ஆரம்ப கால நாகரிகங்களும் சாம்ராஜ்யங்களும்தான் அப்படியென்றால் இன்று அறிஞர்களாகப் போற்றப்படுபவர்களும் பெண்கள் குறித்து தவறான எண்ணக்கருவையே கொண்டிருந்ததை அவர்களது சொற்களிலிருந்தே விளங்க முடிகின்றது.
I கிரேக்கத் தத்துவஞானி சோக்ரடீஸ் : “உலகின் வீழ்சியினதும் பிரச்சினைகளினதும் மொத்தவடிவம் பெண்தான்”, “பெண்மை என்பது விசத்தைத் தன்னகம்கொண்ட அழகிய மரம். பறவைகள் அதன் கணியை உண்ட மறுகணமே தம்முயைரை மாய்த்துக்கொள்ளும்.”
II பிளேட்டோ : “விரும்பியோர் இனவிருத்திசெய்யப் பயன்படுத்தும் பொது ஊடகம்தான் பெண்.”
III அறிஞர் அரிஸ்டோடில், வரலாற்றாசிரியர் பிளினி போன்ற சிந்தனையாளர்களும் மாதவிடாய்ப் பெண்ணை மட்டமாகக் கருதி தீண்டத்தகாதவர்களாகக் கருதிவந்தார்கள். (முஸ்லிம் தமிழாக்கத்துக்கு Dr. ஹாமித் அப்துல்ஹை அவர்கள் வழங்கிய அணிந்துரையிலிருந்து)
IV கொனேலியஸ் எக்ரிப்பா “Women then being the last of creatures “ “பெண் என்பவள் படைப்பினங்களிலே மிகவும் கீழானவள்”
V ஜெக்ஸ் குஜாஸ் (Jaques Cujas) : “பெண் என்பவள் மனிதப் படைப்பு அல்ல என்பதே பொதுவான பேசுபொருள்”
VI மார்டின் லூதர் (Martin Luther) : “women are created for no other purpose then to serve to men and be their helpers if women grow weary or even die while bearing children that doesn’t harm anything. Let them bear children to death, they are created for that.” “ஆண்களுக்குப் பணிவிடைசெய்யவும் உதவிபுரியவுமேயன்றி வேறெதற்காகவும் பெண்கள் படைக்கப்படவில்லை. அவள் குழந்தைகளை சுமந்து வளர்க்கும்போது களைப்படைந்தால் என்ன? மரணித்தால்தான் என்ன? அவள் அதற்காகத்தான் படைக்கப்பட்டுள்ளாள். எனவே அவள் இருந்தால் அதைச்செய்யத்தான் வேண்டும்.” (திவயின -ஸியத -25/மே/2008)
VII “கணவன் அமையும் நாள்வரை ஒரு பெண் கவலைப்படுகிறாள். மனைவி அமையும் நாள்வரை ஒரு ஆணுக்குக் கவலையே இல்லை” (பழமொழியொன்று)
இன்றைய பெண்களின் நிலை குறித்து ஒரு மொத்தப்பார்வை செலுத்தினால் இருவகையான அநீதிகளுக்கு இப்பெண்கள் இலக்காகி வருவதைக் காணலாம்.
ஒன்று; கண்மூடித்தனமான சடங்கு சம்பிரதாயங்களைக் கைவிடாத சமூகம். இதனால் கல்வியறிவு வழங்கப்படாமை, குடும்பத்தாரின் அக்கிரமம், உரிமை மீறல், மூடநம்பிக்கைகற்குப் பலியாதல் போன்றவற்றோடு சமூக அந்தஸ்த்து, பொருளாதார சொத்துரிமை என்பனவும் பெண்களுக்கு மறுக்கப்படுகின்றன.
இரண்டு; சீரழிந்த மேற்குலகின் நவீனபோக்கைப் பின்பற்றும் சமூகம். இதனால் வியாபாரப் பொருளாய்ப் பெண் மாற்றப்பட்டு, ஆண்-பெண் சமத்துவம் பேசி, மானம், மறியாதை, கண்ணியம், கற்பு, வெட்கம் என்பன இழந்து முகவரியில்லாது போகிறாள்.
