"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

10 March 2013

கார்ட்ரூன், எனிமேஷன் தொழில்நுட்பம்

கார்ட்ரூன் திரைப்படங்களின் வளர்ச்சியும் எனிமேஷன் தொழில்நுட்பத்தின் பயன்பாடும்.

இன்று எனிமேஷன் தொழில்நுட்பமானது அபரிமித வளர்ச்சிகண்டு வருகின்றது. இலங்கை இந்தியாபோன்ற நாடுகளில் திரைப்படங்களும் சீரியல்களும் காதல் லீலைகளுக்கும் டூயட் பாடல்களுக்கும் மத்தியில் சுற்றிச் சுழன்றுவர மேல்நாட்டு ஹொலிவூட் திரைப்படங்ளில் மல்டிமீடியா மற்றும் எனிமேஷன் கிராபிக்ஸ் தொழில்நுட்பங்கள் உச்ச அளவில் பயன்படுத்தப்படுகின்றன. மனிதனது கற்பனையும் இதனுடன் சேர்கின்றபோது விதவிதமான கருக்களைக்கொண்ட திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு அறைக்குள் இருந்துகொண்டு காடுகளில் மலைகளில் ஏறி இரங்குவதுபோன்றும் ஆற்றில் கடலில் மூழ்கி நீந்துவதுபோன்றும் ஆகாயத்தில் உயர உயரப் பறப்பதுபோன்றெல்லாம் இத்தொழில்நுட்பத்தின் உதவியுடன் பல்வேறு காட்சிகள் தயாரிக்கப்படுகின்றன.

விண்கற்கள் பூமியுடன் மோதி பூமி அழிவதுபோன்றும், கடல் பெருக்கெடுத்து நகர்ப்புறத்தினுள் நுழைவதுபோன்றும் சூராவளிக் காற்று சுற்றிச் சுழன்றடிப்பதுபோன்றும் எரிமலைகள் குழம்புகளைக் கக்கி வெடித்துச் சிதறுவதுபோன்றும், வேற்றுக் கிரகங்களுக்குச் சென்று கிரக வாசிகளுடன் போர்புரிவதுபோன்றும் கனவுக்குள் கணவுகாண்பது போன்றும் இன்று மனிதனின் அபூர்வமான கற்பனைகளோடும் இத்தொழில்நுட்பங்களின் உதவிகளோடும் வித்தியாச வித்தியாசமான திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வெளிவந்த வண்ணமிருக்கின்றன.

திரைப்படங்கள் எப்படிப்போனாலும் அதனையும் மிகைத்துவிடுமளவுக்கு இன்று முன்னேரிவரும் ஒரு தயாரிப்புதான் மெய்நிகர் எனிமேஷன் கார்ட்ரூன்கள். பொதுவாக சிறியோர் முதல் முதியோர்வரை அனைவராலுமே கார்ட்ரூன்கள் விரும்பிப் பார்க்கப்படுகின்றன. குறைந்த செலவில் கதாபாத்திரங்களின் செலவின்றி மேக்கப், படப்பிடிப்பு, இடச் செலவுகள் ஒன்றுமின்றி அனைத்தையும் க்ரெபிக்மயப்படுத்தி வெறும் கணினி வடிவமைப்பில் தயாரிக்கப்படும் இந்த கார்ட்ரூன்கள் பலத்த வருவாயை ஈட்டித்தருகின்றன. கார்ட்ரூன் திரைப்படங்களைப் பார்ப்பதில் பல்வேறு சாதக பாதகங்கள் இருக்கின்றன என்பது உண்மை. எடுத்த எடுப்பிலேயே அதன் சாதக பாதகங்கள் பற்றிக் கூறி தூக்கி எரிந்துவிடாமல் எனிமேஷன் திரைப்படங்களின் வரலாறு குறித்தும் அதில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற தொழில்நுட்பங்கள் குறித்தும் இங்கு விளக்குவது அவசியம் என்று நினைக்கின்றேன்.

