"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

03 March 2015

நிம்மதிக்கு எடுத்துக்காட்டான முன்மாதிரி இல்லம்

இது ஒரு மத்திம காலப் பாடல் வரி "சொர்க்கம் என்பது நமக்கு, சுத்தம் உள்ள வீடுதான்; சுத்தம் என்பதை மறந்தால் நாடும் குப்பை மேடுதான்" ஆஹா! எத்தனை அர்த்தமுள்ள, அழகிய வரிகள். யதார்த்தமும் அதுதானே! உண்மையில் வீடு வீடாக இருந்தால் தான் அதிலே மன நிம்மதியும் சந்தோசமும் கிடைக்கும். வீடு காடாக இருந்தால் அந்த வீட்டுக்குள் நுழைவதையே நாம் விரும்பமாட்டோம். நிம்மதியினதும் அமைதியினதும் இருப்பிடமாக வீடு இருக்கவேண்டிய நிலையில் அது காடாகவும், சிலருக்கு நரகமாகவும் இருப்பதால்தான் அவர்கள் வீட்டுக்கு வெளியே அந்த நிம்தியையும் அமைதியையும் தேடிச் செல்கின்றார்கள்.

ஒரு இஸ்லாமியன் தன் அனைத்து விவகாரங்களிலும் இஸ்லாத்தை சான்று பரக்கூடியவனாக இருக்கவேண்டும். அவனது உடை, நடை, பாவணைகளிலும் அவன் வாழும் சூழலிலும் அவன் வசிக்கும் வீட்டிலிலும் இஸ்லாம் சான்றுபகரப்படல் வேண்டும். ஆனால் இன்று எமது முஸ்லிம் சமூகம் இதற்கு மறுதலையாகவே இஸ்லாத்தை சான்று பகர்பவர்களாக இருக்கின்றனர். முஸ்லிம்கள் வாழும் அனேகமான ஊர்கள் அசுத்தத்தின் இருப்பிடமாக இருக்கின்றன. அவர்களது வீடுகளும் அவ்வாறுதான். அவர்களும் அவ்வாறுதான்.

வீடு என்பது இறைவனின் மகத்தானதொரு அருள். வீடுகள் அமைக்கப்படுவதன் நோக்கம் அதில் மன அமைதி பெறவேண்டுமென்பதே என்பது அல்குர்ஆனின் போதனை. உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் அமைதியை ஏற்படுத்தினான்.” (16:80) “நல்ல வீடு, நல்ல மனைவி, நல்ல வாகனம் அமைவது உலகச் சுகங்களில் சிறந்ததுஎன நபிகளார் கூறினார்கள். இவை வீடுகள் அமைக்கப்படுவதன் நோக்கத்தை விளக்கும் இஸ்லாத்தின் போதனைகளாகும். எனவே ஓர் இஸ்லாமிய இல்லம் அமைதியினதும், நிம்மதியினதும், சந்தோசத்தினதும் இருப்பிடமாக இருக்கவேண்டும்.

அப்படியானதொரு இல்லம் எவ்வாறிருக்கவேண்டும் என்பதனை அடிப்படையாக வைத்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இவ் ஆக்கத்தினை எழுதுகின்றேன். இதனை இரண்டு கண்ணோட்டங்களில் முன்வைக்கலாம். ஒன்று ஆன்மீக ரீதியாக ஒரு இல்லம் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது. இரண்டாவது பௌதீக ரீதியாக அழகாகவும், நேர்த்தியாகவும் மன நிம்மதி அளிக்கக்கூடியவாறு ஒரு வீட்டை எவ்வாறு வைத்துக்கொள்வது? என்பது. இங்கு நன் இரண்டாவது விடயத்தில் கவனம் செழுத்தி அதுதொடர்பான சில ஆலோசனைகளை முன்வைத்துள்ளேன்.

