"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

22 November 2012

விஞ்ஞான, தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் ஹொலிவுட் திரைப்படங்கள்

நவீன திரைப்படக் கலாசாரமானது பலரையும் தன்வயப்படுத்தும் அதீத ஆற்றலைக் கொண்டுள்ளது. சிறியோர் முதல் முதியோர்வரை அனைவரையும் இழுத்துக் கட்டிப்போடும் பல்வேறு உத்திகளை இன்றைய திரைப்படங்கள் கையாள்கின்றன. திரைப் படப்பிடிப்புத் துறையில் வளர்ச்சியுற்றிருக்கும் பல்வேறு தொழில்நுட்ப முறைகளே இதற்குக் காரணம் எனலாம். ஆரம்ப காலங்களில் இருந்த கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சிகள், அதில் ஒளிபரப்பப்பட்ட கருப்பு வெள்ளைத் திரைப்படங்கள், பேசும் திரைப்படங்கள் அதன்பின்னர் வெளிவந்த வண்ணத் தொலைக்காட்சிகள் வண்ணத் திரைப்படங்கள் என திரைப்படங்களின் வளர்ச்சி துரிதமாக எழுச்சியுற்று வந்துள்ளது. அத்தோடு இன்று LCD, LED மற்றும் 3D  தொழில்நுட்பங்களில் மலிந்துபோயிருக்கும் தொலைக்காட்சிகளாலும் திரைப்படத் தயாரிப்புகள் முன்பைவிட அதிகரித்துள்ளன.

ஒரு சில மில்லியன் செலவில் ஒரு அறைக்குள் காட்சிகள் பிடிக்கப்பட்டாலும் (Shooting) அவை திரைப்படங்களாக வெயிடப்படுகையில் பல்வேறு கிரபிக்ஸ் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உயர உயரப் பறப்பதுபோன்றும், நீருக்குள் மூழ்குவதுபோன்றும், கிரகங்களுக்கிடையே பயணிப்பது போன்றும் ஏன்  பிரபஞ்சத்தையே சுற்றிவருவதுபோன்றெல்லாம் காட்சிகள் அமைக்கப்படுகின்றன. இதற்கு சிறந்த உதாரணம் எவேடர் (அவதார்) திரைப்படம்.

ஒரு படத்தைத் தயாரிப்பதற்காக தொழில்நுட்பவியலார்கள், பொரியியலாளர்கள், விஞ்ஞானிகள், திரைக்கதை ஆசிரியர்கள், கதாபாத்திரங்கள், இசையமைப்பாளர்கள், பணியாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் கைகோர்க்கின்றனர். இவர்கள் அனைவரதும் கூட்டு முயற்சியால் மிகக் காத்திரமான திரைப்படங்கள் வெளியிடப்பட்டு பல கோடிக்கணக்கான ரூபாய்கள்  வசூலாகிவிடுகின்றன. ஓவ்வொரு படத்தினதும் திரைக்கதை அமைப்பு, வித்தியாச வித்தியாசமான கதாபாத்திரங்கள், பிரயோகிக்கப்படும் இசையின் ஏற்ற இறக்கங்கள், எளிமையான ஆனால் இயல்பான நடிப்பாற்றல்கள், அவர்களது மெல்லின, வல்லின குரலோசைகள் அனைத்தும் அத்திரைப்படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன.

இத்துனை சூட்சுமங்களுக்கு மத்தியில் வெறுமனே பொழுதுபோக்கிற்காகவோ சம்பாத்தியத்திற்காகவோ மாத்திரம் ஹொலிவுட் திரைப்படங்கள் எடுக்கப்படுவதில்லை என்பதுதான் நிதர்சனம். (அவ்வாறாக எடுக்கப்படும் ஒரு சில திரைப்படங்களும் இருப்பது உண்மையே!) இந்தியாவின் பொலிவுட் திரைப்படங்களுக்கும் மேற்கு நாடுகளில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கும் இடையில் உள்ள பிரதான வேறுபாடு இதுவாகத்தான் இருக்கவேண்டும். இந்திய சினிமாக்கள் பொதுவாக குடும்ப சினிமாக்களாகவும் அரசியல் சினிமாக்களாகவும் காதல் சினிமாக்களாகவும் காணப்படும். எத்தகைய சினிமாக்களாக அவை இருப்பினும் தவராமல் காதல் என்ற வட்டத்திற்குள் அது சுற்றிச் சுற்றி வருவதை இந்திய சினிமாத் தயாரிப்பாளர்களாலும் ரசிகர்களாலும் தவிர்க்க முடியாதிருக்கின்றது. அத்தோடு விரசமான காட்சிகளையும் ஆபாசமான வார்த்தைப் பிரயோகங்களையும் பாடல்களையும் அண்மைக்காலமாக பொலிவுட் திரைப்படங்களில் அதிகமாகவே காணக்கூடியதாய் உள்ளது.

