"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

03 December 2010

இணையத்திலும் எழுதுவோம். (Updated Article)

...ஆலிப் அலி...
தகவல் பரிமாற்றத்தின் ஜாம்பவானாகத் திகழும் உலகளாவிய வலைப் பின்னல்தான் இணையம். பாவனையாளர்களுக்கும் தகவல்களுக்கும் கணினிகளுக்குமிடையே பாரியதொரு பிணைப்பை ஏற்படுத்தி  இன்றைய உலகிலே மகத்தானதொரு தகவல் புரட்சியை நடாத்தி வருகின்றது.

இன்று  முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்காகப் பல்வேறு சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் நூல்களும் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. இவை எமது சமூகத்தில் வளர்ந்துவரும் எழுத்தாளர்களின்  படிப்படியான வளர்ச்சியையும் அதிகரிப்பையும் மறைமுகமாகக் குறிப்பிடுவதாக உள்ளது. எனினும் இவற்றில் குறைந்த எண்ணிக்கையிலானவையே பிற நாடுகளுக்குச் செல்கின்றன. இதனால் எமது வளமான எழுத்தாளர்களின் காத்திரமான படைப்புகள் அந்நாட்டுக்குள், அச்சஞ்சிகையுடன் அல்லது பத்திரிகையுடன் பழக்கப்பட்டவர்களுடன் மாத்திரம் சுருங்கிவிடுகின்றது.

ஆனால் இன்று சர்வதேச ரீதியில் வளர்ந்து வருகின்ற இணையப்பாவனை எமது உளப் படைப்புகளைக் கணப்பொழுதில் சர்வதேச மட்டத்தில் ஜனரஞ்சகப்படுத்தி விடுகிறது. இன்று எம்மவர்களின் இணையத்திற்கான பிரவேசம் குறைந்து காணப்பட்டாலும் இன்னும் சில வருடங்களில் அதை அதிகரிப்பதற்கான வாய்ப்பை இன்றுமுதலே அடித்தளமிடலாமல்லவா?

இன்று சுமார் 305 மில்லியன் குடும்பங்கள் இணைய இணைப்பில் இணைந்துள்ளன. அது மட்டுமன்றி ஒவ்வொரு அரை வருடமும் 50 விழுக்காடுகளால் இணையப் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. இது இஸ்லாத்தின் தூதை சரியான முறையில் அவர்களுக்கு எத்திவைப்பதற்கான சிறந்ததொரு களம் என்று கூறலாம். இக்காலம் எவ்விதத் தடையுமின்றி இத்தூதை அனைவருக்கும் எத்திவைப்பதற்கான சிறந்த வாய்ப்பை எம் கைவசம் கொண்டுவந்து தந்துள்ளது. ஒரு காலத்தில் ஒரு நாட்டின் குடிமக்களுக்கு தமது தூதை எத்திவைக்க அந்நாட்டு மன்னனின் அனுமதி அவசியம் தேவைப்பட்டது. அவர்கள் மறுத்தால் யுத்தம் செய்து நாட்டைக்கைப்பற்றித்தான் அம்மக்களைச் சுதந்திர சிந்தனையாளர்களாக மாற்றமுடியும். ஆனால் இன்று உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் புகுந்து ஒவ்வொரு தனிமனிதனது உள்ளத்துடனும் எவ்விதத் தங்கு தடைகளுமின்றி உரையாடக்கூடிய சாத்தியத்தை இணையதளம் அமைத்துத் தந்துள்ளது

எனினும் இணையத்தினூடான இஸ்லாத்தின் பிரசாரப்பணிகள்  பிறமத இணையத்தளங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இஸ்லாமிய இணையத்தளங்களின் அரிதான தன்மையை விளங்கலாம். அண்மையில் எகிப்து அல்அஸ்ஹர் பல்கலைக்கழகம் இதுகுறித்த அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. சர்வதேசரீதியில் இணையத்தின் 62% பிரசாரப் பகுதியை கிறிஸ்த்தவம் ஆக்கிரமித்துள்ளது என்றும், அவ்வாறே யூத மதம் 30% பிரசாரப் பகுதியைப் பிடித்துள்ளது என்றும், இஸ்லாம் இதில் 9%  மான இடத்தை மட்டுமே கொண்டுள்ளது என்றும் அதிலே குறிப்பிடப்பட்டிருந்தது.

