"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

20 December 2014

மனித உடலில் இறை அத்தாட்சிகள்.

நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், (ஏன்) அவர்களுக்குள்ளேயும் நாம் காண்பிக்கின்றோம். (41:53)

வல்லவன் அல்லாஹ்வின் இறுப்பு சத்தியமானதும் சாத்தியமானதும்தான் என்பதை நாம் ஆராய்ந்து அறிந்துகொள்ளும் வகையில் அல்லாஹ் அவனது படைப்புகளுடாக பல அத்தாட்சிகளை எமக்குக் காண்பிக்கின்றான். பிரபஞ்சத்தில் மாத்திரமல்ல ஏன் எமது உடலுக்குள்ளேயே அவன் பல அத்தாட்சிகளை வைத்திருக்கின்றான் என்றே மேலுள்ள வசனத்தின் இறுதியில் குறிப்பிடுகின்றான். இதனை மற்றுமொரு வசனம் பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றது. உங்களுக்குள்ளேயும் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன, (அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா?” (51:21) இத்தொடரில் எமது உடலில் பொதிந்திருக்கும் இறை அற்புதங்கள் சிலதை அவதானிப்போம்.

1. மனிதனின் உடலமைப்பு:

தலை முதல் பாதங்கள் வரை மனித உடலை ஒரு மொத்தப் பார்வை பார்த்தால் மண்டையோட்டுடன் கூடிய தலை, முகம், அதிலே பார்ப்பதற்காக இரு கண்கள், சுவாசிக்க ஒரு மூக்கு, கேள்திறன்கொண்ட இரண்டு காதுகள், எதையும் அரைத்து உண்ணவும் அழகாக பேசவும் பற்களையும் நாவையும் கொண்டமைந்துள்ள வாய், கழுத்துமார்பகங்கள், பல்வேறு வேலைகளை செய்துகொள்ள இரண்டு கைகளும் அவற்றில் பத்து விரல்கள், வயிறு, கழிவு வெளியேற்றும் தொகுதிகள், இண உற்பத்திப் பகுதிகள், ஓடிப் பாய்ந்து நடந்து திரிய இரண்டு கால்களும் அவற்றின் பாதங்களில் பத்து விரல்களும் என பல உறுப்புகள் காணப்படுகின்றன.
அவை தவிர  உடலுக்குள் மூளை, இதயம், சுவாசப்பை, இரைப்பை, சிறு, பெரு குடல்கள், சிறுநீரகம், ஈரல், இரத்தம் என பல சமாச்சாரங்களை மிக நேர்த்தியாகவும் அழகாகவும் அல்லாஹ் படைத்துள்ளான். திருமறை கூறுகின்றது. நிச்சயமாக நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.”  [95:4] இவ்வாறு எமது உடலில் காணப்படும் ஒவ்வொரு அங்க உறுப்புகளையும் ஆராய்ந்து பார்த்தால் அவை சதாவும் இறைவனை புகழ்ந்துரைக்கச் சொல்கின்றன. பின்வரும் திருமறை வசனம்கூட இதனை எடுத்துரைப்பதைப் பாருங்கள்.

நீங்கள்  (அவனுக்கு) நன்றி செலுத்த வேண்டும் என்பதற்காகவே உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் அவன் அமைத்தான்.” (16:78)

2.கருவறையில் ஆரம்ப நிலை:

ஒரு பெண்ணின் உடலில் ஆணினால் செழுத்தப்படும் சுமார் 500 மில்லியன் விந்தணுக்களில் ஒன்று மாத்திரம் பெண்ணின் சினை முட்டையுடன் கருக்கட்டுவதுமுதல் மனித உருவாக்கம் கருவறையிலிருந்து ஆரம்பிக்கின்றது. அதனைத் தொடர்ந்து சரியாக 42 நாட்களுக்குள் அது அலகா (சூழ்வித்தகம் – Placenta), முழ்கா ( சதைக் கட்டி – Chew), இதாம் (எண்பு – Bone),  லஹ்ம் (தசை – Muscles) என்ற கட்டங்களில் வளர்ச்சியடைகின்றது. 42 ஆம் நாளாகும் பொழுது கருவாகி, உருவாகிய அந்தச் சிசுவிற்கு ஒரு வானவர் மூலம் அல்லாஹ் ரூஹை ஊதுகின்றான். இந்தப் படி நிலைகளை அல்குர்ஆன் அழகாக முன்வைக்கின்றது.

நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பன இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் (அதில் ரூஹை ஊதி) வேறு ஒரு படைப்பாக செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.” (23:14)

3. ஆக்கக் கூறு - Cell :

மனிதன் மட்டுமன்றி பொதுவாக அனைத்து உயிரிகளினதும் ஆக்கக் கூறாக உயிரணுக்கள் (கலங்கள் – Cells) காணப்படுகின்றன. ஆணினதும் பெண்னினதும் பாலணுக்கள் இணந்து உருவாகும் முதலாவது உயிரணு Zygote என அழைக்கப்படுகிறது. அதன்படி பெண்ணின் இனப்பெருக்க உறுப்பான சூலகத்தில் இருந்து வெளியேறும் சூல் முட்டையுடன், ஆணின் விந்து இணைந்து உருவாகும் முதலாவது உயிரணு, மீண்டும் மீண்டும் கலப்பிரிவுக்குள்ளாகி, பிரதி செய்யப்பட்டு கோடிக்கணக்கான கூட்டுக் கலங்களாகி குழந்தையாக உருப்பெறுகிறது. அதன் பின் அக்குழந்தை பிறந்து வளர்ச்சியடையும் காலமெல்லாம் உயிரணுக்களின் எண்ணிக்கையும் கோடிக்கணக்கில் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இந்நிலை பற்றி அல்குர்ஆன் கூறுவதை அவதானியுங்கள்.

நிச்சயமாக நாம் மனிதனை (ஆண், பெண் இருவரின்) இந்திரியத்தின் கலப்பான துளியிலிருந்து படைத்தோம்.” (76:2)

ஆக மனித உடல் பலகோடி உயிரணுக்களால் ஆனதாகும். தோலின் ஒரு சதுர அங்குலத்தில் 19,000,000  உயிரணுக்கள் இருப்பதாக ஒரு ஆய்வுக் கட்டுரை குறிப்பிடுகிறது. ஒவ்வொரு மணிநேரமும் பில்லியன் கணக்கான உயிரணுக்கள் எமது உடலில் உருவாகி பல பில்லியன் கணக்கான உயிரணுக்கள் மறைந்து போகின்றன. இது தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும். இந்த உயிரணுக்களின் கருவில் அமைந்துள்ள DNA கள்தான் (Deoxyribo Nucleic Acid) ஒரு மனிதனுடைய பரம்பரைக் குணவியல்புகளைத் தீர்மானிக்கின்றன. தந்தையிடமும் தாயிடமும் இருந்து கடத்தப்படும் இந்தப் பரம்பரை அலகுகள் அவர்களுடைய தோற்றம், குணவியல்புகளைக்கொண்டிருக்கும் என்பதை இன்றை நவீன விஞ்ஞானம் சொல்ல அதனை அன்றே அண்ணலார் அழகுர இவ்வாறு பகர்ந்தார்கள். ஆண் பெண்ணை மூடியதன் பின் ஆணின் நீர் முந்தினால்  தோற்றம் (ஆணாக) அவனை ஒத்து இருக்கும். பெண்ணின் நீர் முந்தினால் தோற்றம் (பெண்ணாக) அவளை ஒத்து இருக்கும்.” (புஹாரி)

4. தோல்:

எமது தோலின் நிறம் ஆளுக்கு ஆள், நாட்டுக்கு நாடு, பிரதேசத்துக்குப் பிரதேசம் வித்தியாசப்படுகின்றது. ஆபிரிக்கர்கள் பொதுவாக கருப்பு நிறத் தோலை உடையவர்கள், மேற்கு நாட்டு மக்கள் வெள்ளை நிறத் தோலைக்கொண்டிருக்கிறார்கள், தெற்காசியப் பகுதியில் வாழும் நாம் இவற்றுக்கு மத்தியிலான நிறத்தோலைக் கொண்டிருக்கின்றோம். இந்த நிற வேறுபாட்டில் ஒரு அற்புதத்தை அல்லாஹ் வைத்திருக்கின்றான். அதனைத் திருமறையும் இயம்புகின்றது.

மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் அகிலத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. [30:22]

இரத்தத்தில் உள்ள  Melaninகளின் எண்ணிக்கையே சரும நிற வேறுபாட்டைத் தீர்மாணிக்கின்றன. பொதுவாக சூரிய ஒளி அதிகமாகப் படும் பிரதேசங்களில் உள்ளவர்களது சருமம் கருப்பாக இருக்கும். சூரியனிலிருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்களிலிருந்து (UV Rays) உடம்பைப் பாதுகாப்பதோடு தோல் புற்றுநோய் (Skin Cancer) ஏற்படாமலும் இந்த Melanin பாதுகாக்கின்றது. சூரிய ஒளி அதிகம் படாத மேற்குப் பகுதி மக்களின் இரத்தத்தில் உள்ள Melaninஇன் அளவும் குறைவாக இருக்கும். இதனால் சிலபோது தோல் நோய்கள், தோல் புற்றுநோய்கள், தோல் சுருங்குதல் என்பன ஏற்பட வாய்ப்புள்ளது.