பொதுவாக இந்த எனிமேஷன் துறையை இரண்டு பகுதிகளாக நோக்கலாம். ஒன்று ஏழவே காட்சிகள் இப்படித்தான் ஓடவேண்டும் எனத் திட்டமிட்டதற்கு இணங்க பதிவு செய்யப்பட்டவை. திரைப்படங்கள், கார்ட்ரூன்களை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். இரண்டாவது, பாவனையாளர்களுக்கு வசதியான முறையில் இயக்குவதற்கும் நகர்த்துவதற்கும் ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ள காட்சிகள். வீடியோ விளையாட்டுக்கள் மற்றும் கணினி விளையாட்டுக்கள் யாவும் இவ்வகையில் அடங்கும்.

எனிமேஷன் துறையின் வளர்ச்சி 19ம் நூற்றாண்டின் ஆரம்ப்ப் பகுதியிலிருந்து ஆரம்பிக்கின்றது. கணினி கண்டுபிடிக்கப்பட முன்னதாகவே டிஸ்னி வேர்ல்ட் நிறுவனம் முதலாவது எனிமேஷன் திரைப்படத்தை உலகுக்கு வழங்கி சாதனை படைத்த்து. 1937 ல் வெளிவந்த  ‘Snow white and the seven dwarfs’ என்ற  டிஸ்னி  ஆங்கிலக் கார்ட்ரூன் திரைப்படம்தான்  உலகின்  முதல்  னிமேஷன் திரைப்படமாகும். கணினித் தொழில்நுட்பம் வளர்ச்சியுறாத அக்காலத்தில் ஒரு எனிமேஷன் படத்தை எடுப்பது எவ்வளவு  கடினமான விடயம் என்பதை சிறு உதாரணம் மூலம் விளக்குகின்றேன்.

பொதுவாகத்  திரைப்படக் காட்சிகளில் நிமிடத்திற்கு குறைந்தது 24 காட்சிகள்   (24 frames/sec) ஆவது ஒளிபரப்பாக வேண்டும். அப்போதுதான் அவை உண்மையாகவே அசைவது போன்று தோற்றமளிக்கும். 20 காட்சிகளை விடக் குறைவான காட்சிள் இருந்தால் படம் ஒன்று விட்டு ஒன்று தாவுவது போல் சம்பந்தமில்லாது வெட்டி வெட்டி தோன்றுவது போல் காட்சிகள் ஒளிபரப்பாகும். எனவே ஒரு காட்சிக்கு மட்டும் பல ஃப்ரேம்கள் தயாரிக்கப்பட வேண்டி ஏற்படும்.

உதாரணமாக நாய் ஒன்று பாய்வது  போன்ற  ஒரு  காட்சியை எடுத்துக் கொண்டால், லீடர் எனிமேட்டர் என்பவர் அதன் ஆரம்ப நிலை, தாவிய நிலை  மற்றும் நிலத்தில்  கால்பதித்த  நிலை என முக்கியமான நிலைகளை ஃப்ரேம் எடுத்துக்கொள்வார். பின்னர் லீடர் எனிமேட்டர் வரைந்த  படங்களை துணை நிலை எனிமேட்டர்களிடம் (in betweeners)  ஒப்படைத்து மேலே கூறிய மூன்று நிலைகளுக்கும் இடையில் வரும் நிலைகளை படமாக வரைந்து அவை அனைத்தையும் ஒன்று சேர்த்து இறுதியில் கோர்வையாகப் பூரணப்படுத்துவர். இதுவரை ஒரு நாய் பாயும் காட்சி மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. இக்காட்சியை தயாரிக்க மட்டும் பல மணிநேரங்கள் பல கலைஞர்களின் உழைப்புகள் செலவாகும். ஆனால் திரையில் படமாக ஓடவிடும்போது ஒரு சில செக்கன்களில் நாய் பாய்ந்து குதிக்கும், தரையில் கால் பதிக்கும்.

