"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

17 March 2013

சாவதேச நீர் தினம் - மார்ச் 22

இந்த நாடு நமக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு அருவிகளிலும், ஆறுகளிலும், ஓடும் ஒளிர்விடும் நீர் வெறுமனே நீர் அன்று. இது எம் முன்னோரின் இரத்தம், அவை புனிதமானது என்பதை நினைவு கூர வேண்டும். எமது பிள்ளைகளுக்கும் அவற்றின் புனிதத் தன்மையையிட்டு அறிவுறுத்த வேண்டும்.” (செவ்விந்தியத் தலைவர் Siyattle)

ஐரோப்பியர்கள் படையெடுத்துவந்து அமெரிக்காவின் காடுகளையும் நீர் நிலைகளையும் அருவிகளையும் ஆறுகளையும் துவம்சம் செய்தபோது செவ்விந்தியர்களின் தலைவர் Siyattle படைத்தளபதிக்கு எழுதிய கடித்த்தில் நீரின் பெறுமதியை அழக்காக் குறித்துக்காட்டியுள்ளார்.

தொழில் புரட்சியின் பின் உலக நாடுகள் நீரை மாசுபடுத்தும் பணிகளில் ஈடுபட்டதைத் தடுப்பதற்காகவும் நீரின் பெறுமதியை உணர்ந்த்தன் விளைவாகவும் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற சுற்றாடல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஐக்கிய நாடுகள் மகாநாட்டில் (United Nations Conference on Environment and Development (UNCED) 21ம் நூற்றாண்டுக்கா முன்வைக்கப்பட்ட செயல்திட்டத்தின்படி மார்ச் 22 ஆம் திகதியை உலக நீர் தினமாக (World water Day)) ஐ.நா.பொதுச் சபை பிரகடனம் செய்தது.

அதனைத் தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு முதல் கடந்த 20 வருடங்களாக ஒவ்வொரு ஆண்டினதும் மார்ச் 22ம் திகதியில் இத்தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. தாராளமாக்க் கிடைக்கின்ற நீர்வளத்தை மனிதன் தன் தேவைக்குத் திட்டமிட்டுப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துவதற்காகவே இத்தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

சர்வதேச நீர்வள தினம் அறிமுகப்படுத்தப்படதற்கு குறிப்பாக ஒரு நோக்கம் உண்டு. நீர்வளத்தின் அனைத்துத் திட்டங்களையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி நீர்வளப் பாதுகாப்பை வலுப்படுத்தி நாள்தோறும் அதிகரித்துவரும் நீர் பற்றாக் குறையைப் போக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகத் தீர்மானிக்கப்பட்டது. என்றாலும் 2003 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி 2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டுவரைக்குமான பத்தாண்டு திட்டமாக உயிர் வாழ்வதற்கு நீர்என்ற அனைத்துலக செயற்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது 2005ம் ஆண்டு முதல் உத்தியோகபூர்வமாக அமுலுக்குவந்த்து.

நீர்வளத்தின் முக்கியத்துவம் எல்லாக் காலங்களிலும் உணரப்பட்டு வந்துள்ளது. உலக வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கும்போது புகழ்பெற்ற உலக நாகரிகங்கள் எல்லாம் நீர் நிலைகளை அண்டிய பிரதேசங்கிளிலிருந்தே தோன்றியுள்ளன. நைல் நதி, சிந்து நதி, யூப்பிரடிஸ், டைக்கிறீஸ் போன்றன உலக நாகரிகங்களின் பிறப்பிடங்கள் எனப்படுகின்றன.  எனவே இத்தகைய நாகரிக எழுச்சியின் மூலமே நீர் என்பது புலனாகின்றது.

நீரின் அவசியத்தை இன்னும் விளங்குவதாயின் உயிருள்ள ஒவ்வொன்றினதும் ஆரம்பமே  நீரிலிருந்துதான் என்பதாக திருமறை கூறுகின்றது.  ”உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? [21:30] என்று கேட்கின்றான்.
  