1. வெளி முற்றம்

அல்லாஹ் அழகானவன் அவன் அழகையே விரும்புகின்றான்என்ற ஹதீஸிற்கு இணங்க ஒரு வீட்டின் அழகு என்பது அதன் உற்புறத்தில் மட்டுமல்ல, வெளிப்புறத்திலும் அதன் அழகு ததும்பவேண்டும். கண் ருசித்ததன் பின்புதான் வாய் ருசிக்கும்என்று ஒரு மொழிவழக்கு இருக்கின்றது. ஒரு வீட்டின் வெளி முற்ற அழகுதான் அந்த வீட்டுக்குள் நுழைவோமா? ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்போமா? என்பதைத் தீர்மாணிக்கும்.

நபியவர்கள் பாலைவனத்தில் வாழ்ந்த சுன்னாவை உயிர்ப்பிக்கவேண்டுமென்ற நோக்கிலோ தெரியவில்லை எமது அநேக முஸ்லிம்களின் வீட்டு முற்றங்களில் ஒரு பூ மரத்தைக்கூட காணமுடியாது வரண்ட பாலைவனமாகக் காட்சியளிக்கின்றன. வீட்டைக் கூட்டி முன் முற்றத்தில் குப்பைகளைக் குவித்துவைத்திருப்பர். வீட்டின் முன் முற்றத்திலேயே தாருமாராக கொடிகளை இழுத்துக் கட்டிவைத்திருப்பர். குணிந்து, வளைந்துதான் வீட்டுக்குள் செல்லவேண்டும். அல்லது இடுப்பைத் தொடுமளவுக்கு காட்டுச் செடிகள் கண்ணா பின்னா என்று வளர்ந்திருக்கும்.

இது உண்மையில் அழகல்ல. முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் அவர்களது வீட்டுப் பாதையையும், வீட்டு முற்றத்தையும் அழகிய பூச் செடிகளை நட்டு ரம்யமாக வைத்திருக்கின்றனர். அந்த நற்பழக்கம் எம்மிடத்திலும் வரவேண்டும். வீட்டின் முன்னால் அழகிய பூச் செடிகளை சாடிகளில் நட்டுவைக்கலாம். பசுமையான புற் தரையாக முற்றத்தை மாற்றலாம். வீட்டின் பின்னாலோ பக்கவாட்டிலோ மூலிகை மரங்கள், காய்கறி, மரக்கறி, கீரை போன்ற பயனுள்ள தாவரங்களையும் நட்டு அழகுபடுத்தலாம். இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் இது ஓர் இபாதாவாகும்.

குப்பைகளை ஒழுங்காகத் திட்டமிட்டு அவற்றை உரமாகப் பயன்படுத்தலாம். அல்லது நகரசபைக்கு சிறுதொகை வரி கட்டுவதன் மூலம் குப்பைகளை அவர்களது வாகனம் வரும்போது அதில் போட்டுவிடலாம். களிவு நீர்களைப் பாதைக்கு விடாமல் அதற்கு ஒரு ஏற்பாட்டைச் செய்யலாம். டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் உருவாகக் காரணமானவற்றை இனங்கண்டு அகற்றி சுத்தப்படுத்தலாம். கொடிகளை வீட்டின் பின்பகுதியில் கட்டுவது மிகச் சிறந்தது.

2.வரவேற்பறை

வெளியிலிருந்து எப்போது, யார் வீட்டுக்கு வந்தாலும் நாமும் சங்கடப்படாமல், அவரையும் சங்கடத்திற்குள்ளாக்காமல் வந்தோரை வரவேற்கும் விதமாக வரவேற்பறையை வைத்திருக்கவேண்டும். மாறாக டவல் வாசற் கதவிலும், கொடியிலிருந்து எடுத்த துணிகளெல்லாம் சோபாவிலும், பிள்ளைகளின் கொப்பி, புத்தகங்களும் விளையாட்டுப் பொருட்களும் வரவேற்பறை முழுதும் சிதரிக்கிடக்க ஸ்ட்ரூளின்மீது தேனீர் கோப்பையும் அதில் ஈக்களும் எரும்புகளும் யுத்தம் செய்யுகொண்டிருக்கும் விதத்தில் ஒரு ரணகளமாக வரவேற்பறை இருந்தால் எப்படியிருக்கும்? உள்ளே நுழைய மனம் வருமா? வேலைவிட்டு வீடு வரும் கணவனுக்கு மன நிம்மதி கிடைக்குமா? பைத்தியம்தான் பிடிக்கும்.

