"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

27 November 2009

உலகை உலுக்கி வரும் பட்டினிச்சாவு

“பட்டினிச்சாவு” இன்றைய பெரும் பிரச்சினையாக காட்டுத்தீபோல் உலகம் பூராவும் பரவிவருகின்றது. யுத்தமென்றும், ஆட்கொல்லிநோய்களென்றும் பல்வகை சவால்களையும் எதிர்கொண்டு வரும் மனிதன் இன்றைய தினம் பெரும் உணவுப்பஞ்சத்திற்கும் முகம்கொடுக்க நேர்ந்துள்ளான். இன்று பல்வேறு உலக நாடுகள் இப்பிரச்சினையில் சிக்கி வெளியேற முடியாது தவித்துக்கொண்டிருக்கின்றன. இதனால் பல்வேறு உயிரிழப்புக்களும், கோளாருகளும் தினந்தோரும் ஆங்காங்கு நிகழ்ந்தவண்ணமிருக்கின்றன. உலகத்தரவுகளை வைத்து நோக்கும் போது இந்தப்பட்டினிச்சாவு அநியாயமானது. தமது சுயத்தின் மீது பேராசை கொண்ட சிறு தொகை மக்கள் கூடுதல் இலாபமீட்டவும் தம் நலன் காக்கவுமாக பெருந்தொகை மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் இடையூறுகளை ஏற்படுத்தி சுகபோகத்தில் திலைத்துக் கொண்டிருக்கின்றனர். அண்மைக் காலங்களில் இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கைகள் இதனை அம்பலப்படுத்தியுள்ளன.

பல நாடுகள் எதிர்கொண்டு வரும் உணவுப்பற்றாக்குறை, கிடைக்கும் கொஞ்ச உணவிலும் ஊட்டச்சத்துக்குறைபாடு, அதனாலான நோய்கள் என்பவற்றின் காரணமாக நாளொன்றுக்கு 16000 குழந்தைகள் இறக்கநேரிடுகின்றன. இவ்வுணவுப்பற்றாக்குறையில் இது வரை 37 நாடுகள் சிக்கியுள்ளன. செனகல், கமரூன், ஹெய்டி, நைகர், பாசோ, புர்கினோ போன்ற நாடுகளில் உணவுப்பிரச்சினையால் கலவரங்களே நடந்து முடிந்துள்ளன. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் மாத்திரம் 175000 விவசாயிகள் வாழவழியின்றி தற்கொலைசெய்து கொண்டுள்ளனர். அண்மையில் ஐ.நாவின் உணவு நிறுவனம் (United Nations Food Agency) வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் ஒவ்வொரு நாளும் உலகில் 18000 சிறுவர்கள் பட்டினிச்சாவு போசாக்கின்மை போன்ற இன்னல்களை எதிர்கௌ;கின்றனர். அதுமட்டுமன்றி 85 கோடி மக்கள் வெறும்வயிற்றுடனே இரவு படுக்கைக்குச் செல்கின்றனர்.

குறை உணவினாலும் உணவில் போசாக்கின்மையாலும் சில நாடுகளில் பட்டினியில் வாடும் சிறுவர்களின் தோற்றமோ பயங்கரமாகவுள்ளது. முல்லும் தோலுமாய் சில குழந்தைகள்> தலை பருத்து உடல் மெலிந்த சில குழந்தைகள்> குடம்போன்ற வயிற்றைச் சுமக்கும் இன்னும் சில குழந்தைகள்…..

ஊட்டச்சத்து அற்ற உணவுகளைக் கர்ப்பினித்தாய்மார்கள் பெறுவதால் பிறக்கும் குழந்தைகள் கூட நலிவுற்றவையாய்ப்பிறக்கின்றன. உலகிலே மிகக்கூடுதலான எண்ணிக்கைகொண்ட போசாக்கற்ற குழந்தைகள் அல்லது சிறுவர்கள் இந்தியாவில் இருப்பதாக ஐ.நாவின் உணவு ஸ்தாபன அறிக்கை சுட்டுகின்றது. இந்தியாவில் 15 கோடிக்கும் அதிகமான சிறுவர்களும் சீனாவில் 4 கோடியும் ஆசியாவின் ஏனைய பகுதிகளில் 10 கோடிக்கு மேலாகவும் ஆபிரிக்காவில் அதே தொகையிலும் இலத்தீன் அமெரிக்காவில் 3 கோடியளவிலுமான சிறுவர்கள் போசாக்கின்றி இருப்பதாக அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.

