“ஹுத் ஹுத்”
என்றதுமே இப்பறவையையும் அதுதொடர்பாக
அல்குர்ஆனில் வந்துள்ள சம்பவமும் உங்கள் ஞாபத்திற்கு வந்திருக்கும். சூரா அந்நம்லில்
சுலைமான் நபியவர்களின் சரித்திரத்தைப் படிக்கும்போது ஹுத் ஹுத் என்ற இப்பெயரைக் கண்டுகொள்ளலாம்.
இப்பறவைக்கு அல்லாஹ் கொடுத்துள்ள புத்திக் கூர்மையையும் அதன் வாழ்க்கை முறைகளையும்
இத்தொடரில் கற்றுக்கொள்வோம்.
பெயர்
விளக்கம்.
ஹுத் ஹுத் என்ற பெயரில்
இப்பறவை சுலைமான் நபியவர்கள் காலத்திலிருந்தே திரிபுபடாமல் அழைக்கப்பட்டு வருகிறது.
இச் சம்பவத்தை அல்லாஹ் நபியவர்களுக்குக் கூறியதிலிருந்து, அல்குர்ஆனில் இடம்பெற்றிருப்பதிலிருந்து சுமார்
1400 ஆண்டுகளாக இப்பெயர் நிலைத்திருப்பதும்
அற்புதம்தான். இதன் அறிவியற் பெயர் Upupa epops என்பதாகும். ஆங்கிலத்தில்
“Hoopoe” என்றும் தமிழில் “கொண்டலாத்தி” என்றும் அழைக்கப்படுகின்றது. ஆங்கிலத்தில் Hoopoe
என்ற இப்பெயர் வரக் காரணம்
அதன் குரலெழுப்பும் சப்தம்தான். இவை சப்தமிடும்போது ஹுப்… ஹுப்… என்ற ஒலியே வெளிப்படும். இதனாலயே இப்பெயர் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவியலில்
விலங்கினங்களின் குரலொலியை வைத்துப் பெயரிடும் முறை Onomatopoetic எனப்படுகின்றது. தமிழில் கொண்டலாத்தி என்பதற்குக்
காரணம் அது தன் தலைமேல் இருக்கும் கொண்டையை விரித்து நடனமாடுவதாலாகும்.
வாழிடப்
பிரதேசங்கள்.
ஹுத் ஹுத் பறவைகள்
ஆசிய, ஐரோப்பிய, ஆப்பிரிக்கக் கண்டங்களில் வாழ்கின்றன. இந்தியா மற்றும்
இலங்கையில் இவற்றை காணலாம். பலஸ்தீன் நாட்டில் சட்டவிரோதமாக உருவாக்கப்பட்டுள்ள இஸ்ரேலின்
தேசிய பறவையும் இதுதான். ஆறு, குளம், ஓடை, வயல், பள்ளத்தாக்கு போன்ற
பிரதேசங்களில்தான் இவை வாசம் செய்கின்றன. காரணம் இந்த இடங்களில்தான் இவற்றுக்கு உணவைப்
பெற்றுக்கொள்வது இலகுவாக இருக்கும். இங்கு அருகில் இருக்கும் மரங்களைத் தம் அழகினால்
துளையிட்டு பொந்துகள் செய்து அவற்றினுள் கூடுகளை அமைத்து வாழ்கின்றன. ஹுத் ஹுத்களின்
கூடுகள் எப்போதும் குப்பை கூழங்களால் நிறைந்திருக்கும். ஏனெனில் இவை குப்பைப் பிரியர்கள்.