எனவே ஒரு முன்மாதிரி இல்லத்தின் வரவேற்பறை மிக நேர்த்தியானதாக இருக்கவேண்டும். முதலில் முன் முற்றம் கண்களைக் கவர்ந்தது, தற்போது வரவேற்பறையும் மிக அழகாக, நேர்த்தியாக உள் நுழையும் போது மன நிம்மதி அளிக்கக்கூடிய இடமாக, கண்களைக் கவரும் விதமாக இருக்கின்றது. உள்ளே புலால் நாற்றம் அடிப்பதில்லை. நறுமனம் கமழும் திரவியங்களால் மணம் வீசுகின்றது. ஸ்ட்ரூலில் ஈ மொய்க்கும் தேனீர்க் கோப்பைக்குப் பதில் அறிவுக்கு விருந்தாக வாசிப்பதற்கு பத்திரிக்கைகளும் சஞ்சிகைகளும் சிறு கையோடுகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. வாசற் கதவருகே நட்சிந்தனைகளை ஒட்டும் அமைப்பில் சிறு சுவர்ப்பலகையொன்றும் இருக்கின்றது என்றால் இந்த வீட்டின் முன்மாதிரி எப்படியிருக்கும்?

3.நூலக அறை

ஒரு வீட்டில் இருக்கவேண்டிய முக்கிய அறைதான் நூலக அறை. எமது வீடுகளில் வயிற்றுக்குத் தீணிபோடும் சாப்பாட்டறை இருக்கும். ஆனால் புத்திக்கு அறிவுத் தீணிபோடும் நூலக அறை இருக்காது. நூலகமொன்றை வீட்டில் உருவாக்குவது பிள்ளைகளது கல்வி வளர்ச்சிக்கு உதவும். அவர்களது கற்கும் அறையாகவும் (Study Room) தந்தையின் அலுவலக அறையாகவும் (Office Room) இதனைப் பயனப்படுத்தலாம். ஒரு கல்விச் சூழல் வீட்டில் உருவாகும். புத்தகக் கடைகளுக்குச் சென்றால் புதிய புதிய நூல்களை, நல்ல சிந்தனைகளை, பண்பாடுகளைக் கற்றுத் தரும் புத்தகங்களை வாங்கிவந்து நுலகத்தில்வைத்து அனைவரையும் வாசிக்கத் தூண்டலாம். தொலைக்காட்சியை, கணினியை வரவேற்பறையில்வைத்து பொழுபோக்கிற்காகப் பயன்படுத்துவதைவிட நூலகத்தில் வைத்து அறிவை வளர்த்துக்கொள்ளும் நல்ல அம்சங்களுக்காகப் பயன்படுத்தலாம்.

