"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

10 March 2016

சுவனத்தின் கனி மாதுளை

அறிமுகம்
அரபு மொழியில் மாதுளம் பழம் ரும்மானுன் எனவும் ஆங்கிள மொழியில் Pomegranate என்றும் அழைக்கப்படுகின்றது. தமிழ் மொழியில் மாதுளம் பழம் எனப் இப் பெயர் வருவதற்கு சுவாரஷ்யமானதொரு காரணம் கூறப்படுகின்றது. பெண்களின் உள்ளத்தில் பிறர் எளிதில் அறிய இயலாத வகையில் ரகசியங்கள் மறைந்திருப்பது போல, மாதுளம்பழத்தினுள்ளும் பல விதைகள் மறைந்திருப்பதால் மாது+உள்ளம்+பழம்= மாதுளம்பழம் எனப் பெயர் வந்துள்ளதாக கூறப்படுகின்றது. மாதுளம் பழத்தின் தாவரவியல் பெயர்  Punica granatum என்பதாகும்.

மாதுளை மரமும் அதன் பழமும்.

மாதுளை மரம் வெப்ப மற்றும் இடைவெப்ப வலயப் பகுதிகளில் விளையும் தாவரமாகும். ஆபிரிக்க நாடுகளிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளிலும் மாதுளை வேலான்மை செய்யப்படுகின்றது. எமது இலங்கை நாட்டிலும் மாதுளை மரங்களை பல பகுதிகளிலும் பரவலாகக் காணலாம்.

மாதுளை மரங்கள் அடர்ந்த கிளைகளுடன் சுமார் 26 அடி உயரம் வரை வளரக்கூடியன. இலைகள் நீண்டதாக இருக்கும். இவற்றின் பூக்கள் கடும் சிவப்பு நிறத்தில் அழகாக இருக்கும். மாதுளம் பழத்தின் மேற்தோழ் அல்லது மேட்பட்டை கணதியாக இருக்கும். எனவே அதனுள் இருக்கும் விதைகள் பாதுகாக்கப்படுகின்றன. மேற்தோழ் சிவப்பு நிறத்திலும், அதன் நுணிப்பகுதி விரிந்து பூ போன்றும் இருக்கும். பழத்தின் அளவைப் பொறுத்து அதனுள் நான்கு முதல் ஏழு வரையில் அறைகள் காணப்படும். அதன் விதைகள் சிவப்பு நிறத்தில் அடத்தியாக இனிமையான கெட்டியான நீருடன் கூடிய ஒரு ஜதையினால் சூழப்பட்டிருக்கும். அதனை மெலிதான ஒரு உரை போர்த்தியிருக்கும். மொத்தமாக அதனுள்  உள்ள விதைகள் 200 முதல் 1400 வரை இருக்கும். இந்த விதைகள் யாவும் வெள்ளை நிற துணிபோன்ற ஒரு பொருளினால் ஒட்டப்பட்டிருக்கும்.

வகையும் சுவையும்.

மாதுளையில் பிரதானமாக மூன்று வகை இனங்கள் காணப்படுகின்றன. அவை அவற்றின் சுவையை வைத்தே பிரிக்கப்படுகின்றன. அவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரக மாதுளம் பழங்களாகும். இம்மூன்று ரகங்களிலும் வித்தியாசமான சத்துக்களும் குணங்களும் காணப்படுகின்றன. இம்மூன்று மரங்களும் முளைப்பது ஒரே மண்ணில்தான், அவற்றுக்குப் பாய்ச்சப்படும் நீரும் ஒரே நீர்தான், ஒரே சூரியக் கற்றைகள் மூலம்தான் உணவையும் உற்பத்திசெய்கின்றன. ஆனால் சுவை மட்டும் வித்தியாசமாக இருக்கின்றது. அது எப்படி? இது இறைவனின் ஒரு அத்தாட்சி. அல்லாஹ் கூறுகின்றான்

இன்னும், பூமியில் அருகருகே இணைந்தார்போல் பல பகுதிகள் (உள்ளன. அவற்றில்) திராட்சைத் தோட்டங்களையும், விளைநிலங்களையும், கிளைகள் உள்ளதும், கிளைகள் இல்லாததுமான பேரீச்சை (வர்க்கத்தை)யும் (அவனே உண்டாக்கினான்; இவையனைத்திற்கும்) ஒரே தண்ணீர் கொண்டு தான் பாய்ச்சப்பட்டாலும், அவற்றில் சிலவற்றை வேறு சிலவற்றை விட சுவையில் நாம் மேன்மையாக்கியிருக்கின்றோம்; நிச்சயமாக இவற்றில் உணர்ந்தறியும் மக்களுக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன.” (13:04)

பார்ப்பதற்கு பழங்களின் தோற்றம் ஒரே விதத்தில் இருந்தாலும் அவற்றின் சுவையோ வித்தியாசமானது என்பதை அப்படியோ கூறும் இந்த அல்குர்ஆனிய வசனத்தையும் பாருங்கள். “(பார்வைக்கு) ஒன்று போலவும் (சுவையில்) வெவ்வேறாகவும் உள்ள மாதுளை…”(6:99)

மருத்துவக் குணங்கள்.

மாதுளையின் இலை, பூ, பழம், தோழ், வித்து ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. 100 கிராம் பழம் உண்டால் அதனால் 83 கலோரி சக்தி கிடைக்கின்றது. மாதுளைப் பழங்களில் இரும்பு, சக்கரை சுண்ணாம்பு, பொஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. எனவே இச்சத்துக்கள் பல்வேறு நோய்களுக்கும் நிவாரணியாகத் திகழ்கின்றன. மாதுளம் பழத்தில் இருக்கும் சில மருத்துவக் குணங்களை இங்கு அவதானிப்போம்.