சிறார்களின் பரிதாப நிலை                                                          கோடி
1. உகந்த உறைவிடமற்ற சிறார்கள்                                              65
2. சுகாதாரக் கவனிப்பற்ற சிறார்கள்                                             50
3. சுத்தமான நீரைப்பெற முடியாத சிறார்கள்                           40
4. எவ்வித மருத்துவக் கவனிப்புமற்ற சிறார்கள்                   27
5. பாடசாலை செல்லாத சிறார்கள்                                               14
6. சரியான நோய்த்தடுப்பின்றி மரணிக்கும் சிறார்கள்        22 இலட்சம்

உணவுப்பஞ்சத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் ஹெயிட்டியின் சில பிரதேச மக்கள் பசிக்கொடுமை தாளாது களிமண்ணில் உப்பைக் கலந்து விழுங்கி தம் வயிற்றுப்பசியை நிரப்பிக்கொள்கின்றனர். 2008 இன் ஆரம்பத்திலேயே அரிசி, கோதுமை என்பவற்றின் விலை இரட்டிப்பானதோடு சோளத்தின் விலை மும்மடங்காக எகிறியது. இத்திடீர் விலையேற்றம் ஏழவே அறைகுறை உணவைப்பெற்றுக்கொண்டிருந்த வறியவர்களது அந்த உணவைக்கூட தட்டிச்சென்றது. மட்டுமன்றி சத்துணவுபெறாத மக்கள் தொகை 963 மில்லியனை எட்டிவிட்டது.

அவ்வாறே 2009 இல் உலகப்பொருளாதார வீழ்ச்சியால் உலகெங்கிலும் 53 மில்லியன் மக்கள் பாதிப்பிற்குள்ளாவர் என்றும் 400,000 இற்கும் அதிகமான சிறுவர்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்வர் என்றும் கடந்த வருடம் உலக வங்கி எச்சரித்திருந்தது.

இந்நிதியச் சரிவினால் ஏழவே வறுமையில் வாழும் மில்லியன் கணக்கானோர் மேலும் வறுமைக்கோட்டின் கீழ் தள்ளப்படுவர் என்றும் எச்சரித்துள்ளது. அது மட்டுமன்றி 2015 இற்குள் ஓரளவுக்கேனும் வறுமையைக் கட்டுப்படுத்த ஐ.நா நிர்ணயித்திருந்த அதன் ஆயிரமாண்டு அபிவிருத்தி இலக்குகள் (Millennium Development Goals) இந்நிதியச் சரிவினால் (Economic Crisis) கேள்விக்குள்ளாகியுள்ளது. “The global economic is assessing vulnerability with a poverty lens” என்ற உலக வங்கிக் கொள்கைக் குறிப்பு ஏற்கனவே வறுமையில் வாடும் மில்லியன் கணக்கான மக்கள் மேலும் வறுமைக்கோட்டில் தள்ளப்படுவர் என விவரித்துள்ளது.

உலகம் தழுவிய இந்தப்பட்டினிச்சாவுக்குக் காரணம் பூமிப்பந்தில் பெருக்கெடுத்திருக்கும் சன சமுத்திரமும் அதனால் ஏற்படும் குடித்தொகை வெடிப்புமேயென மேற்கின் மக்கட் தொகையியல் அறிஞர்களும், அரசியல்வாதிகளும் கருத்துத்தெரிவிக்கின்றனர். இந்நிலையில் மக்கள் யாவரும் குடும்பக்கட்டுப்பாடு செய்வது அவசியமென வலியுறுத்துகின்றனர். இதனை உறுதிப்படுத்த சனத்தொகைப்பெருக்கம் 2:4:8 என்ற பெருக்கல் விருத்தியாக (Geometric progressive) எகிரிச்செல்வதாகவும் நில உற்பத்திச்சக்தியோ 2:3:4 என்ற கூட்டல் விருத்தி (Arithmetic Progressive) கிரமத்தில் கூடிச்செல்வதாகவும் கூறுகின்றனர்.

