"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

06 February 2010

பிணிவொழுக்கம் பேணி

உலகில் யாருக்கும் வழங்கப்படாத ஓர் அரசாட்சியை அல்லாஹ் ஸலைமான் நபிக்கு வழங்கினான்

 ஆலிப் அலி

எந்தளவு ஒழுக்க விழுமியங்கள் குடிகொண்டுள்ளன என்பதனை அறிவதற்கு மிகச் சிறந்ததொரு அளவீடுதான் பணிவுஎன்ற பண்பு. அகந்தை, கர்வம், பெருமை, மமதை போன்ற துர்ப்பண்புகளுக்குப் புறம்பான இப்பண்பு சகலரினதும் உள்ளங்கவரும் ஒரு சக்திமிக்க ஆயுதமாகத் திகழ்கின்றது. பணம், பட்டம், பதவி என்று எவ்வந்தஸ்தில் மனிதனிருந்தாலும் அவனிடம் பணிவு காணப்படாவிடின் பிறறால் அவன் வெறுக்கப்படவே செய்வான்.

பணிவெனும் உயர் பண்புக்கு சிறந்ததோர் உதாரணம் கூறுவார்கள். நெற்கதிர் ஆரம்பமாக முளைக்கும்போது வானத்தை நோக்கி தலை நிமிர்ந்து கம்பீரமாய் வளரும். பின்பு அது தன்னில் வளர்ச்சியடைந்து நெல் மணிகளையெல்லாம் சுமக்கும் தறுவாயில் படிப்படியாகப் பூமியை நோக்கி பணிவாகத் தாழ்ந்துகொள்ளும். இவ்வாறு ஒரு மனிதனிடத்திலும் கல்வி, செல்வம் அல்லது வேறு ஏதேனும் திறன்களிலோ அல்லது பௌதீக ரீதியான வளங்களிலோ விருத்தியை அல்லது அதிகரிப்பைக் காணும்போது ஆடம்பரம்கொள்ளாது பணிவெனும் நற்குணத்தைப் போர்வையாய்ப் போர்த்திக்கொள்ளவேண்டுமென்றே இஸ்லாம் எதிர்பார்க்கின்றது.

ஒரு அரபிப் பழமொழி இவ்வாறு கூறுகிறது. புத்தி நிரப்பமடையும்போது அவனது வார்த்தைகள் குறைந்து விடும்.இதேபோன்று தமிழில் நிறைகுடம் தளம்பாதுஎன்றும் கூறுவார்கள்.

லுக்மான் (அலை) அவர்கள் தன் புதல்வருக்கு பணிவெனும் பண்பைக் கைக்கொள்ளுமாறு பல அற்புதமான உபதேசங்களைக் கூறியுள்ளார்கள். அவற்றில் சிலதை அல்லாஹ் நாம் படிப்பினை பெறவேண்டுமென்பதற்காக அல்குர்ஆனிலே குறிப்பிடுகின்றான்.
“(என்னருமைக் குழந்தாய்! பெருமைகொண்டு) உன் முகத்தை மனிதர்களைவிட்டும் திருப்பிக்கொள்ளாதே! பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நிச்சயமாக அல்லாஹ் தற்பெருமைக்காரர், கர்வம்கொண்டோர் ஒவ்வொருவரையும் நேசிக்கமாட்டான்.
மேலும் உன் நடையில் நடுநிலை பேணுவாயாக! உன் சப்தத்தையும் தாழ்த்திக்கொள்வாயாக! (ஏனெனில்) நிச்சயமாக சப்தங்களில் மிக வெறுக்கத்தக்கது கழுதையின் சப்தமாகும்என்று கூறினார்கள். (லுக்மான் : 18,19)
இப்பணிவெனும் விழுமியத்தைக் கல்வியும் செல்வமும் ஆட்சியதிகாரமும் வழங்கப்பட்டிருந்த உதாரணப் புருஷர்கள் சிலரிடமிருந்து கற்றுக்கொள்ளுமாறு வரலாற்றின் ஒளியில்; கூறிவிட்டு அப்படி ஆட்சியதிகாரங்கள் வழங்க்பட்டும் பணிவுடன் நடக்காதவர்களுக்கு நிகழ்ந்த கோர முடிவுகளையும் அல்லாஹ் அல்குர்ஆனிலே அழகாகக் கூறுகின்றான்.

