அமெரிக்காவில் ஆரம்ப காலங்களில்
இருந்ததைவிடவும் தற்போது விருத்தசேதனம் (Circumcision) (கத்னா/சுன்னத்)
செய்துகொள்வோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைவடைந்துள்ளதாகவும் அதனால் அமெரிக்காவில்
பாலியல் தொடர்பான நோய்கள் அதிகரித்துவருவதாகவும் ஜோன் ஹொல்கிங்ஸ் பல்கலைக்கழகத்தின்
பேராசிரியர் ஓரான் நோபியொன் குறிப்பிட்டுள்ளார்.
1970 களில் 79% இருந்த விருத்தசேதனம்
செய்வோரின் எண்ணிக்கை 2010 ஆம் ஆட்டளவில் 55% ஆகக் குறைவடைந்துள்ளதெனவும் இதனால் 4
பில்லியன் டொலர் நட்டம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விருத்தசேதனம் செய்வதால் தோல்
அழற்சி, ஆண் குறிப் புற்றுநோய் மற்றும் இன்னும் பல பாலியல் நோய்களைத் தடுக்க முடியும்
என்றும் விருத்தசேதனம் செய்துகொண்டாலே எச்.ஐ.வி தொற்றையும் தவிர்க்க முடியும் என அவர்
கூறுகின்றார்.
இவ் வழிமுறையானது இஸ்லாத்தில் நன்மை தரக்கூடியதொரு செயலாகும். நபிகளார் காட்டித் தந்த ஒரு விடயம். உண்மையில் முஸ்லிம்கள் மாத்திரமன்றி யூதர்களும் கிறிஸ்தவர்களும் கூட விருத்தசேதனம் செய்துகொள்கின்றார்கள். ஒன்று இதில் பல்வேறு மறுத்துவக் குணங்கள் இருப்பதாலும் அடுத்தது முஸ்லிம்களைப்போன்றே யூதர்களும், கிறிஸ்தவர்களும் நபி இப்றாஹீம் (ஏப்ரஹாம்) அவர்களை ஏற்றுக்கொள்வதாலுமாகும். விருத்தசேதனம் செய்துகொள்ளும் வழிமுறையை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் இப்றாஹீம் (அலை) அவர்களே!
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...