இதே தோலில்தான் வலியை உணரும் நரம்புகளும் காணப்படுகின்றன. இன்றைய நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகள் கூறுவதற்கு 1400 வருடங்களுக்கு முன்பு அல்குர்ஆன் பின்வருமாறு இதுபற்றிக் கூறியது தாய்லாந்தின் சியாங்க் மாய் பல்கலைக்கழகத்தின் உடல் இயங்கியல் துறையின் தலைவரான பேராசிரியர் தகாதத் தெஜாஸன் ஆவர்களை இஸ்லாத்தை ஏற்கும்படி செய்த்து. அந்த வசனம் இதுதான். யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.” (4:56)

5. எலும்பு:

எமது உடலில் எலும்புகளின் பங்கு மிக அதிகம். நாம் எழுந்து நிற்பதற்கும் உறுதியாக எமது உடலை அசைத்து வேலைகள் செய்வதற்கும் எலும்கள்தான் ஊன்றுகோளாக இருக்கின்றன. நாம் பிறகும்போது சுமார் 300 எழும்புகளுடன்தான் பிறக்கின்றோம். ஆனால் முழு வளர்ச்சியடையும்போது 206 எலும்புகளாக அவை  குறையும். காரணம் வளர்ச்சியடையும்போது சில எலும்புகள் ஒன்றோடொன்று இணைந்கின்றன. அவ்வாறு சுமார் 94 எலும்புகள் குறைகின்றன. இங்கு நபியவர்களது ஒரு பொன்மொழி ஞாபகம் வருகிறது.

மனிதனுடைய உடலில் 360 எலும்பு மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) உள்ளன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மூட்டுக்காகவும் தர்மம் செய்ய வேண்டும். அதற்குப் பகரமாக லுஹாத் தொழுகையின் இரண்டு ரக்அத்துக்கள் உங்களுக்குப் போதுமானதாகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்:21959)ஸ்கேனர் இயந்திரங்களோ நுண்னிய அளவுகோள் சாதனங்களோ இல்லாத காலத்தில் மனித உடலில் சரியாக 360 எலும்பு மூட்டுகள் இருக்கின்றன என்று நபியவர்கள் கூறிய செய்தி உண்மையானது என்பதை மிக அண்மையில்தான் பிரபல 'The American Board of Orthopedic Surgery' மருத்துவர்களின் www.mplsortho.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

6. இதயம்:

ஒருவரின் கை முஷ்டி அளவே உள்ள இதயம்  தசையாலான ஓர் உறுப்பாகும். இடுக்கு முடுக்குகளுக்குல் எல்லாம் பாய்ந்து செல்வதற்கான உந்துதலை இரத்தத்திற்கு இதயமே வழங்குகின்றது. அது நீர்ப் பம்பி போன்று செயற்படுகின்றது. சராசரி ஒரு மனிதனின் இதயத் துடிப்பானது நிமிடத்திற்கு 72 முறை நிகழும். ஆக ஒரு நாளைக்கு அவனது இதயம் 103,680 தடவைகள் சுருங்கி விரிகின்றது. சுபஹானல்லாஹ் ஒரு நாளைக்கே இத்தனை தடவையென்றால் தாயின் கருவறையில் 21ஆம் நாளில் இதயம் உருவாகியது முதல் இறக்கும் வரை ஓய்வே இன்றி அவனது இதயம் எத்தனை தடவைகள் சுருங்கி விரியும். இதற்கே இறைவனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.

இதயம் ஒரு முறை சுருங்கும்போது 8ml  இரத்தம் உடல் முழுதும் பாய்ச்சப்படுகின்றது. ஆக ஒரு நாளைக்கு சுமார் 8300l இரத்தம் உடல் முழுதும் பாய்ச்சப்படுகின்றது. சுபஹானல்லாஹ்! நாம் எமது வீடுகளில் உபயோகிக்கும் நீர்த்தாங்கிகூட 1000 அல்லது 2000 லீட்டர் கொள்ள்ளவு கொண்டதுதான். ஆனால் நமது இதயம் ஒரு நாளைக்கு மாத்திரம் 8300 லீட்டர் அளவு இரத்த்த்தை பாய்ச்சுகிறதென்றால் இது எவ்வளவு பெரிய அற்புதம்.

மனித உடலில் உள்ள எண்ணற்ற உறுப்புகள் யாவும்  ஒவ்வொருவிதமான அற்புதங்களை எம்முன் அள்ளிக் கொட்டிக்கொண்டிருக்கின்றன. அந்த ஒவ்வொரு உறுப்பையும் சீராக இயங்குமாறு செய்துவைத்துள்ள அல்லாஹ்வுக்கு மீண்டும் நன்றி கூறுவோம் அல்ஹம்துலில்லாஹ்!

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...