"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

26 October 2009

"கருக்கலைப்பு" சவக்காடாகி வரும் கருவறைகள்

அல்ஹஸனாத் சஞ்சிகையில்
பிரசுரமாகியது.
ஆலிப் அலி...

பல்பரிமான அறிவியல் வளர்ச்சியால் இன்று மனிதன் இன்னோரன்ன துறைகளில் பல்வேறு வசதிவாய்ப்புகளைப் பெற்றுவருகிறான். சடரீதியாக மாத்திரமன்றி சிந்தனா ரீதியாகவும் ஜனநாயகம், மனித உரிமை, சமூகவிடுதலை போன்ற பல்வேறு அம்சங்களில் முதிர்ச்சியடைந்துள்ளான். எனினும் இந்த முன்னேற்றப் பாதையில் வழிகாட்டியாக இறை சட்டதிட்டங்களைக் கைக்கொள்ளாது மனித மனோ இச்சைகளை எடுத்துக்கொண்டமையால் இன்று உலகளாவிய ரீதியில் அனாச்சாரங்களும் அழிச்சாட்டியங்களும் நெருக்கடிகளும் பிரச்சினைகளும் அரங்கேறிக்கொண்டிருப்பதனைக் காணக்கூடியதாயுள்ளது.

அந்தவகையில் இன்று சர்வதேச ரீதியாக, குறிப்பாக இன்றைய நாகரீக விரும்கிகளின் கனவு தேசமாக விளங்கும் மேற்குநாடுகளில் நடைபெறும் கருக்கலைப்பு தொடர்பாகவும் கருக்கலைப்பு செய்வதற்கான காரணிகள் பற்றியும் அதன் விளைவுகள் குறித்தும் சற்று விரிவாக விளங்கிக்கொள்வோம்.

கருக்கலைப்பு ஒரு அறிமுகக் குறிப்பு :
கருக்கலைப்பு (Abortion) செய்வது கூடுமா? கூடாதா? என்பதுகுறித்து பல்வேறுமட்டங்களிலும் இன்று வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இக்கருக்கலைப்பு கூடாது என்று வாதிடுவோர் கரு (Embryo) அல்லது முதிர்கரு (Fetus) மனித உயிருக்கு நிகரானது, அதனை அழிப்பது கொலைக்குச் சமமான காரியம் என்ற வாதத்தை முன்வைக்கின்றனர். அதேசமயம் அதற்காதரவளிப்போர் கருவைக்கலைப்பதும் அல்லது வளரவிடுவதும் அதனைச் சுமக்கும் பெண்ணின் உரிமையில் தங்கியுள்ளது. அவள் நாடுவதைச் செய்யலாம் என்ற கருத்தை முன்மொழிகின்றனர்.

கருக்கலைப்பு என்றால் “கருவை அல்லது முதிர்கருவைக் கருப்பையிலிருந்து முற்றாக அழித்து அகற்றிவிடுவதாகும்.கருக்கலைப்பு இன்றைய மருத்துவத்துறையின் வளர்ச்சிக்கேற்ப நவீனசாதனங்களின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகின்றன. அந்தவகையில் பல்வேறு முறைகளில் ஒரு தாயின் கர்ப்பப்பையிலிருக்கும் குழந்தை அப்பாவித்தானமாகக் கொலைசெய்யப்படுகின்றது. மனிதாபிமானமேயற்ற முறையில் இந்தக் கொலைகள் படுபயங்கரமான முறைகளில் செய்யப்படுவதுதான் கவலைக்குரிய விடயம். இங்கு கருக்கலைப்பு செய்யப்படும் முறைகள்குறித்து சற்று நோக்குவோம். 

கருக்கலைப்பு செய்யப்படும் முறைகள் :-

முறை 01:- நுணிப்பகுதி கூர்மையான, மெல்லிய குழாய் வடிவிலானதொரு உபகரணம் தாயின் கர்ப்பப்பையினுள் செலுத்தப்படும். இதனுடன் பலமாக உறிஞ்சி இழுக்கும் வகையில் இயந்திரமொன்று வெளியே பொருத்தப்படும். இது வீடு சுத்தம்செய்யப் பயன்படுத்தும் நவீன இயந்திரமொன்றைவிட 29 மடங்கு உறிஞ்சும் சக்தியில் பலமிக்கது. இவ்வியந்திரத்தை இயங்கச்செய்தவுடன் சிசுவின் உடலுறுப்புகள் யாவும் வேகமாக உறிஞ்சப்பட்டு பகுதிபகுதிகளாகப் பிய்த்தெடுக்கப்படும்.

முறை 02:- அல்லது, கூர்மையானதோர் உபகரணத்தின் மூலம் இரத்தம் வழியவழிய சிசு உயிருடன் வெட்டி வெவ்வேறு பகுதிகளாகப் பிரித்தெடுக்கப்படும்.

