நபி (ஸல்) அவர்களுக்கு களங்கம்
கற்பிக்கும் வகையில் வெளியிடப்பட்ட குருந் திரைப்படத்துக்கு எதிராக
முஸ்லிம்கள் கொதித்தெழுந்து கொண்டிருக்கும்
இவ்வேளையில்... பங்களாதேசில் பௌத்த மத வழிபாட்டுத்தலங்கள் மீது நடாத்தப்பட்ட
தாக்குதலானது பௌத்த மதத்தினரையும் அவர்களின் உணர்வுகளையும் தூண்டி விட்டுள்ளது. அவர்களின் மனக்கவலையை ஆர்ப்பாட்டங்களின்
மூலம் வெளிப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். இந்த சந்தர்பத்தில் நாம் பொறுமை இழந்து செயற்பட்டால்
முஸ்லிம் சமூகம் மிகப் பாரிய விலைவொன்றை எதிர் கொள்ள வேண்டி வரும்.
இது முஸ்லீம்கள் சிந்தித்து, பொறுமையுடன் நடத்துகொள்ள வேண்டிய தருணம் என்பதை மறந்து விட வேண்டாம். எதிர்வரும் 4 ஆம் திகதி முஸ்லீம்களுக்கு எதிராக பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று கொழும்பு விகார மாக தேவி அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பங்களாதேசில் பெளத்த விகாரை தீ வைத்து எரிக்கப்பட்டமைக்காக இவ் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. இது சம்பந்தமாக முஸ்லீம்களுக்கு எதிராக இயங்கும் அமைப்புக்கள் பகிரங்கமாகவும் இணையத்தளங்களிலும் பகிரங்க அழைப்புக்களை விடுத்துள்ளனர்.
நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஆர்பாட்டங்கள் நடத்துவதற்கும் ஆங்காங்கே முயற்சிகள் நடைபெறுகின்றன. இத்தருணத்தில் முஸ்லிம்கள் ஆகிய நாம் மிகவும் பொறுமையுடன் நடந்துகொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.
“இது விடயத்தில் ஏதும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க அல்லாஹ்விடம் கையேந்துவோம்”
"ஒவ்வொருவரும் சிந்தித்து செயற்படுவோம்”
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...