டோ என்ற பன்னாட்டுக் கம்பனி மரபணு பொறியியல் மூலம் தயாரிக்கப்பட்ட பருத்தி விதிகளை அவை அதிக உற்பத்தி தரும் என்ற போலி விளம்பரம் செய்து விற்பனை செய்தது. ஏராளமான விவசாயிகள் இதனை வாங்கி பயிரிட்டதில் அவை குறுகிய காலத்தில் அழிவடைந்ததோடு பெரியளவில் எந்த உற்பத்தியையும் தராததால் பலத்த நட்டமடைந்தனர்.

மரபணுப் பொறியியல் மூலம் மறுத்துவ உலகம் மிகபொரிய பயனைப் பெற்றுள்ளதென்பது உண்மையே. Diabetes> பார்வைக் கோளாறுகள், மாரடைப்பு, மூளைத்தாக்கு (Stroke)> தண்டுவட செயலிழப்பு (Spinal code damage) மற்றும் இன்னும்  எந்தவிதமான நோயாக இருப்பினும் அதனை மரபணுப் பொறியியலூடாக சுகப்படுத்திவிடலாம் என்பது மறுத்துவ உலகின் சாதனை.” Dr. Patrick Dixon தனது ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடுகிறார். எந்தளவுக்கெனில் மறுத்துவத்துறையால் இதுவரை தீர்க்க முடியாதிருந்த புற்றுநோயைக்கூட கட்டுப்படுத்திவிட முடியுமான தொழிலுட்பமாக இது அமையப்போகிறது. தொடர்ந்து Dr. Patrick Dixon  கூறுகையில் பரம்பரை அலகுப் பொறிமுறை (Gene Technology)> Cloning> Stem cell research  என்பன மூலம் எஞ்சியிருந்த அனைத்து நோய்களுக்கும் நிவாரணங்களைக் கண்டுகொள்ள முடியும். இதன் மூலம் 22ம் நூற்றாண்டு முடிவதற்குள் மருத்துவம் இல்லாத எக்குறையுமில்லை” (No ailments without proper medication) எனும் பதாகையுடன் இவ்வுலகை மனிதன் ஆளுவான்என்கிறார்.

இத்துனை நன்மைகள் மரபணுப் பொறியியலில் இருந்தபோதும் இலாபநோக்கம் அடைய முயற்சிக்கும் சிலர் அதனை முறைகேடாகப் பயன்படுத்த நினைப்பதுதான் பெரும் அழிவைத்தரக்கூடியது என மனித வள ஆர்வளர்கள் அதற்கெதிராகக் கோசமெழுப்பி வருகின்றனர்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)அணு முதல் அண்டம்வரை பல்வேறு துறைகளிலும் பரந்து விரிந்து வளர்ந்துள்ள விஞ்ஞானத்தின் மற்றுமொரு அதீத வளர்ச்சியாக மரபணுப் பொறியியல் (Genetic Engineering) கருதப்படுகின்றது. மரபணுப் பொறியியல் பற்றி விளங்குவதற்கு மரபணு பற்றிய சிறியதொரு விளக்கத்தைப் பெற்றுக்கொள்வது அவசியம்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...