முறை 03:- அல்லது, மயிர்பிடுங்கிபோன்றதொரு உபகரணத்தின்மூலம் சிசுவின் கைகளும் கால்களும் பிடுங்கி எடுக்கப்படும். இவ்வாறு சிசுவின் உடலுறுப்புகளனைத்தும் கர்ப்பப்பையிலிருந்து முழுமையாக நீக்கப்படும். இதன்போது அச்சிசு வேதனையை உணரும் தறுவாயிலேயே இருக்கும். வெளியே எடுத்துப்பார்த்தால் மண்டையோடு நொறுங்கியிருக்கும். முதுகுப்பகுதி ஒடிந்திருக்கும். இந்த மானக்கேடான செயலின் இறுதியில் தாதியின் பங்கு பகுதிபகுதிகளாகப் பிய்த்தெடுக்கப்பட்ட சிசுவின் உடற்பகுதிகளை ஒன்றுசேர்த்து பொருத்திப்பார்த்து கர்ப்பப்பையிலிருந்து சிசுவின் முழுஉடலும் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டதா என்பதை உறுதிசெய்துகொள்வதாகும்.

முறை 04:- அல்லது, தாயின் வயிற்றினூடாக குழந்தையின் இதயத்துக்கு விசஊசி ஏற்றப்பட்டு கொல்லப்படும். இது இரட்டைக்குழந்தைகள் கருத்தரித்தால் அதில் ஒரு குழந்தையைக் கலைப்பதற்கே பெரும்பாலும் செய்யப்படும். ஆனால் ஒன்றுக்கு ஏற்றப்பட்ட விசம் மற்றைய சிசுவுக்கும் பரவி இரண்டுமே இறக்கும் சாத்தியப்பாடுதான் அதிகம்.

முறை 05:-  அல்லது, குறை மாதத்தில் பிறக்கும் ஒரு குழந்தை அது முழுமையாக வெளிப்படாத நிலையில் அதன் மண்டையோட்டின் பின்பகுதியில் சிறியதொரு துளையிடப்பட்டு உறிஞ்சு குழாயின்மூலம் மூளை முழுவதுமாக உறிஞ்சப்பட்டுவிடும். பின்பு குழந்தை மரணித்தே பிறக்கும். இன்னுமொரு சில வாரங்கள் அக்குழந்தையை வளரும்படி விட்டிருந்தால் ஒருவேளை அது இவ்வுலகின் வசந்த காற்றைச் சுவாசித்திருக்கும்.

நாடுகளும் சட்ட அங்கீகாரமும் :
இவ்வாறு நினைத்தும் பார்க்கமுடியாதவகையில் ஈவிரக்கமேயின்றி இந்தச் சிசுக்கொலைகள் நிகழ்ந்த வண்ணமிருக்கின்றன. இதற்கு எந்தச்சலனமுமின்றி தாய்மார்களும் துணைபோவதுதான் கவலைக்குரிய விடயம். ஜனநாயகம், மனித உரிமை பேசுபவர்கள்கூட ஒரு உயிரின் வாழும் உரிமையைத் தீர்மானிக்கும் சக்தியை மற்றொருவரிடம் கொடுத்துள்ளது அவற்றின் உண்மைத்தன்மையைக் கேள்விக்குறியாக்குகிறது. ஏனெனில் ஜனநாயகம், மனித உரிமை பேசும் பல நாடுகள் இக்கருக்கலைப்பிற்குச் சட்ட அங்கீகாரம் வழங்கியுள்ளன.

1.  பிரித்தானிய அரசாங்கம் 1967ம் ஆண்டு கருக்கலைப்பிற்குச் சட்ட       அங்கீகாரம் வழங்கியது.
2.   ஐக்கிய அமெரிக்கா 1973ம் ஆண்டு கருக்கலைப்பிற்குச் சட்ட        அங்கீகாரம் வழங்கியது.
3.   ஐரோப்பாவும் அதே 1973ம் ஆண்டு கருக்கலைப்பைச் சட்டபூர்வமாக ஏற்றுக்கொண்டது.
4.   சிங்கப்பூர் 1974ம் ஆண்டு இதற்கு சட்ட அங்கீகாரம் வழங்கியது.
5.   போர்த்துக்கல் கடந்த 2007ம் ஆண்டு இதற்குச் சட்ட அங்கீகாரம்        வழங்கியது. 

உலகளவில் 79 நாடுகள் கருக்கலைப்பை சட்டரீதியாக ஏற்றுக்கொண்டுள்ளதோடு இன்னும் பல நாடுகள் இதனைக் கண்டுகொள்ளாமல் மௌனித்துவருகின்றன. 1973ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கா கருக்கலைப்பிற்கு சட்ட அங்கீகாரம் வழங்கியபோதிலும் முன்னால் ஜனாதிபதி ஜோஜ் W.புஷ்ஷின் நிர்வாகத்தால் இது தடைசெய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா விதியாயிருந்த கருக்கலைப்புத் தடைச்சட்டத்தை ரத்துசெய்துள்ளார். இதனால் அங்கு பாலியல் வன்மங்கள் அதிகரிக்குமே தவிர வேறொன்றும் நடந்துவிடாது.