அது மட்டுமன்றி உணவுப்பண்டங்களின் விலைவாசி ஏற்றத்திற்குக் காரணம் இந்தியாவின் 35 கோடி நடுத்தரவர்க்கத்தினரென முன்னால் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் w புஷ் கூறியுள்ளார். இந்தியா போன்ற நாடுகளின் நடுத்தர வர்க்கத்தினர் உயர்தர உணவுப்பொருட்களில் நாட்டங்கொள்வதே உலகப்பிரச்சினையாகப் பரிணமிக்கிறது என்றும் சுட்டிக் காட்டினார். இது தவிர இந்தியாவிலும் சீனாவிலும் வாழ்கின்ற நடுத்தர வர்க்கத்தினர் சத்துணவு பயன்படுத்தத் தொடங்கியது மட்டுமல்லாது தமது ஏற்றுமதியைத் தடை செய்ததும்தான் உலகம் இன்று எதிர்கொண்டுள்ள உணவுப்பிரச்சினைக்குக் காரணம் என்று முன்னால் வெளியுறவுச் செயலாலர் கொண்டலிசா ரைஸ் தெரிவித்துள்ளார்.

சுயநலத்தினால் ஏற்பட்ட ஆபத்து

விலை வாசி ஏற்றத்திற்கு இவ்வாறான காரணங்கள் கூறப்படினும் உண்மையான காரணம் யாதென்பதை உலகம் அறிந்துதான் உள்ளது. உண்மை என்னவெனில் இன்று 20% ஆன உலக மக்கள் 80% ஆன மக்களது பொருளாதாரத்தை சுயண்டியாக அனுபவித்துவருகின்றனர். அரசியல் இலாபம் கருதி அமெரிக்கா உள்ளிட்ட பல செல்வந்த நாடுகள் தமது நலனைப்பாதுகாக்கக் கருதி பாரியதொரு வேலைத்திட்டத்தில் இறங்கியுள்ளனர். வரிய நாடுகளுக்கு உதவி என்ற பெயரில் வட்டியுடன் கூடிய கடன் கொடுத்து தம் வலையில் வீழ்த்தி பின்பு உணவுற்பத்திக் கட்டுப்பாடு, தண்ணீர்க்கட்டுப்பாடு, ஏற்றுமதி இறக்குமதிகளில் கட்டுப்பாடு, உதவிகள் மறுப்பு என பல்வேறு கட்டவிழ்ப்புக்களைச் செய்கின்றனர். பன்னாட்டு நிதி நிறுவனமொன்றில் சுமார் 12 ஆண்டுகள் பணிபுரிந்த பொருளாதார நிபுணர் “டேவின்சன் புதூ” அவரது இராஜினாமாக் கடிதத்தில் அதற்கான காரணத்தைப் பின்வருமாறு எழுதியுள்ளார்.

