"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

29 September 2020

சவால்களை எதிர்கொள்ளும் இகுவானா பல்லிகள்.

அறிமுகம்.

நீங்கள் இங்கு படத்தில் காண்பது ஆங்கிலத்தில் இகுவானா (Iguana) எனவும் தமிழில் பேரோந்தி எனவும் அறியப்படும் ஒருவகைப் பல்லி இனத்தைத்தான். இது உலகில் வாழும் மிக அறிய மற்றும் அற்புதமான உயிரினங்களில் ஒன்று. இந்த இகுவானாக்கள் தற்போது மத்திய மற்றும் தென் அமெரிக்கா, மெக்ஸிகோ, கலாபிகஸ் தீவுகள், கரிபியன் தீவுகள், பிஜி மற்றும் மடகஸ்கார் ஆகிய பகுதிகளில் பரவலாக வாழ்கின்றன. பிறந்ததிலிருந்து பல அபாயகரமான கட்டங்களைக் கடந்து, தமது உயிரைத் தக்கவைத்துக்கொள்வதற்காக பல்வேறு போராட்டங்களை நடாத்தி உயிர் தப்பி வாழும் ஆச்சரியமான வாழ்க்கைப் பாடத்தை இவை நமக்கு சொல்லித்தருகின். இவற்றிலிருந்தும் பாடம் கற்போம் வாருங்கள்.

உடற் தோற்ற அமைப்பு.

மேலுள்ள படத்தைப் பார்த்தாலே இதன் தோற்றத்தைப் புரிந்துகொள்ள முடியும். பார்வைக்கு இது பல்லி மாதிரியும் பச்சோந்தி மாதிரியும் இருக்கும். ஆனால் பச்சோந்தியை விட அளவில் சற்று பெரிதாகவும், பருத்து குட்டையாகவும், உடல் முழுதும் கடினமான, சுரசுரப்பான, தடிமனான தோல் பகுதியையும் கொண்டுள்ளது. இதன் தாடையருகே இருபக்கமும் உள்ள சதையும் தோலும் மடிந்து தொங்கிக்கொண்டிருக்கும். கூர்ந்த பார்வைச் சக்தியை இவை பெற்றிருக்கின்றன. மன்டுமன்றி இவற்றின் தலையின் மீது மூன்றாவது ஒரு கண்ணும் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது உடலின் மெலிதானதொரு தோலினால் மூடப்பட்டிருக்கும். தமது தலைக்கு மேலால் விழும் நிழலசைவை உணர்ந்து செயற்பட இது உதவி செய்யும். கண்களுக்குப் பின்னே கழுத்துப்புறம் ஒலி உணரும் காதுகள் (செவிப்பறை) உள்ளன.

ஊர்ந்து செல்லத் தக்கவாறு நீண்ட கால்களும் விரல்களில் நீண்ட நகங்களும் மேல் புறத்தால் தலை முதல் வால் வரை வரிசையாக முட்கள் போன்ற அமைப்பும் இருக்கும். வளர்ந்த ஒரு இகுவானாவின் நீளம் தலை முதல் வால் வரை 7 அடிகளாகவும் ஆறு கி.கி. வரை நிறை கொண்டதாகவும் இருக்கும். இவற்றால் மணிக்கு முப்பத்தி ஐந்து கிலோமீட்டர் வேகத்தில் ஓடமுடியும். அதேபோன்று 15 முதல் 20 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.

இனப் பல்வகைமை

இகுவானா வெப்ப மண்டலத்தில் வாழும்  முதுகெலும்புள்ள  ஊர்வன வகையைச் சேர்ந்த உயிரினமாகும். இக் குடும்பத்தில் எட்டு பெரிய இனங்களும் அதுவல்லாத 30 தனி சிறிய இனங்களும் உள்ளன. பெரிய இனத்தில் உள்ளவை மட்டுமே பரவலாக அறியப்படுகின்றன. ஒன்று இகுவானா இகுவானா (iguana iguana) என்னும் அறிவியற் பெயர் கொண்ட பச்சை இகுவானாவும் மஞ்சள் இகுவானாவுமாகும். இவை அடர் சிவப்பு, கரும் பச்சை மற்றும் பாறைச் சாம்பல் போன்ற வித்தியாசமான நிறங்களில் காணப்படுகின்றன.  இவற்றை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால், கண்டிப்பாக அந்த இடத்தை விட்டு நகர முடியாமல் இவற்றின் அதிசயிக்கத்தக்க பண்புகள் உங்களை கட்டிப்போட்டு விடும் என, இதனை செல்லப் பிராணியாக வாளர்ப்பவர்கள் கூறி வியக்கின்றனர்..

செல்லப் பிராணி.

