"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

09 June 2015

உழவர்களின் நண்பன் மண்புழு

Earthworm என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மண்புழுக்கள் உழவர்களின் நண்பன் என்று பெயர் பெற்றவையாகும். உலகில் ஈரப்பதனுள்ள அனைத்துப் பகுதிகளிலும் வாழும் இவை மனித வாழ்க்கைக்குப் பெரிதும் உதவுகின்றன. உலகில் 7000 இற்கும் அதிகமான மண்புழு வகைகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் வாழ்க்கை வட்டத்தில் இறைவன் வைத்துள்ள அற்புதங்களைக் கண்டறிவோம்.
உடலமைப்பு
சிவப்பு, இளஞ்சிவப்பு, சாம்பள், வெள்ளை, கருப்பு என பல நிறங்களிலும் நீங்கள் மண்புழுக்களைக் கண்டிருப்பீர்கள். அவற்றின் உடலில் இருக்கும் வழுவழுப்பான தன்மையும் வலைந்து நெழிந்து ஊர்ந்து செல்லும் அமைப்பும் சிலபோது எமக்கு அருவருப்பை ஏற்படுத்துகின்றது. இவை முள்ளந்தண்டிலிகள் என்பதால் வளைத்தசை உருளைப் புழுக்களின் (Annelida) தொகுதியில் உள்ளடங்குகின்றன. மண்புழுக்களின் உடல், நுனி முதல் அடி வரை குழாயமைப்பில் காணப்படுகின்றன. அத்தோடு முன் வாய்ப்பகுதியும் பின் குதப்பகுதியும் முனைபோன்ற அமைப்பிலும் நடுப்பகுதி தடிப்பாகவும் அமைந்திருக்கும்.
மண்புழுக்களின் உடல் வெளித்தோற்றத்தில் அடுக்கடுக்காகப் பல பிரிப்புகளாக அமையப்பெற்றுள்ளதை அவதானிக்கலாம். பின் பகுதியால் இதில் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டாலும் காலப்போக்கில் மீண்டும் அது வளர்ந்துவிடும் அற்புதத் தன்மை இவற்றுக்கு உண்டு. முன்  நுனிக்கு அருகே சற்று பருத்த வலயம் ஒன்றும் காணப்படுகின்றது. இது புழுக்களின் வாழ்க்கையில் இனப்பெருக்கத்திற்கு உதவும் முக்கியமானதொரு பகுதியாகும். ஆங்கிலத்தில் இது கிளைடெல்லம் (clitellum) என்றழைக்கப்படுகிறது.
சாதாரணமாக எமது நாட்டில் உள்ள மண்புழுக்கள் 15 முதல் 20 சென்றி மீட்டர் நீளம் வரை வளர்கின்றன. அவுஸ்ரேலிய மண்புழுக்கள் 3 அடி வரை வளர்கின்றன. கால, சூழல், உணவு முறைகளுக்கு ஏற்ப அவற்றின் வளர்ச்சி வித்தியாசப்படும்.
வாழிடம்
பூமியின் குடல்கள் என வர்ணிக்கப்படும் மண்புழுக்களின் வாழ்க்கைக்கு நீர் இன்றியமையாதது என்பதால் உலகில் ஈரப்பதன் உள்ள இடமெங்கும் மண்புழுக்களைக் கண்டுகொள்ளலாம். குளக்கரை, ஆற்றங்கரைகளிலும் நீரோடைகளுக்கு அருகாமையிலும் வயல் வெளிகள், சேற்று நிலங்கள், பசும் புற்றரைகள் என எங்கும் மண்புழுக்கள் வாசம்செய்கின்றன.

