"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

23 November 2010

டாவினிஸம் அசாத்தியத்தின் உச்சகட்டம்.

ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)
உலகில் பல்வேறுபட்ட மதங்கள் காணப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் தமக்கெனவொரு கடவுளை எடுத்து வணங்கி வருகின்றன. இவை தவிர கடவுளே இல்லை என்று கூறும் சில கொள்கைவாதிகளும் இருக்கின்றனர். இக்கொள்கையே நாத்திகக் கொள்கை (Secularism)  எனப்படுகின்றது. வரலாற்றில் தோன்றிய இன்றும் பெரும் அறிஞர்களாக மதிக்கப்படுகின்ற சார்ளஸ் டாவின், கார்ள் மாக்ஸ், ஸிக்மன் ப்ஃரொய்ட் போன்றவர்கள் வித்தியாசமான கோணங்களிலிருந்தெல்லாம் இக்கொள்கையையே மக்கள் மத்தியில் விதைத்துச்சென்றனர்.
காரணம் அன்றைய விஞ்ஞானிகளுக்கும் கிறிஸ்தவத் திருச் சபைக்குமிடையே ஏற்பட்ட உண்மைக்கும் வரட்டு கௌரவத்திற்கும் இடையிலான முரண்பாடாகும். பல விஞ்ஞானிகள் தீயிட்டுக்கொழுத்தப்பட்டதும் சிறையிலடைக்கப்பட்டதும் வரலாறு கூறும் உண்மைகள். இது அம்மக்களின் மனதில் மதம் பற்றிய சகப்புணர்வை ஏற்படுத்தியது. மதத்தை விட்டொழித்தால் மட்டுமே வாழ்வில் முன்னேர முடியும். இல்லாவிடின் நாம் காலாகாலமாக மதத்தின் பெயரால் கொடுமைப்படுத்தப்படுவோம். இவ்வாறான சிந்தனைகள் எழவே மதம் என்பது பொய்ää அது அபினைப் போன்றது. கடவுள் என்றொன்றில்லை. அனைத்தும் இயற்கையான தற்செயல் விபத்தின் மூலம் உருவானவையே என்று சிலர் கருத்து முன்வைத்து அதனை நிரூபனம் செய்ய பகுத்தறிவு ரீதியான பல ஆதாரங்களையும் திரட்டினர். இனால் கவரப்பட்ட மக்கள் இக்கொள்கைகளை ஆதரித்து அதில் இணைந்து கொண்டனர்.
இவ்வுலகமும் இதில் வாழும் உயிரினங்களும் எதேச்சையாகத் தோன்றியவை. இறைவனின் படைப்புகளல்ல. இறைவன் என்று ஒன்றுமில்லை. அனைத்தும் இயற்கையே. மதவாதிகள் தமது வயிற்றை வளர்த்துக்கொள்வதற்காகப் பிரயோகிக்கும் வெற்று வார்த்தைகளே மதம், கடவுள் என்பனவாகும் என நாத்திகர்கள் கூறுகின்றனர்.
சார்ளஸ் டாவினின் கொள்கையாவது மனிதனும் ஏனைய பிராணிகளும் ஒரே மூதாதையரின் சந்ததிகளே. அதாவது ஒரே உயிர்மம் கொண்ட பிராணியான அமீபாவின் சந்ததிகளாவர். சூழலில் ஏற்படும் மாற்றத்திற்கேற்ப உயிரினங்களின் உடற்பாங்கிலும் படிப்படியாக மாற்றங்கள் நிகழ்ந்து வந்ததனால் எல்லாப் பிராணிகளும் இன்று காணப்படும் தோற்றத்தை அடைந்துள்ளன. மனிதன் குரங்கிலிருந்தும் குரங்குகள் பறவைகளிலிருந்தும் பறவைகள் ஊர்வனவற்றிலிருந்தும் ஊர்வன தவளைகள் போன்ற ஈரூடக வாழிகளிலிருந்தும் படிப்படியாகப் பரிணாமமடைந்து வந்துள்ளனஎன்பதாகும். இக்கூர்ப்புக்கொள்கையே  டாவினின் பரிணாமக் கொள்கை Theory of Evolutionஎன்று விஞ்ஞானம் பெயர் குறிக்கின்றது.
இக்கொள்கையை (நாத்திகத்தை) மக்கள் மத்தியில் கொண்டுசெல்வதற்காக உயிரினங்களின் தோற்றம் - Origin of Spesies” என்ற ஒரு நூலை  டாவின் வெளியிட்டார். இது மக்கள் மத்தியில் மாத்திரமன்றி விஞ்ஞானிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்புத்தகம் வெளியான ஒரு சில மாதங்களிலேயே பரபரப்பாக விற்றுத் தீர்ந்துவிட்டன.  