ஹொலிவுட் திரைப்படங்களைப் பொருத்தவரை அவை பல மில்லியன்கள் செலவுசெய்யப்பட்டு ஏதாவதொரு புதிய தொழில்நுட்பமொன்றை அறிமுகப்படுத்துவதாகவோ, ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பை வெளியிடுவதாகவோ எடுக்கப்படும். அல்லது தற்சமயம் உருவாக்கிக் கொண்டிருக்கும் ஒரு தொழில்நுட்பத்தை, விஞ்ஞானக் கண்டுபிடிப்பை மையமாகவைத்து அதனைத் திரைப்படமாக வெளியிடுவர். இதனால் ஹொலிவுட் திரைப்படங்களுக்கு பெரியதொரு வரவேற்பு உலகமட்டத்தில் காணப்படுகின்றது. இக்கட்டுரையும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் விஞ்ஞானத் திரைப்படங்கள் பற்றி அலச விளைகிறது.

Avatar (2009)

ஜேம்ஸ் கெமரூனின் எவேடர் (Avatar - அவதார்) திரைப்படம் பொதுவாக அனைவரும் அறிந்தவொன்று. தூர இருக்கும் பெண்டோரா என்ற கிரகத்திற்கு பூமியிலிருந்து செல்பவர்கள் அங்கிருப்பவர்களோடு யுத்தம்செய்து கனிமப் பொருட்களைக் கையாள நினைக்கிரார்கள். அதற்காக க்ளோனிங் முறைப்படி உருவாக்கப்பட்ட ஒரு எவேடரை ஒரு இராணுவ வீரன் இயந்திரத்தின் வழியாக தனது மனதினால் கட்டுப்படுத்துகிறான்.

இத்திரைப்படத்தை சாத்தியப்படுத்தும் ஆய்வுகளில் தற்போது அமெரிக்காவின் பாதுகாப்பு மையம் பெண்டகன் ஈடுபட்டுள்ளது. இதனைச் சாத்தியமாக்குவதன் மூலம் எதிர்காலத்தில் யுத்தமுனையில் பயன்படுத்தவிருக்கும் இயந்திர ரோபோக்களை கணினி மூலம் கட்டுப்படுத்தாது இராணுவச் சிப்பாய்களின் மனதினால் அவற்றைக் கட்டுப்படுத்தக்கூடிய விதத்தில் அமைக்கவுள்ளனர். பென்டகனின் அதி உயர் ஆராய்ச்சி அமைப்பான DARPA (The Defense Advanced Research Projects Agency) இவ் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளதோடு இதற்காக அமெரிக்க அரசு ஏழு மில்லியன் டொலர்களை ஆராய்ச்சிக்காக வழங்கியுள்ளது.

Spider Man 2 (2004)

ஸேம் ரய்மியின் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான Spider Man 2  திரைப்படம் வித்தியாசமானதொரு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துகிறது.  Doctor Octopus ஒரு அணு ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானி. அவர் ட்ரித்தியத்தை (tritium) பயன்படுத்தி அதற்கு ஒன்பது லேசர் ஒளிக்கற்றைகளைப் பாய்ச்சுவதன் மூலம் சூரிய சக்தியை உருவாக்கும் ஆராய்ச்சியை மேற்கொள்கின்றார். என்றாலும் இடையில் ஏற்படும் தடங்களால் அவர் அதனைத் தவறாகப் பாவிக்க முனைகிறார். இவ்வாறு படம் ஓடுகிறது.