இவற்றின் முன், பின் பகுதிகள் மண்ணைத் துளையிடுவதற்கு ஏற்றவிதத்தில் கூர்மையாக இருப்பதால் மண்ணைக் குத்தித் துளையிட்டு உள்ளே ஊடுருவி வாழ்கின்றன. தமது உடலில் உள்ள வழுவழுப்புத்தன்மை மண்ணை ஊடுருவிச் செல்ல உதவுகின்றது. தமது உடல் நிறையைவிடவும் பத்து மடங்கு பலமாக மண்ணை முட்டி மோதித் துளைக்கும் ஆற்றலை அல்லாஹ் இவற்றுக்குக்கொடுத்துள்ளான்.
தொடர்பாடல் முறை
மண்புழுக்களுக்கு ஒலியெழுப்பும் ஆற்றலோ பார்வைச் சக்தியோ கேள்விப் புலனோ வழங்கப்படவில்லை. இதன்காரணமாகத்தான் ஸ்பரிச (தொடுகை மூலம் ஏற்படும்) உணர்ச்சியை அல்லாஹ் இவற்றின் தோல்களுக்கு அதிகமாகவே கொடுத்துள்ளான். இவற்றுக்கு மூக்கும் இல்லை, எனவே இவை சுவாசிப்பதும் தோல்கள்மூலமாகத்தான். எந்தவொன்றையும் ஸ்பரிசித்து அதனை உணர்ந்துகொள்ளும் ஆற்றல் இவற்றுக்கு உண்டு. அவற்றை மெதுவாகத் தொட்டுப் பாருங்கள் உடனே துடி துடித்துத் தப்பிக்க முயலும். எமது உடலில் இருள் பட்டாலும், வெளிச்சம் பட்டாலும் அதனை உணர முடிவதில்லை. ஆனால் இவை இருளும், ஒளியும் தமது உடலில் படுவதை உணர்ந்து அதன்மூலம் இரவா? பகலா? என்பதைப் பிரித்தரிகின்றன. சுபஹானல்லாஹ்! இது எவ்வளவு பெரியதொரு அற்புதம்.
இதனுடன் சேர்த்து சிறியளவில் மோப்ப சக்தியும் இவற்றுக்கு உண்டு. அதனையும் தோல்களே செய்கின்றன. அருகில் உள்ள உணவையும், தமது பயணப் பாதையையும், எதிரிகளையும் ஸ்பரிசத்தின் மூலமும் மோப்பசக்தியின் மூலமும் அடையாளம்கண்டு கொள்கின்றன. இரவு நேரங்களில் பூமியின் மேல் பகுதிக்கு வரும் மண்புழுக்கள் இரண்டு, ஒன்றை ஒன்று அண்மித்ததும் தொடுகை மூலம் தமது செய்திகளைப் பரிமாறிக்கொள்கின்றன. இதனால்தான் மண்புழுக்கள் எப்போதும் ஒரு குவியலாகவே இருக்கும்.
ஊர்ந்துசெல்லும் அற்புதம்
மண்புழுவின் புறத்தோல், வளைத்திசுக்களால் ஆனது. அதன் கீழ்ப்பகுதியில் கண்களுக்குத் தெரிபடாத பெருந்தொகையான நுண்ணிய முடிகள் இருக்கின்றன.

இந்த தசைநார்கள் சுருங்கும்போது, மண்புழு அளவில் சிறியதாகி, உடல் பருத்து விடும். இதன்போது உடலின் பின்பகுதியின் கீழ் உள்ள நுண்ணிய மயிர்கள் தரையை அழுத்திப் பிடித்துக்கொள்ளும். வளைத்திசுக்கள் விரியும்போதுமண்புழுவின் உடல் நீண்டு விடும். இதன்போது பின் பகுதி மயிர்கள் விடுபட்டு முன் பகுதி மயிர்கள் தரையை அழுத்திப் பிடித்துக்கொள்ளும். இப்படி மாறி மாறி நார்தசைகள் இயங்குவதாலும் நுண் மயிர்களின் இயக்கத்தாலும், மண்புழு ஓரிடமிருந்து இனோரிடத்திற்கு நகர்கின்றது.

மட்டுமன்றி மண்புழுக்கள் முன்னோக்கியும் பின்னோக்கியும் நகரும் விதத்தைப் பார்த்தால் அவற்றுக்கு முன்னும் பின்னும் இரண்டு தலைகள் இருப்பதுபோன்று விளங்கும்.
உணவு முறை
பொதுவாக நாம் கழிவுகள், அழுக்குகள் என பூமிக்குள் புதைப்பவற்றையெல்லாம் அவை உண்கின்றன. இலை, குலைக் குப்பைகள், மரத்தூள், கரும்புச் சக்கை, தேங்காய்ப் பூ, தோங்காய் மட்டை, மனித மலம், மாட்டுச் சாணம், சமயலறைக் கழிவுகளான பழைய சோறு, கறி என அனைத்தையும் இவை உண்கின்றன. இவ்வாறு உண்டு எமது சூழலை சுத்திகரிக்கும் பணியையும் மண்புழுக்கள் செய்து தருகின்றன. மண்தான் இவற்றின் பிரதான உணவு. உடலின் முன் நுனியிலுள்ள வாயால் இவற்றை விழுங்கி, உடலின் இறுதிவரை அனுப்பும் போது இடையே பல்வேறு கட்டங்களில் செரிமானம் நடைபெற்று இருதியாக கழிவு வெளியேறுகின்றது.
விவசாயியின் நண்பன்
மனிதன் மட்டுமன்றி காலா காலமாக மண்புழுக்களும் மண்ணை உழுதுவருகின்றன. இது விவசாயிகளுக்கு மட்டுமன்றி தாவரங்களுக்கும் பெரும் பயனைத்தருகின்றது. மண்புழுக்கள் எப்போதும் மண்ணை உண்டு, விழுங்கி கழிவுகளாக அவற்றை வெளியேற்றிக் கொண்டிருப்பதால் மண் வளம்பெறுகிறது. மேலேயுள்ள மண் கீழே செல்வதற்கும் மக்கிப்போய் வளமாய் இருக்கும் அடிமண் மேலே வருவதற்கும் மண்புழுக்கள் காரணமாயிருக்கிறன.

