"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

07 January 2015

சூழல் சுத்திகரிப்பாளன் பன்றி

இதுவும் அல்லாஹ்வின் ஒரு படைப்பு. வல்லவன் அல்லாஹ் இப்பிரபஞ்சப் படைப்புகள் அனைத்தையும் ஏதோ ஒரு விதத்தில் மனிதனுக்குப் பயணளிக்கும் வகையிலேயே படைத்துள்ளான். அந்தவகயில் அல்லாஹ்வின் ஒரு படைப்புதான் பன்றி. இது அசுத்தமான, உண்ண ஹராமாக்கப்பட்ட, மலக்குகள் கூட இதன் வடிவில் தோன்றாத ஒரு விலங்காக இருந்தாலும் அதுவும் அல்லாஹ்வின் ஒரு படைப்பு, அதிலும் பல அத்தாட்சிகள், அதிசயங்கள் இருக்கின்றன என்பதை மறந்துவிடலாகாது. பலபேர் இஸ்லாம் பன்றியையும் நாயையும் தடுத்திருக்கின்றது என்பதற்காக அவை அல்லாஹ்வின் படைப்பு அல்ல என்ற கருத்தில் இருக்கின்றனர். இது தவறு.

பன்றியினத்தில் பல்வகைமை.

இதுவரை பன்றிகளில் 16 இனங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் முள்ளம் பன்றி, காட்டுப்பன்றி, இறைச்சிப் பன்றி, பண்ணைப் பன்றி என்பன சிலவாகும். இன்று உலகம் புராகவும் சுமார் இரண்டு பில்லியன் எண்ணிக்கையான பன்றிகள் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன. இவையே பன்றி இனங்களில் அதிக எண்ணிக்கை வாய்ந்தன. காட்டுப்பன்றிகள் மூர்க்கத்தனம் வாய்ந்தவை. காட்டுப் பகுதிகளில் புதர்களில் வாழக்கூடியன. பொதுவாகப் பன்றிகள் வெள்ளை, சாம்பர், கருப்பு, இளஞ்சிவப்பு போன்ற பல நிறங்களில் காணப்படுகின்றன. சில பன்றிகள் இரண்டு, மூன்று நிறக் கலவையிலும் காணப்படுகின்றன. வெள்ளை நிறப்பன்றிகளே இறைச்சிக்காக  அதிகம் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன.

எதையும் உண்ணும் அமைப்பில் உள்ள மூக்கும் வாயும்.

பன்றிகள் அனைத்துமுண்ணி வகை என்பதால் எதையும் உண்ணக் கூடிய வகையில் அவற்றின் மூக்கும், வாயும் அமைந்துள்ளன. கூர்மையான மோப்பசக்திகொண்ட சப்பையான மூக்கு மற்றும் அதிலுள்ள இரண்டு துவாரங்களின் உதவியுடன் அழுக்குகள் எங்கிருந்தாலும் அவற்றின் துர்வாடையைவைத்துத் தேடிக் கண்டுபிடித்துவிடுகின்றன. முகத்தை உணவில் திணித்தி நீண்ட நாக்கால் நக்கியும், உறிஞ்சும் வாயினுள் உணவை எடுத்து உறுதியான பற்களால் அரைத்து உணவை உண்டு விடுகின்றன. காட்டுப் பன்றிகளின் வாயின் இரு புறமும் நீண்ட பற்கள் வெளியே தெரியக் கூடிய வன்னம் இருக்கும். இவற்றால் தமது எதிரியைத் தாக்குகின்றன.

அதிகமாக சேற்றை விரும்பக் காரணம்.

பன்றிகளின் உடல் நீர்யானையின் உடலமைப்பை ஒத்த தோற்றத்தைக் கொண்டுள்ளன. ஆனால் மென்மையான தசையாலானது. பன்றிகளுக்கு உடலில் வியர்வை சுரப்பிகள் இல்லாததால் அவை அதிகம் நீரில் இருப்பதன் மூலம் அல்லது உடம்பின் மீது சேற்றைப் பூசிக்கொள்வதன் மூலம் தமது உடம்பைக் குளிர்வித்துக்கொள்ள விரும்புகின்றன. எனவேதான் பன்றிகள் எப்போதும் சேற்றுக்குள் இருப்பதைக் காண்கின்றோம். மேலும், இந்த சேற்றுப் பூச்சானது சூரிய வெப்பம் மற்றும் இதர பூச்சிகளின் கடியிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ளவும் உதவுகிறது. பன்றிகளின் தோலில் இருந்து எடுக்கப்படும் மென்மையான முடிகள் பொதுவாக தூரிகை செய்யப் பயன்படுகின்றன.
அழுக்குகளைக் கிளர உதவும் கால்கள்.இவற்றின் உடற் பருமனைவிட கால்கள் குட்டையாக உள்ளன. அத்தோடு பின்  கால்களைவிட முன் கால்கள் இன்னும் குட்டையாக இருக்கும். இதனால் அவற்றின் குனிந்து சிறமப்படாமல் உணவினருகே இலகுவாக வாயைக் கொண்டுசென்று உண்ண முடிகின்றது. மட்டுமென்றி இத்தகைய காலமைப்பினால்தான் இவற்றால் வேகமாக ஓடவும் உந்திப் பாயவும் முடிகிறது. பாதங்களில் முன்னாலும் பின்னாலும் இரண்டு இரண்டு விரல்களும் அவற்றில் நக அமைப்பும் இருக்கும். இது அழுக்குகளைக் கிண்டிக் கிளரி உணவு தேட உதவும்.