“வறிய நாடுகளில் உள்ள பல கோடி மக்களின் இரத்தம் எனது கரங்களில் படிந்து கிடக்கின்றது. இது வெறும் இரத்தக்கரையல்ல, இரத்த ஆறு. இது எவ்வாறு நமது கரங்களில் படிகின்றதென்று தெரியுமா? முதலில் வறிய நாடுகள் பற்றி மோசடியான புள்ளி விபரங்களைத் தயாரிக்கின்றோம். இதனை அந்நாடுகளில் காட்டி உங்களது பொருளாதாரம் வீழ்ச்சியுற்றுள்ளது எனப் பயமுறுத்துவோம். பின்பு கடன் தருவதாகக்கூறி மோசடித்திட்டங்களையும், நிபந்தனைகளையும் அவர்கள்மேல் திணிக்கிறோம். இவ்வாறு நமது நிபந்தனைகள் ஏற்கப்படுகின்ற போது அந்நாட்டு மக்களின் இரத்தம் எமது கரங்களில் ஆறாக ஓடும். இதற்குப் பரிகாரமாக நான் எடுத்திருக்கும் முதற்கட்ட நடவடிக்கைதான் இந்த இராஜினாமாக் கடிதம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஒரு சில நாடுகள் முழு மனித வளங்களையும் உபயோகிக்கின்றன. தமது டாம்பீகமான, படாடோபமான வாழ்க்கையை உலகுக்கு அம்பலப்படுத்தும் உண்மைத் தரவுகளை மூடி மறைத்து விட்டு குடிசனவெடிப்பு, உணவுற்பத்திக் குறைவு என வளர்முக நாடுகள் மீது பலிபோடுகின்றன. அண்மைய அறிக்கைகளின் படி வருடமொன்றிற்கு அமெரிக்கரொருவரின் உணவுப்பயன்பாடு அமெரிக்கரல்லாத பிறிதொருவரின் உணவுப்பயன் பாட்டிலும் அதிகம் என்பதை சுட்டிக்காட்டுகின்றன.

ஒரு அமெரிக்கர் ஆண்டொன்றிற்கு 73கிலோ கிராம் பால் பயன்படுத்தும் போது ஒரு இந்தியர் 36கி.கி பாலையும் ஒரு சீனர் 11கி.கி பாலையும் மட்டுமே பயன்படுத்துகின்றார். அதே போன்று ஒரு ஆண்டில் அமெரிக்கரொருவர் 41கி.கி உணவு எண்ணெய் உபயோகித்தால் ஒரு இந்தியர் 11கி.கி உணவு எண்ணையைப் பயன்படுத்துகிறார். சாதாரண ஒருவரைவிட ஒரு அமெரிக்கர் ஐந்து மடங்கு கூடுதலாக கோதுமை, அரிசி என்பவற்றைப் பயன்படுத்துவதாக 2007இல் அமெரிக்காவின் வேளான்மைத்துறை அறிக்கை வெளியிட்டது. 2003இல் அமெரிக்காவில் ஆளுக்கு 946கி.கி ஆக இருந்த உணவுப்பயன்பாடு 2007இல் 1046கி.கி ஆக அதிகரித்தது. அதன்படி ஒரு அமெரிக்கர் ஓராண்டுக்கு 1046கி.கி தாணியம் சாப்பிடும் போது அதில் 1/5 பங்கையே வறிய நாடுகளில் ஒருவர் சாப்பிடுகிறார். ஆண்டிற்கு 40கி.கி மாட்டிறைச்சியை ஒரு அமெரிக்கர் உட்கொள்ள 16கி.கி இறைச்சியை ஒரு இந்திரும் 6கி.கி இறைச்சியை ஒரு சீனரும் உணவாகக் கொள்கின்றனர்.

இவ்வாறு வருடந்தோரும் வயிறு புடைக்க உண்பதற்கும், உணவுப்பொருட்களை உற்பத்திசெய்து கூடிய விலையில் சந்தைப்படுத்தி அதிக இலாகமீட்டுவதற்கும் பொருட்களைப்பதுக்கி வைத்து விலையேற்றம் செய்வதற்கும் இன்னும் பெருமளவில் மீதமாகும் உணவுப்பண்டங்கள் டொண் கணக்கில் கடல்களில் கொட்டப்படுவதற்கும் அமெரிக்கர்கள் பல்வேறு தில்லுமுல்லுகளைச் செய்கின்றனர்.

இன்று உலகின் 1/3 பங்கு தானியங்கள் மந்தைகளுக்கு உணவாக்கப்படுகின்றன. இது 2050இல் 50 விழுக்காடுகளால் அதிகரிக்கும் எனவும் இது மேலும் வறுமையையும் பட்டினியையும் வளர்க்குமெனவும் UNDP அறிக்கை கூறுகிறது. அமெரிக்காவில் 1கி.கி இறைச்சி பெறுவதற்கு ஒரு பண்ணை மாட்டுக்கு 7கி.கி தானியம் உணவாகக்கொடுக்கப்படுகிறது. மாமிச மாட்டுக்கு வழங்கப்படும் தானியங்களால் வருடந்தோரும் 850 மில்லியன் ஏழை மக்களது பசியைப்போக்கிவிடலாம் என்று கோர்னெல் பல்கலைக்கழக விவசாயபீட பேராசிரியர் “டேவிட் பமென்ரெல்” கூறுகிறார்.