ஆனால் இவ்விரண்டு பிற்போக்கு நிலையையும் தீவிர நிலையையும் தவிர்த்து ஒரு நடுநிலையானபோக்கை இஸ்லாம் வகுத்துத்தந்துள்ளது. மனிதன் இவ்வாறுதான் வாழவேண்டுமென்பதை குறுகிய அறிவுபடைத்த மனிதச் சிந்தனைகள் சொல்லித்தருவதைவிட இப்பேரண்டத்தைப் படைத்து அதிலுள்ள ஒவ்வொன்றைப் பற்றியும் தீர்க்கமான தீட்சன்யமான அறிவுபடைத்த இறைவன் சொல்லித்தரும் வாழ்க்கைப்போக்குதான் எவருக்கும் பொருந்தும். ஆரோக்கியமாகவும் இருக்கும். அவ்வாழ்க்கைப் போக்கைத்தான் இஸ்லாம் கூறுகின்றது.
இஸ்லாம் ஆணிலிருந்து பெண்ணையோ அல்லது பெண்ணிலிருந்து ஆணையோ ஏற்றத் தாழ்வோடு பார்க்கவில்லை. இவ்விருபாலாரையும் சம அந்தஸ்துடனேயே நோக்குகின்றது. இதனை அல்குர்ஆனிலும் அல்ஹதீஸிலும் பரவலாகக் காணலாம். பெண்ணுக்கு உயிர்வாழ்வது முதல் பேச்சுரிமை, கல்வி கற்கும் உரிமை, சாட்சி கூறும் உரிமை, தனது துணையைத் தெரிவுசெய்தல், ஆலோசனை வழங்குதல், விவாகரத்து, வாரிசுரிமை, பொருளீட்டல், தொழில் செய்தல், சமூகப் பணிகளில் ஈடுபடல் என பல்வேறு அம்சங்களில் தெளிவான, நியாயமான வரையரைகளோடு கங்கேற்கும் உரிமைகளை வழங்கியுள்ளது. பெண்கள் தொடர்பாக இஸ்லாத்தின்மீது குற்றம் சுமத்துபவர்கள் இஸ்லாத்தைப் பற்றி ஆராயாது முஸ்லிம் சமூகத்தை ஒரு மேம்பார்வை பார்த்துவிட்டே சாடுகின்றனர். இதற்கு முன்னுதாரணமாக தஸ்லீமா நஸ்ரின், இயான் ஹெர்ஸி, அமீனா வதூத் என்போதைக் குறிப்பிடலாம். பக்கசார்பின்றி நடுநலையான மனதுடன் ஒருமுறை இஸ்லாம் பற்றி ஆராய்ந்தாலேபோதுமானது. இஸ்லாம் கூறும் வாழும்கலையின் உண்மைத் தன்மையை விளங்கமுடியும்.
அல்லாஹ் இப்பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொரு படைப்பையும் ஜோடிகளாகவே படைத்துள்ளான். ஆல்லாஹ் அல்குர்ஆனிலே கூறுகின்றான். “பூமி முளைப்பித்தவற்றிலிருந்தும் (மனிதர்களாகிய) அவர்கள் தம்மிலிருந்தும் அவர்கள் அறியாதவற்றிலிருந்தும் ஜோடிகள் ஒவ்வொன்றையும் பரடைத்தானே அவன் மிகத் தூய்மையானவன்.” (யாஸீன்:36) மற்றொரு வசனத்தில் “நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காக ஒவ்வொருபொருளிலிருந்தும் (ஆண், பெண் கொண்ட) இரு வகையை நாம் படைத்திருக்கின்றோம்.” (அஸ்ஸாரிஆத்:49) ஆக இந்த ஜோடியான அமைப்பைவிட்டு ஒன்று தனித்தியங்க முடியாது. இருள்-ஒளி, இரவு-பகல், நன்மை-தீமை இதுபோன்று அணுவிலும் இலத்திரன்-புரொத்திரன், மிண்சாரத்தில் நேரேற்றம்-மறையேற்றம் என்று அனைத்திலும் இவ்வொழுங்கமைப்பைக் காணலாம். அதேபோன்றுதான் மனித இனத்திலும்.