ஒபாமாவின் இக்கைங்கரியத்தை பாப்பரசர் 16ம் ஆசிர்வாதப்பர் வன்மையாகக் கண்டித்துள்ளார். ஆட்சியில் இருப்பதால் மற்ற உயிர்களின் வாழ்வையும் சாவையும் தங்களால் தீர்மானிக்க முடியும் என்ற ஆணவத்தால் இப்படி செய்வதாகச் சாடியுள்ளார்.
எனினும் மனித உரிமை பேசும் மனித அபிமானமற்ற குழுக்களும் சுகாதார அமைப்புகளும் ஒபாமாவின் தீர்மானத்துக்கு ஆதரவுகூறி நன்றிதெரிவித்து 250ற்கும் மேற்பட்ட நிருபங்களை அனுப்பியுள்ளனர். பூகோளரீதியாகப் பெருகிவரும் இந்தக் கலைப்பு நடவடிக்கைகள் மானுடத்தின் எதிர்காலம் குறித்து ஆழமாகச் சிந்திக்கவைக்கின்றன. ஒவ்வொரு வருடமும் மில்லியன் கணக்கான தாய்மார்கள் தமது கருவறைகளைச் சவக்காடாக மாற்றிவருகிறார்கள். ஒவ்வொரு குழந்தையும் மண்ணில் பிறப்பதற்கே போராடிக்கொண்டிருக்கின்றன. பெரியோரின் தகாத செயல்களின் காரணமாக அப்பாவிச்சிசுக்கள் பலிக்கடாக்களாகின்றன. இதிலே சம்பாத்தியத்திற்காகப் பல மருத்துவ நிலையங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

உலக நாடுகளில் கருக்கலைப்பு :
கருக்கலைப்பு தொடர்பாக சர்வதேசரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளையும் அதன் தரவுகளையும் வைத்து நோக்கும்போது இன்றிடம்பெறும் இக்கொடுமைகள், சமூகத்தில் எந்தளவு சர்வசாதாரண மயப்பட்டிருக்கின்றன என்பதனையும் மனிதகுலம் எதிர்நோக்கியிருக்கும் பேராபத்தின் விபரீதத்தன்மைகளையும் விளங்கமுடியும்.

பிரித்தானியாவில் வருடந்தோறும் கருக்கலைப்பு செய்வோர் எண்ணிக்கை 200 ஆயிரத்தை அடைந்துள்ளது. 1967ம் ஆண்டு சட்டபூர்வமாக்கப்பட்டதிலிருந்து 2008ம் ஆண்டுவரை கருக்கலைப்பு செய்தோர் தொகை ஏழு மில்லியன்களாகும். ஒரு நாளைக்கு சுமார் 600 கருக்கலைப்புகள் பிரித்தானியாவில் நடைபெறுகின்றன.
அமெரிக்காவில் வருடாவருடம் 1.21 மில்லியன்பேர் கருக்கலைப்பு செய்கின்றார்கள். ஒரு நாளைக்கு சுமார் 3700பேர் கருக்கலைப்பிலீடுபடுகின்றனர். 1973ம் ஆண்டு கருக்கலைப்பு சட்ட அங்கீகாரம் பெற்றதிலிருந்து 2005ம் ஆண்டுவரை 45மில்லியன் கருக்கலைப்புகள் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளன. 

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஐவருக்கு ஒருவர் விகிதம் கருக்கலைப்பு செய்கின்றனர். அதாவது ஒவ்வொரு 27 வினாடிக்கும் ஒருமுறை கருக்கலைப்பு செய்யப்படுகின்றது. 2006ம் ஆண்டில் மட்டும் ஐரோப்பிய நாடுகளில் 6.4 மில்லியன் கருக்கலைப்புகள் செய்யப்பட்டுள்ன. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘மால்தா, லக்ஸம்பேர் போன்ற நாடுகளின் சனத்தொகையிலும் அதிகமாயுள்ளது.

இந்தியாவில் சிசுக்கொலை என்பதைவிட பெண்சிசுக்கொலையே அதிகமாகச் செய்யப்படுகின்றது. இந்தியாவில் தலைவிரித்தாடும் வரதட்சனைக் கொடுமையால் பெருமளவில் பெண் சிசுக்கொலைகளே புரியப்படுகின்றன. ‘அமினோ சென்டிஸிஸ் (Amino centesis)என்ற தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி கரு ஆணா அல்லது பெண்ணா என்பதையறிந்து, பெண்ணாக இருந்தால் கருவறையில்வைத்தே அதன் கதை முடிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மாத்திரம் பத்து இலட்சம் பெண்சிசுக்கள் கருவறுக்கப்படுகின்றன. அதாவது தினமும் 2500 சிசுக்கள் அழிக்கப்படுகின்றன. 2007-08ம் ஆண்டு பொருளாதார ஆய்வுகளின் படி பிறக்கும் 1 இலட்சம் குழந்தைகளில் பெண் சிசுக்கொலை விகிதம் 450ஆக உள்ளது. இது சீனாவில் 45 விகிதமாகவும் இலங்கையில் 58 விகிதமாகவும் காணப்படுகின்றது.