பல மத அறிஞர்கள் இதனை எதிர்த்துக் கோசமிட்டனர். இன்னும் பலர் இக்கொள்கையை ஏற்று தம்மை முற்போக்குச் சிந்தனையாளர்களாகக் காட்டிக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து இது பற்றி ஆராய்ச்சிகளைச் செய்வதற்காக பல விஞ்ஞானிகள் களமிறங்கினர். எனினும் இது ஓர் பொய்யான கூற்று என்பதை தீரமாக முன்வைப்பதற்கான விஞ்ஞான ரீதியான போதிய ஆதாரங்கள் அன்று காணப்படவில்லை. எனவே இக்கொள்ளை மிகத் துரிதமாக உலகம் முழுதும் வேர்விட்டு வானுயர்ந்து கிளைபரப்பிப் பரந்தது. இன்றும் இதுதொடர்பான ஆய்வுகளும் வாதப் பிரதிவாதங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. எனினும் இக்கொள்கையை ஆராய்ந்ததில் இறையிருப்புக்கான பல அத்தாட்சிகளை விஞ்ஞானிகளால் கண்டுகொள்ள முடியுமாயிருந்தது. எனவே அண்மைய சில வருடங்களாக  இப்பிரபஞ்சத்தின் அணு முதல் அண்டவெளிவரை உள்ள அனைத்து அம்சங்களையும் நவீன விஞ்ஞான தொழிநுட்ப சாதனங்களின் உதவியுடன் விரிவாக ஆராய்ந்து டாவினி;ன் இயற்கைத் தேர்வுக் கொள்கைக்கு, பரிணாமக் கொள்ககை;கு எதிராக விஞ்ஞான ஆதாரங்களுடாக கருத்து முன்வைக்கப்பட்டு வருகின்றது. இக்கொள்கைக்குப் பெரும் அடியாக ஒரு கொள்கையும் வளர்ந்து வருகின்றது. அதுதான் ஐடி கொள்கை ID Theroy (Inteligent Desining Theory)”
இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு அம்ஷமும் இறையிருப்பை உறுதிப்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. நேர்த்தியான, எவ்விதப் பிழைகளையும் கண்டுகொள்ள முடியாத இவ்வுலகம் எதேச்சையாகத் தோன்றியதல்ல. இதன் மூலகர்த்தா இறைவன் ஒருவன் இருக்கின்றான் எனப் பறைசாட்டுகின்றது. அல்லாஹ் கூறுகின்றான் மேலும், அவன்தான் வானங்கள் மற்றும் பூமியையை உண்மையைக்கொண்டு படைத்தான்” (அன்-ஆம்:73)
இந்நாத்திகக் கொள்கை மிகவும் துல்லியமான முறைகளில் மக்கள்மத்தியில் பரப்பப்பட்டு வருகின்றது. எமது பாடசாலை, பல்கலைக்கழகக் கல்வி முறைகளில்கூடு இது ஒரு பாடத்திட்டமாக நுழைவிக்கப்பட்டு கற்பிக்கப்படுகின்றது. இவ்வாறான இஸ்லாத்திற்கும் எம் அகீதாவுக்கும் முறனான கருத்துக்களை நாம் தேடி அறிந்துகொள்வதோடு அவைபற்றி ஏனையோருக்கும் அறிவிக்கவேண்டும். இதில் ஆசிரியாகளின் பங்கு அளப்பரியது. அதுமட்டுமன்றி எமது பாடத்திட்டங்களை இஸ்லாமிய மயப்படுத்தவேண்டிய ஒரு பாரிய கடப்பாடும் எமக்குண்டு.
மனிதன் குரங்கிலிருந்து வந்தவனல்ல. அவன் ஓர் உண்ணதப் படைப்பு. இறைவனின் ரூஹிலிருந்து ஊதி உருவாக்கப்பட்ட படைப்பு. இதனை பின்வரும் இரண்டு இறை வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.
அல்லாஹ் உங்களை மண்ணிலிருந்து படைத்தான். பின்னர் ஒரு துளி இந்திரியத்திலிருந்து பின்னர் ஜோடிகளாக ஆக்கினான். அவன் அறிவைக்கொண்டே தவிர எந்தப் பெண்ணும் கர்ப்பமாவதுமில்லை, அவள் பிரசவிப்பதுமில்லை. வயதானவரின் வயது அதிகரிப்பதும் அவரின் வயதிலிருந்து குறைக்கப்படுவதும் (அவனது பதிவுப்) புத்தகத்தில் இருக்கின்றது. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு சுலபமானதே..!! (35:11)
ஆக இறைவன் ஒருவன் இருக்கின்றான். அவன்தான் படைப்பினங்கைளப் படைத்து பரிபாலிப்பவன். சர்வ வல்லமைபொருந்தியவன். அவனது வல்லமைகளை மனிதர்களாகிய எமக்கு அவனின் அற்புதப் படைப்புகள் மூலம் காண்பிக்கின்றான். அவற்றை ஆராய்ந்து அறிந்து நல்லுணர்ச்சி பெறுவோம்...

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...