தற்போது இகுவானாக்கள் பரவலாகக் காணக்கிடைத்தாலும் சுமார் 40 வருடங்களுக்கு முன்னர், இந்த இகுவானாக்கள் முற்றிலுமாக அழிந்து போயிருந்ததாக விலங்கியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இருப்பினும் மெக்ஸிகோ வனப்பகுதிகளில் இவை  சிறிய அளவில் மறைந்து வாழ்ந்து வந்துள்ளன. அப்போது மெக்ஸிகோவைச் சேர்ந்த ரோமோன் என்பவரால் இவை கண்டெடுக்கப்பட்டு, அவரது சொந்த செலவில் இவற்றுக்கென்று சரணாலயம் உருவாக்கப்பட்டு விலங்கு ஆர்வளர்களின் உதவியுடன் பாதுகாப்பாகப் பராமரித்து வளர்த்தெடுத்துள்ளார். இப்போது இவை பரவலாக மெக்ஸிகோ, உள்ளிட்ட பல இடங்களில் வாழ்கின்றன.

மெக்ஸிகோ நாட்டு மக்கள் இகுவானாக்களை தாராளமாக செல்லப் பிராணியாக வளர்க்கின்றனர். அங்கு இவை செரிந்து வாழ்கின்றன. அதனால் இவை மெக்ஸிகோவின் செல்லப்பிராணி என்றும் அழைக்கப்படுகின்ற. இவை சாதுவானவை என்றும் இலகுவாக மனிதர்களுடன் பழக்கமடைகின்றன என்றும் பழகுவதற்கு மிகவும் வசீகரமானவை என்றும் வளர்ப்பாளர்கள் கூறுகின்றனர். இகுவானாக் குட்டியைச் சிறுவயது முதலே தொடர்ந்து தூக்கி வைத்து, நம்மோடு நட்புடன் இருக்கப் பழக்கப்படுத்தினால் பூனை, நாய் போன்று இவையும் விசுவாசமாக நடப்பதாகவும் கூறுகின்றனர்.

உணவு.

நிலத்தில் அதிகமாக வாழும் இகுவானாக்களின் உணவு பெரும்பாலும் இலைகளும், மலர் மொட்டுகளும், காய்கறி வகைகளும் பழ வகைகளும்தான். அத்தி மரம் மற்றும் பிற மரங்களின் பழங்களையும் இவை விரும்பி உண்ணும். கீரைகள்தான் மிகவும் பிடித்த உணவு. பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் கூட உண்கின்றன. மற்ற பல்லி, பச்சோந்தி இனங்களைப் போல் அல்லாமல் இவற்றின் உடலில் இலை, தழை உணவுகளைச் செரிக்க உதவும் நுண்ணுயிரிகள் காணப்படுகின்றன. கடல் வாழ் இகுவானாக்கள் கடல் பாசிகளையும், சிறு பூச்சி, புழுக்களையும் சிறிய மீன்களையும், பிளான்டன்களையும் உணவாகக்கொள்கின்றன. 

இணப் பெருகம்.

மழை காலங்களில்தான் இவை இனப்பெருக்கத்திற்குத் தயாராகின்றன. பொதுவாகக் கறுப்பு நிறத்தில் இருக்கிற இகுவானாக்கள் இனப்பெருக்க காலத்தின் பொழுது சிவப்பு, பச்சை, ஆரஞ்சு நிறத்துக்கு மாறுகின்றன. இக்காலங்களில் ஆண்கள் தமக்கென்று ஒரு ஆட்சிப்பகுதியை வரையறை செய்துகொள்ளும். பெண் இகுவானாவை அந்த எல்லைக்குள் வைத்துக்கொள்ளும். வேறு ஆண் இகுவானாக்களுக்கு அந்த எல்லைக்குள் நுழைய அனுமதிக்காது. மீறி நுழைந்தால் சண்டையிட்டுத் துரத்தியடிக்கும். மழைக்காலம் முடியும் தருவாயில் பெண் இகுவானா 30 முதல் 50 வரையான கருவுற்ற முட்டைகளை மணல் பாங்கான இடத்தில் மணலைத் தோண்டி இடும். முட்டை பொரியும் நாள் சமீபிக்கும் வரை பெண் அதே இடத்தில் முட்டைகளை காவல் காக்கும். இவை 70 முதல் 105 நாட்களில் பொரித்து இகுவானாக் குஞ்சுகள் வெளிவரும். இவை 7 செ.மீ  நீளமாக இருக்கும்.