4.தொழுகை அறை

எமது வீட்டுக்குள் நாம் ஷைத்தான்களுக்கு அறைகளைக் கட்டிக்கொடுத்துள்ளோம். மற்ற அறைகளைவிட ஷைத்தானின் அறைக்குத்தான் நாம் இலட்சக்கணக்கில் செலவிடுகின்றோம். பல செரமிக் கடைகளுக்கு ஏறி இறங்கி ஷைத்தானின் அறைக்கு டைல்ஸ் வாங்குகின்றோம். பல வண்ண நிறங்களில் ஒளிவிளக்குகளைப் பொருத்துகின்றோம். நான் ஷைத்தானின் அறையென்று சொல்வது பாத்ரூமை, அட்டேச் பாத்ரூமை. இப்படியெல்லாம் ஷைத்தானின் அறையை அழகுபடுத்திவிட்டு அல்லாஹ்வை ஞாபகிக்க வீட்டில் தொழுகை அறையொன்று உள்ளதா என்றால் இல்லை. தொழுகை அறை வேண்டாம் பிரத்தியேகமானதொரு இடம் இருக்கின்றா என்றால் அதுவும் இல்லை. வீடு முழுக்க ஓடி ஓடித் தொழுவார்கள். இனி தொழுகையில் உயிரோட்டம் இருக்காது. கண்குளிர்ச்சி இருக்காது. ஊர், உலகத்தில் இருக்கும் ஏச்சுக்கல் பேச்சுக்களெல்லாம் தொழும்போது காதில் வந்து வீழ்ந்து தொழுகையைப் பால்படுத்தும்.

ஆகவே வீட்டில் வசதியிருப்பின் தொழுகைக்கென்று ஒரு அறையை ஏற்பாடு செய்வது, அல்லது பிரத்தியேகமானதொரு இடத்தை ஒதுக்குவது சிறந்தது. தொழுகையின் பின் ஓதவேண்டிய துஆக்களை முன்னால் ஒட்டிவைப்பது மிகவும் பயன் தரும். தொழுகை இடத்திற்குள் நுழையும்போதும் வெளியேறும்போதும் ஓதவேண்டிய துஆக்களையும் பொருத்தமான இடங்களில் ஒட்டிவைப்பது தகும். அல்குர்ஆன், மஃசூராத் போன்றவற்றை அங்கு வைப்பதால் ஓதல்களை வழக்கப்படுத்திக்கொள்வது இலகுவாக இருக்கும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் உங்கள் இல்லங்களை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக் குழிகளாக ஆக்கிவிடாதீர்கள். சூரா அல்பகரா ஓதப்படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடி விடுகிறான். (முஸ்லிம் 1430) மேலும் நபிகளார் கூறினார்கள் உங்களது தொழுகையில் சிலவற்றை (சுன்னத்தானவற்றை) உங்களுடைய இல்லங்களிலும் நிறைவேற்றுங்கள் உங்களுடைய இல்லங்களை கப்று (சவக்குழி)களாக ஆக்கிவிடாதீர்கள். (புகாரி 432)

5.சாப்பட்டு அறை அல்லது சமயலறை

நாம் சாப்பாட்டு சமூகம் என்பதைக் காட்டுவதற்காக அனேக வீடுகளின் வரவேற்பறையிலே கெபினெட் ஒன்றை வைத்திருப்பார்கள். சமயலறையில் அல்லது சாப்பாட்டறையில் வைக்கவேண்டிய பாத்திரங்களையெல்லாம் அதிலே வைத்திருப்பார்கள். பீங்கான்கள் இருக்கும், கோப்பைகள் இருக்கும், கரண்டிகள் இருக்கும், கார்ப்புகள் இருக்கும், மேசைக் கத்தி வெட்டுக்கத்திகளும் இருக்கும். பானை, கோடாரி, சவல், மண்வெட்டி இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. யாராவது விருந்தினர்கள் வந்தால் ஓடி வந்து அவர்கள் முன்பு சர சரவென்று கண்ணாடியைத் திறந்து பாத்திரங்களை எடுத்துக்கொண்டு சமயலறைக்கு ஓடுவார்கள் வீட்டுப் பெண்கள். ஏன் இந்த நிலை? எதை எங்கு வைக்கவேண்டும் என்ற புரிதல் இல்லாமைதான் காரணமோ என்னவோ?