இவைதொடர்பாக ஒரு மொத்தப் பார்வை பார்த்தால் வருடம்தோறும் உலகளவில் 45 மில்லியன் கருக்கலைப்பு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. அவற்றில் 20 மில்லியன் கலைப்புகள் சட்டவிரோதமானவை. ஒரு நாளைக்கு சுமார் 115000  கருக்கலைப்புகள் உலகளவில் நடக்கின்றன. பெரும்பாலான கருக்கலைப்புகள் வளர்முக நாடுகளிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் ஒரு மணிநேரத்திற்கு ஒருதரம் எட்டு கர்ப்பிணிப் பெண்கள் இறக்கின்றனர். 2006ம் ஆண்டில் மாத்திரம் 86000  கர்ப்பிணிப் பெண்கள் இறந்துள்ளனர். சுமார் 5.2 மில்லியன்பேர் இந்தக் கருக்கலைப்பின் அதீத அதிகரிப்பினால் வருடம்தோறும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

கருக்கலைப்பு செய்யப்படுவதற்கான காரணிகள் :
இவ்வாறு உலகளாவியரீதியில் அதிகமானோரின் அங்கீகாரத்தைப் பெற்று சர்வசாதாரணமானதொரு எண்ணக்கருவாக இன்றிந்தப் பயங்கரப் படுகொலைகள் மலிந்துவிட்டன. எனவே இதனடியாக எழுகின்ற கேள்விதான் இன்று சர்வதேசரீதியில் இந்தளவு பெருந்தொகையான கருக்கலைப்பு நடவடிக்கைகள் செய்யப்படுவதற்கான காரணங்கள் எவை என்பதுபற்றியாகும்.

கருக்கலைப்பைப் பொருத்தவரையில் அதற்குப் பல்வேறு காரணிகள் முன்வைக்கப்படுகின்றன. ஆய்வறிக்கைகளை நோக்கினால் செய்யப்படும் 95 விழுக்காட்டுக் கருக்கலைப்புகள் குடும்பக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கே செய்யப்படுகின்றன. கற்பழிப்பின் காரணமாக செய்யப்படும் கருக்கலைப்பு 1 விழுக்காட்டையும் தாண்டுவதில்லை. அதேபோன்று குழந்தைகள் ஊனமாகப் பிறப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டால் அதற்காக 1%  மான கலைப்புகள் செய்யப்படுகின்றன. மேலும் 3% மான கருக்கலைப்புகள்     பிரசவிப்பதால் தாயின் உயிருக்கு ஆபத்துநேரும் என்ற அச்சத்தினால் செய்யப்படுகின்றன.

மேற்குலகம் கட்டவிழ்த்துவிட்ட சுதந்திரப் பாலியல் உறவுகளாலும் இந்தக் கருக்கலைப்பு வீதம் அதிகரித்து வருவதாக சமூகவியளாலர்கள் கூறுகிறார்கள். குடும்பக் கூட்டமைப்பில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவாக அங்கு ஏற்பட்டுள்ள இன்றைய வாழ்க்கைமுறை யாரும் யாருடனும் கூடிவாழலாமென்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. இன்று மேற்கு நாடுகளில் நிலவுகின்ற ‘உடன் வாழ்வு (Living together), தற்காலிகத் திருமணம்Life partner,  Boy/Girl போன்ற சீர்கெட்ட இவ்வாழ்க்கை முறைகளின் விளைவாகவும் கருக்கலைப்புகள் செய்யப்படுகின்றன. அதேபோன்று பாலியல் நோய்களைத் தடுப்பதற்கான வழிகாட்டல்கள் என்ற பெயரில் இளைஞர் யுவதிகளிடத்தில் அறிமுகம் செய்யப்படும் ஆணுறைகள்,    கருத்தடை மாத்திரைகள் போன்றனகூட இன்னுமின்னும் அவர்களிடம் பாலியல் நடவடிக்கைகளுக்குத் தூபமிடுவதாகவே அமைகின்றன. இதன் விளைவுகூட கருக்கலைப்பிலேயே முடிகின்றது.

பிரித்தானியாவில் கருக்கலைப்பு செய்யும் பெண்களில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் 25 வயதுக்கும் குறைந்தவர்களே. அதிலும் 19 விகிதமானவர்கள் 20 வயதுக்கும் குறைந்தவர்கள். ஆபிரிக்காவில் 26% மானவர்கள் 20இற்கும் குறைந்த வயதில் கருக்கலைப்பு செய்கின்றனர். அமெரிக்காவில் பெண்களில் பாதிப்பேர் கட்டற்ற பாலியல் நடவடிக்கைகளின் காரணமாகக் கருத்தரிக்கின்றனர். அவர்களில் பத்தில் நான்குபேர் கருக்கலைப்பில் ஈடுபடுகின்றனர். ஆக 35% மான பெண்கள் 45 வயதை அடையுமுன்பு ஒருமுறையேனும் கருக்கலைப்பிற்குள்ளாகியே இருப்பார்கள்.

அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்யப்படுவதன் விபரம்
*
fUf;fiyg;gpw;fhd fhuzpfs;
tpOf;fhl;Lg;
ngWkhdk; %
1
fHg;gfhyj;ijg; gpw;Nghly;
25.5%
2
nghUshjhu neUf;fb
21.3%
3
fUitr; Rkg;gjw;F Mz;jug;ghy; tpUg;gk; fpilf;fhik
14.1%
4
,staJf; fHg;gk; my;yJ ngw;Nwhhpd; fz;bg;G
12.2%
5
fHg;gj;ij Rkg;gjhy; fy;tpapNyh my;yJ njhopypNyh Vw;gLk; ghjpg;G
10.8%
6
mjpfkhd Foe;ijg; Ngw;iw tpUk;ghik
7.9%
7
rpRtpd; capUf;F Mgj;J NeUk; re;jHg;gk;
3.3%
8
Rkg;gjpy; jhapd; capUf;F Vw;gLk; Mgj;Jf;fs;
2.8%
9
Foe;ij Cdkhfg; gpwf;Fk; rhj;jpak;
1%
10
,itjtpHe;j NtW fhuzpfs;
1.1%
Reasons  why women have induced Abortions:
International family planning prespectives- volume 24.
ஒரு சில காரணிகளே கருக்கலைப்பிற்கு நியாயபூர்வமானதாக இருந்தாலும் அனேகமானவை மனித இனத்தின் நெறிபிறழ்வின் காரணமாகவே செய்யப்படுகின்றன என்பதுதான் உண்மை.