மேலும் சில ஆய்வுகளின் படி உலகில் அதிகமாக உணவுப்பண்டங்கள் அலட்சியமாக வீணாக்கப்படுகின்றன.அமெரிக்காவில் உணவு விரயமும் அதனால் ஏற்படும் நட்டமும் 40-50 வீதமாக உள்ளது.அங்கு பெறப்படும் பழங்களிலும், காய்கறிகளிலும் ¼ பங்கு உணவு மேசைகளுக்கு வருமுன்னமே விரயமாகிவிடுகின்றன. 100 பில்லியன் பௌன்ட் உணவு வருடந்தோரும் அமெரிக்காவில் வீணாக்கப்படுவதாக Second Harvest என்ற இணையத்தளம் குறிப்பிடுகிறது. அவுஸ்திரேலியாவில் உணவின் அரைவாசிப்பகுதி விரயமாகின்றது. பிரித்தானியாவில் வருடந்தோரும் உணவுக்காக வாங்கப்படுபவற்றில் 1/3 பங்கு உண்ணப்படுவதில்லை. அதேபோன்று ஆபிரிக்காவில் 30% ஆன மீன்கள் கவனயீனம் காரணமாக விரயமாகின்றன. இவ்வாறு ஆய்விற்குட்படாத இன்னும் பல இடங்களில் உணவு வீணாவதை ஊகிக்க முடியுமாகவுள்ளது.

இன்று வளர்முக நாடுகளில் எரிபொருள் உற்பத்திக்காக விவசாய விளை நிலங்கள் வெகுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. மக்காச்சோளம், சோயா, கரும்பு, சிலவகைக்கிழங்குகள், எண்ணெய்விதை போன்ற விவசாயப்பொருட்கள் பல ஏக்கர் கணக்கான விவசாய பூமிகளில் பயிரிடப்பட்டு அவற்றில் இருந்து உயிர் எரிபொருள் தயாரிக்கப்படுகிறது. ஐ.நாவின் உணவு வேளான்மை இயக்கம் (FIO) கூறும் அறிக்கைப்படி 82 வறிய நாடுகளுக்குத் தேவையான 1140 இலட்சம் டொன் உணவுப்பொருட்கள் கச்சாப் பொருட்களாக மாற்றப்பட்டு வாகன எரிபொருளுக்கான எத்தனால் செய்யப்படுகிறது. 200 கோடி ஏழை மக்களின் நல்வாழ்வைக்கவனியாது உலகில் ஓடும் 80 கோடி கார்களின் எரிபொருள் தேவையை நிறைவு செய்யும் ஒரு திட்டத்தில் இறங்கியுள்ளார்கள். ஒரு காரின் டேங்கை நிரப்பப்போதுமான உயிர் எரிபொருளைத் தயாரிக்கப்பயன்படுத்தும் உணவுப்பொருள்களைக்கொண்டு ஓர் ஏழையின் ஒரு வருட உணவுத்தேவையைப் பூர்த்திசெய்;ய முடியுமென கணிப்பீடுகள் சுட்டுகின்றன. அமெரிக்காவில் மாத்திரம் 2007ம் ஆண்டில் அறுவடை செய்யப்பட்ட சோளத்தில் 20 விழுக்காட்டு சோளம் எதனால் எரிபொருள் தயாரிப்பிற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்றளவில் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் இதில் முண்டியடித்துக்கொண்டு களமிறங்கியுள்ளன. இதற்கு எதிர்ப்புக்கள் கிளம்பவே முன்னால் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் உலக விலை வாசி ஏற்றத்திற்கு பெட்ரோலிய விலை அதிகரிப்பைக் காரணம் காட்டி உயிர் எரிபொருள் உற்பத்திற்கு விளைநிலப்பயன்படுத்தலை நியாயப்படுத்தியுள்ளார்.