வீட்டில் மிக மிக சுத்தமாக இருக்கவேண்டிய இடம் இதுதான். சாப்பாட்டுடன் சம்பந்தப்பட்ட இடம் என்பதால் பல்லிகளும், எலிகளும், கரப்பான் பூச்சிகளும், ஈக்களும், எறும்புகளும் வட்டமடிக்கும் இடமாக இது இருக்கும். எனவே சுத்தம் அவசியம். பாத்திரங்களை நன்கு கழுவி சுத்தமாக மூடி வைத்தல். சீனி, மிளகுத் தூள், உப்பு, உப்புத் தூள், மஞ்சள் என சரக்குப் பொருட்களை அழகிய அடைப்பான்களில் அடைத்துவைத்தல். கரண்டி, கத்தி, அகப்பை இன்னுமுள்ள பொருட்களை இலகுவாக எடுக்கும் விதத்தில் நேர்த்தியாக வைத்தல், உணவு வகைகள், பழவகைகள் அடங்கிய படங்களை சுவர்களில் ஒட்டிவைத்தல் போன்றன சிறப்பான அம்சங்களாகும்.

6.களிவறை

தமது மகனுக்கு பெண் பார்ப்பதற்காக ஒரு குடும்பத்தினர் ஒரு வீட்டுக்குச் சென்றனர். சென்று பெண்ணைப் பார்க்க முன்பு கணவனின் தந்தை களிவறை செல்லவேண்டும் என்றார். களிவறை சென்று வந்ததுதான் தாமதம் பெண்ணைப் பார்க்கவும் இல்லை, பேச்சுவார்த்தை நடாத்தவும் இல்லை எல்லோரையும் அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டார் தந்தை. வாகனத்திற்கு வந்து மகன் தந்தையிடம் விவரத்தைக் கேட்டார். தந்தை கூறியது இதுதான் கால் க்ளீனாக இருந்தா ஆள் க்ளீனாக இருப்பார். அதேமாதிரி டொய்லெட் எப்படியோ அந்த வீட்டு ஆட்களும் அப்படியேஎன்றார். மகனுக்குப் புரிந்துவிட்டது.

களிவறை சுத்தமாக அழகாக இருக்கவேண்டும். ஆடம்பரமாக இருக்கவேண்டுமென்பது இதன் கருத்தல்ல. நான் மேலே கூறியதுபோன்று இன்று களிவறைக்காக இலட்சக்கணக்கில் செலவுசெய்கின்றனர். இது வீண் செலவு. தவிர்க்கப்படல் வேண்டும். தேவையை நிறைவேற்றியதன் பின்பு கைகளைக் கழுவ சவர்க்காரம் வைப்பதைத் தவரிர்த்து Hand wash Shampoo வைப்பது சிறந்தது. குளியலறையும் களிவறையும் ஒன்றாக இருப்பதைத் தவிர்க்கவேண்டும். காரணம் களிவறைக்குள் அவ்ராதுகளை ஓத முடியாது. ஆனால் இவை இரண்டும் பிரிக்கப்படாது ஒன்றாக இருப்பதால் களிவறையில் வுழு எடுப்பது, வுழுவின் துஆக்களை ஓதுவது குறித்து சிக்கல்கள் ஏற்படுகின்றது. எனவே இரண்டையும் பிரித்து வைத்தல் வேண்டும்.

7.அவசியம் இருக்கவேண்டிய விடயங்கள்.

மேலே சொன்ன இந்த அம்சங்களுடன் இன்னும் சில விடயங்கள் எமது வீடுகளில் ஏற்பாடுசெய்து வைப்பது சாலச்சிறந்தது.

