"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

11 March 2012

கடல் சிலந்தி ஒக்டோபஸ்

நாம் வாழும் இத்தரைப் பகுதிபோன்றே கடலிலும் மிகவும் விசித்திரமான அற்புதமான படைப்பினங்களை அல்லாஹ் வாழவைத்துள்ளான். கடல்வாழ் உயிரினங்களில் விசித்திரமானவொன்றுதான் ஒக்டோபஸ் (Octopus). தோற்றத்தில் சற்று சிலந்தியை ஒத்திருப்பதாலும் சிலந்திபோன்றே எட்டு கைகளைக் கொண்டிருப்பதாலும் கடல் சிலந்தி, சிலந்தி மீன் என்றும் அழைக்கப்படுகின்றது.

சில ஆண்டுகளுக்கு முன்பு Deep rise என்றொரு ஆங்கிளத்திரைப்படம் வெளிவந்தது. நூற்றுக்கணக்கான பிரயாணிகளுடன் சென்றுகொண்டிருக்கும் ஒரு பெரிய கப்பல் நடுக்கடலில் இயந்திரக்கோலாரு காரணமாக அப்படியே நின்றுவிடுகின்றது.மக்கள் அச்சத்தில் உறைந்துபோயிருக்கும் இரவுநேரத்தில் கடலிலிருந்து கப்பலுக்குள் நுழையும் பிரம்மாண்டமானதொரு ஒக்டோபஸ் கப்பலில் இருக்கும் அனைவரையும் அதன் நீண்ட கொடூடரமான கைகளால் பிடித்து விழுங்கிவிடுகின்றதுஅன்று இத்திரைப்படம் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி ஒக்டோபஸ் பற்றிய ஒரு தப்பான கருத்தையும் பதித்துவிட்டது.

நாம்கூட இவ்வுயிரினத்தைக் கொடூரமானதாகவும் உடலில் ஒட்டி இரத்தத்தை உறிஞ்சக்கூடிய பயங்கரமான உயிரினமாகவும்தான் பார்க்கின்றோம். ஒருவேளை அதற்கு அதன் தோற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம். பெரிய தலைப்பகுதியையும் துதிக்கைபோன்று நீளமான எட்டு கைகளையும் வழுவழுப்பான உடலையும் முகத்தின் இருமறுங்கிலும் சிறிய இரு கண்களையும் கொண்டிருக்கும் ஒக்டோபஸ்கள் பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தாலும் சாதுவான குணவியல்பை உடையவையே.

எழும்புகள் ஏதுமற்ற தசையாலான உயிரினம் என்பதால் நத்தை, அட்டைகளின் குடும்பமான Mollusca (மெல்லுடலிகள்) குடும்பத்திலும் எட்டு கைகள் இருப்பதால் Octopoda (எண்காலிகள்) வகுப்பிலும் சேர்க்கப்படுகின்றன.இதுவரைக்கும் 350 இற்கும் மேற்பட்ட ஒக்டோபஸ் இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஒக்டோபஸ்களின் எட்டுக் கைகளும் அவற்றின் உயிர்வாழ்க்கைக்கு அல்லாஹ் கொடுத்த மிக முக்கிய உறுப்புகளாகும்.  கடலடி நிலத்தில் ஊர்ந்து செல்வதற்கும் கற்களையும் தாவரங்களையும் பற்றி நகர்வதற்கும் கைகளனைத்தையும் ஒரே தடவையில் உந்தி, சுருக்கி, விரித்து நீந்துவதற்கும் இக்கைகள் உதவுகின்றன. இவற்றின் கைகளில் உறிஞ்சான்கள் இருப்பதால் வழுவழுப்பான பாறைகளிலும் கண்ணாடிச் சுவர்களிலும் இலகுவாகப் பயணிக்க முடியும். அதேபோன்று கடலடி நீரழைகளில் சிக்கினாலும் ஏதாவதொரு பொருளைக் கடினமாகப் பற்றிக்கொள்வதன் மூலம் அவற்றிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் முடிகின்றது. அல்லாஹ் இவற்றின் கைகளை உறுதியான தசை நார்களைக்கொண்டு அமைத்துள்ளான்.

அவற்றின் கைகளின் நுணிப்பகுதி சிறிதாக அங்குலத்தில் விரல்போன்று இறுப்பதால் சிறு பொந்துகளுக்குள்ளும் அதனை நுழைத்து இறைகளைத் தேடிக்கொள்கின்றன. வளர்ந்த ஒக்டோபஸ் ஒன்றின் ஒரு கையில் மட்டும் இரண்டு வரிசைகளாக 250 உறிஞ்ஞான்கள் காணப்படுகின்றன. பற்றும் இறையை கைகளால் சுருட்டி இவ் உறிஞ்சான்களால் அதன் இரத்தத்தை உறிஞ்சவும் இவற்றால் முடியும். கண் சிமிட்டும் நேரத்திற்குள் தமது இறையைப் பற்றிக்கொள்ள இக்கைகள் பெரிதும் உதவுகின்றன.