உண்மையில் இது வெறும் பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்ட திரைப்படமல்ல. சுமார் 12 வருடகாமாக முயற்சிசெய்து உருவாக்கப்பட்டுள்ள பாரியதொரு ஆய்வை சூசகமாகச் சொல்வதே இத்திரைப்படம். சூரியனில் நடைபெறுவதையொத்த சக்திப் பிறப்பாக்கச் செயன்முறையை மேற்கொள்வதற்காக அமெரிக்காவில் கலிபோனியா மாநிலத்தில் National Ignition Facility என்றொரு ஆய்வு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவே அமெரிக்காவில் உள்ள மிகப் பெரிய விஞ்ஞான ஆய்வுகூடம். கடந்த 2009 ஆம் ஆண்டுதான் இதன் நிர்மாணப்பணிகள் பூர்த்தியடைந்துள்ளன.

ஐதரசனின் ஒரு துகளான ட்ரித்தியத்தின் மீது 92 இராட்சத லேசர் ஒளிக்கற்றைகளை ஒரே சமயத்தில் பாய்ச்சுவன் மூலம் அதிலிருந்து சுமார் 500 ட்ரில்லியன் வோட்ஸ் சக்தியைப் பெற முடியுமென விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதற்கு சூரிய சக்தி (Solar Power) என அழைக்கின்றனர். இச்செயன்முறையானது 100 மில்லியன் பாகை செல்சியஸ{க்கும் அதிகமான வெப்பநிலையில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதிலிருந்து வெளிப்படும் சக்தியின் மூலம் 100 வோட்ஸ்களைக் கொண்ட 5,000,000,000,000 மின் விளக்குகளை ஒளியேற்ற முடியுமெனவும் கூறுகின்றனர்.

Echelon Conspiracy (2009)

Echelon Computer System (எச்சலன் கணினித் தொகுப்பு) என்பது அமெரிக்கா, கெனடா, நியூஸிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் நிறுவப்பட்டுள்ள பாரிய கணினித் தொகுதிகளாகும். 1960 களின்போது சோவியத் ஒன்றியத்தின் தொடர்பாடல்களை ஒற்றுப் பார்ப்பதற்காகவே இது ஆரம்பிக்கப்பட்டது. என்றாலும் அது தற்போது உலக மக்களின் தொலைத் தொடர்பு விடயங்களை வேவு பார்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது. நாம் தொடர்பாடலின்போது மேற்கொள்ளும் தொலைபேசி அழைப்பு, குறுந்தகவல்கள் (sms), ஈமெயில், பெக்ஸ் என அனைத்திலிருந்தும் ஒரு நகல் இக்கணினித் தொகுப்பில் சேமிக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு சுமார் ஆறு பில்லியன் செய்திகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு வகைப்படுத்தப்படுகின்றன. நமது தொடர்பாடல்கள் உண்மையில் இரகசியமானவை அல்ல என்பதுவே உண்மை.

இத்தொழிநுட்பத்தின் பிரதிகூழத்தை எடுத்துக் காட்டும் விதமாக Echelon Conspiracy  என்ற திரைப்படம் 2009 ஆம் ஆண்டு Greg Marcks என்பவரின் தயாரிப்பில் வெளிவந்தது. முக்கியஸ்தர்கள் தொலைபேசி ஊடாக வேவுபார்க்கப்பட்டு கொலைசெய்யப்படுகின்றனர். யார் எந்த மூலையில் இருந்தாலும் தொலைபேசியூடாகக் கண்கானிக்கப்படுவதாக அத்திரைப்படம் இத் தொழில்நுட்பத்தின் விளைவினை எடுத்துக் கூறியிருந்தது.

The Day after Tomorrow (2004)

புவி வெப்பமாகுவதால் பனிப்பாறைகள் உருகி அமெரிக்காவின் நியுயோர்க் நகரை கடல் மூழ்கடிப்பதுபோன்று இத்திரைப்படம் அபூர்வமாக எடுக்கப்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு மே மாதம் Roland Emmerich இன் தயாரிப்பில் வெளியானது இத்திரைப்படம். இத்திரைப்படம் வெளியான அதே வருடம் டிஸம்பர் மாதம்தான் பாரிய சுனாமி உலகைத் தாக்கிச் சென்றது.

