"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

25 April 2014

காதைப் பிளக்கும் இடியும், கண்னைப் பறிக்கும் ஒளியும்

சோஎன்று சுழன்றடிக்கும் காற்றுடன், பேயாகப் பெய்யும் மழையுடன், இடியும் மின்னலும் சேர்ந்து அடிக்கும்போது எம்மைப் பீடிக்கும் அச்சத்தில் இரத்தம் உறைந்துபோகும். அப்போதுதான் அல்லாஹ்வையும் ஞாபகிப்போம். தெரியாத துஆக்களெல்லாம் வாயில் வரும். இந்த அனுபவம் எமக்கும் நிகழ்ந்திருக்கும். அல்லாஹ் பின்வரும் திருமறை வசனத்தில் இந்நிலையை நிராகரிப்பாளர்களுக்கு ஓர் உதாரணமாகச் சொல்கின்றான்.

”(ஓர் உதாரணம்;) காரிருளும், இடியும், மின்னலும் கொண்டு வானத்திலிருந்து கடும் மழை கொட்டும் மேகம்; (இதிலகப்பட்டுக்கொண்டோர்) மரணத்திற்கு அஞ்சி இடியோசையினால், தங்கள் விரல்களைத் தம் காதுகளில் வைத்து (அடைத்துக்) கொள்கிறார்கள்; ஆனால் அல்லாஹ் (எப்போதும் இந்த) காஃபிர்களைச் சூழ்ந்தனாகவே இருக்கின்றான்.(2:19)
இடி மற்றும் மின்னலிலும் அதனூடாகப் பெய்யும் மழையிலும் அறிவுடையவர்களுக்கு பல அத்தாட்சிகளை வைத்திருப்பதாக அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான்.
பயத்தையும், ஆதரவையும் தரக்கூடியவாறு மின்னலை அவன் உங்களுக்கு காண்பிப்பதும், மேகத்திலிருந்து மழையைப் பொழியச் செய்து இறந்த பூமியை செழிக்கச் செய்வதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளனவாகும். அறிவுடைய கூட்டத்தாருக்கு நிச்சயமாக இதில் (ஒன்றல்ல) பல அத்தாட்சிகள் இருக்கின்றன.’’ (30:24)
இவ்வசனத்தில் அத்தாட்சிகள் இருப்பது வெறுமனே மனிதர்களுக்குத்தான் என்று அல்லாஹ் பொதுவாக கூறவில்லை. மாறாக لِّقَوْمٍ يَعْقِلُونَ  - அறிவுடைய கூட்டத்தாருக்குஎன்று குறிப்பிட்டுக் கூறுகின்றான். இன்றளவிலும் இடி, மின்னல் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மின்னல் தொடர்பாக மேற்கொள்ளும் கற்கைக்கு Fulminologyஎன்று பெயர்.

ஆரம்ப கால பிழையான நம்பிக்கைகள்

ஆரம்ப கால கிரேக்க புராணங்கள் இடியை ஸீயஸ் எனும் கடவுளிடமிருந்து வருவதாக நம்பினர். வைக்கிங்ஸ் எனும் பிரிவினர் தோர் எனும் கடவுள் தனது கையிலிருக்கும் சுத்தியலால் மேகத்தில் அடிப்பதாலே மின்னலும் இடியும் உண்டாகின்றன என்றனர். செவ்விந்தியர்கள் Thunderbird எனும் ஒரு மாயப் பறவை சிறகடிப்பதால் ஏற்படும் ஒளியும் ஒலியுமே இடியும், மின்னலும் என்று நம்பினர். இன்றும் அமெரிக்க ஹொலிவுட் உலகம் இந்த கதாபாத்திரங்களை வைத்து காட்ரூன்களையும் திரைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றது.

உண்மையில் இடிக்கும், மின்னலுக்கும் சொந்தக்காரன் வேறு யாருமல்ல. அவன் வல்லவன் அல்லாஹ் ஒருவனே! மேலும் இடி அவன் புகழைக் கொண்டும், மலக்குகள் அவனையஞ்சியும் (அவனைத்) தஸபீஹு செய்(து துதிக்)கின்றனர். இன்னும் அவனே இடிகளை விழச்செய்து, அவற்றைக் கொண்டு, தான் நாடியவரைத் தாக்குகின்றான்; (இவ்வாறிருந்தும்) அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி தர்க்கிக்கின்றனர், அவனோ மிகுந்த வல்லமையுடையவனாக இருக்கின்றான். (13:13)

சோடி மேகங்களிலிருந்து பிறக்கும் இடி, மின்னல்

இறைவன் படைப்புகள் அனைத்தையும் சோடி சோடியாகப் படைத்திருப்பதால் அந்த சோடித்தன்மையை மேகங்களிலும் கண்டுகொள்ளலாம். மழை மேகங்கள் நேர் ஏற்றம் (+) கொண்ட மேகங்கள், மறை ஏற்றம் (-) கொண்ட மேகங்கள் என சோடியாகவே காணப்படுகின்றன. இவ்விரண்டும் ஒன்றை ஒன்று கவர்ந்து, நெருங்கி, உறாய்வு நடக்கின்றபோது அங்கே தீப்பொறிகள் போன்ற மின் பொறிகளுடன் கண்களைப் பறிக்கும் வெளிச்சத்துடன் காதைப் பிளக்கும் சப்த்த்துடன் இடியும் மின்னலும் உருவாகின்றன.

