"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

01 December 2015

ஆழ்கடல் முதல் அர்ஷ் வரை

ஆழ்கடல் முதல்

அவனிடமே மறைவானவற்றின் திறவுகோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்.” (6:59)

கடலின் ஆழத்தில் இருப்பவற்றையும் அல்லாஹ் அறிந்துவைத்திருக்கின்றான் என்று மேற்கூறிய திருவசனம் குறிப்பிடுகின்றது. இதனை விளங்கிக்கொள்ள தரையிலிருந்து கீழ்நோக்கி கடலின் அடிமட்ட ஆழம்வரை சென்று பார்த்துவிட்டுவருவோம். நன்றாக மூச்செடுத்துக்கொள்ளுங்கள்.

கடலின் மேல் மட்டத்திலிருந்து 40 மீட்டர் தூரம் வரைதான் திறமைவாய்ந்த நீச்சல் வீரர்கள்கூட பாதுகாப்பான நீச்சல் உடைகளுடன் ஒக்சிஜன் சிலின்டர்களையெல்லாம் சுமந்துகொண்டு மூழ்குவார்கள். இதற்கு அப்பால் நீச்சல் உடையுடன் நீந்திச் செல்வது உயிராபத்தை ஏற்படுத்தும். எனவே ஒரு நீர் மூழ்கியின் உதவியுடன்தான் செல்லவேண்டும். கடலின் மேல் மட்டத்திலிருந்து 301 மீட்டர் ஆழம்வரை சென்றால் இது பிரான்ஸில் உள்ள உலகப் பிரபல்யம்வாய்ந்த ஈபில் கோபுரத்தின் (Eiffel tower) உயரத்திற்கு நிகரான ஆழமாகும். இன்னும் கீழே 500 மீட்டர் ஆழம் வரையான பகுதியில்தான் நீளத் திமிங்கிளங்கள் சஞ்சரிக்கின்றன. இதற்கு அப்பால் இவற்றால்கூட செல்லமுடியாது.

கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் ஆழம்வரைதான் சூரிய ஒளி ஊடுருவிச் செல்லும். இதற்கு அப்பால் ஒளிகூடச் செல்லாது. கடும் இருளாகத்தான் இருக்கும். மனிதன் கண்டறியாத பற்பல உயிரினங்கள் இந்த இருண்ட பகுதியில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இன்னும் மூழ்கி 1828 மீட்டர் ஆழத்தை அடைந்தால் இங்கிருந்துதான் ஆழ்கடலின் பள்ளத்தாக்கு (Grand Canyon) ஆரம்பமாகின்றது. அதிலிருந்து இன்னும் கீழே 4267 மீட்டர் ஆழம்வரை சென்றால் இதுதான் மிகப் பெரிய சமுத்திரமான பசுபிக் சமுத்திரத்தின் ஆழம். இந்த ஆழத்தில்தான் டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்கள் இருக்கின்றன.

இதற்கும் அப்பால் 10898 மீட்டர் ஆழத்தை 2012ஆம் ஆண்டில் ஹொலிவுட் திரைப்பட இயக்குனர் ஜேம்ஸ் கெமரூன் சென்றடைந்தார். எனினும் 1960ஆம் ஆண்டில் டொன் வொல்ஷ் மற்றும் ஜேக்கஸ் பிக்காட் ஆகிய இருவரும் 10975 மீட்டர் ஆழம்வரை சென்று ஏற்கனவே சாதனை படைத்துவிட்டனர். இதற்கும் அப்பால் ஆய்வாளர்கள் சென்றுள்ள இறுதிக்கட்ட ஆழம் 11034 மீட்டர்வரைதான். இதுதான் ஆழ்கடலின் அடிப்பகுதி.

