"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

15 April 2013

பயமறியா போர்க் குதிரைகள்

அல்குர்ஆனின் நுறாவது அத்தியாயமாக அல் ஆதியாத் (العاديات) - அதிவேகமாக ஓடக்கூடியவை என்ற பெயரில் அல்லாஹ் ஒரு சூறாவை இறக்கிவைத்துள்ளான். தப்ஸீர் அறிஞர்களின் கருத்துப்படி இது போர் குதிரைகளைப் பற்றிப் பேசுவதாகக் குறிப்பிடுவர். குதிரைகளிடமிருக்கும் பிரதானமான சில பண்புகளைப் பற்றியும் மேல்வாரியாக அல்லாஹ் இங்கே குறிப்பிட்டுள்ளான். அப்பண்புகளுடன் குதிரைகளிடம் இருக்கும் இறை அற்புதங்களையும் சற்று அறிந்துகொள்வோம்.

குதிரைகள் Equus ferus caballus  எனும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணியாகும். வரிக்குதிரை, கழுதை, கோவேறுக் கழுதை (pony) என்பனவும் குதிரை வகையைச் சேர்ந்த பிராணிகளாகும். குதிரைகள் பொதுவாக கறுப்பு, வெள்ளை, சாம்பல், சிவப்புடன் சேர்ந்த பழுப்பு என பல நிறங்களில் தனித்தனியாகவும் கலப்பு நிறங்களிலும் காணப்படுகின்றன. பொன் நிறத்திலும் அறிதாக குதிரைகள் பிறப்பதுண்டு. குதிரைகளில் உயர் ரக குதிரைகளும் விலை மதிப்புள்ளவையும் தனி வெள்ளை மற்றும் தனி கருப்பு நிறக் குதிரைகளாகும். வாட்ட சாட்டமான உடலமைப்பைக் கொண்டவைதான் குதிரைகள். மனிதர் அநேகமாக செல்லப் பிராணியாக வளர்க்கும் நாய்களுக்கு அடுத்ததாக மனிதனோடு மிகவும் நெருக்கமான, விசுவாசமுள்ள மிருகம் என்றால் அது குதிரைகள்தாம்.

தம் எஜமானுக்கு மிக்க நன்றியுணர்வுடன் அவை செயற்படுகின்றன. அண்மையில் Animal Planet என்ற தொலைக்காட்சி அலைவரிசை நடாத்திய கருத்துக் கணிப்பின் பிரகாரம் 73 நாடுகளைச் சேர்ந்த 50,000 நேயர்களது நான்காவது  மிகவும் விருப்பத்திற்கு உரிய விலங்காக குதிரையே தெரிவுசெய்யப்பட்டிருந்தது. குதிரைகள் உற்பட கால் நடைகளை அல்லாஹ் எமக்கு வசப்படுத்தித் தந்துள்ளதாகவும் அவற்றின் பயன்பாடுகள் பற்றியும் அல்குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

கால் நடைகளையும் அவனே படைத்தான்; அவற்றில் உங்களுக்குக் கத கதப்பு(ள்ள ஆடையணிகளு)ம் இன்னும் (பல) பலன்களும் இருக்கின்றன அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கிறீர்கள். அவற்றை நீங்கள் மாலை நேரத்தில் (வீட்டுக்குத்) திரும்பி ஓட்டி வரும் போதும், காலை நேரத்தில் (மேய்ச்சலுக்காக) அவிழ்த்துவிடும் போதும்இ அவற்றில் உங்களுக்கு(ப் பொலிவும்) அழகுமிருக்கிறது. மேலும்இ மிக்க கஷ்டத்துடனன்றி நீங்கள் சென்றடைய முடியாத ஊர்களுக்கு அவை உங்களுடைய சுமைகளைச் சுமந்து செல்கின்றன - நிச்சயமாக உங்களுடைய இறைவன் மிக இரக்கமுடையவன்; அன்பு மிக்கவன். இன்னும்இ குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும்இ அலங்காரமாகவும்,(அவனே படைத்துள்ளான்) இன்னும்இ நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான். (16:5-8)