அல்லாஹ் ஹிழ்ர் (அலை) அவர்களுக்கு நிகழவிருப்பவை குறித்;து முன்கூட்டியே அறிந்துகொள்ளும் அறிவு ஞானத்தை வழங்கியிருந்தான். மூஸா (அலை) அவர்கள் ஹிழ்ர் (அலை) அவர்களிடம் மாணவனாகச் சென்று, அவர் மூஸா (அலை); முன்னிலையில் பல விடயங்களை அறிவித்துக்காட்டி இறுதியாக தமக்கு வழங்கப்பட்டிருந்த அவ்வாற்றல்கள், திறமைகள் குறித்து மமதைகொள்ளாது பணிவானதொரு வார்த்தை கூறினார். இதனை நான் என் இஷ்டப்படி செய்யவில்லை. (இறை அருளினாலேயே செய்தேன்).என்று கூறினார். (அல்-கஹ்ப் : 82)

அவ்வாறே பூமியில் பெரும் பகுதியை ஆட்சிசெய்யும் அதிகாரத்தை அல்லாஹ் மன்னர் துல்கர்ணைன் அவர்களுக்குக் கொடுத்திருந்தான். மேலும் இரும்பை உருக்கிப் பயன்படுத்தும் அறிவையும் வழங்கியிருந்தான். இவ்வாறான அதிகாரத்தை, அறிவைப் பெற்றிருந்தபோதிலும் அவர் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தாருக்கும் அங்கிருந்த கிராம வாசிகளுக்குமிடையே ஒரு இரும்புத் தடுப்பை ஏற்படுத்திவிட்டு கர்வம்கொள்ளாது பணிவான முறையில் இவ்வாறு கூறினார். இது என் இரட்சகனிடமிருந்துள்ள அருளாகும்என்றார்.(அல்-கஹ்ப் : 98)

அவ்வாறே அல்லாஹ் யூஸ{ப் நபிக்கு கனவுகளுக்கு விளக்கம் சொல்லும் ஞானத்தை வழங்கியிருந்தான். சிறைக் கைதிகள் இருவர் அவரிடம் வந்து தாம்கண்ட கனவுகளுக்கான விளக்கத்தைக் கூறுமாறு வேண்டியபோது அவர் பெருமிதம்கொள்ளாது பணிவான்மையுடன் இவ்விரண்டு(க்குமரிய விளக்கமும்)என் இரட்சகன் எனக்குக் கற்றுத்தந்தவற்றில் உள்ளவையாகும்என்றார்.(யூஸ{ப் : 37)

அவ்வாறே யூஸ{ப் நபிக்கு வழங்கப்பட்;ட ஆட்சிப் பலத்தைக்கூட அவர் பணிவான்மையுடன் கையாண்டு இறைவனுக்கு நன்றிதெரிவிக்கின்றார். என் இரட்சகனே! நிச்சயமாக நீ எனக்கு ஓர் ஆட்சியையும் தந்(தருள்புரிந்)து, கனவுகளின் விளக்கங்களையும் கற்றுத்தந்தாய்” (யூஸ{ப் : 101)

உலகில் யாருக்கும் வழங்கப்படாத ஓர் அரசாட்சியை அல்லாஹ் ஸலைமான் நபிக்கு வழங்கினான். பறவைகளுடனும் மிருகங்களுடனும் பேசும் ஆற்றலை அவருக்குக் கொடுத்தான். காற்று, மனு ஜின் வர்க்கம் அனைத்தும் அவருக்கு வசப்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தன. இப்படியாக பலம்பொருந்தியிருந்தும்கூட அவர் மிகவும் பணிவாகவே நடந்துகொண்டார். ஒரு சம்பவம் இதனை அழகாக விளக்குகின்றது. ஒரு முறை ஸ{லைமான் நபி ஜின்கள், மனிதர்கள், பறவைகள், மிருகங்கள் என தமது படைபட்டாளத்துடன் புறப்பட்டு பல்வேறு பிரதேசங்களையும் சுற்றிக்கொண்டிருந்தார். இறுதியாக அவர்கள் எறும்புகள் வசிக்கும் ஓர் ஓடையின் பக்கமாக வந்தபோது (அவற்றில்) ஒர் எறும்பு (மற்ற எறும்புகளிடம்)எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுக்குள் நுழைந்துவிடுங்கள். ஸ{லைமானும் அவரது படையினரும் (உங்களைப் பற்றி)உணராது உங்களை மிதித்துவிடவேண்டாம்என்றது.

அப்போது அச்சொல்லைக் கேட்டு சிரித்தவராக அவர் புன்னகை புரிந்தார். என் இரட்சகா! நீ என்மீதும் என் பெற்றோர் மீதும் புரிந்த உனது அருளுக்கு நன்றி செலுத்தவும் எதனை நீ பொருந்திக்கொள்வாயோ அத்தகைய நற்செயலையும் செய்யக்(கூடிய நற்பேற்றை) அருள்புரிவாயாக! இன்னும் உனது கிருபையால் உனது நல்லடியார்களின் கூட்டத்தில் என்னை நுழைவிப்பாயாக!என்று பிரார்த்தனை புரிந்தார்.(அந்நம்ல் : 19)