பூமிப்பந்தின் மிக ஆழமான பகுதியென்றால் அது இந்தப் பகுதிதான். கடலின் ஆழம் பற்றி ஆய்வுசெய்ய புறப்பட்ட விஞ்ஞானிகள் நவீன விஞ்ஞான தொழில்நுட்ப உதவிகளுடன் இதுவரை கண்டறிந்துள்ள ஆழம், தற்போது நாம் வந்தடைந்துள்ள கடலின் 11034 மீட்டர் ஆழம்தான். இதுவே மரியானா ஆழியின் கீழ்ப்பகுதியென விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். இப்போதைக்கு இதுதான் ஆழ்கடலின் அடிப்பகுதி எனக் குறிப்பிடும் விஞ்ஞானிகள் இதனைத்தாண்டி கீழே செல்வதற்கான ஆற்றல் இப்போதைக்கு எம்மிடம் இல்லையைன தமது பலவீனத்தை ஏற்றுக்கொள்கின்றார்கள். எனவே அப்படியே வந்த வழியே திரும்பி கரைக்குச் சென்றுவிடுவோம்.

அப்பாடா நன்றாக மூச்சு விட்டுக்கொள்ளுங்கள். நாம் தண்ணீருக்கு வெளியே வந்துவிட்டோம். இதுவரை நாம் ஆழ்கடலின் அடிமட்டமான 11034 மீட்டர் வரை சென்று வந்துவிட்டோம். தற்போது சிந்தித்துப் பாருங்கள். தரையிலிருந்து கடலின் அடிமட்டம் எவ்வளவு ஆழத்தில் அமைந்துள்ளது? சுபஹனல்லாஹ்! மனிதத் தேடலுக்கு உட்பட்ட இத்தூரம் மாத்திரமல்ல இதற்கு அப்பாலுள்ள விடயங்களையும் அல்லாஹ் நன்கறிந்து வைத்திருக்கின்றான். நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட திருவசனத்தின் (6:59) ஆழம் புரிந்ததா?

தரை மட்டம்.

கடலின் ஆழத்திலிருந்து வந்த நாம் தற்போது கரையில் இருக்கின்றோம். மேலே கூறிய அதே வசனம் கடலில் மட்டுமல்ல கரையில் உள்ளவை குறித்தும் அல்லாஹ் நன்கு அறிவதாகக் குறிப்பிடுகின்றது. மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிகிறான்.” (6:59) தரையில் அல்லாஹ்வின் அறிவின் நுணுக்கம் எந்த அளவு விசாலமானது என்பதை அதே வசனத்தின் அடுத்த தொடர்கள் அழகாக விளக்குகின்றன.

அவனுக்குத் தெரியாமல் இந்தப் பூமியின் எந்த மூலை முடுக்கில் உள்ள ஒரு மரத்திலிருந்தும் ஒரு இலைகூட கீழே உதிர்வதில்லை. நிலத்தின் அடியின் ஆழத்தில் அடர்ந்த இருள்களில் கிடக்கும் பசுமையானதும், உலர்ந்ததுமான சிறு வித்துக்களையும் அவன் பதிந்துவைத்திருக்கின்றான்.”(6:59) “கடும் இருள் சூழ்ந்துள்ள வேலையில் கரும் கற்பாறையொன்றின்மீது, அளவில் சிறியதொரு கறுப்பு எறும்பு ஊர்ந்து செல்வதைக்கூட அல்லாஹ் அறிகின்றான் என்றால் அவன் எந்த அளவு நுணுக்கமானவன் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

தரைக்கு மேலே

ஆழ்கடலிலிருந்து வெளியே வந்து தரையின் அடர் இருள்களுக்குள் சென்றுவிட்டு வந்திருக்கும் நாம் தற்போது தரையிலிருந்து விண்வெளிக்குச் செல்லப் போகின்றோம். தயாராகிக்கொள்ளுங்கள்.

தரையிலிருந்து 1000 கி.மீ. மேலே சென்றால் எமது இலங்கை நாட்டை முழுமையாகப் பார்க்காலம். சில செய்மதிகள் இந்தத் தூரத்தில் சுற்றிக்கொண்டிருக்கின்றன. 100,000 கி.மீ. மேலே சென்றால் இப்போது எமது பூமிப் பந்தையே முழுமையாகப் பார்க்கலாம். இன்னும் மேலே 100 பில்லியன் கி.மீ. சென்றால்  எமது பூமி உட்பட 8 கோள்களும் உப கோள்களும் இன்னும் பல விண்பொருட்களும் அடங்கியுள்ள சூரியக் குடும்பத்தை அல்லது ஞாயிற்றுத் தொகுதியை முழுமையாகப் பார்க்கலாம். இன்னும் மேலே ஒரு ஒளியாண்டளவு தூரம் சென்றால் (ஒளியாண்டு என்பது ஒளி ஒரு வருடத்தில் பயணிக்கும் தூரம். ஒளி செக்கனுக்கு 3 இலட்சம் கி.மீ. தூரம் பயணிக்கின்றது) எமது ஞாயிற்றுத் தொகுதி ஒரு புள்ளியாக அதாவது சூரியன் ஒரு நட்சத்திரமாகக் காட்சியளிக்கும்.