மனிதன் வரலாறு முழுதும் பல்வேறு தேவைகளுக்காக குதிரைகளைப் பயன்படுத்தியுள்ளான். போக்குவரத்துக்காகவும், மேற்கு நாடுகளில் ஏர் உழுவதற்காகவும், பொதி, மூட்டைகளைச் சுமந்து சொல்வதற்காகவும், சில பகுதிகளில் உணவுக்காகவும், யுத்த நடவடிக்கைகளுக்காவும், அலங்கார அணிவகுப்புகளுக்கும், இராணுவ நடிவடிக்கைகளுக்கும், பிற விலங்குகளை வேட்டையாடுவதற்கும், மந்தை பேய்ப்பில் ஈடுபடுவதற்கும், ஓட்டப் பந்தயங்களுக்கும் என்றெல்லாம் குதிரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இன்றும் சில பின்தங்கிய நாடுகளில் குதிரைகள் போக்குவரத்துக்காப் பயன்படுத்தப்படுகின்றன. இன்று மட்டும் உலகில் சுமார் 100 மில்லியன் குதிரைகள் வேலைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. ஆபிரிக்காவில் மட்டும் 27 மில்லியன் குதிரைகள் அன்றாட தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அத்தோடு இதன் தசை, தோல், எழும்பு, ரோமம் மற்றும் பல் என்ற பகுதிகள்கூட வெ;வேறு பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன.

உணவு மற்றும் விவசாய அமைப்பு (Food & Agriculture Organization) 2008 ஆம் ஆண்டில் வெளியிட்ட கணிப்பீட்டின் படி அப்போது ஏறத்தாழ 60,000,000 இற்கும் அதிகமான குதிரைகள் உலகெங்கிலும் இருப்பதாக மதிப்பிட்டிருந்தது. இதில் அமெரிக்காவில் 33,500,000 உம், ஆசியாவில் 13,800,000 உம், ஐரோப்பாவில் 6,300,000 இருப்பதாகவும் ஆபிரிக்காவிலும் ஆசியானாவிலும் குறைந்த அளவில் இருப்பதாகவும் அதன் அறிக்கை கூறுகின்றது. அமெரிக்காவில் உள்ள குதிரைகளைப் பராமறிக்க மட்டும் வருடாந்தம் 102 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாவதாக அமெரிக்க குதிரைகள் சங்கம் கருத்துத் வெளியிட்டிருந்தது.

சூறா அல் ஆதியாத்தின் முதல் ஐந்து வசனங்களிலும் போர் குதிரையின் பண்புகளைப் பற்றி பனிவருமாறு அல்லாஹ் சத்தியமிட்டுக் கூறுகின்றான். இப்பண்புகள் பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.

மூச்சுத்திணற விரைந்து ஓடும் (குதிரைகள்) மீது சத்தியமாக- பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும், பின்னர்,அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்- அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும், அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக… (100:1-5)

மிக வேகமாக ஓடும் ஆற்றல்.

அதி வேகமாக ஓடும் விலங்குகள் வரிசையில் குதிரையும் பிராதான
இடத்தை வகிக்கின்றது. நேரான பாதையில் குதிரை மணிக்கு 60 முதல் 80 கி.மி. வேகத்தில் ஓடக்கூடியது. குதிரையின் உடற் தோற்றமே ஓடப் பிறந்தவை போன்று எப்போதும் சுறு சுறுப்பாக இருப்பதைக் காண முடியும். வேகமாக ஓடுவதற்கு ஏற்ற விதத்தில் அல்லாஹ் அவற்றின் கால்களை ஒழுங்கமைத்துள்ளான். இப்பாதங்கள் மூலம் மிக வேகமாக ஓடும் ஆற்றலை இவை பெற்றுள்ளன. மற்ற விலங்குகள் போன்றல்லாது இவற்றின் கால் மூட்டுகளில் விசேடமான ஒரு தசை காணப்படுகின்றது. இது இவற்றின் வேகத்தை அதிகரிக்கவும் குறைக்கவும் வாகனங்களுக்கு உள்ள கியர் போன்று தொழிற்படுகின்றது.