இதுபோல் ஒரு மணிநேர எனிமேஷன் திரைப்படம் என்றால் அதனை முழுமையாக ஃப்ரேம் எடுத்து தயாரிப்பது என்பது எவ்வளவு கடினம் என்று பாருங்கள். இவ்வாறுதான் மேலே சொன்ன ‘Snow white and the seven dwarfs’ எனிமேஷன் படமும் பல நாள் உழைப்பில் பல கலைஞர்களது வியர்வையில் தயாரிக்கப்பட்டு வெற்றிமேல் வெற்றிபெற்றது. இன்று எனிமேஷன் துறையில் பல தொழில்நுட்ப முன்னேற்றங்கள்  வந்துவிட்டாலும் Snow white படத்தின் பாதிப்பு  இன்றும்  எனிமேஷன்  துறையில் இருக்கத்தான்  செய்கிறது.

இதே கால கட்டத்தில்தான்  மிக்கி மவுஸ், டாம் & ஜெர்ரி போன்ற  சிறுவர் கார்டூன்  திரைப்படங்களும் வெளிவரத் தொடங்கின.   நேர்த்தியான  இசை  கலந்து  சிறுவர்களை மிகவும் கவரும் வித்த்தில் இத்திரைப்படங்கள்  மூலம்  வால்ட் டிஸ்னி  என்ற  மேதை  உலகிற்கு  அறிமுகமானார். பிரபலம் பெற்ற மிக்கி கார்ட்ரூன் 1938 ல் வெளிவந்த்து.

அதன் பின் படிப்படியாக எனிமேஷன் திரைப்படத் துறையில் பல முன்னேற்றங்கள் ஏற்படத் துவங்கின. தொடர்ந்தும் 1942 ஆம் ஆண்டு வெளிவந்த ‘Bambi’ என்ற எனிமேஷன் திரைப்படத்திற்கு, வால்ட் டிஸ்னி 1500 ஓவியக் கலைஞர்களை உபயோகித்துள்ளார். 1980 களிலிருந்து இத்துறை சூடு பிடிக்கத் தொடங்கியது. பிக்ஸார் மற்றும் ட்ரீம்வர்க்ஸ் என்ற இரு பெரும் நிறுவனங்கள்  இத்துயில் இணைந்துகொண்டன. இத்துறையை முன்னேற்ற அரவ மிகவும் பாடுபடத் தொடங்கின. இன்றும் இந்நிறுவனங்கள் எனிமேஷன் துறையில் முன்னிலையில் நிற்கின்றன.

1982 ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னி முழுமையான உயிருள்ள எக்‌ஷன் (Live Action) மற்றும் கணினியால் உருவாக்கப்பட்ட காட்சிகளுடன் (computer generated images) ’Tron’ என்ற 17 மில்லியன் டாலர் செலவுள்ள எனிமேஷன் படத்தை எடுக்க முடிவு செய்தது. எனிமேஷனுக்கு மட்டும் 4 மில்லியன் டொலர் பட்ஜெட் போட்டார்கள். ஆறு அனிமேட்டர்கள் 9 மாதம் ஒரு கணினியுடன் போராடி இப்படத்தை உருவாக்கினார்கள். படம் வெளியானபோதிலும் அது படு தோல்வியடைந்தது. ஆனாலும் சலிக்கவில்லை.

1938 முதல் 1986 ஆம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட எனிமேஷன் திரைப்படங்கள் எல்லாம் இரு பரிமாண (2 Dimension)  திரைப்படங்களாகத்தான் இருந்தன. 1986 ஆம் ஆண்டுதான் முதன் முதலாக ‘Luxo Jr’ என்ற கார்ட்ரூன் குறுந் திரைப்படத்தை முப்பரிமாண (3 Dimension) த்தில் பிக்ஸார் நிருவனம் வெளியிட்டது. இத்தனைக்கும் 1986 களில் கணினிகளின் திறன் இன்றுள்ள மடிக்கணினிகளின் திறனில் நூற்றில் ஒரு பங்கு கூட இருக்கவில்லை. ஆனாலும் அற்புதமாக வடிவமைத்திருந்தனர்.