அதனையும் தாண்டி 1 மில்லியன் ஒளியாண்டுகள் மேலே சென்று பார்த்தால். எமது சூரியன் போன்று 250 பில்லியனுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களைக் கொண்டுள்ள எமது பால்வீதி (Milkyway) Galaxy இன் தோற்றத்தை முழுமையாக் காணலாம். 10 மில்லியன் ஒளியாண்டு தூரத்தை எட்டினால் எமது பல்வீதி போன்று இலட்சக்கணக்கான பால்வீதிகள் புள்ளி புள்ளியாக நிறைந்திருப்பதைக் காணலாம். இன்னும் இவ்வாறு தொடர்ந்து முன்னேரிக்கொண்டே சென்றால் பிரபஞ்சத்தின் எல்லைகூட வந்துவிடும்.

ஆனால் மனிதனாலோ அல்லது மிக வேகமாகப் பிரயாணம் செய்யும் ஜின்களாலோ அவ்வாறு பிரபஞ்ச வெளியைக் கடப்பது என்பது சாத்தியமற்றது. எமது ஆயுள் வெறும் 60 அல்லது 70 வருடங்கள்தான். ஆனால் பிரபஞ்சவெளியைக் கடக்க மில்லியன், பில்லியன் ஒளி வருடங்கள் பயணித்தாகவேண்டும். எனவே இது சாத்தியமில்லை. அப்படியும் எமது ஆயுள் காலத்திற்குள் பிரபஞ்சத்தைக் கடக்கவேண்டுமென்றால் அதற்கு ஒரு சுப்ப பவருடன், சக்திவாய்ந்த ஒரு விண்ணோடம் தேவைப்படும். அதனைத்தான் பின்வரும் திருவசனம் சுட்டிக்காட்டுகின்றது.

"மனித, ஜின் கூட்டத்தினர்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் (பிரபஞ்சத்தின்)  எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால், (வல்லமையுடன் கூடிய) அதிகாரம் (சக்தி) இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது. (55:33)

பிரபஞ்சத்தின் எல்லையில்.

பிரபஞ்சத்தைப் பற்றிப் பார்க்க முன்னர் சற்று இளைப்பாரியவாறு நாம் வந்த பயணப் பாதையை கொஞ்சம் திரும்பிப்பார்ப்போம்.

ஆழ்கடலின் அடியிலிருந்து தரைக்கு வந்து தரையிலிருந்து உந்திக் குதித்து புவிக்கு வெளியே வந்து, மீண்டும் அங்கிருந்து ஞாயிற்றுத் தொகுதிக்கு வெளியே வந்து, மீண்டும் அங்கிருந்து தாவி பால்வீதிக்கு வெளியே வந்து, மீண்டும் அங்கிருந்து கோடானு கோடி கெலக்ஸிகளையெல்லாம் தாண்டி வெளியே வந்து, தற்போது பிரபஞ்சத்தின் எல்லைக்கே வந்திருக்கின்றோம்.