பொதுவாக ஒக்டோபஸ்கள் கடல்வாழ் பாசித்தாவரங்களையும் பிற மீன்களையும் நண்டு, இறால் போன்றவற்றையும் உண்டு வாழ்கின்றன. சிலவகையான ஒக்டோபஸ்கள் தமது இனத்தையே உண்ணவும் செய்கின்றன. இரவு நேரங்களில் இறைதேட வெளிக்கிழம்பும் ஒக்டோபஸ் இறை கையில் சிக்கியதும் அதனை உயிரிழக்கச் செய்யவோ அல்லது உணர்விழக்கச்செய்யவோ தனது உமிழ் நீர்ச்சுரப்பியிலிருந்து ஒருவகையான விசத்தைச் செலுத்துகின்றது. இதனால் இறை தப்பிச் செல்ல முயற்சிக்காது. பின்பு அவ்விறையைச் சேமித்துவைத்து உண்கின்றது.

ஒக்டோபஸ் எழும்புகளற்ற தசையாலான உயிரினம் என்பதால் எந்தவொரு சிறிய இடுக்கினூடாகவும் இலகுவாக வளைந்து நுழைந்து செல்ல முடியும். 250Kg நிறையுள்ள ஒரு ஒக்டோபஸினால் 2 அங்குலமேயான ஒரு துவாரத்தினூடாகச்  செல்லமுடியும். இது எதிகளிடமிருந்து தப்புவற்கு அல்லாஹ் இவற்றுக்கு ஏற்படுத்திக்கொடுத்த மகத்தானதொரு ஏற்பாடாகும்.
இறையை இலகுவாகப் பற்றுவதற்கும் எதிரிகளிடமிருந்து தப்புவதற்கும் அல்லாஹ் இவற்றுக்குக் கொடுத்துள்ள மற்றுமொரு அற்புதத்தைப் பார்ப்போம். உயிரினங்களிலேயே மிகத் துரிதகதியில் நிறம் மாற்றும் ஆற்றலை ஒக்டோபஸ்கள் பெற்றுள்ளன. அச்சம் ஏற்படும்போது வெண்ணிறமாகவும் கோபமேற்படும்போது செந்நிறமாகவும் அதன் நிறம் மாறிவிடும். அத்தோடு தானிருக்கும் சூழலின் நிறத்திற்கேட்ப தன் நிறத்தையும் பச்சை, பழுப்பு, செம்பழுப்பு மற்றும் உடலில் புள்ளிகளாக மாற்றி சூழலோடு இயைந்துவிடும். மேலும் எதிரி விலங்குகள் மோப்பம் பிடித்து தன்னை இனங்கண்டுகொள்ளாதிருக்க ஒருவகை மையை வீசி எதிரி விலங்கின் மோப்ப சக்தியையும் மழுங்கடித்துவிடும் வல்லமை இவற்றுக்கு உண்டு.

எதிரி விலங்குகளோடு இவ்வாறு நடந்துகொண்டாலும் மனிதர்களோடு சாதுவாகப் பழகுவதாகவும் சிலபோது தொந்தரவுகள் ஏற்படுகையில் பக்கத்திலிருக்கும் பொருளை இருகப் பற்றுவதாகவும் அதனையே மனிதர்கள் தம்மைத் தாக்குவதாகக் கருதுகின்றார்களென அமெரிக்காவின் பிரபல கடல் சுழியோடியான லெரி ஹிவிட் கூறுகிறார். ஒக்டோபஸை அன்போடு தடவிக்கொடுக்கும்போது அது விலகிச் செல்வதாகவும் குறும்புத்தனம் புரிவதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.

இவ்விலங்குக்கு அல்லாஹ் மூன்று இதயங்களை வழங்கியுள்ளான். மூன்று இதயமும் ஒக்டோபஸ் சுவாசிப்பதற்காக உதவுகின்றன. இவற்றின் இரத்தம்கூட நீல நிரத்தில்தான் இருக்கும். இதற்குக் காரணம் அவற்றின் இரத்தத்தில் செப்பு கலந்த ஹீமோசயனின் (Hemocyanin) எனும் புரதப்பொருள் காணப்படுகின்றமையாகும். எனவே ஒட்சிசனை சுவாசித்ததும் இரத்தம் நீல நிறமாக மாறுகின்றது.

மூன்று இதயங்களில் இரண்டு இதயங்கள் ஒக்டோபஸின் மூச்சுவிடும் செதில்பகுதிக்கு நீல நிற இரத்தத்தை அதாவது ஒட்சிசன் ஏற்றப்பட்ட இரத்தத்தைப் பாய்ச்சுகின்றது. மூன்றாவது இதயம் உடலுக்குத் தேவையான இரத்தத்தைச் செலுத்தும் தொழிலைச் செய்கின்றது. சுமாராக ஒரு மைல் ஆழத்தில் வாழும் இந்த ஒக்டோபஸ்கள் சூரிய வெப்பத்தையும் தூய காற்றையும் சுவாசிக்க ஆழமற்ற கடற்பரப்புக்கும் கடலில் மேல்தளத்திற்கும் வந்துவிட்டுச் செல்கின்றன.