மனிதப் படைப்பின் ஆரம்பப்படிமுறையே ஆண்-பெண் என்ற சமத்துவத்தோடு ஆரம்பிப்பதை இறைவன் கூறுகின்றான். “மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்துதான் படைத்தோம்.” (அல்-ஹ{ஜராத் : 13) அவ்வாறே பெண்-ஆண் இருவரும் சமமானவர்கள் என்பதையும் குர்ஆன் கூறுகின்றது. “உங்களில் ஆண், பெண் எவர் நன்மைசெய்தபோதிலும் நிச்சயமாக நான் அதை வீணாக்கி விடமாட்டேன். (ஏனெனில்) உங்களில் (ஆணாகவோ, பெண்ணாகவோ இருந்தாலும்) சிலர் மற்ற சிலரில் உள்ளவர்தாம். கூலி கொடுப்பதில் ஆண், பெண் என்ற பாகுபாடில்லை.” (ஆலுஇம்ரான் : 195)(16:97)
“அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்” (அல்பகரா:187) என்று மற்றுமோரிடத்தில் கணவன்ää மணைவி இருவருடைய யதார்த்தத்தைக் கூறுகின்றான். ஆடை என்பது மானத்தை மறைக்கக் கூடியதாகவும் சூடு, குளிரின்போது பாதுகாப்பளிக்கக்கூடியதாகவும் இருப்பதுபோன்று கணவன், மனைவி இருவரும் ஒருவர் மற்றவரது மானத்தை மறைப்பவராகவும் இன்ப துன்பங்களில் பங்கேற்பவராகவும் இருக்கவேண்டும் என்றே இறைவன் எதிர்பார்க்கின்றான். அதேபோன்று நபியவர்கள் கூறினார்கள் “உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவிக்குச் சிறந்தவரே!” இதன்மூலமும் இஸ்லாம் பெண்களின் அந்தஸத்தை உயர்த்திக் காட்டுகின்றது. மேலும் அல்குர்ஆனில் ‘அந்நிஸா’ பெண்கள் என்று ஒரு அத்தியாயத்தையே அல்லாஹ் இறக்கிவைத்துள்ளான்.
பெண்களின் சுயத்தை மதிக்கும் இஸ்லாம் அவளது எதிர்காலத்தைப் பற்றி சுயமாகத் தீர்மாணமெடுக்கும் உரிமையை வழங்கியுள்ளது. இஸ்லாமிய சட்ட விதிகளுக்கமைய பெண்களை அவர்களது சுயவிருப்பின்றி வலுக்கட்டாயமாகத் திருமணம் முடிக்க முடியாது என்று நபியவர்கள் கூறினார்கள். (ஆதாரம் :இப்னுமாஜா-1873) இவை மாத்திரமன்றி இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கியிருக்கும் பல்வேறு உரிமைகளையும், சுதந்திரத்தையும் அல்குர்ஆன், அல்ஹதீஸினூடாக தெளிவாக விளங்க முடியும்.
்கள் கூறினார்கள் “உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவிக்குச் சிறந்தவரே!” இதன்மூலமும் இஸ்லாம் பெண்களின் அந்தஸத்தை உயர்த்திக் காட்டுகின்றது. மேலும் அல்குர்ஆனில் ‘அந்நிஸா’ பெண்கள் என்று ஒரு அத்தியாயத்தையே அல்லாஹ் இறக்கிவைத்துள்ளான்.ஆகவே இஸ்லாம் என்பது பெண்ணியவாதிகள் கூறுவதற்கு மாற்றமாக பால்வித்தியாசமற்ற (Unisex) சமுதாயம் என்பதைவிட இருபாலாரையும்கொண்ட (Dualsex) சமத்துவ சமுதாயம் என்று கூறலாம். இந்த சமுதாயம் என்ற வண்டி ஆண் - பெண் என்ற இரு சக்கரங்களின் ஒருங்கிணைப்பிலேயே பயணிக்னின்றது என்பதை மறுக்க முடிடியாது. குடும்ப உருவாக்கத்தின் மூலம் பெண் என்பவள் சீரான, ஆரொக்கியமானதொரு சமூகத்துக்காகப் பாரிய பங்காற்றுகிறால். இதனைத்தான் அறிஞர் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) அவர்கள் “ஒரு பெண் திருந்துவதாக எனக்கு வாக்களித்தால் ஒரு சமூகமே திருந்தும் என நான் வாக்களிக்கின்றேன்” என்று கூறினார்கள். னைத்திலும் இவ்வொழுங்கமைப்பைக் காணலாம். அதேபோன்றுதான் மனித இனத்திலும்.