தோற்ற
அமைப்பு
ஹுத் ஹுத் பறவைகள்
பார்ப்பதற்கு மிகவும் அழகானவை. பழுப்பு நிற உடலும் அதில் பளிச்சென்ற கருப்பு,
வெள்ளை, சாம்பள் இறகுகளும் நீண்ட சற்று கீழ்நோக்கி வளைந்த
அலகும் கொண்டது இப்பறவை. இதன் விஷேட அம்சமே தலையில் இருக்கும் கிரீடம் அல்லது விசிறி
போன்ற சிறகுதான். தலையின் மேலுள்ள சிறகுகளை அவ்வப்போது சிலுப்பி, விறைப்பாக நிற்கவைப்பதால் அவை கொண்டைபோன்ற தோற்றத்தை
அளிக்கும். எனினும் எல்லா நேரத்திலும் அவை விரிந்து காணப்படுவதில்லை. தேவைப்படின் விரிக்கும்,
இல்லாதவிடத்து மடித்துக்கொள்ளும்.
அப்படி கொண்டையோடு காணும்போதெல்லாம் செவ்விந்தியனின் தலையலங்காரம்போன்றே இருக்கும்.
ஹுத் ஹுத் பறவை தோற்றத்தில்
அழகுபோன்றே அது பறந்து செல்லும் விதமும் அழகோ அழகு. அலைபோல மேலெழும்பி கீழே தாழ்ந்து
பறந்து செல்லும். அப்போது இறக்கைகளை அடித்துக் கொண்டும் பிறகு உடலோடு சேர்த்து வைத்தும்
பறந்து செல்லும். அப்போது அதன் இறக்கைகளிலும் வால் சிறகுகளிலும் உள்ள கருப்பு வெள்ளை
வரிகள் அழகாகத் தோற்றமளிக்கும். இவற்றின் நீண்ட அலகைப் பார்த்து சிலர் இவற்றை மரங்கொத்தி
என்று தவறாகக் நினைத்துவிடுகின்றனர். உண்மையில் இவை மரங்கொத்தி, மீன்கொத்தி வகையைச் சேர்ந்தவை என்றாலும் அவற்றிலிருந்து
வேறுபட்டவை.
வழ்க்கை
முறை.
இவை கூட்டாக வாழ்வதில்லை.
தனியாகவே தென்படும். இனப்பெருக்க காலத்தில் மட்டும் ஆண் பெண் ஹுத் ஹுத்கள் ஒன்று சேரும்.
ஆண், பெண் இரு பறவைகளும் ஒரே தோற்றத்தைக்
கொண்டவை. இனப்பெருக்க காலத்தில் ஆண் பறவை பெண் பறவையைக் கவர்வதற்காக தனது தலையின் மீதுள்ள
விசிறிபோன்ற கொண்டையை சிலிர்த்துக்கொண்டு, இறக்கையை விரித்துக்கொண்டு நடனமாடும். பின்பு இனை சேரும். அதன் பின் இரண்டும் ஒன்றாகச்
சேர்ந்து தமக்கான கூட்டைத் தெரிவுசெய்யும். உயரமான மரப் பொந்துகளிலோ, செங்குத்தான மேட்டுப் பகுதிகளிலோ துளைகளையிட்டு
குப்பை கூழங்களால் அதனுல் கூட்டை அமைக்கும். எனவே இவற்றின் கூடு துர்நாற்றம் வீசக்கூடியதாகவே
இருக்கும்.
வருடத்தில் இருமுறை
பெண்பறவை குஞ்சு பொறிக்கும். ஒரு தடவையில் ஏழு முட்டைகளையிடும். முட்டைகளைத் தொடர்ந்தும்
தாய்ப்பறவையே அடைகாக்கும். அப்போது அதற்கான உணவை தந்தைப் பறவையே கொண்டுவந்து கொடுக்கும்.
மூன்று வாரங்களில் முட்டை பொறிந்து குஞ்சுகள் வெளிவரும். இனி ஆண் பறவை குஞ்சுப் பறவைகளுக்கும்
சேர்த்து உணவு கொண்டுவரும். இவற்றின் உணவு வெட்டுக்கிழி, கரப்பான் பூச்சி, வண்டு, கரையான் போன்ற பூச்சிகளும் பல்லி, ஓனான், தவளை, மண் புழு, பூரான் போன்றவையும்தான். தனது நீண்ட அலகினால் நிலத்தைக்
கிளறிக் கொத்தி இவ்வுணவுகளைக் கொண்டுவந்து கொடுக்கும். இவ்வாறு பெற்றோரின் அரவணைப்பில்
வளர்ந்த குஞ்சுகள் நான்கு மாதங்கள் சென்றதும் சுயமாக வாழ்க்கையை ஆரம்பிக்க பறந்துசென்றுவிடும்.