இதனால்தான் சும்மா சத்தியம் செய்யாது மூச்சுத் திணற விரைந்தோடும் குதிரைகள் மீது என சத்தியம் செய்கின்றான். அவை அந்த கடுகதி வேகத்தில் ஓடும் போது குளம்புகள் நிலத்தில், பாறைகளில் மோதி உராயும்போது தீப் பொறிகள் பறப்பதாகவும் புழுதிகள் கிளம்புவதாகவும் அல்லாஹ் அவற்றின் ஓடும் திறனை வர்ணிக்கின்றான்.

யுத்த களத்திற்கு மிகப் பொருத்தமான பிராணி

விலங்குகளில் யுத்த களத்திற்கு மிகப் பொருத்தமானவை குதிரைகள்தாம். அதனால்தான் வரலாற்று யுத்தங்களிலெல்லாம் குதிரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பெரும் போர் ஆயுதமாகவும் அவை கருதப்பட்டுள்ளன. உங்கள் குழந்தைகளுக்கு குதிரை ஓட்டும் கலையைக் கற்றுக் கொடுங்கள்என்று நபியவர்கள் கூறியதும் இதன் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது.

போர் குதிரைகளுக்கு அச்சம் என்ற பண்பு காணப்படுவதில்லை. பொதுவாக நாய், யான ஏன் ஒட்டகமும் கூட பெரும் சனத்திறலைக் காணும் போது மிரண்டுவிடுகின்றன. அவற்றை நோக்கி கல்லையோ வேறு பொருளையோ ஓங்கினால் பின்வாங்கி விடுகின்றன. போர் களத்தில் இரந்த, வெட்டுண்ட உடல்கள் இருப்பதைக் கண்டால் இவை ஓட ஆரம்பித்து விடும். ஆனால் குதிரைகள் தம்மை நோக்கி அம்புகள் வருவதை அறிந்துகொண்டே தம்போன்ற எத்தனை குதிரைகள் செத்துக் கிடந்தாலும், எத்தனை பேர் வெட்டுண்டு கிடந்தாலும் அவற்றைக் கண்டு மிரளாது, அஞ்சாது எதிரிகளுக்குள் புகுந்து புகுந்து யுத்தம் செய்ய தன் எஜமானுக்கு உதவுகின்றன.

இதனால்தான் அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்- அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும்என அல்லாஹ் சத்தியமிடுகின்றான்.

நின்றுகொண்டே தூங்கும் ஆற்றல் படைத்தவை.

குதிரைகளின் மற்றுமொரு விஷேட பண்பு அவை நின்றுகொண்
டே தூங்கும் ஆற்றல் பெற்றவையாகும். கால் பாதங்களில் உள்ள சிறப்பான ஒரு பூட்டு (Lock) அமைப்பின் காரணமாக கீழே வீழ்ந்துவிடாது நின்று கொண்டே தூங்குகின்றன. குதிரை ஒரு நாளைக்கு சராசரியாக 21/2 மணி நேரங்கள்வரை தூங்கும். மற்றும் ஒரு நாளில் நான்கில் இருந்து பதினைந்து மணி நேரம் வரை நின்றுகொண்டே ஒய்வெடுகவும் செய்யும். அத்தோடு களைப்பு ஏற்பட்டால் கணைத்துக்கொண்டே ஒரு முறை நிலத்தில் படுத்து உருண்டு எழுந்து நின்று கொள்ளும். அவ்வளவுதான் களைப்பு அசதி என்பன தீர்ந்து விடும். பொதுவாக நாம் கதிரையிலோ, தரையிலே அமர்ந்து கொண்டு தூங்கும்போது எமது கழுத்து எம்மை அறியாமலேயே கீழ்நோக்கி சாயும். ஆனால் இவற்றின் கால்கள் பேன்றே தலையும் கீழே சாயாது அப்படியே இருக்கும் விதமாக அல்லாஹ் படைத்துள்ளான். எனவே திடீரென எதிரிப்படை தாக்க வந்தாலும் இவை நின்று கொண்டே தூங்கும் ஆற்றல் உள்ளதால் எழுப்பி, தயார் படுத்திக் கொண்டிருக்க வேண்டியதில்லை. உடனே யுத்தகளத்திற்கு சென்றுவிடலாம்.