வியாபார நோக்கம் :
கருக்கலைப்புச் செய்வதைப் பணம் சம்பாதிக்கவல்ல தொழிலாக இன்று பல மருத்துவ நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. இதனையே நோக்காக்கொண்டு பல மருத்துவர்கள் செயலாற்றுவதும் குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக ‘சேபு ஜோஜ்என்ற சமூக சிந்தனையாளர் இவ்வாறு கூறுகின்றார். “பெண் சிசுக்கருக்கலைப்பு இந்தியாவின் மருத்துவப் பயிற்சியாளர்களுக்கு சிறந்த தொழிலாக விளங்குகிறது. இதன் சந்தை வருமானம் பத்து பில்லியன் ரூபாய்களாகும். இந்தப்பெரும் மருத்துவக் குற்றத்தில் சில மருத்துவர்களும் ஈடுபடுகின்றனர் என்கிறார்.

அதேபோன்று அதிகமான அழகுசாதனப் பொருட்கள் (Cosmetic items) தாயின் கருவரையில் படுகொலைசெய்யப் படும் சிசுக்களின் சிதைந்த பாகங்களிலிருந்தே உற்பத்திசெய்யப்படு கின்றன. அமெரிக்க நிறுவனமொன்று கருச்சிதைவுகளை வியாபாரநோக்கில் ஈடுபடுத்தியதாக   இகாரஸ்என்ற பத்திரிகை இவ்வாறு செய்திவெளியிட்டிருந்தது. “ஆஸ்ட்ரிய உற்பத்தி நிறுவனமொன்றுடன் வியாபாரத்திலீடுபடும் அமெரிக்க நிருவனமொன்று தென்கொரியாவிலிருந்து ஆயிரக்கணக்கான மனிதக்கருக்களை வாங்கி 433 ஜாடிகளில் சேமித்து ஜப்பானிய விமானம் மூலம் கொண்டு சென்றதாகஅப்பத்திரிகைதெரிவித்தது.

இதுமட்டுமன்றி மனிதகுலத்தையே தலைகுனியச்செய்யும் ஒருசெயலையும் மனிதம் என்ற மனிதாபிமானமற்ற சிலர் செய்துவருகிறார்கள். அதாவது கருவில்வைத்துக் கொலைசெய்யப்பட்ட சிறு குழந்தைகளை அப்படியே உண்ணும் சம்பவங்களும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

கருக்கலைப்பின் விபரீதங்கள் :
கருக்கலைப்பது குறித்த சிசுவை மாத்திரம் பாதிக்கச் செய்வதில்லை. மாறாக அத்தாயையும் அது உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் பலமாகப் பாதிப்படையச் செய்கின்றது. அத்தோடு சமூகரீதியான சீரழிவுகளையும் ஏற்படுத்துகின்றது. மருத்துவ நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் அது சார் நிகழ்வுகளும் இதனைத் தெளிவுபடுத்துகின்றன.

உளரீதியான தாக்கம்
கருக்கலைப்பு செய்தபின்பு பெண்கள் உளரீதியான நோய்களுக்கு ஆளாகின்றனர். தாம் குற்றம் புரிந்துவிட்டதாக மனம் குறுகுறுத்தவாறே வேதனைப்படுகின்றனர். இதனால் மன அழுத்தம், விரக்தி நிலை, மனச் சோர்வு, எதையோ பரிகொடுத்ததுபோன்ற உணர்வு, கோபாவேசம் போன்ற ஆபத்தான நோய்களுக்கு ஆளாகின்றார்கள். அத்தோடு பிறரைவிட்டும் அதிகமாகத் தனித்திருக்க முயற்சிப்பதாகவும் பிறரை வெறுப்பதாகவும் தாம்பத்திய உறவில் விருப்பமின்மை போன்ற நிலைகள் ஏற்படுவதாகவும் இறுதியில் மன அழுத்தம் (stress) அதிகமாகி தற்கொலையில்போய் முடிவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அனுபவப்பட்ட ஒரு பெண் கூறுகையில் “கருக்கலைப்பு செய்தபின்பு நான் விரக்தியினாலும் மனக்குழப்பத்தினாலும் பாதிக்கப்பட்டிருந்தேன்  என்கிறார். மற்றுமொரு பெண் “நான் விரக்தியின் உச்சநிலையை உணர்ந்தேன். அது என்னை ஆழமான மனக்குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது  என்று கூறுகிறார். அதேபோன்று 17 வயதுச் சிறுமி ஒருத்தி சோர்வு நிலை மந்த நிலை மற்றும் வாந்தி என்பவற்றால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள். பின்பு அவளது கருவைக் கலைத்தபோது வெளிப்படையாகவே அச்சிறுமி மனோவியாதிக்காளாவதைக் காணக்கூயதாய் இருந்ததாக வைத்தியர்கள் அறிவிக்கின்றனர்.

