"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

30 September 2014

பைத்தியம் பிடிக்கவைக்கும் பஸ்ஸில் போடும் பாடல்கள்

அன்று மன்னாரிலிருந்து வீடுவருவதற்காக ஒரு அரைச்சொகுசு (Semi Luxury) பஸ் வண்டியில் ஏறினேன். ஏறியதும் ஏன்தான் ஏறினோமோ என்று எண்ணும் விதமாக இருந்தது அதில் ஒலித்துக்கொண்டிருந்த பாடல்கள்.

தற்போது எந்த பஸ்ஸில் ஏறினாலும் பஸ் சாரதியும், கண்டக்டர்களும் போடுவது ப்ஃளேஷ் பேக், ஒக்ஸிஜன், சீதுவ சகுரா, ஸன்பளவர் போன்ற இசைக் குழுக்களின் இசைக் கச்சேரிகளைத்தான். ஒரே பாடலையே திருப்பித் திருப்பிப் போட்டு அழுத்து, வாந்திபோகும் அளவுக்கு ஒவ்வொரு பயணத்திலும் நான் அவஸ்த்தைப் படுகின்றேன். எதிர்த்துப் பேசவும் முடியாது. மனிதாபிமானமற்ற மனிதர்கள்.

பொதுவாக ஒரு பாடலுக்கு இத்துனை இசைக் கருவிகளைத்தான் பயன்படுத்துவது என்று ஒரு முறை இருக்கின்றது. ஆனால் இந்த சிங்களப் பாடல்களில் என்னென்ன இசைக் கருவிகள் இருக்கின்றனவோ அத்தனையையும் ஒரே நேரத்தில் இசைக்கச் செய்து பைத்தியம் பிடிக்கச் செய்கிறார்கள். அதில் பாடகர்களும் ரசிகர்களும் போடும் கூச்சல் வேறு! சகிக்கவில்லை.ஆண்கள் பெண்கள் என்ற வித்தியாசமின்றி அனைவரும் மேடையிலும் திடலிலும் போடும் கூத்துகளும், கும்மாலங்களும். ஒரு இரவில் எத்தனையோ அணாச்சாரங்கள் நடந்து முடிகின்றன. போதாதற்கு குமரிப் பெண்களை மேடையில் ஏற்றி ஆட வைப்பதும் அதனை மற்றவ்ர்கள் கிண்டல் செய்வதும் தாராளம். இசைக்கச்சேரி நடந்து முடிந்த இடத்தை மறுநாள் சென்று பார்த்தால் நிறைய ஆணுரைகளைக் கண்டுகொள்ளலாம் என்று ஒருவர் சொன்ன செய்தி ஞாபகத்திற்கு வருகிறது. இத்துனை அணாச்சாரங்களையும் பக்திப் பரவசத்தோடு குத்துவிளக்கேற்றித்தான் ஆரம்பித்துவைப்பார்கள்.அன்றும் அவ்வாறுதான் மன்னாரிலிருந்து மெதவச்சி வரைக்கும் சுமார் 2 மணி நேரப் பயணம். எங்கடா மெதவச்சி வரும்னு இருந்தது. அதன் டும் டும் சப்தத்திற்கு தலைவலி வேறு வந்துவிட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் வாந்தி வரும்போலும் இருந்தது. பஸ் கண்டக்கடரை அழைத்து மெதுவாக இதன் சப்தத்தைக் கொஞ்சம் குறைங்க அய்யா, தலைவலியாக இருக்கிறது என்று சொன்னேன். சரி குறைக்கிறேன் என்று கூறிவிட்டு சென்றவன்தான் குறைக்கவும் இல்லை, அதன் பிறகு என் முகத்தைப் பார்க்கவும் இல்லை.
ஒருவாராக மதவச்சி வந்து இறங்கி மீண்டும் பஸ்யாலை வருவதற்கு அடுத்த பஸ்ஸை எதிர்பார்த்திருந்தேன். அதுவும் வந்தது. நிம்மதிப் பெருமூச்சுடன் ஏறி ஒரு சீட்டில் அமர்ந்து வண்டி புறப்பட ஆரம்பித்த்துதான் தாமதம் தடால், புடால் என்று அந்த பஸ்ஸிலும் போட்டார்கள் அதே பிளேஷ்பேக் இசைக் கச்சேரிப் பாடல்களை. என்ன செய்ய! இதற்கெல்லாம் விடிவு கிடைப்பது மறுமை நாளில்தான் என்று மனதுக்குள்ளால் முனங்கிக்கொண்டு வீடுவந்துசேர்ந்தேன். வீடு வந்து ஒரு நாள் பூராகவும் அந்தத் தலைவலி விடவே இல்லை. 

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...