புத்திக் கூர்மையுள்ள விலங்கு.

பன்றிகள் புத்திக் கூர்மையுள்ள சமூக விலங்குகளென அறியப்படுகின்றன. நாய், பூனைகளை விட இவற்றை எளிதில் பழக்கப்படுத்திக்கொள்ள முடியும் என விலங்கியலாளர்கள் கூறுவர். அதனால்தான் முஸ்லிமல்லாத மேற்கத்தேய மக்களில் பலர் இவற்றை செல்லப் பிராணிகளாக வளர்க்கின்றனர்.

பன்றி வளர்ப்பு.

இன்று உலகெங்கும் இறைச்சிக்காகவும் கொழுப்புக்காவும் தோலுக்காகவும் பன்றிகள் பண்ணை அமைப்பில் வளர்க்கப்படுகின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பண்டங்களில் பன்றிக் கொழுப்புகள் கலக்கப்படுகின்றன. பன்றிகள் வேகமாக வளரும் தன்மையுடையன. அவை நல்ல பராமரிப்பில் ஒரே சமயத்தில் எட்டு முதல் பனிரெண்டு குட்டிகளை ஈனக்கூடியவை. பன்றிகள் சிறிய இடைவெளியிலேயே தன் இனத்தைப் பெருக்கிக்கொள்ளும். பிறந்து 8-9 மாதங்களிலேயே ஒரு பெண் பன்றி இணப்பெருக்கத்திற்குத் தயாராகிவிடும். ஒரு வருடத்திற்கு 2 முறை குட்டி ஈனும். எமது நாட்டிலும் பன்றி வளர்ப்பு மேல் மற்றும் வடமேல் மாகாணங்களி்ன் கரையோரப் பகுதிகளில் பிரதானமாக மேற்கொள்ளப்படுகின்றன.

சூழல் சுத்திகரிப்பான்.

மனித சூழலை சுத்திகரிப்பதற்கென்று அல்லாஹ் பல விலங்குளைப் படைத்துள்ளான்.  அவற்றில் பன்றியும் ஒன்று. அதன் உணவே சூழலில் உள்ள அழுக்குகள்தான். இவற்றை பன்றிகள் தேடித் தேடி உண்பதால் சூழல் ஓரளவு சுத்திகரிக்கப்படுகின்றது. உண்ணும் அழுக்குகள் சமிபாடடையும் வித்த்தில் அல்லாஹ் அவற்றின் சமிபாட்டுத் தொகுதியையும் வடிவமைத்துள்ளான். பசுந்தீவனம், தானியங்களின் உப பொருட்கள், இறைச்சிக் கழிவுகள், சமையலறைக் கழிவுகள், பழைய உணவுகள், அசுத்தமான நீர், மலம், இறந்து அழுகிப்போன பிராணிகளின் உடல்கள் என அனைத்தையும் உண்டு தீர்த்துவிடுகின்றன. நவீன கழிப்பறை வசதி இல்லாத கிராமப்புறங்களில் மனிதர்கள் காடுகளிலும் வெட்டவெளிகளிலும் கழிக்கும் மலஜலத்தைக்கூட சுத்தம் செய்வது பன்றிகள்தான். அத்தோடு பண்ணைகளில் பன்றிகளை ஒன்றாக அடைத்து வளர்க்கும்போது அவை தன்னுடைய மலத்தையும் பிற பன்றிகளுடைய மலத்தையும் சேர்த்து உண்ணவும் செய்கின்றன. இவ்வாறு பலவகையிலும் எமது சூழலை சுத்திகரிக்கின்றன. இதனால் இபன்றிகளுக்குப் பாதிப்பு இல்லாவிடினும் அவற்றின் உடலில் அதிகமான நோய்க்கிருமிகள் காணப்படுகின்றன. எனவேதான் பன்றி இறைச்சியை இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது.

பன்றி இறைச்சியை அல்குர்ஆன் உற்பட பைபிளும் தடைசெய்கிறது.