ஒக்டோபஸ்கள் அதிகமாக வெப்பக் கடற்கரைப் பிரதேசங்களில் வாழ்வதால் அவற்றின் இரத்தத்திலுள்ள சிவப்பணுக்களில் காணப்படும் ஈமோகுளோபின் எனும் இரும்புச்சத்துள்ள இரத்தம் ஒட்சிசனை உடலெங்கும் எடுத்துச்செல்லும். வாழும் நீர் குளிர்ச்சியடைந்தாலோ அல்லது அவை குளிர்ச்சியான நீர்ப் பிரதேசத்துகோ ஒட்சிசனின் அடர்த்தி குறைவான நீர்நிலைக்குச் சென்றாலோ ஹீமோசயனின் என்ற செப்பு கலந்த இரத்தம் ஒட்சிசனை உடலெங்கும் எடுத்துச்செல்லும். இடத்திற்கு ஏற்றவாறு இரத்தப் பறிமாற்றம் நடைபெறும் அற்புதம் எவ்வாறு நடைபெறுகின்றது என்பது அறிவியலுக்கு விடுக்கப்பட்ட ஒரு சவாலாகவே கருதவேண்டும். அது இறைவல்லமையின் ஒரு எடுத்துக்காட்டு என்பதே உண்மை.

இவ்வியுரினங்கள் 5cm முதல் 6m வரை வளரக்கூடியன. ஆனாலும் வடபசுபிக் கடலில் வாழும் ஒக்டோபஸ்கள் இதனைவிடவும் அளவில் பெரிதாக வளர்கின்றன. ஒக்டோபஸ்களின் ஆயுட்காலமும் குறுகியதாகவே உள்ளது. ஒரு ஒக்டோபஸ் சுயாதீனமாக 4 முதல் 5 வருடங்கள்வரை உயிர்வாழக்கூடியது. இவ்வளவு குறுகிய காலத்திலும் அதிகளவில் உணவுட்கொள்வதால் துரித வளர்ச்சியடைகின்றன. 35Kg நிறையுடைய ஒரு ஒக்டோபஸ் ஆறு மாதங்களில் 80Kg நிறையாக வளர்ச்சியடையும்.

தனித்தனியாக வாழும் ஆண் பெண் ஒக்டோபஸ்கள் இனப்பெருக்கத்திற்காக ஒன்றிணையும். இதன்பின் சில மாதங்களில் ஆண் ஒக்டோபஸ் இறந்துவிடும். பெண் ஒக்டோபஸ் ஒரு தடவையில் இரண்டு இலட்சம் முட்டைகளையிடும். பின்னர் மிகவும் சிறிய அளவிலிருக்கும் முட்டைகளை தாய் ஒக்டோபஸ் மாலைபோன்று கோருத்து கற்பாறைகளில் பாதுகாப்பாகத் தொங்கவிடும். ஒரு மாலையில் 1000 முட்டைகள்வரை இருக்கும். முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிப்படும்வரை தாய் ஒக்டோபஸ் அவ்விடத்தைவிட்டு நகராது, உணவுட்கொள்ளாது முட்டைகளைப் பாதுகாக்கும். முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவந்ததும் தாய் அவற்றை விட்டுவிட்டுச் சென்றுவிடும். பின்பும் சில வாரங்களில் தாயும் இறந்துவிடும். மீண்டும் குஞ்சு ஒக்டோபஸ்களின் வாழ்க்கை வட்டம் ஆரம்பமாகும்.

ஒவ்வொரு உயிரினதும் வாழ்க்கை வட்டம் மிகவும் அற்புதம் வாய்ந்ததாய் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள தவனைவரை இவ்வாறு சுழன்றுகொண்டே இருக்கின்றது. அவற்றிலிருந்து மனிதன் பல அத்தாட்சிகளைக் கண்டுகொள்வதற்கே இந்த நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப் பயணம்.

அனைத்தும் குறிப்பிட்டதொரு காலம்வரை ஓடிக்கொண்டிருக்கின்றன.” (35:13)
குறிப்பு : 2012 மார்ச் மாத அகரம் சஞ்சிகையில் பிரசுரமானது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

1 comments:

fathima said...

வரிக்குவரி சுபஹானள்ளாஹ் சொல்ல வைத்த உமது கட்டுரைக்கு நன்றி. ஜஸாகள்ளாஹ்.
கடைசி பந்தியில் நான் ஒன்றைப் புரிந்து கொண்டேன்...... அதாவது ; மனித குலத்தில் தாயானவள் 10 மாதம் சுமப்பது மட்டுமல்லாமல் வளர்ந்து பெரியவனாகும் வரை எவ்வளவு சிரத்தை கொள்கிறாள்... இது வேறு எந்த உயிரிடத்திலும் இல்லை...

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...