வேலை நிமித்தம்
அடிக்கடி நாட்டின் பல பகுதிகளுக்கும் பஸ்ஸில் சென்று வருவது வழக்கம். போக்குவரத்துத் துறையின் வேண்டுகோளுக்கு
இணங்க தற்போது அனேகமான பஸ் வண்டிகளில் தொலைக்காட்சி பொறுத்தப்பட்டிருக்கின்றது. பயணங்களின் போது அவற்றில் போடப்படும் பாடல்கள், திரைப்படங்கள் என்பவற்றை
விரும்பியோ, வெறுத்தோ பார்க்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. நான் தொடர்ந்தும் அவதானித்த என்னை ஆழமாக யோசிக்க வைத்த ஒரு விடயம்தான் அண்மைக்காலமாக இலங்கையில் தயாரிக்கப்படும் சிங்களப் பாடல்கள் சமூகத்தில் ஒரு புதிய அசிங்கத்தை உருவாக்க நினைப்பதுபோல் இருக்கின்றது.
இரண்டு
பேர் தீவிரமாகக் காதலிக்கின்றார்கள், இடையில் மூன்றாவது ஒரு ஆண் குறுக்கிட்டு அந்தப் பெண் மூன்றாவது ஆண்மீது ஆசைகொண்டு முதல் காதலனை ஏமாற்றிவிட்டு அவன் கூட ஓடிப்போகிறாள். அவனுடன் தொலைபேசியில் உரையாடுகின்றாள், பீச், பார்க் என்று
சுற்றுகின்றாள். முதல் காதலனோ இங்கு அவள் நினைவில் வாடுகின்றான். தற்கொலைக்கு முயற்சிக்கின்றான்.
சில பாடல்களில் இரண்டாவது காதலானால் ஏமாற்றப்பட்டதும் மீண்டும் முதல் காதலனைத் தேடி வருகிறாள் சிலபோது அவன் ஏற்றுக்கொள்கிறான் இல்லாவிட்டால் அவனும் வேறு ஒரு பெண்ணைக் காதலிக்க ஆரம்பித்திருக்கின்றான். இவ்வாறு அதிகமான புதிய பாடல்களில் பெண்களை இழிவாக்கும் விதத்திலும், சமூகத்தில் புதியதொரு அணாச்சரத்தைப் பரப்பும் விதத்திலும் இப்பாடல்கள் அமைந்திருக்கின்றன.
இதன்
பிண்ணனி என்ன? ஏன் அனைத்து
பாடலாசிரியர்களும் இவ்வாறான கருப்பொருளைத் தொடர்ந்தும் பின்பற்றுகின்றார்கள் என்பதுதான் புரியாத புதிராய் உள்ளது. இந்த வக்கிரகங்களைப்
பார்த்து வளரும் இளம் சமூகம் இதுதான் உண்மை என்ற கருதுகோளில் தமது வாழ்வை அமைத்துக்கொள்ளத் தலைப்படுகின்றனர். சில இளம் காதலர்களை பஸ்வண்டிகளில் அதிகம் கண்டிருக்கின்றேன். ஒன்று ஆண் கவலையில் ஆழ்ந்து, பெண்ணிடம் சண்டை
பிடிப்பதும் பின்னர் அவள் அவனை சமாதானப்படுத்த கெஞ்சுவதும் இல்லாவிட்டால் இதன் மறுதலையாக நடப்பதும் ஏதோ உண்மை வாழ்வே சினிமாப் பாணியில் இன்று ஓடிக்கொண்டிருக்கின்றது. குறிப்பாக சிங்கள சமூகத்தின் நிலை இதுதான். இதுபற்றி பெரிய
மத குருக்கள் அலட்டிக்கொள்ளமாட்டார்கள்…
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...