இவ்வாறாக கல்விச் செல்வமும் ஆட்சிப் பலமும் செல்வச் செழிப்பும் வழங்கப்பெற்ற எத்தனையோ உன்னதவான்கள் எவ்விதமான டாம்பீகமோ படாடோபமோ இல்லாது பணிவெனும் பண்பாட்டை ஒழுகி வாழ்ந்துசென்றுள்ளார்கள். இவையனைத்தும் இறைவனின் அருள் மாத்திரமே என்பதை எடுத்தியம்பி தமது பணிவு மனப்பான்மையை வெளிப்படுத்தியுள்ளார்கள். ஏன் இன்றுகூட இப்படிப்பட்ட உன்னதவான்கள் எமது சமூகத்திலும் இல்லாமலில்லை. எனினும் அனேகமானவர்கள் இப் பண்புக்கு முரனாகவே நடந்துகொள்கிறார்கள். சாதாரணதொரு பாமரன்கூட சிலசமயம் பெருமையுடன் நடந்துகொள்வதைக் காணக்கூடியதாயுள்ளது.

ஆரம்பகாலங்களில்கூட சில சமூகங்கள் தமக்கு அளிக்கப்பட்ட வளங்களை நெறிபிறழ்வாகப் பயன்படுத்தி இறை அருளை மறந்து, இறுதியில் இறையிருப்பின்மீதே சந்தேகம்கொள்ளுமளவுக்குச் சென்றமையால் அல்லாஹ் அவர்களைப் பூண்டோடு அழித்துவிட்ட சம்பவங்களையும் அல்குர்ஆன் கூறுகின்றது.

அல்லாஹ் காரூனுக்குப் பெரும் செல்வத்தை வழங்கியிருந்தான். அவனது கஜானாவின் சாவியைச் சுமப்பதற்கு மாத்திரம் எழுபது இளம் ஒட்டகைகள் தேவைப்பட்டன. அந்தளவு செல்வச்செழிப்புடன் வாழ்ந்தான். எனினும் அவன் கொண்ட அகம்பாவம் அவனுக்கு வினையாக வந்து முடிந்தது. செல்வங்களனைத்தையும் தான் தனது சுய அறிவாலும் திறமையாலும் தேடிக்கொண்டவையெனத் தம்பட்டமடித்தான். அதன் விளைவாக அல்லாஹ் அவனைப் பூமியில் விழுங்கச்செய்தான். அல்குர்ஆன் கூறுகின்றது. அவன் அதனை நான் கொடுக்கப்பட்டதெல்லாம் என்னிடம் இருக்கும் சொந்த அறிவின் திறமையினால்தான்என்று கூறினான்... எனவே அவனையும் அவனது மாளிகையையும் நாம் பூமிக்குள் அழுந்தச்செய்தோம்.” (அல்-கஸஸ் : 76 – 82)

அவ்வாறே அல்லாஹ் பிர்அவ்னுக்குப் பெரும் ஆளும்பலத்தைக் கொடுத்திருந்தான். அவனும் அப்பலத்தைத் தவறான முறையில் பிரயோகித்தான். ஒருபடி மேலேறி தானே உயர்ந்த இறைவன் (79:24) என்றும் கூறி வரம்பு மீறிவிட்டான். எனவே அவனை அல்லாஹ் கடலிலே மூழ்கடித்து படிப்பினைக்காக இன்றும் பாதுகாத்து வைத்திருக்கின்றான்.
மேலும் அல்லாஹ் ஒரு மனிதனுக்கு அழகான, பசுமையானதொரு தோட்டத்தை வழங்கினான். அதில் பெருமளவு விளைச்சல்களையும் நிரப்பமாக்கினான். எனினும் அத்தோட்டவாசி தனது தோழனிடத்தில் பெருமையடித்து மறுமையின்மீதே அவநம்பிக்கை வைத்துவிட்டான். எனவே அல்லாஹ் அத்தோட்டத்தை ஒரே இரவுப்பொழுதில் வறண்ட பிரதேசமாக மாற்றிவிட்டான். (அல்-கஹ்ப் : 32 – 44)

இவ்வாறு அல்குர்ஆனிலே மனிதனுக்குப் படிப்பினைக்காக அல்லாஹ் பல சம்பவங்களைக் கூறியுள்ளான். மனிதனை அளவீடுசெய்யும் கருவியாக அல்லாஹ் பணிவெனும் பண்பை அடையாளப்படுத்தியுள்ளான். பணிவுடன் நடக்காத பலரை அழித்துள்ளான்.
எனவே நாம் ஒவ்வொருவரும் இப்பண்பை வாழக்கையிற்கொண்டு, முதலில் இறை திருப்தியைப் பெற்று பின்பு பிறர் மனங்கவர முயற்சிப்போம். பணிவான்மையைக் கைக்கொள்பவனைத்தான் இறைவன் நேசிக்கின்றான். இதன் மூலம் எமது சுயத்தைப் பாதுகாத்து சமூகத்தில் உன்னதவான்களாக மிளிர ஆரம்பிப்போம்.  

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...