1988 ஆம் ஆண்டு வெளிவந்த Who framed Roger rabbit?என்ற திரைப்படம் எனிமேஷன் காட்சிகளுடன் முதல் முறையாக மனிதத் தோற்றத்தையும் வீடியோவாக இணைத்து வெளிவந்த்து. இது எனிமேஷன் துறையில் பெறும் சாதனையாக நோக்கப்பட்டது. அடுத்த வருடம் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த டிஸ்னியின் ‘Little Mermaid’ என்ற திரைப்படத்தில், முதன் முறையாக மென்பொருள் (Software) பயன்படுத்தப்பட்டு (digital ink and paint) காட்சிகள் உருவாக்கப்பட்டிருந்தன.

இக்காலப் பிரிவில்தான்  கனேடிய மென்பொருள் வல்லுனர்கள் மாயா என்ற முப்பரிமாண (இதன் ஆரம்ப பெயர் ஏலியஸ்) எனிமேஷன் மென்பொருள் ஒன்றை அறிமுகப்படுத்தினார்கள். இதுவரை சித்திரக் காட்சிகளுடன் இருந்த எனிமேஷன் உலகம் இதன் வருகையோடு மெய்நிகர் முப்பரிமானக் காட்சிகளைத் த்த்ரூபமாக எடுக்க ஆரம்பித்தன. இதனைப் பயன்படுத்தி பல விளம்பரதார்ர்கள் பல விதமான விளம்பரப் படங்களை உருவாக்கத் தொடங்கினார்கள். இந்த மென்பொருளைக் கொண்டுதான் ‘Jurassic Park’ என்ற ஸ்பீல்பர்க் திரைப்படம் உருவாக்கப்பட்டது. அதனை அடுத்து ’Terminator 2’ என்ற ஹாலிவுட் திரைப்படமும் மாயா மென்பொருள் பயன்படுத்தப்பட்டுதான் தயாரிக்கப்பட்டது. இப்படத்திற்கு விசேட Effects பயன்படுத்தப்பட்டிருந்த்தால் ஆஸ்கர் விருதும் இதற்கு வழங்கப்பட்டது.