இணையத்திற்கான பயணர்களின் அதிவேக பிரவேசத்தை விளங்கியுள்ள இஸ்லாத்தின் எதிரிகள் அவர்களிடத்தில் இஸ்லாத்தை வரைமுறையின்றி திரிபுபடுத்தி வருகின்றனர். இஸ்லாத்தை அடிப்படை வாதமாகவும் தீவிரவாதமாகவும் பிற்போக்குவாதமாகவும் அறிமுகப்படுத்தி இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளிலும் நோக்கங்களிலும் இலட்சியங்களிலும் சந்தேகங்களைக் கிளறி தப்பபிப்பிராயங்களை ஊட்ட முயற்சிக்கின்றனர். இஸ்லாத்திற்கெதிரான பிரசாரங்களில் இன்று 10,000 இற்கும் அதிகமான இணையங்கள் தொழிற்படுகின்றன. அதிலும் இஸ்லாமியப் பெயர்தாங்கிய பல போலியான இணையதளங்கள் இஸ்லாத்தைப் பற்றிய பொய்யான தகவல்களை வழங்குவதில் மும்முரமாகச்செயற்படுகின்றன. எனினும் உண்மையான அரபு-இஸ்லாமிய இணையதளங்கள் 660 மட்டுமே உள்ளன என்பது கவலைக்கிடமானதோர் செய்தி.

எனவே எமது எழுத்தாளர்களிடம் நான் வேண்டிக்கொள்வது! எமது இஸ்லாமியக் கலைப் படைப்புக்களை சர்வதேச தரத்தில் ஜனரஞ்சகப்படுத்தும் கடப்பாடு எம்மனைவருக்கும் உண்டு. நாம் எழுத வேண்டும். காத்திரமான கருத்தாழமுள்ள ஆக்கங்களைப் படைக்க வேண்டும். அதனை சர்வதேச சமூகத்துக்குக் கொண்டு செல்லவேண்டும். இஸ்லாத்தின் எதிரிகளுக்கான பதிலடியாகவும் தூய தூதை எத்திவைப்பதாகவும் அவை அமையவேண்டும். இதில் நாம் மொழிப்பிரச்சினையை எதிர்நோக்கும் வாய்ப்புக்கள் அதிகம். ஏனெனில் தமிழ் மொழியில் படிப்பவர்கள் அரிதானவர்களே. ஆயினும் கவலை வேண்டாம்.

இன்று உலகில் பல பாகங்களிலும் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். எமது படைப்புகள் தூய்மையானவையாகவும் கட்சிதமானவையாகவும் இருந்தால் நிச்சயமாக அல்லாஹ் அதனை அவர்களிடம் கொண்டு சேர்ப்பான். அத்தோடு நவீன தொடர்பாடல் தொழிநுட்பத்தில் இஸ்லாத்தின் பிரசாரத்திற்கு நாம் செய்யும் சிறு பங்களிப்பாகவும் இது இருக்கலாமல்லவா? எனவே இணையப்பக்கத்திலும் எழுதுவோம். தமிழில் மாத்திரம் தங்கியிருக்காது ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளிலும் எமது ஆற்றல்களை வளர்த்து எழுதும் முயற்சிகளைக் கைக்கொள்வோம்.

கட்டணம் செலுத்தி பல்வேறு சலுகைகளுடன் சுயமாகவோ அல்லது கூட்டாகவோ ஒரு இணையதளத்தை ஆரம்பிப்பது ஒரு புறம் இருக்க இன்று பல்வேறு நிறுவனங்கள் இலவசமாக இணையப் பதிவுகளை மேற்கொள்வதற்கான வசதிகளைச் செய்து தருகின்றன. Wordpreess, Bloggerspot, Xanga, Live Journel என்பன சில பிரபலமான இலவச இணையதளங்களை உருவாக்க வாய்ப்புத்தரும் இணைய நிறுவனங்களாகும். இவை ஏதாவதொன்றில் இலவசமாக ஓர் இணையப் பக்கத்தை ஆரம்பித்து எமது அழைப்புப் பணியைத் தொடரலாம். 

இவ்வாறு பதிகின்ற காலவோட்டத்தில் காத்திரமான மிகச் சிறந்த இணையப் பக்கங்களைத் தெரிவு செய்து அவற்றை எமது இஸ்லாமியப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் அறிமுகப்படுத்துவதோடு சிறந்த இணைய தளத்திற்கான விருதுகளையும் தேசிய மட்டத்தில் ஏற்பாடுசெய்யலாம். இது வலைப்பக்கத்தில் எழுதுவதற்குத் தூண்டுகோளாக அமையும். இன்று இவ்வாறான வழிமுறைகள் முஸ்லிம் அல்லாதவர்களால் மிகச் சிறப்பாக மேற்கொள்ளப் படுகின்றன. எனவே எழுதுவோம். வலைப்பதிவிலும் எழுதுவோம். இஸ்லாத்தின் எழுச்சிக்கு எழுத்துப் புரட்சியால் பங்களிப்புச்செய்வோம்.

உங்கள் கருத்து:

1 comments:

fathima said...

sirantha aakkam mattumalla... unarvugalai thoondakkoodiya aakkam... umathu aluththup pani menmelum valara irivanin uthavi antrum kidaikkattum

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...