உடல்ரீதியான தாக்கம்
உளரீதியாக மட்டுமன்றி உடல்ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். பெண்கள் கருக்கலைப்பின்போது அளவிலா வேதனையை அனுபவிப்பதாகக் க்ளினிக் ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.  அத்தோடு இதில் ஈடுபட்ட அனேகருக்கு மார்பகப்புற்றுநோய் ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

சமூகரிதியான தாக்கம்
உண்மையில் கருக்கலைப்பு சமூகமட்டத்தில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. கருக்கலைப்பு செய்யமுடியும் என்ற நம்பிக்கையில் இளம் தலைமுறையினர் தமது பாலியல் வேட்கைகளை எவ்வாறேனும் தீர்த்துக்கொள்ளத் தலைப்படுகின்றனர். ஒரு யுவதி வைத்தியரிடம் சென்று தனக்குக் குழந்தை தேவையில்லை என்று கூறினால்போதும் அத்தோடு கரு கலைக்கப்படும். அந்தளவுக்குக் கருக்கலைப்பு என்பது இன்றைய சமூகத்தில் மலிவானதொன்றாகக் காணப்படுகின்றது. பிரித்தானியக் கருக்கலைப்பு விமர்சகர்கள் கருக்கொலையின் துரித அதிகரிப்பின் காரணமாக பிரித்தானியாவில் குடும்பக் கட்டமைப்பு, மானுடக் கலாசாரம், குடும்ப வாழ்க்கையின் அத்திபாரம் போன்றன தோல்விகண்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர்.11

எதிர்ப்புக் கோஷங்கள் :

கருக்கலைப்பு உலகளவில் பரவலாகச் செய்யப்பட்டாலும் அதற்கெதிரான வாதங்களும் விமர்சனங்களும் கோஷங்களும் ஒலிக்கத்தான் செய்கின்றன. எனினும் அக்கோஷங்கள் இன்னமும் அடிமட்டத்திலிருந்து ஒலித்துக்கொண்டிருப்பதுதான் கவலைக்குரிய அம்சம். கோஷங்களை முழங்குபவர்கள் அதற்கு சரியானதொரு தீர்வை முன்மொழியத் தவறிவிட்டமையும் அதன் நாதம் ஜனரஞ்சகப்படுத்தப்படாமைக்கு மற்றுமொரு காரணமாயிருக்கலாம்.

பிரித்தானியப் பாராளுமன்றத்தில் கருக்கலைப்பின் காலவரையறை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட வாதப்பிரதி வாதங்களின்போது ‘நெடின் தௌர்ஸ் என்ற பெண் அங்கத்தவர் “இருபது வாரங்களின் பின்பு கருக்கலைப்பு செய்வது ஆரோக்கியமானதொரு சமூகத்துக்கு உகந்ததல்ல. இது மிருகத்தனமான செயலாகும் என்றார்.

மேலும் கருக்கலைப்பு பெரும் பாவகாரியம் என்று ‘போப் 16ஆம் பெணடிக்ட் தெரிவித்துள்ளார். இது கலாசார சீரழிவு என்றும் மனித மாண்பைக் கெடுத்துவிடும் என்றும் கூறினார்.12 அத்தோடு 2005ஆம் ஆண்டு ஐரோப்பிய சங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையின்கீழ் செய்த பீஜிங் உடன்படிக்கையில் கருக்கலைப்பை முற்றாகத் தடைசெய்தது. திருமணம்தான் குடும்ப அமைப்புக்கான ஒரே வழியென்ற முடிவுக்கு வந்தது. மேலும் பாதுகாப்பான கருக்கலைப்பு முறையையும் தடைசெய்தது. அத்தோடு சர்வதேச நிறுவனங்கள் பிற மதங்களின் பாரம்பரிய, நம்பிக்கை, கலாசார விடயங்களில் தலையிடுவதைத் தவிர்ந்துகொள்ளுமாறும் வேண்யது.

உலகில் நடக்கும் தீமைகள்  குற்றங்கள் என்பவற்றுக்கான தண்டனைகளைத் துல்லியமாக வழங்கும் சக்தி மனிதனுக்கில்லை. ஏனெனில் குற்றங்களுக்கெதிராக அவன் இயற்றும் சட்டங்களோ மனோ இச்சையினடியாகவே அமைகின்றன. குறுகிய அறிவுபடைத்த மனிதனால் இன்னுமொரு மனிதனுக்கு வழங்கப்படும் தண்டனைகளிலும் குறைகளே காணப்படும்.  ஆனால் சர்வமும் அறிந்த அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவன் விதிக்கும் சட்டம்தான் பூரணத்துவம் வாய்ந்ததாகவும் நீதமானதாகவும் இருக்கும்.

அந்தவகையில் இதற்கான சிறந்ததொரு தீர்வை இஸ்லாம் முன்வைக்கின்றது. மேற்படி ஆய்வுகளையும் கணிப்புகளையும் பார்த்தால் முக்கியமாக இரண்டு விடயங்களால் இன்று அதிகமான கருக்கலைப்புகள் இடம்பெறுகின்றன. ஒன்று; தகாத பாலுறவின் மூலம் உருவாகும் சிசுவைக் கலைத்தல். இரண்டு; வறுமையின் கொடுமையினாலான கலைப்பு.