a.முதலுதவிப் பெட்டி - First Aid Box

பிள்ளை விளையாடிக்கொண்டிருக்கும்போது கீழே வீழ்ந்து அடிபட்டு இரத்தம் ஓடுகிறதென்றால் அப்போதுதான் எம்மவர்களும் அக்கம் பக்கத்து வீடுகளுக்கெல்லாம் டிட்டோலையும், பிளாஸ்டரையும் தேடி ஓடுவார்கள். இரவு ஜாமத்தில் வயிற்று வலி வந்தால் அப்போதுதான் ஓமத் திராவகம் எடுக்க கடையைத் தட்டுவார்கள். தலை வலி, காய்ச்சல், தடிமன் வந்தபின்புதான் பெனடோலையும், சித்தாலேப்பையையும் தேடி கடை கடையாகச் செல்வார்கள். ஏன் இந்த சிறமம்? முன் கூட்டியே வீட்டில் ஒரு முதலுதவிப் பெட்டியொன்றைத் வைத்து சில்லறை மறுந்துகளையெல்லாம் தயார் நிலையில் வைப்பது பயன்தரும் விடயமல்லவா? அடிக்கடி தேவைப்படுகின்ற பின்வரும் ஔடதங்களை முன்கூட்டியே வாங்கி வையுங்கள். உதாரணமாக: Panadoll, Balm, Surgical, Dettol, Plaster, Asamodagam Spirit.

b.சாவிப் பெட்டி - Key Board

என்ட பைக் கீய காணல்லயா? ஒபீஸ் ரூம் கீய காணல்லயா? அந்தக் கீயக் காணல்லயா? இந்தக் கீயக் காணல்லயா?” பெரும்பாலான வீடுகளில் ஆண்களின் வாய்களிலிருந்து இந்த வார்த்தைகள் வெளிவருவதும் பெண்கள் ஆண்கள் தொலைத்த சாவிகளைத் தேடி வீட்டை மறுபக்கம் பிறட்டுவதும் வாடிக்கையாகிவிட்டது. காரணம் ஒன்று அதற்குரிய இடத்தில் அதனை வைக்காமை அல்லது ஒன்றை வைக்க அதற்கென்று ஒரு இடம் இல்லாமை. எனவே கண்ட கண்ட இடங்களிலெல்லாம் வைத்துவிட்டு பிறகு மற்றவர்களது தலையைப் பிய்ப்பார்கள்.

மிகச் சிறந்த பண்பும், எமது நேரத்தை மிச்சப் படுத்திக்கொள்ள உள்ள ஒரு வழியும்தான் ஒரு சாவிப்பெட்டியைத் தயாரித்து அனைவருக்கும் அடிக்கடி தேவைப்படுகின்ற சாவிகளை அதிலே இலக்கமிட்டு கொழுகிவைப்பதாகும்.

c.ஆயுதப் பெட்டி – Tool kit

அடிக்கடி தேவைப்படுகின்ற உபகரணங்களை இலகுவாக, அனைவராலும் எடுத்து உபயோகப்படுத்திவிட்டு மீண்டும் அதே இடத்தில் வைப்பதற்கான ஒரு ஆயுத உபகரணப் பெட்டியைத் தயார்படுத்துதல். அதில் சுத்தியல், குரடு, Screwdrivers,  ஆணி, டெஸ்டர் என்பவற்றை நேர்த்தியாக வைத்தல். அத்தோடு வீட்டுக்கு வெளியே மண்வெட்டி, சவல், அலவாங்கு, கோடாரி, குப்பை வாரி, துடைப்பான்கள் என்பவற்றையும் அழகாக வைத்தல். இவை யாவும் எமது நேரத்தை மிச்சப்படுத்தும்.

இஸ்லாம் எப்போதும் எதிலும் அழகையும் நேர்த்தியையும் விரும்புகின்றது. إن الله كتب الإحـسـان عـلى كــل شيءஎன்ற நபியவர்களது பொன்மொழி இதற்கு சிறந்த சான்று. இந்த ஹதீஸிற்கான செயன்முறை விளக்கமாக ஜப்பானியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 5s திட்டத்தினைக் எடுத்துக்கொள்ளலாம். வீட்டில் எப்போதும் பௌதிக ரீதியாக சுத்தமும், அழகும், நேர்த்தியும் பேணப்படுவதோடு ஆன்மீக ரீதியான அம்சங்களும் நடைமுறைப்படுத்தப்படுமென்றால் நிச்சயமாக அது அமைதிப் பூங்காவாக, நிம்மதியின் இருப்பிடமாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்!

ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A.

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...