வெப்ப, குளிர் காலங்களுக்கு இயைபடையும் உடலமைப்பு.

யுத்தங்கள் எப்போது வேண்டுமானாலும் வரும். அது குளிர்காலமாகவும் இருக்கும் வெப்ப காலமாகவும் இருக்கும். குளிர், பாலைவனம் போன்று எந்தப் பிரதேசமாகவும் இருக்கும். எனவே இவற்றுக்கு ஏற்றாற்போல் தனது உடலைத் தற்காத்துக் கொள்ள அல்லாஹ் அவற்றின் உடலில் காணப்படும் உரோமங்களை அமைத்துள்ளான். இவற்றின் உடலில் காணப்படுகின்ற முடி அல்லது உரோமங்கள் மிகவும் அதிசயமானவை. இவை வெப்பத்தையும் குளிரையும் சமநிலைப்படுத்தும் கருவியைப் (Thermostat) போன்று செயற்படுகின்றன. குதிரைகளின் உடல் வெப்பம் தொடர்ந்தும் 38 பாகை சென்டிகிரேடில் பேனப்படல் வேண்டும். அப்போதுதான் இயல்பாக ஆரோக்கியமாக இவற்றால் வாழ முடியும். எனவே வெப்ப காலங்களில் இவற்றின் உடலில் உள்ள உரோமங்கள் உதிர்ந்து விடுகின்றன. அவ்வாறே குளிர் காலங்களில் அவற்றின் உரோமங்கள் நீண்டு, அடர்த்தியாக வளர்கின்றன. இதன் மூலம் அவற்றின் உடல் வெப்பநிலை சமதளத்தில் பாதுகாக்கப்படுகின்றன.

கால் குளம்புகளது அமைப்பு.

குதிரையின் கால்களும் குளம்புகளும் மிக முக்கியமானவையாகும். குளம்பின் வெளிப்பகுதி எமது விரல் நகங்கள் அமையப் பெற்றுள்ள பதார்த்தம் போன்ற கடினமா ஒன்றால் ஆனதாகும். காடுகளில் உள்ள குதிரைகள் சுயாதீனமாக இருப்பதால் இவை அதிகளவில் தேதய்வடைவதில்லை. ஆனால் மனிதனால் வளர்க்கப்படும் குதிரைகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால் அவற்றின் குளம்புகள் தேய்வடைகின்றன. எனவேதான் அதனைத் தடுக்க இரும்பினாலான லாடங்கள் பொருத்தப்படுகின்றன. குதிரை வளரும்போது குளம்பும் சேர்ந்து வளர்வதால் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை லாடங்களை மாற்ற வேண்டி ஏற்படுகின்றது. இரும்பினாலான லாடங்கள் பொருத்தும் போது குதிரைகள் கடுமையான வேதனையை அனுபவிக்கின்றன. ஆனால் ஓடுவதற்கும், பாய்வதற்கும், பாரங்களைச் சுமப்பதற்கும் இந்த லாடங்கள் மிகவும் அவற்றுக்கு உதவுகின்றன.