இஸ்லாம் முதலாவது விடயத்தைக் கண்டிப்பாகத் தடைசெய்துள்ளது. வெள்ளம் வருமுன் அணைகட்டவேண்டுமென்பதுபோல தவறான முறையில் ஆண்-பெண் நெருங்குமுன்பே அதற்கு வரம்பு போட்டுவிடுகின்றது. அல்குர்ஆன் கூறுகின்றது: “இன்னும் விசுவாசிகளுக்கு ‘தம் பார்வைகளை அவர்கள் தாழ்த்திக்கொள்ள வேண்டும் என்றும் தம் வெட்கத்தலங்களைப் பேணிக்கொள்ள வேண்டுமென்றும் நீர் கூறுவீராக.  “இன்னும் விசுவாசிகளான பெண்களுக்கும் ‘தம் பார்வைகளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளுமாறும் தம் வெட்கத்தலங்களைப் பேணிக்கொள்ளுமாறும்... நீர் கூறுவீராக. (அந்நூர் : 30)

அவ்வாறே அன்னிய ஆண்-பெண் இருவர் தனித்திருப்பதையும் இஸ்லாம் தடுத்திருக்கின்றது. முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “திருமணம் முடிக்க ஆகுமாக்கப்பட்ட ஆணும் பெண்ணும் தனித்திருக்கவேண்டாம். அங்கு மூன்றாமவனாக ஷைத்தானிருப்பான்.(ஆதாரம் : புகாரி)

இதுபோன்ற பல்வேறு வரையறைகளை இஸ்லாம் ஓர் ஆணும் பெண்ணும் தவறான வழியில் சென்றுவிடக்கூடாது என்பதற்காக விதியாக்கியுள்ளது. அப்படியும் இவ்விதிமுறைகளை யாரும் மீறினால் இருபாலாருக்குமே கடுமையான, பகிரங்கமான தண்டனைகளை வழங்குகின்றது. இதன் மூலம் சமூகம் பாடம்பெற்று அத்தீய வழிமுறைகளை மீண்டும் செய்யக்கூடாதென்பதே இதன் உயரிய நோக்கமாகும்.
இரண்டாவது விடயத்தை இஸ்லாம் அழகான முறையில் கையாழ்கின்றது. வறுமைக்கு அஞ்சி குழந்தைகளைக் கொலைசெய்யவேண்டாமென வலியுறுத்துகின்றது. அல்லாஹ் கூறுகின்றான் : ‘வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளை நீங்கள் கொலைசெய்யவேண்டாம். நாம்தாம் அவர்களுக்கும் உங்களுக்கும் உணவளிக்கிறோம். (அல்இஸ்ராஃ : 31 / அல் அன்ஆம் : 20) மற்றுமோரிடத்தில்: “அதில் (பூமியில்) உங்களுக்கும் எவருக்கு நீங்கள் உணவளிப்பவராக இல்லையோ அவர்களுக்கும் நாமே வாழ்வாதாரங்களை உண்டாக்கினோம். (அல்ஹிஜ்ர் : 20) மற்றுமோரிடத்தில்- “எந்தப்பிராணியும் - அதன் உணவு அல்லாஹ்வின்மீது (பொறுப்பாக)வேயன்றி பூமியில் (வாழ்வது)இல்லை. (அல்ஹ{த் : 06)

இதுகுறித்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “நீங்கள் அல்லாஹ்வின்மீது (முழு நம்பிக்கைவைத்து) பொறுப்புச்சாட்டினால் (தவக்குல்) காலையில் பசித்த வயிற்றுடன் வெளியேறிய பறவை மாலையில் வயிறு நிரம்ப கூடு வந்துசேர்வதைப் போன்று உங்களுக்கும் உணவளிப்பான். என்றார்கள். (ஆதாரம் : புகாரி)

ஆக வறுமை என்ற இரண்டாவது காரணிக்கும் இஸ்லாம் அழகானதொரு தீர்வை முன்வைக்கின்றது. மூன்றாவதொரு காரணத்திற்காகவும் இன்று கருக்கலைப்பு செய்யப்படுகின்றது. கருவில் வளர்வது பெண்சிசுவென்றிருந்தால் எதிர்காலத்தில் வரதட்சனை என்ற கொடுமைக்கு ஆளாகநேரிடும் என்றஞ்சி இன்று அதிகமான கருக்கொலைகள் நடக்கின்றன. இது இந்தியாவில் அதிகம். ஆண்டுக்கு பத்து இலட்சம் பெண் சிசுக்கொலைகள் இந்தியாவில் நடப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஆரம்ப அரேபிய சமூகத்தில் பெண் குழந்தைகள் உயிருடன் மண்ணில் குழிதோண்டிப் புதைக்கப்பட்டன. அல்குர்ஆன் கூறுகின்றது. “அவர்களில் ஒருவன் பெண் குழந்தை (பிறந்திருப்பது)கொண்டு நற்செய்தி கூறப்பட்டால் (வெறுப்பால்) கோபம் நிரம்பியவனாக அவன் இருக்கின்ற நிலையில் அவனது முகம் கறுத்துவிட்டிருக்கும். எதனைக்கொண்டு அவன் நற்செய்தி கூறப்பட்டானோ (அதனைக் கெடுதியாகக் கருதி) அதன் சமுதாயத்தை விட்டும் மறைந்துகொள்கிறான். இழிவான நிலையில் இதனை வைத்துக்கொள்வதா? அல்லது மண்ணில் புதைத்து விடலாமா? (என்று சிந்திக்கிறான்) (அந்நஹ்ல் : 58, 59)
இஸ்லாம் அன்றிருந்த பெண்ணடிமைத்துவத்தை ஒழித்து உயரியதொரு அந்தஸ்த்தைப் பெண்ணுக்கு வழங்கியுள்ளது. இதுபற்றி மறுவுலகில் கடுமையாக விசாரிக்கப்படும் என்ற எச்சரிக்கையை விடுத்து பெண் குழந்தைகளைக் கொலைசெய்வதைத் தடுக்கின்றது. அல்லாஹ் கூறுகின்றான். “ஆன்மாக்கள் (அவற்றுக்குறிய உடல்களுடன்) இணைக்கப்படும்போது... (உயிருடன் புதைக்கப்பட்ட) பெண் குழந்தை விசாரிக்கப்படும்போது... எந்தப் பாவத்திற்காக (அது) கொல்லப்பட்டாள்? என்று (விசாரிக்கப்படும்போது)... (அல்இன்ஃபிதார் : 7, 8, 9)