மண்ணோடு புதைந்த இலை தழைகளை உண்டு வெளிக்கொணர்ந்து அவைகளை அருமையான உரமாக்கிவிடுகின்றன. இம்முறையால் மண் வளம்பெருகிறது. மண்புழுவின் இந்த சேவையினால் பல இடங்களில் ஆண்டுக்கு அங்குல நிலம் உயர்கிறது. இங்கிலாந்தில் ஆண்டுதோறும் சில பகுதிகளில் ஏக்கர் ஒன்றுக்கு பத்தாயிரம் டொன் காய்ந்த மண் வீதம் நிலத்தின் கீழ் சென்று உரமான மண் மேற்பரப்புக்கு வந்துசேர்கின்றது. அத்தோடு மண்ணிலுள்ள கரியமில வாயு வெளிவரவும் மண்புழு துணை செய்கிறது. மண்புழுக்கள் நிலத்தைக் குடைந்து உள்ளே செல்வதால் மண் மிருதுவாக மாறுகின்றது. அதன் துளைகளுடாக பசலை, காற்று, நீர் என்பன நிலத்தின் கீழ் செல்கின்றன. தாவரங்களின் மிருதுவான மயிர்வேர்கள் மண்ணை ஊடருத்துச் செல்லவும், வித்துக்கள் இலகுவாக முழைக்கவும் இது உதவுகின்றது. எனவே தாவரங்களின் வளர்ச்சி அமோகமாக நிகழ்கின்றது.
மண்புழு உரம். (Vermicomposting)
உண்மையில் மண்புழு உண்டுவிட்டு வெளியேற்றுபவற்றை கழிவுகள் என்று கூறுவதைவிட அது பூமிக்குத்தேவையான உரத்தை வழங்குகின்றது என்று கூறலாம். மண், புழுவின் வயிற்றுக்குள் செல்லும் போது பல மடங்கு சத்து கூட்டப்பட்ட உரமாக வெளிவருகிறது. மண்புழு உரத்தில் தழைச்சத்து, சாம்பல்சத்து, மணிச்சத்து, போன்றவை கூடுதலாக கிடைக்கின்றன. மண்புழுக்களின் வயிற்றிற்குள் பெக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகமாக்கும் விதத்தில் தகுந்த சுரப்பிகள் சுரக்கின்றன. எனவே நுண்ணுயிர்களின் எண்ணிக்கை பெருக்கத்திற்கு மண்புழு உதவுகிறது. செடிகளுக்கும், பயிர்களுக்கும் தேவையான 16 வகையான சத்துக்களை மண்புழுக்கள் தருகின்றன. இதில் நைட்ரஜன், பொஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் தாது சத்துக்கள் என அனைத்து வகையான சத்துக்களும் அடங்குகின்றன.
இன்று அநேக நாடுகளில் மண்புழுக்களை பண்ணை முறையில் வளர்த்து அவற்றையும் அவற்றின் மூலம் கிடைக்கின்ற உரத்தையும் சந்தைப்படுத்தும் வியாபாரக் கலாசாரம் வளர்ந்துவருகின்றது. இந்திய அரசாங்கத்தால் மண்புழு வளர்ப்பு ஒரு குடிசைக் கைத்தொழில் முறையாக அங்கீகரிக்கப்பட்டு தொழில் ரீதியாக மானியமும் வழங்கப்பட்டது. மண்புழு வளர்ப்பு முறையை வேர்மிகல்சர் (Vermiculture) என்றும் மண்புழு உரத் தயாரிப்பை வேர்மிகம்போஸ்ட்டிங் (vermicomposting) என்றும் அழைக்கின்றனர். சீனா, ஜப்பான், பிலிப்பைன், தாய்லாந்து போன்ற நாடுகளில் உணவுக்காகவே மண் புழுக்கள் வளர்க்கப்படுகின்றன.
உங்களாளும் முடியும்
நீங்கள் வீட்டில் பூ மரங்கள், காய்கறித் தாவரங்களை நட்டு வளர்க்கின்றீர் என்றால் அதற்கான மண்புழு உரத்தை உங்களாலேயே தயாரித்துக்கொள்ளலாம். முதலில் செங்கற்களால் ஒரு நீண்ட சதுரம் அமைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தேங்காய் மட்டைகளை அதற்குள்ளே கொட்டி பரப்ப வேண்டும். அதன் மேல் அரை அடி உயரத்திற்கு வைக்கோல் பரப்ப வேண்டும். அதன் மீது மாட்டுச் சாணியை நீருடன் கலந்து தெளிக்கவேண்டும்.