கூர்மையான உணர்திறன்

சிறந்த உணர்திறன் கொண்டவைதான் குதிரைகள். ஏதும் ஆபத்துக்கள் நெருங்கும் பேது முன்னரே அறிந்து கொள்ளும் ஆற்றலை அல்லாஹ் இவற்றுக்கு வழங்கியுள்ளான். தரையில் வாழும் பாலூட்டி விலங்குகளில் குதிரையின் கண்களே பெரியவையாகும். இவற்றின் இரு கண்களாலும் 65 பாகைக் கோணத்திலும் ஒரு பக்க கண்ணால் மட்டும் 350 பாகைக் கோணத்திலும் உள்ளவற்றைச் சுற்றிச் சிற்றிப் பார்க்க முடியும். பகலில் மட்டுமன்றி இரவிலும் நன்றாகப் பார்க்க பார்வைத் திறன் இவற்றுக்கு உண்டு. கண்களைப் பேன்றே குதிரைகளின் காதுகளும் நன்கு கூர்மையாக இருக்கும். தமது தலையைத் திருப்பாமலேயே செவி மடல்களை 180 பாகைவரை திருப்பி சப்தம் எங்கிருந்து வருகின்றது என்பதைத் துல்லியமாக அறிந்துகொள்கின்றன. மட்டுமன்றி கணைப்பதன் மூலம் தனது எஜமானுக்கு அபாய எச்சரிக்கையையும் வழங்குகின்றன.

குதிரைகள் 30 முதல் 40 வருடங்கள் வரை உயிர்வாழ்கின்றன. ஆண் மற்றும் பெண் குதிரைகள் மிகவும் கவர்ச்சியான முறையில் தமக்குள் உறவாடிக் கொள்ளும் பழக்கமுடையவை. ஆண், பெண் குதிரைகள் இணைந்தது முதல் சுமார் 340 நாட்கள் பெண் குதிரை கருத்தரித்திருக்கும். அதன் பின் குட்டிக் குதிரை பிறக்கும். பிறந்து சிறிது நேரத்திலேயே குட்டி எழுந்து நடக்க ஆரம்பித்துவிடுகின்றது. குதிரைகள் தமது பிறப்பிலிருந்து ஐந்து ஆண்டுகளில் இனப்பெருக்கத்துக்குத் தயாராகிவிடுகின்றன.

இறைவன் கூறும் பாடம்

சூறா அல் ஆதியாத்தின் முதல் ஐந்து வசனங்களிலும் குதிரையைப் பற்றி அவை தனது எஜமானுக்கு எவ்வளவு நன்றியுணர்வுடன் செயற்படுகின்றது என்றும் அவனைத் தனது உடலில் சுமந்துகொண்டு தான் செத்தாலும் பறவாயில்லை என்று எதிரிகளுக்கு மத்தியில் பயமின்றி நுழைந்து யுத்தம் செய்ய உதவுகின்றது. எஜமானைப் பாதுகாக்கின்றது.  இதனையெல்லாம் எஜமான் போடும் ஒரு பிடி கொல்லிற்காகவே குதிரை செய்கின்றது ஆனால் மனிதனுக்கு அல்லாஹ் எண்ணிலடங்காத அருட்கொடைகளைக் கொடுத்தும் அவன் அல்லாஹ்வுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான் உலக வாழ்வில் மூழ்கியிருக்கின்றான் என்பதை அடுத்து வரும் வசனங்கள் குறித்துக்காட்டுகின்றன. இதற்கு மனிதன் மறுமையில் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்பதையும் அறிவிக்கிறது.

மூச்சுத்திணற விரைந்து ஓடும் (குதிரைகள்) மீது சத்தியமாக- பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும், பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்- அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும், அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக. நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான். அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான். இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான். அவன் அறிந்து கொள்ளவில்லையா? கப்றுகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது- மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது- நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன். (100:1-11)

அகரம் சஞ்சிகையில் பிரசுரமான எனது ஆக்கம்

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

குதிரைப் பற்றிய நல்லதொரு கட்டுரை... சேமித்துக் கொண்டேன்... (குழந்தைகளுக்காக) நன்றி...

தொடர வாழ்த்துக்கள்...

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...