அமெரிக்காவின் வான்படை, கடற்படை மற்றும் பென்டகனின் அதி உயர் ஆராய்ச்சி அமைப்பான DARPA என்பன இணைந்து ஆரம்பித்துள்ள ஒரு செயற்திட்டம்தான் HAARP System (High Frequency Active Auroral Research Program) அதிசக்திவாய்ந்த ரேடியோ அதிர்வலைகளையும் பூமியில் உள்ள காந்தப்புலச் சக்தியையும் ஒருசேர ஓர் இடத்தில் பாய்ச்சுவதனூடாக அவ்விடத்தில் பூகம்பத்தையோ, சூறாவளிப் புயலையோ, மழையையோ ஏற்படுத்துவதற்கான ஒரு திட்டம்தான் இந்த HAARP System  இனூடாக மேற்கொள்ளப்படுகிறது.

சமீபத்தில் பல இலட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட ஹெய்ட்டி பூகம்பம்கூட இத்தொழில்நுட்பத்தைப் பிரயோகித்து மேற்கொள்ளப்பட்ட ஒரு பாரிய அழிவென ரஷ்யாவின் கடற்படையின் உறுதிப்படுத்தப்படாத அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. அதேநேரம் வெனிசூலாவின் ViVe தொலைக்காட்சியில் அதிபர் சாவேஸ் அமெரிக்கா பரிசோதனை செய்த நவீன நிலநடுக்க ஆயுதம் ஹெய்ட்டியில் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆயுதத்தை ஈரானில் பிரயோகித்து செயற்கையான நிலநடுக்கத்தை ஏற்படுத்தி ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான ஒத்திகையாகவே இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகஅவர் குற்றம் சாட்டினார்.

ஆப்கானிஸ்தானில் 2002ம் ஆண்டு மார்ச் மாதம் 7.2 magnitude அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கும் இந்த ஆயுதமே காரணமென ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. இதுபோன்ற ஆயுதம் அமெரிக்காவிடம் மட்டுமன்றி ரஷ்யாவிடமும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 2002ம் ஆண்டு ஜோர்ஜியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்திற்கு ரஷ்யா தனது ஹார்ப் ஆயுதத்தைப் பயன்படுத்தியமையே காரணமென ஜோர்ஜிய பசுமைக் கட்சி குற்றம் சாட்டியிருந்தது. அதேபோன்று அமெரிக்கா ஒரு தடைவ கலிபோர்னியா அருகில் பசுபிக் சமுத்திரத்தில் ஆயுதப் பரிசோதனை நடாத்தியதில் 6.5 magnitude அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடங்கள் சேதத்திற்குள்ளானமையும் குறிப்பிடத்தக்கது.

HAARP ஆராய்ச்சி மையம் செயற்கையாக காலநிலை மாற்றங்களை ஏற்படுத்துவதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத குற்றச்சாட்டு உள்ளது. 1997 ம் ஆண்டு அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் வில்லியம் கோகன் தொலைதூர மின்காந் அலைகளை ஏவி செயற்கையாக பருவநிலை மாற்றம், நிலநடுக்கம் போன்றவற்றைத் தோற்றுவிக்கும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் குறித்து கவலை அடைவதாகத் தெரிவித்தார்.

2004 ஆம் ஆண்டு டிஸம்பர் மாதம் நிகழ்ந்த சுனாமிகூட இந்த ஹார்ப் ஆராய்ச்சி மையத்தின் ஏற்பாடுதான் என சில வருடங்களுக்கு முன்பு விஞ்ஞானிகள் கூறியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதேபோன்று 2012 நவம்பர் மாதம் உலக அழிவு நாளென்று ஒரு தகல் அண்மைக்காலமாகக் கூறப்பட்டு வருகின்றது. அதுகுறித்து 2012 என்றொரு படமும் 2009 ஆம் ஆண்டு Roland Emmerich இன் தயாரிப்பில் வெளிந்தமையும் குறிப்பிடத்தக்கது.