போராட்டம் மிக்க வாழ்க்கை

கடல் இகுவானா (marine iguana) எனும் இனம் ஈகுவாடோர் நாட்டின் கலபோகஸ் தீவுகளை (Galapagos Islands)   உள்ளடக்கிய தீவுகளில் முக்கியமான தீவான பெர்னான்டினா தீவிலும் (Fernandina island), அதன் சுற்றுப் புறத்திலுள்ள தீவுகளிலும் மட்டுமே காணப்படுகின்றன. இவை நிலவாழ் இனத்தைவிட சற்று வித்தியாசமான திறன் பெற்றதாக உள்ளது. பிறந்த அடுத்த கணத்திலிருந்து தனது உயிரைத் தக்கவைத்துக்கொள்ள பெரும் போராட்டமொன்றை அத்தீவில் இவை நடாத்தியாகவேண்டும். அப்படியான அபாயகரமானதொரு சூழல்தான் அந்தத் தீவில் காணப்படுகின்றது. இகுவானாக்கள் எதிரிகொள்ளவேண்டிய சவால்களைப் பாருங்கள்.

எரிமலை

La Cumber என்கிற ஒரு எரிமலை இத்தீவில் இன்னும் உயிரோடு மூச்சிறைத்துக்கொண்டு இருக்கிறது. 2009-ம் ஆண்டு இந்த எரிமலை தொடர்ந்து 20 நாட்கள் தன் நெருப்புக் குழம்புகளைக் கக்கியது. தீ குழம்புகள் ஆறுபோல பாய்ந்து கடலில் கலந்தன. இத்தீவின் 640 சதுர கிலோ மீட்டர்களும் கருமையான எரிமலைக் குழம்புகளால் சூழப்பட்டிருக்கிறது. எப்போது வெடிக்கும்என்று தெரியாமல் ஒருவித பதற்ற நிலையில் இருக்கிறது இந்த எரிமலை. இது வெடித்தால் அங்குள்ள இகுவானாக்களின் கதை அவ்வளவுதான்.

தற்காப்பு முறை

என்றாலும் அப்படியொரு சங்கதி நேர்ந்தால் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் நுட்பத்தை அல்லாஹ் அவற்றுக்குக் கொடுத்துள்ளான். இத் தீவுகளில் வாழும் இகுவானாக்கள் மற்றைய இன இகுவானாக்களைவிட வித்தியாசமான கூடிய ஒரு தற்காப்பு நுட்பத்தைப் பெற்றிருக்கின்றன. அதுதான் இவற்றால் கடல் நீரிலும் நீந்தி, மூழ்கிச் சென்று வாழ முடியும். இகுவானாக்களின் பலவீனம் எரிமலை, அவற்றின் பலம் கடல். ஆழ் கடலில் 30 நிமிடங்களுக்கும் மேல் மூச்சுப்பிடித்து இவற்றால் இருக்க முடியும். இவை காற்றில் உள்ள ஒட்சிசனைச் சுவாசித்து வாழும் இனம் என்பதால் 30 நிமிடங்களுக்குப் பிறகு, காற்றைச் சுவாசிப்பதற்கு மீண்டும் தண்ணீரின் மேற்பகுதிக்கோ அல்லது கரைக்குத் திரும்பிவிடுகின்றன. கடலில் இருக்கும்போது இகுவானாக்களின் இதயத்துடிப்பு பாதியாகக் குறைந்துவிடுகின்றன. இதனால் அவை  நீண்ட நேரத்துக்கு மேல் கடலுக்குள் இருக்க உதவுகிறது. இகுவானாவின் முக்கிய உணவு கடல் பாசிகள். கடலுக்கு அடியில் பாறைகளில் படிந்துள்ள பாசிகள்தான் அவற்றின் முக்கிய உணவு.

Galapagos Racer பாம்புகள்.

கலபோகஸ் தீவுகளில் வாழும் மற்றுமொரு உயிரினம்தான் இந்த ரேஸர் பாம்புகள். கறுமை நிற சிறியவகைப் பாம்புகளாக இருப்பினும் மிகவும் ஆபத்தானவை, விஷத் தன்மை கொண்டவை. பெரிய இகுவானாக்களை இவற்றால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் இப்பாம்புகள் இகுவானாக் குஞ்சுகளைத்தான் குறிவைத்துக் காத்திருக்கின்றன. இணை சேர்ந்த பின்பு முட்டையிடுவதற்காக தாய் இகுவானா மணற் பாங்கான கடற்கரையைத் தெரிவு செய்கின்றது. குழிதோண்டி முட்டையிட்டுவிட்டு அடைகாத்த பின்பு முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவரும் சில நாட்களுக்கு முன்பாக தாய் அங்கிருந்து சென்றுவிடுகின்றது. குஞ்சு இகுவானாக்களின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ரேஸர் பாம்புகளுக்கு இது நல்ல தருணம். மணலிலிருந்து வெளியே வருகிற குஞ்சுகள் பாம்புகளைக் கடந்து கடலுக்குச்சென்றால் மட்டுமே அவற்றால் தொடர்ந்தும் உயிர் வாழ முடியும். நூற்றுக்கணக்கான பாம்புகளிடமிருந்து தப்பிக்கும் அந்த 5 நிமிடங்களில்தான் அவற்றின் வாழ்வும் சாவும் நிர்ணயமாகின்றது. முட்டையிலிருந்து வெளியே வந்ததை தமது நுகரும் சக்தியாலேயே பாம்புகள் கண்டுபிடித்துவிடுகின்றன.