இவைதவிர இன்று உலகம் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியும் (Economic Crisis) அதனால் பெருகிவரும் வேலையிழப்புக்களும் (Jobless growth) உலகை இன்னும் வறுமைக்கோட்டின் கீழ் தள்ளிவிடுமென எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டனில் 2010 நடுப்பகுதியில் வேலையிழப்பு வீதம் தற்போதுள்ள 6.3% இல் இருந்து 9.5% ஆக உயரும் என லண்டன் Commerz Bank இன் பொருளாதார வல்லுனர் “Peter Dixon” எதிர்வு கூறுகிறார். ஜேர்மனில் 7.8% ஆக உள்ள இது 10.5% ஆக உயரும் இதுவரை சீனாவில் 20 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இந்தியாவில் மூன்று மாதங்களுக்குள் மாத்திரம் சுமார் 500,000 பேர் வேலையிழந்துள்ளதாக கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு உலகம் பல்வேறு திசைகளிலிருந்தும் வறுமைக்குழியினுள் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறது. பேராசையிலும் சுயநலத்திலும் மிதமிஞ்சிய இவ்வுலகம் மனிதநேயம், மனிதாபிமானம் போன்ற நற்பண்புகளை மறந்துவிட்டதோ என்று எண்ணுமளவிற்கு ஒருசிறுதொகை மக்கள் பெரும்பாலான மக்களது வளங்களை அனுபவித்து வாழ்கின்றனர். இறைவன் மனிதனை ஏழை, பணக்காரன் என்று படைத்திருப்பது உள்ளவன் இல்லாதவனுக்கு வழங்கவேண்டும் என்பதற்கே. மனித வாழ்க்கையின் அடிப்படைத்தேவை உணவு. அதனை ஒரு சாரார் மாத்திரம் அனுபவிப்பதை எவ்விதத்திலும் ஏற்க முடியாது. இறைவனது செல்வத்தைப்பிரயோகிப்பதில் மனிதன் அவனது பிரதிநிதி. செல்வம் படைத்தவன் வறியவனைக் கவனிக்க வேண்டும். செல்வந்தர்களிடம் மாத்திரமன்றி பணம் அனைவர் மத்தியிலும் சுழல வேண்டும் என இறைவன் கூறுகிறான். “செல்வம் உங்களிலுள்ள பணக்காரர்களுக்கிடையில் மட்டும் சுற்றிக்கொண்டிராதிருப்பதற்காக (பங்கீடு செய்யுமாறு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்)” (59:7)

மேலும் செல்வங்களை இல்லாதோருக்குக் கொடுத்து உதவிபுரியாது தேவைக்கதிகமாகத் தம்வசம் தேக்கிவைத்திருப்போரையும் அல்லாஹ் கடும் வேதனையைக் கொண்டு எச்சரித்துள்ளான். “(பொன், வெள்ளியாகிய) அவற்றை நரக நெருப்பில் பழுக்கக்காய்ச்சி பின்னர் அவற்றைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும் அவர்களது முதுகுகளிலும் சூடு போடப்படும் நாளில் உங்களுக்காக நீங்கள் சேகரித்து வைத்திருந்தது இதுதாம். ஆகவே நீங்கள் சேமித்து வைத்திருந்ததை சுவைத்துப்பாருங்கள்.” என்று கூறப்படும் (அத்தவ்பா: 35). செல்வந்தருடைய செல்வங்களில் ஏழை எளியவருக்கும் பங்குண்டு என இறைவன் கூறுகிறான் “(யாசித்துக்)கேட்பவருக்கும் வெட்கித்துக் கேட்காதோருக்கும் அவர்களது செல்வங்களில் நிர்ணயிக்கப்பட்ட பங்குண்டு”(அல்மஆரிஜ்: 24, 25) இவ்விடயத்தில் தவறிழைத்தவர்களை இறைவன் நரகில் புகுத்துவான். (வல்ல நாயன் தன் மலக்குகளுக்கு) “அவனைப் பிடியுங்கள். அப்பால் அவனுக்கு விலங்கிடுங்கள். பின்னர் அவனை நரகில் தள்ளுங்கள். எழுபது முழ நீளமான சங்கிலியால் அவனைக் கட்டுங்கள். (ஏனெனில்) அவன் மகத்துவம் மிக்க அல்லாஹ்வை நம்பியவனாக இருக்கவில்லை. (தான்) ஏழைக்கு (உணவளிக்காததுடன் பிறரை) உணவளிக்கும் படி அவன் தூண்டவுமில்லை.” (அல்ஹாக்கா : 30-34)