CROP CIRCLES 

அமெரிக்கா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் காணப்படும் விசாலமான வேளாண்மை நிலங்களில் விசித்திரமாகத்தோன்றும் வேளாண்மை வட்டங்களை வைத்து வேற்றுக் கிரகசாசிகள் (Aliens) குறித்து நிறையத் திரைப் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஒரு இரவுப் பொழுதில் பாரியதொரு இடம் மிகத் துல்லியமாக மிக அழகான வடிவங்களில் எவ்வாறு வெட்டப்படுகின்றன என்பது குறித்த ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள்கூட சுமார் 15 வருட காலமாக ஈடுபட்டு வந்தனர். அவர்களாலும் இதன் இரகசியத்தை அறிந்துகொள்ள முடியவில்லை. எனவே அதன் பலியை வேற்றுக் கிரகவாசிகள் என்ற கற்பனையின் மீது சுமத்திவிட்டனர். வேற்றுக்கிரக வாசிகள் வந்து இறங்கும் போது அவர்களது பறக்கும் தட்டின் அடையாளமே இவ்வாறு படிவதாக் கதைகளைப் பற்ப்பினர்.

ஆனால் இத்திரைப்படங்கள் இதன் உண்மையைக் கண்டறியத் தவறிவிட்டனவோ என்னவோ? ப்ரீமேசன் என்ற இரகசிய இயக்கத்தின் வேலையே இவை. லேசர் கதிர்களால் சுட முடியுமான செய்மதியொன்றை  விண்ணில் ஏவி லேசர் கதிர் வீச்சினால் பூமியிலுள்ளவர்களையும் பொருட்களையும் சுடுவதற்கான ஒத்திகை பார்ப்பதே இவ்வட்டங்கள். எதிர்காலத்தில் இதனை மனிதப் பேரழிவுகளுக்கும் பயன்படுத்தும் திட்டம் தயாராகியுள்ளமையை அனைவரும் அறிந்துகொள்ளவேண்டும். http://www.cropcirclemovie.com 

Mission impossible 3 (2006)

தற்போது நாம் ஆள் அடையாளத்திற்காகப் பயன்படுத்தும் அடையாள அட்டை, பாஸ்போர்ட் என்பவற்றுக்குப் பதிலாக இனி அறிமுகப் படுத்தவுள்ள தொழில்நுட்பம்தான் BEAST SYSTEM. மிகச் சிறிய வெரிசிப் இல் ஒருவரைப் பற்றிய அனைத்துத் தகவலையும் பதிவு செய்த பின்பு அதனை அவரது நெற்றியில் செலுத்திவிடுவர். குறித்த நபர் எங்கு சென்றாலும் ஒரு கருவியை அவரை நோக்கிப் பிடிப்பதனூடாக அவர் பற்றிய அத்தனை தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியுமான ஏற்பாடே இது.

உண்மையில் இது ஆள் அடையாளத்தை இனங்காண்பதற்காக மட்டும் பொறுத்தப்படும் சாதனமல்ல. இது பொறுத்தப்பட்ட ஒரு மனிதனை அவ்வாறே தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு இயலுமான சாத்தியத்தை இது உருவாக்குகின்றது. Mission Impossible 3 என்ற திரைப்படமும் அதற்கு முன்பு வெளிவந்த AIE என்ற திரைப்படமும் இது பற்றிய அறிமுகத்தை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. யுத்தகளத்தில் எதிரிகளைக் கைதுசெய்து வந்து அவர்களது நெற்றியில் வெரிசிப் இனைப் பொறுத்தி அவர்களையே யுத்தத்தில் முன்னோக்கி அனுப்பி பலிக்கடாக்களாக்கும் சம்பவம் AIE திரைப்படத்தில் காட்டப்படுகிறது.

இரண்டு மணிநேரங்களில் பல கோடி மக்களுக்குப் பல்வேறு செய்திகளைச் சென்றடையச் செய்யும் சாதனமாக திரைப்படங்கள் காணப்படுகின்றன. அதிலும் பயனுள்ள காத்திரமான திரைப்படங்கள் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியோடு இன்னும் விருத்தியடைந்து வருகின்றது. ஹொலிவுட் திரைப்படங்களில் காணப்படும் சில மாய வித்தைகளையும் தாண்டி, தொழில்நுட்ப விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களையும் தாண்டி யதார்த்தமான, நிதர்சனமான நடைமுறை வாழ்க்கையைப் பிரதிபளிக்கும் திரைப்படங்களை எடுப்பதில் ஈரானிய சினிமாக்கள் முன்னேறி வருகின்றன. உலக அரங்கில் ஈரானிய சினிமாக்கள் முக்கிய இடத்தைப் பிடித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆலிப் அலி (இஸ்லாஹி

உங்கள் கருத்து:

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விரிவான விளக்கங்கள்... நன்றி...

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...