வேர்ல்ட் டிஸ்னி 1994 ஆம் ஆண்டு  Lion King என்ற பிரபலமான எனிமேஷன்  திரைப்படத்தை வெளியிட்டது. கோடி கோடியாக சம்பாதித்துக் குவித்த்து. டிஸ்னியின் 32 வது முழு நேர எனிமேஷன்  திரைப்படம்  இதுவாகும்.  முப்பரிமாணத் திரைப்படங்களிலேயே அதிகமான வருவாயை ஈட்டியது இத்திரைப்படமாகும். சுமார் 800 மில்லியன்  டொலர்களை ஈட்டிய லயன் கிங்படத்தில் வரும் சிம்பாபாத்திரம் சிறுவர்களிடம் மிகவும் பிரபலம்.  எல்டன் ஜோன் பாடிய பாடல்  மற்றும்  ஹான்ஸ்  ஜிம்மரின்  இசை  இரண்டும்  இப்படத்தை எனிமேஷன்  பட வரலாற்றில்  மிகவும்  உயர்த்தி  பதிவு செய்ய்ய்ச்செய்துள்ளது. இப்படத்தைப்  பார்த்துவிட்டு நடிகர் நாசர்  வியந்து  இவ்வாறு கூறியுள்ளார்.  “கணினியில் கோடுகள் வரைந்து பல கோடி மக்களைக் கவர்வது சாதாரண விஷயமல்ல. எனது பார்வையில், இன்னும் 30 ஆண்டுகளில் நடிப்பு என்ற தொழிலே இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறதுஎன்றார்.  1995 ஆம் ஆண்டு பிக்ஸார் நிறுவனம் மீண்டும் முப்பரிமாண வடிவில் Toy Storyஎன்ற எனிமேஷன் திரைப்படத்தை வெளியிட்டது.  இதற்காக ஆஸ்கர் குழு 1996 ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனை விருது வழங்கியது. இதனை வடிவமைத்த ஜோன் எனிமேஷன் திரைபடங்களுக்குத் தன் உழைப்பு மற்றும் திறமையால் ஒரு தனி அங்கீகாரம் பெற்றுத் தந்தார்.
1998 ஆம் ஆண்டு முதன் முறையாக முழுமையாக்க் கணினியை மாத்திரம் பயன்படுத்தி  ட்ரீம்வர்க்ஸ் நிறுவனம் Antzஎன்ற முழு நேரத் கார்ட்ரூன் திரைப்படத்தை வெளியிட்டது.  இதற்குப் போட்டியாக டிஸ்னி, ‘A Bug’s Lifeஎன்ற எனிமேஷன் திரைப்படத்தை வெளியிட்டது. ’Antz’ மற்றும் ‘Bug’s Life’ இரண்டுமே பூச்சிகளை பற்றிய கதைகள். ‘Antz’ திரைப்படம் சிறந்த பாத்திரப்படைப்புக்காகவும்  வுட் எலனின் பின்னணிக் குரலுக்காகவும் பாராட்டப்பட்டது. ‘Bug’s Life’ மிக அருமையான தொழில்நுட்பத்திற்காகப் பாராட்டப்பட்டது. மனிதர்கள் இல்லாத படங்களை ஏன் இரு பெரும் ஸ்டூடியோக்களும் தேர்ந்தெடுத்தன? மனித முடி மற்றும் உடைகளை அசைவுடன் அழகாகக் காட்டும் திறன் அன்றைய எனிமேஷன் நுட்பத்தில் மிகக் கடினமாக இருந்தது என்பதனால்தான்.

1999 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட இரண்டு பெரிய முப்பரிமாண திரைப்படங்களும் மிக முக்கியமானவை. Toy Story 2’, மற்றும் Ice Age 1’. இரண்டு திரைப்படங்களும் மனிதர்களை முப்பரிமாணத்தில் அச்சொட்டாகக் காட்டின. மனிதத்தோல் நிறங்கள், தலை முடி மற்றும் உடைகள் என்பவற்றை பொம்மைகள் போல தோற்றமளிக்காமல் வெகு யதார்த்தமாக்க் காட்சிப்படுத்தின.