பன்றி இறைச்சியை அல்குர்ஆன் மட்டுமன்றி நபியவர்களுக்கு முன் வந்த நபியான யேசு (ஈஸா) நபியும் பன்றியின் மாமிசத்தைத் தடுத்துள்ளார்கள். இருந்தும் மேற்குலகிலும் எமது நாட்டிலும் பன்றிகளை வளர்ப்பவர்களாகவும் பன்றி இறைச்சயை உண்பவர்களாகவும் அதிகம் இருப்பது கிறிஸ்தவர்கள்தான் என்பது கவலைக்குறிய செய்தி.பன்றியும் புசிக்கத்தகாது, அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும், அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக, இவைகளின் மாம்சத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத் தொடாமலும் இருப்பீர்களாக.”(உபாகமம் 14:8) (லெவிட்டிக்ஸ் 11:7-8) (டியுட்டர்னோமி 14:8) (புக் ஒப்ஃ எசாயா65:2-5) என்ற அமைப்பில் பல அத்தியாயங்களில் பைபிள் பன்றி இறைச்சி உண்பதைத் தடுக்கின்றது.

அவ்வாறே அல்குர்ஆனும் தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கிருக்கிறான்” (2:173) (5:3) (6:145) (16:115) என்ற வசனங்களுடாக பன்றி இறைச்சியைத் தடைசெய்கின்றது. இதற்கான பல்வேறு விஞ்ஞானபூர்வமான ஆராய்ச்சி முடிவுகளை இங்கே அவதானிக்கலாம்.

பன்றி இறைச்சி கூடாது என்பதற்கான தர்க்கரீதியான காரணிகள்.

பன்றி இறைச்சி உண்பதால் மனிதனுக்கு எழுபது விதமான நோய்கள்உண்டாவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் வட்டப்புழு’ (Roundworm) ஊசிப்புழு (Pinworm) கொக்கிப்புழு (Hookworm) போன்ற குடற்புழுக்கள் உண்டாகின்றன. அதிலும் முக்கியமாக வயிற்றில் நாடாப்புழுக்களும் உருவாகின்றன. இந்த நீளமான நாடாப்புழு மனித குடலின் அடிப்பகுதியில் சென்று தங்கிவிடுகிறது. அது இடும் முட்டை இரத்த நாளங்கள் வழியாக உடலின் எல்லாப் பாகங்களுக்கும் பரவுகிறது.இந்த முட்டை மனித மூளையச் சென்றடைந்தால் மனிதன் தன் நினைவாற்றலை இழப்பான். இதயத்தைச் சென்றடைந்தால் மாரடைப்பு உண்டாகிறது. கண்களைச் சென்றடைந்தால் கண்பார்வை அற்றுப்போகிறது. ஈரலைச் சென்றடைந்தால் ஈரல் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு பன்றி இறைச்சி உண்பதால் மனிதவயிற்றில் உருவாகும் நாடாப்புழுவின் முட்டைகள் மனித உருப்புகள் அனைத்தையும் செயலிழக்கச்செய்யும் வல்லமை உள்ளவை.

பன்றி இறைச்சியில் திரிச்சுரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்ற பெயரையுடைய மற்றொருஆபத்தான குடற்புழு உள்ளது. பன்றி இறைச்சியை நன்றாக வேக வைத்துவி எடுத்தாலும் இவ்வகை புழுக்கள் அழிவதில்லை. அந்த வெப்பத்தையும் தாக்குப் பிடித்து அவை மனித வயிற்றைச் சென்றடைந்து அங்கே தமது இனப்பெருக்கத்தை ஆரம்பிக்கின்றன.

அத்தோடு பன்றி இறைச்சியில் மாமிச சத்தைவிட கொழுப்புச் சத்தே அதிகம். பன்றி இறைச்சி உண்பதால் ஏற்படும் கொழுப்புச் சத்து மனித இரத்த நாளங்களை அடைத்து விடுவதால் மனிதனுக்கு இரத்தஅழுத்த நோயும் மாரடைப்பும் உண்டாகின்றது. எனவே அமெரிக்கர்களில் ஐம்பது சதவீதம் பேர் இரத்த அழுத்தம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதில் ஆச்சரியம் இல்லை.

அதுமட்டுமன்றி பெருமளவில் பன்றிகளை பண்ணைகளில் வளர்ப்பதால் நோய்கள் பரவுகின்றன. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு சுவைன் புளு என்ற பெயரில் மெக்சிக்கோ பண்ணைகளிலிருந்து பரவத்துவங்கிய பன்றிக் காய்ச்சல் பல உயிர்களைக் காவுகொண்டதையும் நாம் அறிவோம்.
ஈஸா நபியின் வருகை.

இத்தகைய பல்வேறு பிரதிகூலங்கள் பன்றியால் விளைவதால்தான் இறுதியாக ஈஸா (அலை) அவர்கள் வந்து பன்றிகளைக் கொல்வார் என நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...