பின்னர் மேலே உக்கிப்போன குப்பைகளை மண்ணுடன் கலந்து அதில் போட வேண்டும். இப்போது அதற்குள் மண்புழுக்கள் சிலதை விடவேண்டும். மண்புழுவை விட்ட பிறகு ஒரு பழைய சாக்கை தண்ணீர் தெளித்து மூடிவிட்டு அதற்குமேலால் தென்னை ஓலைகள் போட்டு மூடி விட வேண்டும். முப்பது நாட்களுக்கு இடையிடையே தண்ணீர் தெளித்துவிட்டு இரண்டு மாதங்களின் பின் அந்த சாக்கை நீக்கிவிட்டு சற்று மண்ணைக் கிளரிப் பாருங்கள் நூற்றுக்கணக்கில் புழுக்கள் உருவாகி இருப்பதைக் காண்பீர்கள். மட்டுமன்றி மண்ணின் அடியில் உள்ள குப்பைகளையெல்லாம் உண்ட மண்புழுக்கள் மேற்பரப்பிற்கு வந்து கழிவுகளைக் கொட்டியிருப்பதைக் காண்பீர்கள். அந்தக் கழிவுகளை அல்லி பயிர்களுக்குப் போட்டால் பயிர்கள் செழிப்பாக வளரும் மண் வளமாக மாறும். நல்ல விளைச்சல் கிடைக்கும்.
இணப்பெருக்க முறை

இதில் ஒரு அற்புதம் காணப்படுகின்றது. மண்புழுவை ஆண், பெண் என்று பிரிக்க முடியாது. காரணம் ஒரு மண்புழு அதன் உடலில் ஆண் இனப்பெருக்கத் தொகுதியையும் பெண் இனப்பெருக்கத் தொகுதியையும் ஒருசேரக் கொண்டுள்ளது. சூரிய வெளிச்சம் இவற்றின் உடலைப் பாதிக்கும் என்பதால் இரவு நேரங்களில் வெளிவரும் இரண்டு மண்புழுக்கள் இணைந்து தமக்குள் உயிரணுக்களைப் பரிமாறிக்கொள்கின்றன. இதன் மூலம் ஒரே தடவையில் இரண்டு புழுக்களிலும் கருக்கட்டல் நடந்து 3 வாரங்களில் முட்டையிடுகின்றன.
அதுவரை தமது உடலில் வலையம் போன்றிருக்கும் கிளைடெல்லம் (clitellum) என்ற இடத்தில் முட்டைகளைப் பாதுகாக்கின்றன. ஒரு தடவையில் 2 முதல் 8 வரையான முட்டைகளை இடுகின்றன. அதிலிருந்து வரும் சிறிய புழுக்கள் 18 முதல் 20 நாட்களில் இணப்பெருக்கத்திற்குத் தயாராகிவிடுகின்றன. இவ்வாறு புழுக்கள் சுமார் இரண்டுவருட காலங்கள் வாழ்கின்றன.
மண்புழுக்களின் அழிவு

இன்று பயிர்ச்செய்கைக்காக விவசாயிகள் பல்வேறு பூச்சிக்கொல்லிகளையும், கிருமிநாசினிகளையும் பயன்படுத்துகின்றனர். இதிலுள்ள நச்சுப் பதார்த்தங்கள் மண்ணிலுள்ள மண்புழுக்களைக் கொன்றுவருகின்றது. இதனால் இன்றுள்ள வயல் நிலங்களில் மண்புழுக்களைக் காண்பது மிக அரிதாகவுள்ளது. விவசாயிகளின் நண்பனாக மண்புழுக்கள் வாழ்ந்துவருகின்றன. ஆனால் இன்று விவசாயிகள் மண்புழுக்களின் எதிரியாக மாறி வருகின்றனர். அற்ப்ப புழுவாக இருந்தாலும் வல்லவன் அல்லாஹ் அதனையும் வீணுக்காகப்  படைக்கவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகவே விளங்குகிறது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...