ஷ்ரெக்” (2001) மற்றும் ஐஸ் ஏஜ்திரைப்படங்கள், பின்னணி குரலுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தன. ஹொலிவுட் பிரபலங்களான எட்டி மர்பி, மைக் மையர்ஸ் போன்றவர்களின் பின்னணிக் குரல் பெரிதும் பாராட்டப்பட்டது. மிக நேர்த்தியாக கதை சொல்லப்பட்டதும் இப்படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாகும். கதை மற்றும் வசனம் எனிமேஷன் திரைபடங்களில் மிகச் சரியாக இருக்க வேண்டும். கணினியில் உருவாக்கப்பட்ட பாத்திரங்களுக்கு பின்னணிக் குரல் கொடுப்பது பின்னணிக் குரல் கொடுப்பவர்களுக்கும் பெரும் சவாலாக அமைந்தது. எனிமேஷன் திரைப்படங்களின் முதல் ஆஸ்கார் விருது 2001-ல் ட்ரீம்வர்க்ஸ் நிறுவனத்திற்கு சென்றது. ஷ்ரேக்திரைப்படம் மிக நேர்த்தியாக ரசிகர்களைக் கவரக் காரணாம் அதில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் வெளிப்படையாக யாருக்கும் தெரியாதிருந்த்தனால்தான். கதாபாத்திரங்கள் உணர்ச்சிகளை நிஜ மனிதர்களைப் போல முக பாவங்களில் காட்டின. ஷ்ரெக்கின் முக பாவங்களுக்காக மட்டும் 500 முக பாவங்கள் தேவைப்பட்டன. இதற்குப் பின் வந்த திரைப்படங்களின் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பிரம்மிக்கத்தக்கவை. கனிணிகளின் பயங்கர முன்னேற்றத்தை ஈடு செய்தது எனிமேஷன் துறையின் முன்னேற்றம். 2002 ல் ‘Ice Age 2’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. 2004 ஆம் ஆண்டில் வெளிவந்த ’Shrek 2’ மீண்டும் வெற்றி பெற்றது.
 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ‘Finding Nemo’ மீன்களை பற்றிய ஒரு அழகான கதை. 864 மில்லியன் டாலர்கள் ஈட்டிய இப்படம் இதுவரை எனிமேஷன் கார்ட்ரூ திரைபடங்கள் ஈட்டிய தொகைகளில் முதலிடத்தில் நிற்கின்றது. பிக்ஸார் மற்றும் டிஸ்னி என்பன் இணைந்து வெளியிட்ட இப்படத்தின் காட்சியமைப்புகள் அற்புதமானவை. தண்ணீருக்குள் முக்கால்வாசி படம் காட்டப்பட வேண்டும். மீன்கள் ஒவ்வொன்றும் வித்தியாசப்படுத்திக் காட்ட வேண்டும். கடலடியில் இருக்கும் தாவரங்கள் மற்றும் நீர்நிலையின் ஆழத்தைப் பொறுத்து ஒளியைக் குறைத்து அல்லது கூட்டி, தத்ரூபமாய்க் காட்டுவது இமாலய சாதனை. பொதுவாக, எனிமேஷன் உலகில் தண்ணீர் கொண்ட காட்சிகள் அமைப்பது மிகக் கடினம். தண்ணீரில் ஒளி பிரதிபலிப்பு எப்படி இருந்தால் மனிதர்கள் அக்காட்சியை உண்மையானதாக ஒப்புக் கொள்வார்கள் என்று பலர் உயர் தொழில்நுட்ப பல்கலைகழகங்களில் தீவிரமான ஆராய்ச்சிகள் செய்துள்ளனர். இந்த சாதனைக்காக இப்படம் ஆஸ்கர் விருது வென்றது.
2004 ஆம் ஆண்டு மீண்டும் பிக்ஸாரின் ‘Incredibles’ எனிமேஷன் சாதனை படைத்தது. குடும்ப சூப்பர் ஹீரோ முப்பரிமான எனிமேஷன் திரைப்படம் வெற்றி பெற்றது. கண்ணாடிகள் உடையும் காட்சிகளை எனிமேஷனில் காட்டுவது மிகவும் கடினமானது. ஆனாலும் சிறப்பாக்க எடுத்துக்காட்டி சாதித்த்து.
2007 ல் வெளிவந்த ‘Ratatouille’ என்ற பிக்ஸார் எனிமேஷன் திரைப்படம் எலிகள், மனிதர்கள் என்று மிக அழகாக கதை சொல்லி ஆஸ்கர் பரிசு வென்றது. இதில் காட்சியமைப்புகள் ஒரு உணவுவிடுதி சமையலறையில் கற்பனை வளத்துடன் அமைக்கப்பட்டன. மனித ஆசைகள், பகை, ஏமாற்றம், சோகம் என்று எதையும் விட்டு வைக்கவில்லை. அதே வருடம் டிரீம்வேர்க்ஸின் Bee Movie என்பன அற்புதமான படைப்புகள்.
2008 ல் ‘Wall-E’ என்ற பிக்ஸார் திரைப்படம் மீண்டும் ஆஸ்கர் வென்றது. மிக அருமையான காட்ரூன் திரைப்படம். பழைய ரக ரோபோவென்றுக்கும் புதிய ரக ரோபா ஒன்றும் இடையில் ஏற்படும் நட்பை உணர்வு பூர்வமாக எடுத்துக்காட்டியுள்ளது.
2009 ல் எனிமேஷன் துறையில் இன்னும் சில முன்னேற்றங்கள் நிகழ்ந்தன. ஆரம்பத்தில் வந்த இரு பரிமாண எனிமேஷன் கார்ரூன்களை மீண்டும் முப்பரிமாணத்தில் புதிதாக எடுத்து தற்போது வெளியிடுகின்றனர். உதாரணத்திற்கு, ” The Princess and the Frog” என்ற பழைய டிஸ்னி எனிமேஷன் திரைப்படத்தை இன்றைய தொழில்நுட்பத்தோடு அழகாக  வெளியிட்டார்கள். முப்பரிமாண காட்சியமைப்புகள் முப்பரிமாண எனிமேஷனுடன் சேர்த்து, காட்சிகள் உயிர்பெற்று ரசிகர்களை கவர்ந்ததன. உதாரணம், ‘Up’ என்ற பிக்ஸார் திரைப்படம். 2009 ஆம் ஆண்டு சிறந்த எனிமேஷன் மற்றும் பின்னணி இசைக்கு ஆஸ்கர் வென்றது. அதன் வரிசையில் 2010 இல் வெளியான How to Train Your Dragon கார்ட்ரூன் திரைப்படம் மற்றும் Despicable Me, 2011 இல் வெளியான Rio, கடந்த வருடம் இறுதிப்பகுதியில் வெளியான Rise of the Guardians என்பன அற்புதமான கதைகளும், கதாபாத்திரங்களும் கற்பனைகளும் கணினித் தொழில்நுட்பங்களும் சேர்ந்து உருவாக்கப்பட்டுள்ளன.
ஸ்டீரியோ க்ராஃபிக் திரைப்படங்களில் மனிதர்களுக்கும் அனிமேஷனுக்கும் சம பங்கு வழங்கப்படுகின்றன. எங்கு வழக்கமான படப்பிடிப்பு முடிகிறது, எங்கு எனிமேஷன் ஆரம்பிக்கிறது என்று சொல்வது கடினம். இதற்கு சிறந்த உதாரணம்தான்அவதார்திரைப்படம். உலகத்திரைப்பட சரித்திரத்தில் அதிகம் வருமானம் ஈட்டிய திரைப்படம் இதுவே.