ஒரு பறவை 11 வருடங்களுக்கு மேல்
வாழக் கூடியது.
செய்தி
கொண்டுவந்த ஹுத் ஹுத்.
சுலைமான் (அலை) அவர்களின்
சரித்திரத்தில் முக்கிய இடம்பிடித்த பறவைதான் இந்த ஹுத் ஹுத் பறவை. சுலைமான் நபியவர்கள்
தமது ஆட்சிக்குக் கீழ் இருந்த மனிதர்கள், ஜின்கள், பறவைகள், விலங்குகளுடனான ஓர் கூட்டத்தை ஒன்றுகூட்டினார்.
ஆனால் அந்த இடத்தில் ஹுத் ஹுத் பறவை இருக்கவில்லை. எனவே அவர் கோபப்பட்டு “எனக்கு என்ன ஆயிற்று?, “ஹுத் ஹுத்” எனக்குத் தென்படவில்லையா? அல்லது அது இன்று இந்த இடத்திற்கு சமூகமளிக்கவில்லையா?
(அது இங்கு வரவில்லையென்றால்)
நிச்சயமாக நான் அதைக் கடுமையாகத் தண்டிப்பேன். அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது
(சமுகமளிக்காததற்கான) தெளிவான காரணத்தை அது என்னிடம் கூற வேண்டும். (என்றும் கூறினார்.)”
அதனைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களை
அல்லாஹ் பின்வருமாறு அல்குர்ஆனில் கூறுகின்றான். பாருங்கள்.
“சிறிது நேரம் தாமதித்த
அது (அவரிடம் வந்து), ‘நீங்கள் அறியாத ஒன்றை
நான் அறிந்து, “ஸபஃ” (எனும் பிரதேசத்தி)லிருந்து உறுதியான ஒரு செய்தியுடன்
உங்களிடம் வந்துள்ளேன். அவர்களை ஆட்சி செய்யும் ஒரு பெண்ணையும் நிச்சயமாகவே நான் கண்டேன்.
அவள் எல்லா வளங்களும் வழங்கப்பட்டுள்ளாள். மேலும், அவளுக்கு பிரம்மாண்டமானதொரு சிம்மாசனமும் உள்ளது.
அவளும் அவளது கூட்டத்தாரும் அல்லாஹ்வை விட்டுவிட்டு சூரியனுக்கு சுஜூது செய்வதை நான்
கண்டேன். ஷைத்தான் அவர்களது செயல்களை அவர்களுக்கு அலங்கரித்துக் காட்டி, அவர்களை (நேர்) வழியை விட்டும் தடுத்து விட்டான்.
எனவே, அவர்கள் நேர்வழி பெற மாட்டார்கள்.
வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளிப்படுத்துகின்ற, மேலும் நீங்கள் மறைப்பவற்றையும் பகிரங்கப்படுத்துபவற்றையும்
அறிகின்ற அல்லாஹ்வுக்கு அவர்கள் சுஜூது செய்ய வேண்டாமா? உண்மையிலேயே வணங்கத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர
வேறு யாருமில்லை. (அவன்) மகத்தான அர்ஷின் இரட்சகனாவான்.” என்றெல்லாம் ஹுத் ஹுத் கூறியது. அதற்கு சுலைமான்
அவர்கள் “நீ உண்மைதான் கூறுகிறாயா?
அல்லது நீ பொய்யுரைக்கிறாயா?
என்பதை நாம் அவதானிப்போம்.