புவியிலிருந்து நீர் ஆவியாகிச் சென்று அவை வான் பறப்பில் சிதறிக் காணப்படும். இவை முகிற் கூட்டத்திரள் (cumulus cloud) எனப்படுகின்றன. பின்னர் அங்குள்ள காற்று அவற்றை உந்துவதினால் அவை ஒன்றோடொன்று இணைந்து கார் முகில்திரள் மேகங்கள் உருவாக்குகின்றன. இந்த மேகங்களினுள் காற்று மேல் நோக்கி (updraft) வேகமாக வீசும். இதனால் மேகம் செங்குத்தாக உயரத் தொடங்குகிறது.

இவ்வாறு காற்று மேல் நோக்கி வீசும்போது மேகங்களுக்குள் சுழற்சி ஏற்படுவதால் ஒன்றோடு ஒன்று உறாய்ந்து அவை மின்னேற்றம் பெறுகின்றன. நிறை குறைந்த நேர் மின்னேற்றம் கொண்ட மேகங்கள் மேக்க் கூட்டத்தின் மேல் பகுதிக்கு காற்றினால் உந்தப்படுகின்றன. பாறமான எதிர் மின்னேற்றம் கொண்ட மேகங்கள் மேக்க் கூட்டத்தின் கீழ் பகுதியில் தங்கிவிடுகின்றன. அவ்வப்போது நேர், எதிர் மின்னேற்றங்களைக் கொண்ட மேகங்கள் காற்றழுத்த்த்தால் அருகே வந்து உறாய்வு ஏற்படும்போது அதிலிருந்து மின்னலும் இடியும் உருவாகின்றன.

இடி, மின்னலில் உள்ள பயமும் பலமும்.

”(உங்களுக்கு) பயத்தையும், ஆதரவையும் தரக்கூடிய மின்னலை அவனே உங்கள் முன் பிரகாசிக்கச் செய்கிறான். (மழையை) சுமந்த பளுவான மேகங்களையும் அவனே உண்டாக்குகிறான்.’’ அல்குர்ஆன் (30:24) இங்கு மின்னலில் உள்ள இரண்டு பண்புகளைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான். ஒன்று அதிலுள்ள பயம், மற்றையது அதிலுள்ள பலம்.

பயம்.

மின்னலும் இடியும் ஒரே சமயம்தான் உருவாகின்றன. என்றாலம் மின்னல் முதலில் நம் கண்ணுக்கு தெரியும்சிறிது நேரம் கழித்து இடி சத்தம் கேட்கும்காரணம் ஒலியை விட ஒளியின் வேகம் அதிகம் என்பதாலாகும். ஒளியின் வேகம் வினாடிக்கு  3 லட்சம் கிலோ மீட்டர். ஒலியின் வேகமோ வினாடிக்கு 330  மீட்டர் மட்டுமே.

இவ்வாறு நம்மை வந்தடையும் மின்ல் வெளிச்சமும் இடி முலக்கத்தின் பயங்கர ஒலியும் எம்மைக் கதிகளங்க வைக்கின்றன. அதனால்தான் நாம் காதுகளில் கைகளை வைத்து அடைத்துக்கொள்கின்றோம் என்ற விடயத்தை அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. “) மரணத்திற்கு அஞ்சி இடியோசையினால், தங்கள் விரல்களைத் தம் காதுகளில் வைத்துக் (அடைத்துக்) கொள்கிறார்கள் (2:19)

இடி அச்சம் தரக்கூடியதாக இருந்தாலும் இடியும், இடியுடன் சேர்ந்து மலக்குகளும் அல்லாஹ்வைப் புகழ்ந்து துதிப்பதாக திருமறை கூறுகின்றது. இதுபற்றி சிந்திக்கும் போதும் இறைவன்மீது ஒரு வகைப் பயம் உள்ளத்தில் எழுவதை உணர்வீர்கள். படியுங்கள்…

மேலும் இடி அவன் புகழைக் கொண்டும், மலக்குகள் அவனையஞ்சியும் (அவனை) தஸபீஹு செய்(து துதிக்)கின்றனர்(13:13)

இடியின் பேரொலியைப் போல மின்னலின் வெளிச்சம் எம்மை அச்சமடையச் செய்கின்றது. அல்லாஹ் கூறுகின்றான். “அம்மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறித்துவிடப் பார்க்கிறது.  (2:20)