எனிமேஷன் கார்ரூன் திரைப்பட வரலாற்றில் அண்மைக்காலமாக இன்னும் பாரியதொரு எழுச்சி ஏற்பட்டுள்ளது. ஆரம்பங்களில் முப்பரிமாண அமைப்பில்தான் கார்ட்ரூன்கள் வடிவமைக்கப்பட்டன. பின்னர் அவற்றைப் பார்ப்பதற்கு திரையரங்குகளில் முப்பரிமாண மூக்குக் கண்காடிகள் தயாரிக்கப்பட்டன. அதன் பின்னர் திரையரங்குகளின் திரைகளே முப்பரிமான அமைப்பில் தயாரிக்கப்பட்டன. தற்போது முப்பரிமாண அமைப்புகள் எமது வீட்டுத் தொலைக்காட்சிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. அவை தொலைக்காட்சித் திரைகளும் தியேட்ட்டர் திரைகளும் முப்பரிமாண அமைப்பில் வடிவமைக்கப்பட்டன. முப்பரிமாண அமைப்பில் வந்த திரைகளைத்தாண்டி தற்போது தொழில்நுட்பத்திலான திரைகளையுடைய தொலைக்காட்சிகளும் கணினித் திரைகளும் வந்துள்ளன.

ஆக இன்றைய எனிமேஷன் துறையிலும் திரைப்படத் துறையிலும் பல் பரிமாண தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அடைந்துவருவது பிரம்மிக்கத்தக்கது. இத்துறைகளில் கலைமானிப் படிப்பு முதுமானிக் கற்கை மற்றும் கலாநிதிப் பட்டம்வரை கற்பதற்கான வாய்ப்புகள் இன்றுள்ளன. இலங்கையிலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...