எனது இக்கடிதத்தை எடுத்துச் சென்று, அவர்களிடம் போட்டு விட்டு, அவர்களை விட்டும்
ஒதுங்கியிருந்து அவர்கள் என்ன முடிவு செய்கின்றார்கள் என்பதைக் கவனித்துப்பார்.”
என்றும் கூறினார் (அல்குர்ஆன்
– 27:20)
விலங்கினங்களின்
புத்திக் கூர்மை.
மேற்கூறிய சம்பவத்திலிருந்து
முக்கியமான சில விடயங்களை அறிந்துகொள்ள முடிகின்றது. இந்த அத்தியாயத்தில் வரும் எரும்பும்,
ஹுத் ஹுத் பறவையும் ஏனைய விலங்கினங்களிலிருந்து
வித்தியாசமான அற்புதங்கள் எதனையும் பெற்றவை அல்ல. அவையும் வலமைபோன்ற பொதுவான உயிரினங்கள்தாம்.
அப்படியென்றால் அனைத்து உயிரினங்களுக்கும் இவைபோன்ற புத்திக் கூர்மைகள் உண்டு என்பதை
இதிலிருந்து விளங்கலாம். இந்த ஹுத் ஹுத் பறவையின் அபார அறிவைப் பாருங்கள்.
1.தான் ஸபஃ பிரதேசத்திலிருந்து
வருவதாகக் கூறியது. அப்படியென்றால் இடங்களையும் அவற்றின் பெயர்களையும் அறியும் ஆற்றல்
உயிரினங்களுக்கு உண்டு.
2.உலகத்தையே ஆட்சிசெய்த சுலைமான் நபியிடம் “நீங்கள் அறியாத செய்தியைக் கொண்டுவந்துள்ளேன்”
என்று கூறியது. அப்படியானால்
ஆறறிவுள்ள மனிதனுக்குத் தெரியாத விடயங்களும் இந்த உயிரினங்களுக்குத் தெரியும்.
3.ஒரு பெண்ணைக் கண்டேன் என்று கூறியது. அப்படியானால்
மனிதர்களில் உள்ள ஆண், பெண் வேறுபாடு பற்றியும்
அரசன் யார் அடிமை யார் என்பது பற்றியும் தன் எஜமானன் யார் என்பது பற்றியும் அவற்றுக்குத்
தெரியும். அந்த எறும்பு கூட சுலைமான் நபியையும் அவரது படையையும் அடையாளம் கண்டுகொண்டதே!
4.அவற்றுக்கென்றும் தொடர்பாடல் மேற்கொள்வதற்கான மொழிகளும்
காணப்படுகின்றன.
5.எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ்வை மட்டுமே வணங்கவேண்டும்,
அவனுக்கு இணைவைக்கக் கூடாது,
இணைவைப்பது பாவம்,
வழிகேடு என்பது பற்றியெல்லாம்
இந்த உயிரினங்களுக்கு நன்கு தெரியும்.
ஆக சுலைமான் நபியுடன்
பேசிய எரும்பைப்போன்றும் ஹுத் ஹுதைப் போன்றும் நபி முஹம்மத் (ஸல்) அவர்களுடன் உரையாடிய
விலங்கினங்களைப்போன்றும் எம்மைச் சூழ இருக்கின்ற
அனைத்து உயிரினங்களுக்கும் உணர்வும், அறிவும், பேச்சாற்றலும் இருக்கின்றது.
நபிமார்களால் அவற்றை அறியமுடியுமாக இருந்தது. ஆனால் எம்மால் அவற்றை முழுமையாக அறிய
முடிவதில்லை. எனவே உயிரினங்கள் மீது அன்பு காட்டவேண்டும். மதித்து நடக்க வேண்டும்.
அவையும் எம்மைப்போன்ற ஒரு சமூகம்தான்.
“பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும்
தம் இரு இறக்கைகளால் பறந்துசெல்லும் பறவைகளும் உங்களைப்போன்ற இனங்களேயாகும்.” (6:38)
1 comments:
Thanks brother
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...