“சுவனவாசிகள் குற்றவாளிகளைப் பற்றி தங்களுக்குள் (விசாரித்துக்) கேட்பார்கள். உங்களை ஸகர் எனும் நரகில் புகுத்தியது எது? அ(தற்க)வர்கள் தொழுபவர்களாக நாம் இருக்கவில்லை மேலும் ஏழைக்கு உணவளிப்போராகவும் நாம் இருக்கவில்லை. என்று கூறுவர்.” (அல்முத்தஸ்ஸிர் : 40-44)

ஆக அல்லாஹ் ஏழைகளுக்கு உணவளிக்காதோரை இறைவனை நம்பாதவர்களோடும் தொழுகைபோன்ற வணக்கவழிபாடுகளில் ஈடுபடாதோருடனும் தொடர்புறுத்திக்கூறுகின்றான் என்றால் அக்கடமைகளுக்கு அடுத்தபடியாக இஸ்லாம் ஏழை எளியோரைப் பராமறிக்குமாறு வலியுருத்திக் கூறுவதை விளங்கக்கூடியதாயுள்ளது.

அத்தோடு இஸ்லாம் வலியுறுத்திக் கூறும் ஸகாத் கோட்பாடும் இதில் மிகுந்த தாக்கத்தைச் செலுத்துகின்றது. செல்வம் படைத்த ஒருவர் தனது சொத்தில் 2 1/2 வீதத்தை ஸகாத்தாக ஏழை எளியவருக்குக் கொடுக்கும் போதும் கணிசமான அளவு இந்த வருமையைக் குறைக்க முடியும். உலகில் உள்ள அனைவரும் இவ்வாறு செய்தால் மிகச் சுலபமாக வறுமையை அடித்துவிரட்ட முடியும். அவ்வளவு தேவையில்லை. இன்று உலகில் இருக்கும் மாபெரும் மூன்று செல்வந்தர்கள், அம்மூவரது செல்வத்திலிருந்தும் மாத்திரம் நூற்றுக்கு 2 1/2 % ஸகாத் கொடுத்தாலே உலக வறுமையைத் தீர்க்க முடியுமென ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. அனைவரும் சொத்துக்களைச் தமது திறைசேறிகளில் சேர்த்துவைப்பதனால் உலகில் பணத்தட்டுப்பாடு ஏற்படுகின்றது. அப்பணத்தின்பால் தேவையுடையவர்களாயிருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியாது போகின்றது.

கீழைத்தேய நாடுகளுக்கும் அவற்றைச் சுரண்டி வயிறு புடைக்கும் மேற்கு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார இடைவெளி மிக நீண்டது. மேற்கு நாடுகள் விரித்திருக்கும் முதலாலித்துவ உலகமயமாதலில் சிக்கி அவை முன்வைக்கும் பொருளாதாரக் கொள்கைகளை நம்பி இன்று அதிகமான நாடுகள் திணறிக்கொண்டிருக்கின்றன. வறுமைக்கோட்டிலிருந்து மேலெழும் தீர்வுத்திட்டங்கள் குறித்து இனியும் சிந்திக்காதிருப்பது அறிவுடைமையாகாது…..!!!

ஆலிப் அலி
எங்கள் தேசம் பத்திரிகையில் பிரசுரமாகியது

உங்கள் கருத்து:

1 comments:

Anonymous said...

Assalamu alikum

Good article. Write more. ijas

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...