இவ்வளவு நேரமும் நாம் வந்த இந்தப் பயணம் முழுவதும் பிரபஞ்சத்திற்குள்தான். பிரபஞ்சம் என்பது காற்று நிரம்பிய ஒரு பலூன் பந்தைப் போன்றது. ஆழ்கடல் முதல் ஏழாம் வானம் வரை அதாவது பிரபஞ்சத்தின் எல்லைவரை உள்ள மிருகங்கள், பறவைகள், நுண்ணங்களிகள், ஆழ்கடல், பூமி, கோள்கள், நட்சத்திரங்கள், கெலக்ஸிகள், கருந்துளைகள் என அனைத்தும் பிரபஞ்சத்திற்குள் அடங்குகின்றவையே. இவையெல்லாம் வல்ல அல்லாஹ்வின் படைப்புகளே. வானங்களையும், பூமியையும், இவை இரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் நாம் சத்தியத்தைக்கொண்டே படைத்திருக்கின்றோம்.”(15:85) இவை அல்லாஹ்வுக்கே உரித்தானவை. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன.”(2:255) அல்குர்ஆனில் ஸமாவாதி வல் அர்ழ் வானங்கள், பூமிஎன்று நிறைய இடங்களில் குறிப்பிடப்ட்டிருப்பது முழுப் பிரபஞ்சத்தையும் குறிக்கும் கருத்தில்தான்.

இந்தப் பிரபஞ்சம் ஒரே பருமனில், அளவில் எப்போதும் இருப்பதில்லை. அது சதாவும் ஒவ்வொரு வினாடியும் விரிவடைந்துகொண்டே செல்கின்றது. இதனை 1929ஆம் ஆண்டில் எட்வின் ஹப்ல் கூறுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அல்குர்ஆன் கூறிவிட்டது (51:47). விஞ்ஞான விளக்கத்தின் படி இப் பிரபஞ்சம் வினாடிக்கு ஒளியாண்டு வேகத்தில் விரிவடைகின்றது. அதாவது ஒவ்வொரு செக்கனும் எமது பிரபஞ்சம் 3 இலட்சம் கி.மீ. தூரம் விரிவடைந்துகொண்டே இருக்கின்றது. சுபஹானல்லாஹ்! இப்போது பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தை உணர முடிகிறதா? இந்தப் பிரம்மாண்டமான பிரபஞ்சத்தைவிட வேறு ஏதும் பெரிதாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஆம். இருக்கின்றது. அதுதான் குர்சிய்.

பிரபஞ்சத்தை சூழ்ந்துள்ள குர்சிய்.
  
நாம் அன்றாடம் ஓதிவருகின்ற ஆயதுல் குர்சிய், இந்தக் குர்சிய் தொடர்பான விளக்கத்தை எமக்கு சொல்லித்தருகின்றது. குர்சிய் என்பது அல்லாஹ்வின் சங்கைமிகு பாதங்களை வைக்கும் ஓர் இடமாகும். இது பற்றி இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாவது: குர்சிய் குறித்து நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அப்போது அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்: குர்சிய் என்பது அல்லாஹ்வுடைய பாதங்களை வைக்கும் இடமாகும்என்றார்கள்.  இந்தக் குர்சிய் முழுப் பிரபஞ்சத்தையும் சூழ்ந்துள்ளதாக ஆயதுல் குர்சிய்யில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அவனுடைய குர்சிய் வானங்களையும் பூமியையும்  சூழ்ந்துள்ளது.”(2:58) சுபஹானல்லாஹ்! பிரபஞ்சமே எவ்வளவு பெரியது! அப்படியென்றால் அதனை முழுமையாகச் சூழ்ந்திருக்கும் குர்சிய் அதனைவிட எவ்வளவு பெரிதாக இருக்கும், குர்சிய்யின் பிரம்மாண்டத்தை நபிகளார் விளக்கும் பாங்கைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் ஏழு வானங்களினதும் ஏழு பூமிகளினதும் (அதாவது பிரபஞ்சத்தின்) அளவானது, குர்சியோடு ஒப்பிடும்போது அவை பாலை வனத்தில் (வீசப்பட்ட) ஒரு மோதிரத்தின் அளவுக்குத்தான் இருக்கும்.என்றார்கள்.

அதாவது குர்சிய் என்பது பிரம்மாண்டமானதொரு பாலைவனம் என்றால் அதில் வீசப்பட்ட ஒரு மோதிரம் அளவுதான் இந்த பிரபஞ்சம். அப்பப்பா! அன்பர்களே! குர்சிய்யின் அளவை கற்பனை பண்ணுங்கள். அதனையும் விட அளவில் பெரியது இருக்கவே முடியாது என்று நினைக்கிறீர்களா? இருக்கின்றது. அதுதான் இறைவனின் அர்ஷ்.

குர்சிக்கு மேலிருக்கும் அர்ஷ்.