இஸ்லாம் பெண்-ஆண் இருபாலாருக்கும் மத்தியில் சமத்துவத்தை வலுப்படுத்தினாலும் இயல்புரீதியாக அவ்விருவருக்கிமிடையில் உள்ள வித்தியாசத்தையும் தெளிவுபடுத்துகின்றது. “ஆண்கள் பெண்களை நிர்வகிக்கக்கூடியவர்கள்...” (அந்நிஸா:34) மற்றொரு இடத்தில் “எனினும் ஆண், பெண்ணைப் போன்றவனல்ல” (ஆலுஇம்ரான்:36)
ஆணும் பெண்ணும் தமக்குரிய இயல்புகளுக்கமைய சிற்சில விடயங்களில் வெவ்வேறு கடமைகளைச் சுமக்கவேண்டியவராகிறார்கள். எனவே இவ்விரு சாராருக்கிடையே பூரண சமத்துவம் என்று சொல்வதற்கில்லை. Equal but not similar- ஆண், பெண் இருபாலாரும் சமமானவர்கள் ஆனால் ஒரேமாதிரியானவர்களல்லர் என்று கூறலாம். காரணம் இயல்பிலேயே ஆண்கள் அவ்வாறான தலைமைத்துவத்திற்குரிய தகுதியையும் சிறமப்பட்டு உழைக்கும் உடல் வலிமையையும் பெண்களைப் பராமரிக்கவேண்டும் என்ற கடமைப்பாட்டையும் பெறிறிருக்னிறனர். இறைவன் அவ்வாறுதான் படைத்துள்ளான். எனவே இந்த இறை நியதியை மீறுவதென்பது அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முரணாக செயற்படுவதாக அமையும்.
ஆக இஸ்லாம் வேறு எந்த மதமும், கொள்கையும், சிந்தனையும், இஸங்களும் வழங்காத உண்ணதமானதோர் இடத்தில் பெண்களைவைத்துப் பார்க்கிறது. பெண்ணுக்கு மதிப்பையும் கண்ணியத்தையும் வழங்குகிறது. சுமூகத்திற்கான நற்பிரஜைகளை உருவாக்கும் முக்கிய பொருப்பை அவர்களிடம் வழங்கியுள்ளது. பெண்கள் பற்றி இஸ்லாமிய அறிஞர்கள் கூறுவதை அறிவதன் மூலம் இதனை விளங்கறளாம்.
1. உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்கள் : “நாம் பெண்களுக்கு எவ்விதமான பெறுமானத்தையும் வழங்காதிருந்தோம். அவ்வாறான காலகட்டத்தில்தான் பெண்கள்பற்றி பற்பல விடயங்களையும் அவர்களுக்குள்ள உரிமைகள் பலவற்றையும் குறிப்பிட்டு பல சட்டவசனங்களை அல்லாஹ் அருளினான். அதன்பிற்பாடே பெண்கள்மீது ஆண்களாகிய எமக்குக் கடமை உண்டு என்பதை உணர்ந்தோம்.”
2. மகாகவி அல்லாமா இக்பால் : “ஆணின் மானம் காக்கும் ஆடை பெண். அவள் மடியில் வளர்க்கப்படுவது இறை அன்பு”
3. அபுல் அஃலா மௌதூதி : “ஒரு பெண் திருந்துவதாக எனக்கு உத்தரவாதமளித்தால் ஒரு சமூகம் திருந்துமென நான் உத்தரவாதம் தருகின்றேன்”
4. அறிஞர் முஸ்தபா ஸிபாஈ (ரஹ்) : ஓர் அழகிய பெண் மக்களுக்கு மட்டுமே கவர்ச்சி தருகிறாள். ஓர் உண்ணதமான பெண் உள்ளத்தையே மகிழ்விக்கிறாள். முதலாவதுபெண் தங்கமாக இருக்க இரண்டாவது பெண் புதையல் என்பதை அநேகர் புரியத் தவறிவிடுகின்றனர்”
5. 2001ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 ம் திகதி அப்கானிஸ்தானில் வைத்து தலிபான் முஜாஹிதீன்களால் கடத்தப்பட்டு பத்து நாட்களின் பின் விடுதலைசெய்யப்பட்டபோது இஸ்லாத்தைத் தழுவிய பிரிட்டனின் முன்னனி ஊடகவியலாளர் “யுவோன் ரிட்லி” பெண்ணியம் பற்றிக் கூறுவதை அவதானிப்போம். “அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் ஆண்கள் பெண்களைவிட மேலானவர்கள் என்ற எண்ணம் காணப்படுகின்றது. விளம்பரக் காட்சிப்பொருளாகப் பெண், அரை