பூமியின் நீர் வளம்
எமது பூமிப்பந்தின் மேற்பரப்பு 71 வீத நீரால் நிரம்ப்ப்பட்டுள்ளது. மீதமுள்ள 29 வீதம்தான் நிலம். நீரின் பயன்பாடு அனைத்து ஜீவராசிகளுக்கும் மிக அவசியம் எனக் கருதித்தான் இறைவன் இத்தகைய அதி கூடிய வீதாசாரத்தில் நீரை எமக்கு அளித்துள்ளான் போலும். எனினும் உலக சனத்தொகையின் ஒவ்வொரு நான்கு பேரிலும் மூவர் அருந்துவதற்கு தூய நீரின்றி அவதிப்படுகின்றனர். எமது நாட்டின் 25 மாவட்டங்களுள் 14 மாவட்டங்களில் வாழும் மொத்த சனத்தொகையின் 33 சதவீதமானவர்களுக்கு தூய குடிநீர் கிடைப்பதில்லை. உலக நீர்ப்பரப்பில் 97.5 சதவீதம் உப்புநீராகவும், 2.5 சதவீதம் நன்னீராகவும் உள்ளது. நன்னீர்ப் பரப்பிலும் 69சதவீதம் பனிக்கட்டியால் மூடப்பட்ட பிரதேசமாகும். 30 வீதம் நிலக்கீழ் நீராகவும் 3 வீதம் நன்னீர் ஏரிகளும், நதிகளும் எஞ்சிய பகுதி ஈரழிப்பு தரைப் பிரதேசங்களுமாகும்.  ஆற்று நீர் மற்றும் நிலத்தடி நீர் என்பன பூமியின் மொத்த நீர் அளவில் 0.26 வீதம்தான். மொத்தமாக்கப் பார்க்கும்போது பூமியில் உள்ள நன்னீர் முழுவதிலும் வெறுமனே 0.007 வீதம் மட்டுமே பயன்படுத்த முடியுமான நீராக உள்ளது.

நீரின் பயன்பாடு
இன்று பூமியில் 700 கோடிப் பேரையும் தாண்டி சனத்தொகை அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. அத்தோடு கோடிக்கணக்கான ஜீவராசிகள் இப்பூமியில் வாழ்கின்றன. இன்னும் எண்ணிலடங்காத தாவர வகைகளும் காணப்படுகின்றன. இவை அனைத்துமே இந்த அற்புத அருளான நீரைப் பயன்படுத்தியே வாழ்கின்றன. நீர் இல்லாவிடின் இப்புவியில் உயிர் வாழ்க்கையே சாத்தியமற்றுப் போகும்பூமியைத் தவிர வேறு எந்தக் கோளிலும் நீரில்லை என்பதால்தான் அங்கு உயிரினங்களும் இல்லை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். உலகளாவிய ரீதியில் பார்க்கும்போது நீரை அதிகமாகப் பயன்படுத்தும் துறை விவசாயமாகும். 85 சதவீதம் விவசாயத்துக்காக நீர் பயன்படுத்தப்படுகின்றது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கைத்தொழில்த்துறை 10 சதவீதத்தைப் பயன்படுத்துகின்றது. எஞ்சிய 5 சதவீதமே வீட்டுப் பாவனைக்குரியது.

தூய நீர் இன்மையால் ஏற்படும் பேரழிவு
உலகில் மூவரில் ஒருவருக்குப் பாதுகாப்பான குடிநீர் உறுதி செய்யப்படவில்லை. பாதுகாப்பான நீரின்றி சர்வதேச ரீதியில் 8 செக்கன்களுக்கு ஒரு குழந்தை என்ற விகிதத்தில் மரணம் நிகழ்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு வருடமும் உலகில் ஒரு கோடியே 50 இலட்சம் குழந்தைகள் இறப்பதற்கு  பாதுகாப்பற்ற குடிநீர் முதல் காரணமாக அமைகிறது. நீர் தொடர்பான நோய்களினால் இறப்பவர்களின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்துக் கொண்டே போகிறது.

நீர்வளத்தைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடு
வருடாந்தம் சனத்தொகை 90 மில்லியனால் அதிகரித்துச் செல்கின்றது. அந்தளவு நீரைப் பயன்படுத்தும் மக்களும் அதிகரிக்கின்றனர். நீர் தீர்ந்துபோன ஒரு வளம் என்பது பற்றிய உலகளாவிய விழிப்புணர்வு, றியோடி ஜெனிரோவில் நடந்த புவி உச்சி மகாநாட்டிலும் 1992ல் நீரும் சுற்றாடலும் பற்றிய டப்ளின் மகாநாட்டிலும் பிரதிபலித்தன.