அன்றய அரேபிய சமூகம் பெண் குழந்தைகளை உயிருடன் மண்ணில் புதைத்துக் கொலைசெய்தது. அனால் இன்றைய நவீன சமூகமோ குழந்தைகளைக் கருவறையில்வைத்தே கொன்றுவிடுகிறது. இஸ்லாத்தில் வரதட்சனை என்ற பெண் அடக்குமறையில்லை. மாறாக ‘மஹர் என்ற அடிப்படையில் ஆண், பெண் சார்பில் முன்வைக்கப்படும் குறித்த தொகையைக் கொடுத்தே திருமணம் முடிக்கவேண்டும். இதனை இஸ்லாம் வலியுறுத்திக் கூறுகின்றது. “பெண்களுக்கு அவர்களுடைய மஹர்களை மகிழ்ச்சியாக நீங்கள் அவர்களுக்குக் கொடுத்துவிடுங்கள். பிறகு அதிலிருந்து ஏNதுனும் உங்களுக்கு அவர்கள் மனமாற விட்டுத்தந்தால் அதனை தாராளமாகப் புசியுங்கள். (அன்னிஸா : 04)

ஆக வரதட்சனை என்ற கொடுமைக்கு அஞ்சி அரங்கேறிவரும் சிசுக்கொலைகளுக்கும் இஸ்லாம் நல்லதொரு தீர்வை முன்வைக்கின்றது. இத்தீர்வுத்திட்டங்களை ஒவ்வொரு மனிதனும் மனதிற்கொண்டு நடைமுறைப்படுத்தினால் ஆரோக்கியமானதொரு சூழலுக்கு அடித்தளமிடலாம். புதுப் புது வடிவில் பெஷனாக, மொடனாக உருவெடுத்து மனித குலத்தையே ஆட்டங்காணச் செய்யும் நவீன தீமைகளைத் தடுப்பதோடு அவற்றால் விளையும் பாரிய தீங்குகளிலிருந்தும் எம்மைத் தற்காத்துக்கொள்ளலாம். மனித சிந்தனைகள் கண்டுபிடித்துத்தரும் கலாசார நாகரீகங்களில் சிக்கிவிடாது இறைவன் சொல்லித்தந்த சகலமானவருக்கும் பொருந்தக்கூடிய கலாசார விழுமியங்களின்படி எம் வாழ்வை அமைத்துக்கொள்ளலாம். அவ்வாறாக எமது வாழ்க்கை அமையுமானால் எமது கஷ்ட நஷ்டங்களைப் போக்கிவிடுவதாக இறைவன் வாக்களிக்கின்றான். அல்லாஹ் கூறுகின்றான். “எவர் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கிறாரோ அவருக்கு (கஷ்டங்களிலிருந்து) மீட்சிபெறும் வழியை அவன் ஆக்குவான். மேலும் அவர் எண்ணிப்பார்க்காத விதத்தில் அவருக்கு வாழ்வாதாரங்களை அவன் வழங்குவான். யார் அல்லாஹ்வின்மீது (தன் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைக்கிறாரோ அவருக்கு அவனே (முற்றிலும்) போதுமானவன். (அத்தலாக் : 2) 

எனவே இறைவன் வரைந்துகொடுத்த நேரிய பாதையில் பயணித்து இதுபோன்ற பாவகாரியங்களிலிருந்து தவிர்ந்து எம்மையும் எம் இளைய தலைமுறையையும் பாதுகாக்கப் பகீரதப் பிரயத்தனம் எடுப்போம்.

உங்கள் கருத்து:

2 comments:

Sanjay Thamilnila said...

உண்மையிலே இது ஒரு அருமையான பதிவு. வாழ்த்துகள் அண்ணா http://mydeartamil.blogspot.com/2011/10/blog-post_08.html

Anonymous said...

fathima......
intha article mihavum pirayosanamanathu....... karu kalaikka thayaraha irukkum pettrorukku oru sirantha warning aaha amaiyum ena ninaikkiren............
aanaal..... ithil irukum sila eluthupilaihalai thiruthumaru panivaha vendik kolhiren..........( font matram.....)

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...