"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

31 July 2010

புத்தி ஈர்வு – Intelligency Quotient

நாம் மனிதனின் வயதைக் கணிப்பிடுவது போலவே அவனது புத்தியின் வயதையும் கணிப்பிட முடியும். இது மூளை வயது (Mental Age) எனப்படுகின்றது. முப்பது வயதுள்ள ஒருவரின் மூளைத் திறன் 12 வயதுடைய ஒரு சிறுவனின் மூளைத்திறனை ஒத்திருந்தால் 30 வயதுடைய அவரின் மூளை வயது 12 என்றே கொள்ளப்படும். அவ்வாறே 12 வயதுடைய ஒரு சிறுவனின் மூளைத்திறன் முப்பது வயதுடைய ஒருவரின் மூளைத்திறனை ஒத்திருந்தால் 12 வயதுடைய அச்சிறுவனின் மூளைத்திறன் 30 என்று கொள்ளப்படும்.

இவ்வாறு ஒருவரது மூளைத் திறனை அல்லது வயதை புத்தி ஆய்வுக் கணிப்பீடுகள் - Intelligence Tests மூலம் கண்டறியலாம். இதனையே புத்தி ஈர்வு Intelligency Quotient (IQ)”  என்கின்றோம். பொதுவாக இந்த IQ பெறுமானம் 70 இற்கும் 110 இற்கும் இடையேதான் காணப்படும்.

ஒருவரது IQ பெறுமானம் 70 இற்குக் குறைவாக இருந்தால் அவரை முட்டாள், மடையன் என்று அழைப்பர். அதுவே 110 இற்கு கூடுதலாக இருந்தால் அவரை மேதை, பண்டிதர், ஞானி என்றெல்லாம் அழைப்பர். அல்லாஹ் இவ்வுலகில் சிலருக்கு IQ பெறுமானத்தை 110 இற்கும் கூடுதலாக வழங்குகின்றான். அவர்களது கல்வியறிவாற்றலும் ஞாபக சக்தியும் அபாரமானதாகத் தொழிற்படும்.

இவ்வாறானதோர் அருளைப் பெற்ற சுட்டி ஜீனியஸ்தான் பத்தே வயதான பாலகன் அப்துல் கனீ. இவன் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரைச் சேர்ந்த சிரியானா அலியாஸின் செல்ல மகன். கனீ தான் மூன்றாம் ஆண்டு படிக்கும்போதே வயதிலும் விஞ்சி, பாடத்திட்டத்தையும் தாண்டி கணிதம், புவியியல், உயிரியல், வேதியியல், இயற்பியல் போன்ற கற்கைகளில் அபார அறிவை அள்ளிக்கொட்டியிருக்கின்றான். இடையே தாயாரின் வானிபத்தையும் கவனிக்கத்துவங்கி தற்போது இரண்டு தொழில் நிறுவனங்களையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் நிர்வகித்து வருகின்றான்.

இச்சுட்டியினது வயதையும் அபார கல்வியாற்றலையும் அவதானித்த மலேசியக் கல்விக்கூடங்களும் கல்லூரிகளும் பகுதி நேர விரிவுரையாளராக வருமாறு அப்துல்கனீயை அழைத்துள்ளன. ஒரு மணிநேரம் விரிவுரை நிகழ்த்துவதற்கு 82,000/=  தொகையை சம்பளமாகப் பெறுகின்றான் இந்த சுட்டி. ஒரே நேரத்தில் விரிவுரையாளனாகவும் தாயாரின் தொழில் நிறுவனங்களை கொண்டு நடாத்துபவனாகவும் இருக்கும் அப்துல் கனீ தனது அபார ஆற்றலை உலகம் முழுதும் வெளிப்படுத்தி முன்வந்துகொண்டிருக்கின்றான்.

ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்) 

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...