நிர்வாணப் படங்களில் பெண், வல்லாங்கு, பாலியல் துஷ்பிரயோகம், வன்முறை என்பன இங்கு சர்வசாதாரணம். ஆண்-பெண் சமத்துவம் என்பது ஒரு பிரம்மை. ஹிஜாப் அணியும் இஸ்லாமியப் பெண்கள்தான் மேற்கு நாடுகளில் கண்ணியமானவர்கள். அவர்களுக்கு முன்னால் பெண்ணியம் தலைகுணிந்து நிற்பதை நான் காண்கின்றேன். பேண்ணியம் என்பது மேற்கின் மற்றொரு சொல்லேதவிர நடைமுறையல்ல!” என்று அழகாக விளக்குகின்றார். (மீள்பார்வை – 2008/11/07)
அறியாமை என்ற இருளில் மூழ்கியிருந்த இவ்வுலகை இறைவன் இஸ்லாம் என்ற பேரொளிகொண்டு ஒளியூட்டினான். உலகின் பல திக்குகளிலும் அரங்கேறிக்கொண்டிருந்த கொடுமைகளையும் அழிச்சாட்டியங்களையும் வலுவிழக்கச்செய்தான். பால், இன, வர்க்க பேதங்களைத் துடைத்தெரிந்தான். முக்கியமாகப் பெண்களுக்கு இஸ்லாம் அளித்த உரிமைகளையும் சுதந்திரத்தையும் ஒரு சில முஸ்லிம்கள் அவர்களுக்கு வழங்காததனால் வெளியிலிருந்து பார்ப்பவர்கள் முழு இஸ்லாத்தையுமே சாடக்கூடிய நிலை உருவாகியுள்ளது. இதனால் சில கல்வியறிவற்ற முஸ்லிம் பெண்கள் இந்தப் பெண்ணிய வாதிகளின் கூப்பாட்டுக்குத் தலையாட்டும் நிலைமை ஏற்பட்டுவருகின்றது.
எனவே இவ்விடயத்தில் முஸ்லிம் சமூகம் உணர்வுபெற வேண்டும். பெயர் தாங்கிய முஸ்லிம்களாக இருந்து இஸ்லாத்துக்கு அவப்பெயரை ஈட்டிக்கொடுக்கக்கூடாது. இன்று மேற்கு நாடுகளில் அதிகமான பெண்கள் இஸ்லாத்தில் ஆண்-பெண் சமத்துவத்தையும் வாதபேதங்களின்மையையும் கண்டு இஸ்லாத்தை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். இவ்வேளை “முற்றத்து மல்லிகை மணப்பதில்லை” என்பதுபோல் புதிய உலகம், உலகமயம், நவீனம், டிஜிடல் நாகரிகம் போன்ற மாயைகளில் இன்றைய முஸ்லிம் பெண்கள் வீழ்ந்து தமது ஈமானுக்கே பங்கம் விளைவித்துக்கொள்கின்றனர்.
ஆரம்பத்தில் கூறியதுபோன்று நடுநிலையாக நின்று இஸ்லாத்தின் ஒவ்வொரு அம்ஷத்தையும் சற்று ஆழமாகப் பார்த்தால் இஸ்லாம் என்பது எவ்வளவு சமத்துவம்பேணும் மார்க்கம் என்பதையும் வாழ்க்கை நடைமுறைக்குப் பொருந்தி நிற்கும் மார்க்கம் என்பதையும் விளங்கிக்கொள்ளலாம். இதனை நபியவர்களின் பொன்மொழியிலிருந்து விளங்க முடியும்.
“ஒரு அஜமியைவிட அரபி சிறந்தவனுமல்லன். அவ்வாறே ஒரு அரபியைவிட அஜமி சிறந்தவனுமல்லன். கருப்பனைவிட வெள்ளையன் சிறந்தவனுமல்லன். வெள்ளையனைவிடக் கருப்பன் சிறந்தவனுமல்லன். (அவர்கள் சிறப்புப் பெறுவதெல்லாம்) அவர்களது தக்வாவெனும் இறையச்சம், பயபக்தியைப் பொருத்தே!”
“ஆண் அல்லது பெண் அவர் நம்பிக்கை கொண்டவராக இருக்கும் நிலையில் யார் நற்செயல் புறிகின்றாரோ நிச்சயமாக நாம் அவரை நல்வாழ்வு வாழச்செய்வோம். மேலும் நிச்சயமாக அவர்களுக்கு அவர்களது கூலியை அவர்கள் செய்துகொண்டிருந்தவற்றில் மிக அழகானதைக்கொண்டு கொடுப்போம்.” (அந்நஹ்ல் : 97)
ஆலிப் அலி
2 comments:
go ahead brother
good article....
ithen thoder appo varum
ithen munthiya paguthi vasiththen
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...