மின்னலின் போது சுமார் 300000c வெப்பம் ஏற்படுகிறது. இந்த வெப்பம் சாதாரண வெப்பமல்ல. இது சூரியனின் மேற் பரப்பில் காணப்படும் வெப்பத்தை விட ஐந்து மடங்கு அதிகம். இதுவும் எம்மை அச்சத்திற்கு உள்ளாக்குகின்றது. ஆண்டு தோறும் சுமார் 20 மில்லியன் இடி மின்னல் உலகெங்கும் உருவாகிறது. சுமார் 8,60,000 மின்னல்கள் தினமும் பளீரிடுகிறது. சில சமயங்களில் இந்த மின்னலானது நிலத்தில் பாய்ந்து பலத்த சேதத்தையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகின்றன. வருடத்திற்கு உலகம் முழுதும் இடி, மின்னல் தாக்குதலால் ஆயிரக்கணக்கானோர் இறக்கின்றனர், பல சேதங்களும் ஏற்படுகின்றது. விமானங்கள் மின்னல் உருவாகும் உயரத்திற்கும் மேல் பறப்பதால் அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை. இருந்தும் சில விமான விபத்துகள் மின்னலால் நிகழ்கின்றன.

இடி மின்னலில் உண்டாகும் மின்சாரம் பல லட்சக்கணக்கான வோல்ட் அழுத்தமுள்ளதாக இருப்பதால் இதன் தாக்குதல் மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும். இதன் மின்சாரத்தைக் கொண்டு ஒரு நகரத்தின் ஒரு ஆண்டு முழுவதற்குமான மின் தேவையைப் பூர்த்தி செய்யமுடியும். ஆனால் மின்னலின் மின் சக்தியைச் சேமிக்கும் ஆற்றல், நம்மிடம் இல்லாததால் அது வீணாகிப் போகிறது

இவ்வளவு சக்திவாய்ந்த மின்னல் உயரமான மரங்கள், கட்டிடங்கள் மூலமாக பூமிக்கு பாய்ந்து வருவதால் மரங்கள் எரிந்து விடுகின்றது கட்டிடங்கள் இடிந்து விடுகின்றனமனிதர்கள், விலங்குகள் என்பன இறந்துவிடுகின்றன. மேகத்தின் கீழ்பகுதியில் இருக்கும் எதிர்மின்சாரத்தை பூமியிலிருக்கும் ஏதேனும் நேர் மின்சாரம் ஈர்த்தால் மட்டுமே மின்னல், இடி எல்லாம் உருவாகும். உயரமான பொருள் எதுவும் கிடைக்காத போது நமது தலையில் விழுந்துவிடும்உயரமான கட்டிடங்களின் மீது இடி தாங்கிக் கம்பிகளை பொருத்தி அதை பூமியுடன் இனைப்பு ஏற்படுத்தி எர்த் செய்து விடுவார்கள்கட்டிடத்தை இடி மின்சாரம் தாக்கும் போது அதனூடாக மின்சாரம் பூமிக்கு சென்றுவிடும்அப்போது கட்டிடம் பதுகாப்பாக இருக்கும்
பலன்

மின்னலின் போது சுமார் 300000c வெப்பம் ஏற்படுகிறது. இந்த வெப்பம் நமது காற்று மண்டலத்தில் 78% நைட்ரஜன் வாயு உள்ளது. சுமார் 21% ஆக்ஸிஜன் உள்ளது. மின்னலின் போது ஏற்படும் வெப்பமானது காற்றில் உள்ள நைட்ரஜனில் கடினமான அணுக்களை உடைத்து ஆக்சிஜனுடன் சேர்ந்து நைட்ரஜன் சேர்மங்களான அமோனியா, நைட்ரேட், நைட்ரஸ் ஆக்ஸைடாக மாற்றுகிறது. இவை உயிர் உள்ள தாவரங்கள், மிருகங்கள், மனிதர்களுக்குத் தேவையான அமினோ அமிலம், புரோட்டின், டி.என்.ஏ. உற்பத்திக்கு மிக அவசியமான ஒன்றாகும்.

இப்படி மின்னலினால் உண்டாகும் இயற்கை உரமான அமோனியா நைட்ரேட்கள் வருடத்திற்கு 10 மில்லியன் மெட்ரிக் டன்னாக உள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்த இயற்கை உரங்கள் மழை நீரில் கலந்து பயிர்கள் தாவரங்களில் சேர்ந்து நல்ல விளைச்சலைக் கொடுத்து நமக்கு ஆதரவாக உள்ளது. மின்னலினால் உருவாகும் இயற்கை உரத்தை ஐரோப்பிய நாடுகள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள EULINOX என்ற அமைப்பை (EUROPIAN LIGHTING NITROGEN OXIDE PROJECT)  ஏற்படுத்தி ஆய்வு செய்கிறார்கள்.

இடி, மின்னலால் இதுபோன்றும் இன்னும் நாம் அறியாத பல நன்மைகள் இருக்கலாம். அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன். அவனுக்கே புகழனைத்தும் – அல்ஹம்துலில்லாஹ்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...