தற்காப்பு முறை

பிறந்து அரை மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள் பல விடயங்களை இகுவானாக் குஞ்சுகள் கற்றுக்கொள்கின்றன. அல்லாஹ் அவற்றுக்குக் கற்றுக்கொடுக்கின்றான். மிக வேகமாக ஒடவும், திசை மாற்றி மாற்றி ஓடவும் பாறைக்குப் பாறை தாவவும், கடல் இருக்கும் திசையை அறியவும் அவை பிறந்து ஐந்து நிமிடங்களுக்குள் கற்றுக்கொள்கின்ற. சுப்ஹானல்லாஹ்! பாம்புக்குப் பார்வை சரியாகத் தெரியாது என்பதால் மற்ற உயிரினங்களின் நடமாட்டத்தை, வாசனை மூலம் உள்வாங்கியே இரையைப் பிடிக்கும். பாம்புகளின் உடலிலுள்ள நுகர் அணுக்கள், இகுவானா குஞ்சுகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் கொடுத்துக்கொண்டே இருக்கும். செய்தி பாம்பின் மூளையை அடைகிற நொடிக்கு முன்பாக இகுவானா குஞ்சுகள் தப்பித்து ஓடியாக வேண்டும். இந்த நுட்பங்களையெல்லாம் அவை துரிதமாகக் கற்றுக்கொள்கின்றன. உலகிலேயே பிறந்தவுடன் பாடம் கற்றுக்கொள்கிற ஒரே உயிரினம் இகுவானா குஞ்சுகள்தான். எப்படித் தப்பி ஓடினாலும் பத்தில் ஆறு குஞ்சுகள் பாம்புகளுக்கு இறையாகிவிடுகின்றன. ஓர் உயிர் படைக்கப்படுவதே இன்னொரு உயிர், உயிர் வாழ்வதற்குத்தான் என்கிற விதி இங்கு சரியாகிவிடுகின்றது. இந்தக் காட்சிகளை 2016-ம் ஆண்டு பிபிசி எர்த் தொலைக்காட்சி பதிவு செய்திருக்கிறது. இளகிய மனம் படைத்த பலரையும் பதற்றத்தில் வைத்திருந்த காட்சிகள் இப்போதும் இணையத்தில் காணக்கிடைக்கின்றன. Youtube பக்கம் சென்று survival of iguana என்று தட்டிப் பாருங்கள்.

Galapagos பருந்துகள்.

எப்படியோ தப்பி ஓடி பாம்புகளைக் கடந்துவிட்டால் இன்னொரு சவால் முன்னே இருக்கின்றது. அதுதான் கலாபாக்கோஸ் பருந்துகள். இவற்றின் முக்கிய இரையே இகுவானாக் குஞ்சுகளும், ரேஸர் பாம்புகளும்தான்.

தற்காப்பு முறை

இந்த இகுவானாக்களின் நிறமும் பாறைகளினதும், மணலினது நிறமும் ஒரே அமைப்பில் உள்ளதால் பருந்துகளால் இலகுவாக இவற்றை அடையாளம் காண முடிவதில்லை. அதேபோல் ஏற்கனவே கூறியது போன்று இவற்றின் தலையில் இருக்கும் மூன்றாவது கண்ணும் பருந்துகளிடமிருந்து தப்பிக்க இவற்றுக்கு துணைசெய்கின்றன.

பிற சவால்கள்

இவை எல்லாவற்றையும் கடந்து தப்பி கடலுக்கு வந்தால் அங்கும் பெரிய மீன்கள், சுறாக்கள், முதலைகள் போன்ற நீர் வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றிடமிருந்தும் தப்பித்து வாழ்ந்தாகவேண்டும். இன்னும் மனிதனும் இவற்றை விட்டு விடாது உணவுக்காகவும், அவற்றின் தோலுக்காகவும், செல்லப் பிராணியாக வளர்ப்பதற்காகவும் வேட்டையாடி வருகின்றான். இந்த எல்லாவகையான சவால்களையும் எதிர்கொண்டால் மட்டுமே உயிர் வாழ்க்கை சாத்தியம். பிறந்தது முதல் தன்நம்பிக்கையோடு சவால்களுக்கு முகம்கொடுத்து தலை நிமிர்ந்து வாழும் பாடத்தை அல்லாஹ் இந்த உயிரினத்தின் மூலம் எமக்குக் கற்றுத் தருகின்றான். அல்ஹம்துலில்லாஹ்! படிப்பினை பெறுவோமா?

அஷ்.ஆலிப் அலி (இஸ்லாஹி) 

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...