1. இரத்த நோய்களுக்கு மருந்து.

மாதுளம் பழத்தில் அதிகமாக உள்ள இரும்புச் சத்து ரத்தச் சோகையைத் தடுக்க உதவும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினின் அளவைவு அதிகரிக்கும். அத்தோடு விட்டமின் சீ இரத்தம் உற்பத்தியாக வழிவகுக்கும். இரத்த இழப்பைக் குறைக்கும். இரத்தத்தை சுத்திகரிக்கவும் உதவும். எனவே கர்பிணித் தாய்மாருக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும் இன்னும் இரத்தத்துடன் சம்பந்தப்பட்ட நோய் இருப்பவர்களுக்கும் மாதுளம் பழம் மிகச் சிறந்த நிவாரணி.

2. ஞாபக சக்தியைக் கூட்டுகிறது.

மாதுளையில் அடங்கியுள்ள விட்டமின் சீ சத்தும் இரும்புச் சத்தும் நினைவாற்றலை மேம்படுத்த உதவும். அத்தோடு மூளையின் சீரான இயக்கத்திற்கும் இது உதவும். எனவே மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளுக்காக அதிகமாக மாதுளம் பழம் உண்பது அவர்களது ஞாபக சக்தியை அதிகரிக்க வல்லது.

4.புற்று நோய்க்கு மருந்து.

மாதுளம் பழத்தில் உள்ள என்டி ஒக்சிடண்ட், பல்வேறு வகை புற்றுநோய்களில் இருந்து எமக்குப் பாதுகாப்பைத் தருகிறது. புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுத்துவர்கள் மாதுளம் பழத்தைப் பரிந்துரைக்கின்றனர். நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றது.

5.சமிபாட்டுக் கோளாருகளை சீர் செய்கிறது.

சமிபாட்டுக் கோளாரு உள்ளவர்களும் மலச் சிக்கல் உள்ளவர்களும் மாதுளம் பழத்தை உண்பதால் அக்கோளாருகள் சீராகின்றன. ஏனெனில் அது நார்ச்சத்து உணவாகும். அத்தோடு இது உமிழ் நீரை அதிகம் சுரக்க வைப்பதோடு உணவுச் சமிபாட்டையும் சீராக்கும்.

6.அல்சரையும் குணப்படுத்தும்.

மாதுளம் பழச் சாறு இரைப் பையிலும் குடலிலும் உள்ள புண்களை குணமாக்குகின்றது. பாணமாகப் பருகுவதை சிறு பிள்ளைகளும் விரும்புகின்றனர்.

7.இன்னும் பல

எலும்புகளுக்கும், பற்களுக்கும் உறுதியை அளிக்கின்றது. சளி தொடர்பான நோய்களை குணப்படுத்துகின்றது. கண் நோயின்போது மாதுளம் இலையை அரைத்து அதனைக் கண் மீது தடவினால் கண் நோய் குணமாகும். மாதுளம் பழத்தின் ஜூஸ், பாக்டீரிய எதிர்ப்பு நொதிகளை அதிகம் சுரக்கச் செய்யும். இது உணவு செரிமானத்துக்கு உதவும். அதனால்தான் வயிற்றுக் கோளாறுகளுக்கு மாதுளம் பழம் சாப்பிடப் பரிந்துரைக்கப்படுகிறது. தேமல், முகப் பரு மற்றும் பிற சரும நோய்களுக்கும் மாதுளம் பழம் சிரந்த நிவாரணி. அதிக உடல் மற்றும் மன உழைப்பால், உடற்சூடும் பித்தமும் கூடி வாந்தி, விக்கல், வாய்நீர்ச்சுரப்பு, குமட்டல், மயக்கம், நெஞ்சுச்செரிவு, காதடைப்பு, தலைச்சூடு, கண்ணெரிச்சல், போன்ற நோய்களிலிருந்து விடுபட மாதுளை சிறந்த உணவு.

சுவனத்தின் கனி

அல்குர்ஆனில் சூரா அல் அன்ஆமின் 99 ஆம் வசனத்திலும் அதே சூராவின் 141 ஆம் வசனத்திலும் அவ்வாறே சூரா அர்ரஹ்மானின் 68 ஆம் வசனத்திலும் மாதுளம் பழம் தொடர்பாக பேசப்பட்டுள்ளது. இதில் சூரா அர்ரஹ்மானின் 68 ஆம் வசனத்தில் சுவனத்தில் இருக்கும் கனிகளைப் பற்றிக் கூறும்போது அல்லாஹ் மாதுளம் பழத்தையும் சேர்த்துக் கூறியுள்ளான். சுவனத்துக் கனிகளில் மாதுளையும் ஒன்று என்றால் அதன் முக்கியத்துவத்தை இங்கு எம்மால் விளங்கிக்கொள்ள முடியும்.

நோய்கள் வந்த்தும் வைத்தியரை நாடி மாத்திரைகளை வாங்கிக் குடிக்கும் நாம் அதே மாத்திரைகள் எதிலிருந்து தயாரிக்கப்படுகின்றனவோ அந்த காய்களையும் கனிகளையும் நோய் வருவதற்கு முன்பே உண்டுகொண்டால் எவ்வளவு ஆரோக்கியமாக வாழலாம். அடிக்கொருமுறை ஒரு மாதுளம் பழத்தை வாங்கி உண்டு வாருங்கள். அல்லாஹ்வின் அருளினால் சிறு சிறு நோய்கள் தீரும்.

ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A

உங்கள் கருத்து:

2 comments:

Anonymous said...

👍👍👍

mohamed hasmin said...

Waaw mihawum Uthaviyaha irundathu

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...