அல்லாஹ்வின் பாதங்களை வைக்கும் இடமான குர்சிய்யின் பிரம்மாண்டமே வியக்கத்தக்க அளவு என்றால் அதனையும் விடப் பிரம்மாண்டமானதுதான் அல்லாஹ் வீற்றிருக்கும் அர்ஷ். அர்ஷின் பிரம்மாண்டத்தை நபியவர்கள் எமக்கு விளக்கிக் கூறியுள்ளார்கள். பின்வரும் ஹதீஸைப் படியுங்கள்.

அபூதர் (ரழி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் குர்சிய் தொடர்பாகக் கேட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! குர்சிய்யோடு ஒப்பிடுகையில் ஏழு வானங்கள் மற்றும் ஏழு பூமிகளின் அளவானது. பாலை வனத்தில் வீசப்பட்ட ஒரு மோதிரத்தின் அளவைப் போன்றதாகும்என்றார்கள். அவ்வாறே அர்ஷுடன் ஒப்பிடும்போது குர்சிய் என்பதும் பாலைவனத்தில் வீசப்பட்ட ஒரு மோதிரத்தின் அளவைப் போன்றதாகும்எனக் கூறினார்கள்.

அதாவது அர்ஷ் என்பது பிரம்ம்ம்ம்ம்மாண்டமானதொரு பாலைவனம் என்றால் அதில் வீசப்பட்ட ஒரு மோதிரம் அளவுதான் இருக்கும் குர்சிய். குர்சிய் என்பது பிரம்ம்ம்ம்மாண்டமானதொரு பாலைவனம் என்றால் அதில் வீசப்பட்ட ஒரு மோதிரம் அளவுதான் பிரபஞ்சம். அய்யோ! தலை சுற்றுகின்றது. உங்கள் கற்பனைக்கு எட்டுகின்றதா? அர்ஷ்இன் பிரம்மாண்டத்தை விளங்கிக்கொண்டீர்களா? இன்னும் தெளிவாக விளங்க கீழே படியுங்கள்.

அல்லாஹ்வின் அர்ஷை கரீபிய்யூன் எனும் எட்டு மலக்குமார்கள் சுமந்துகொண்டிருக்கின்றார்கள்.(69:17) அவர்களில் ஒரு மலக்கின் ஒரு காது சோணையிலிருந்து தோள் புஜம் வரை உள்ள தூரம் எழுநூறு ஆண்டுகள் பயணிக்கும் தூரமாகும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஜாபிர் (ரலி) அபூதாவூத்:4102)

அர்ஷின் மீதிருக்கும் அல்லாஹ்.

அர்ஷை சுமக்கும் ஒரு மலக்கின் பருமனே இவ்வளவென்றால் அர்ஷின் அளவு? அர்ஷைவிடப் பெரியதும் பிரம்மாண்டமானதுமான ஒன்று உள்ளது என்று கூறினால் இனி நீங்கள் நம்புவீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும். அர்ஷைவிடவும் பிரம்மாண்டமானவன்தான் அதில் வீற்றிருக்கும், எம்மைப் படைத்து, போசித்து, பரிபாலித்துக்கொண்டிருக்கும் கருணையாளன் அல்லாஹ்! பிரபஞ்சமே எவ்வளவு பெரிது? அதனைவிட குர்சிய் பெரிது. அதனைவிட அர்ஷ் பெரிது. இவை எல்லாவற்றையும் விட இவை அனைத்தையும் படைத்த அந்த ரப் அவன் பெரியவன். இதனால்தானே அல்லாஹு அக்பர் என்கிறோம். அல்அக்பர், அல்கபீர் என்பதன் உண்மையான அர்த்தம் இப்போது உங்களுக்குப் புரிகிறதா? பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றையும் விடப் பெரியவன்தான் அல்லாஹ்! அதனால்தான் அல்லாஹு அக்பர் என்கிறோம்.

இவ்வளவையும் எழுதி முடிக்கும் இத்தருனத்தில் எனக்கு அல்லாஹு அக்பர்என்று உரத்த குரலில் சப்தமிட்டுக் கத்தவேண்டும் போலிருக்கின்றது. உங்களுக்கு எப்படி?

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...