நீர்ப்பிரச்சினைகளின் பாரதூரமான விளைவுகள் குறித்து ஆராயப்பட்டதற்கிணங்க  விதப்புரைகள் 1977ல் ஆஜண்டீனாவில் நடந்த ஐ.நா.வின் நீர்வள மகாநாட்டில் உருவாக்கப்பட்டன. அதன்பின் 1992ல் நடந்த ரியோ மகாநாடு, 1994ல் ரியோவில் நடந்த சுற்றாடலும் அபிவிருத்தியும் மகாநாடு என்பன உலகில் நன்னீர் வளங்களை மதிப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்தின. 1997ல் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபை இதனை நடைமுறைப்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கியது.ரியோ - டப்ளின் மகாநாட்டுக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்பட்ட நீர்வள முகாமைத்துவம் சம்பந்தமாக சர்வதேச நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்பட்டன. வீட்டுப் பாவணையாளர் சங்கங்களும், கமக்காரர் அமைப்புக்களும் முறையே வீட்டுத்தேவை, விவசாயத்தேவை என்பனவற்றுக்காக நீரை முகாமைத்துவம் செய்வதற்கு ஊக்குவிக்கப்பட்டார்கள்.

நீர்ப் பற்றாக்குறையும் புவி வெப்பமயமாதலும் மனித குலம் இன்று எதிர்கொள்ள ஆரம்பித்திருக்கும் பேராபத்துக்களாகும். இவ்விரு பேராபத்துக்களையும் சமாளிப்பதற்கு உலக நாடுகள் தங்களை எந்தளவுக்கு தயார்படுத்தியிருக்கின்றன என்பதை நோக்கும் போது மிக்க் கவலைக்கிடமான நிலையே உள்ளது.

இலங்கையில் வழமையாக உலக நீர் தினத்தில் நீர் முகாமைத்துவத்துடன் தொடர்புடைய அமைச்சரின் செய்தியும் பத்திரிகைகளில் விசேட பக்கங்களும் கட்டுரைகளும் வெளியாகுவதைத் தவிர, மக்கள் மத்தியில் பெரியளவில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய முறையான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுவது மிக மிக்க் குறைவு என்றுதான் கூறவேண்டும்.

இலங்கையின் தற்போதைய நீர் நிலைமை பற்றி விவசாயத்துறை நிபுணர் கலாநிதி சி.ஆர். பானப்பொக்கே இவ்வாறு கூறுகின்றார் நமது நீர்ப்பாவனை பற்றி நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீர்ப்பாவனை குறித்து நமது பழக்கவழக்கங்களும். பண்பாடும் மாறவேண்டும். இன்றேல். அடுத்த நூற்றாண்டில் நாம் பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்கவேண்டி ஏற்படும் என்று கூறியுள்ளமை சிந்திக்கத்தது. தற்போதே ஒரு குடம் நீர் வேண்டி மைல்கணக்கில் நடக்கும் மக்களும் இங்கு வாழ்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

தற்போது இலங்கையில் நீர் முகாமைத்துவ நடவடிக்கைகள் ஆசிய அபிவிருத்தி வங்கி, USAID தாபனம் ஆகியவ்றின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படுகின்றன. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை குடிநீரை முகாவைத்துவம் செய்வதற்கும் விநியோகிப்பதற்குமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

உலக நீர் தினம் நினைவு கூறப்பட்டால் மட்டும் போதாது. அதன் தாற்பரியம் பேணப்படல் வேண்டும். மனித வாழ்வோடும் சடங்கு சம்பிரதாயங்களோடும் பின்னிப் பிணைந்தது தண்ணீரின் வரலாறு. உலக முன்னேற்றத்துக்கேற்ப, சனத்தொகைப் பெருக்கத்துக்கேற்ப, தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப நீரின் தேவை நாளும் பொழுதும் அதிகரித்து வருகிறது. பாடசாலைகளிலும் பள்ளிவாயில்களிலும் நீர் பாவனை தொடர்பான செய்பாடுகள், சொற்பொளிவுகள் நடாத்தி விழிப்புணர்வு ஊட்டப்படல் வேண்டும். கிரமாங்கள் ஊடாக பல்வேறு செயற்றிட்டங்களை மேற்கொள்ளல் வேண்டும். எமது வீடுகளிலிருந்தே நீரைச் சேமிக்கவும் சிக்கணமாகப் பயன்படுத்தவும் பாதுகாக்கவும் ஆயத்தமாக வேண்டும்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

1 comments:

fathima said...

payanulla thagavalgal.....masha allah

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...