"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

14 November 2010

விண்வெளியிலே 200 பில்லியனுக்கும் அதிகமான பால்வீதிகள் (Milky ways) இருப்பதாகவும் அவை ஒவ்வொன்றிலும் திரில்லியன் கணக்கான நட்சத்திரங்கள் இருப்பதாகவும் நவீன விண்ணியல் விஞ்ஞானம் கண்டுபிடித்துள்ளது. எமது சூரியமண்டலம் அமைந்துள்ள பால்வீதியில் சுமார் 2000 இற்கும் மேற்பட்ட ஒண்முகிற்படலங்கள் காணப்படுகின்றன. அதேபோன்று 100 பில்லியனுக்கும் அதிகமான நட்சத்திரங்களும் காணப்படுகின்றன. அவுஸ்ரேலிய விண்ணியலாளர்களின் கருத்துப்படி பூமியிலுள்ள கடற்கரையிலுள்ள மணற்துணிக்கைகளின் எண்ணிக்கையைவிட விண்வெளியில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம் என்பதாகும்.
 இதுதான் விண்வெளியின் பிரம்மாண்டம்
ஒண்முகிற் படலம் என்பது இலத்தீன் மொழியில் நெபுலா (Nebula) எனப்படும். தமிழில் மூடுபணி எனப் பொருள். விண்ணில் பரவியுள்ள வாயுக்களும் தூசுப்படலங்களும் ஒன்று திரண்டு தனிக்கட்டியாகி அதனுள் ஏற்படும் ஈர்ப்பு விசை காரணமாக சுருக்கமடைந்து அதனுள்ளே உருவாகும் அதி உஷ்னத்தினால் வெடித்துச் சிதறி நட்சத்திரங்கள் பிறக்கின்றன. இவற்றின் பிறப்பிடத்தையே ஒண்முகிற்படலம், நெபுலா என்கிறோம். இந்நட்சத்திரங்கள் பல்லாயிரம் ஆண்டுகள் தொழிற்பட்டுவிட்டு அவற்றின் எரிசக்திகளான Hydrogen, Helium என்பன தீர்ந்துவிடும் தருவாயில் இறந்துவிடுகின்றன. இதனையே கருந்துளை (Black Hole) என்கிறோம்.
வானில் உள்ள இந்நட்சத்திரங்கள் குவியல் குவியலாகவும், மண்டலங்களாகவும் இயங்கி வருகின்றன. நஜ்முன்என்பது இதன் அறபுப்பதமாகும். குர்ஆனில் 13 இடங்களில் இச்சொல்லை காணலாம். ஆரம்பகால மனிதன் நட்சத்திரங்களை உற்றுநோக்கி ஒவ்வொரு நட்சத்திரத்திற்குமிடையில் கற்பனைக் கோடுகளை வரைந்தான். இவற்றையே நட்சத்திரத் தொகுதி என்கிறோம். மிதுனம், மேடம்,  சிம்மம் என்பவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம். இதுவரை 88 நட்சத்திரத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நட்சத்திரங்கள் ஏன் மின்னுகின்றன என்று உங்களுக்குத் தெரியுமா?  நட்சத்திரங்கள் தொடர்ந்து பிரகாசித்துக் கொண்டுதான் இருக்கின்றன. பூமியைச்சுற்றி வாயு மண்டலம் சூழ்ந்துள்ளது. இவ்வாயு மண்டலங்கள் அங்குமிங்கும் அலைபாய்கின்றன. எனவே நட்சத்திரங்களில் இருந்து வரும் ஒளி இப்புகை மண்டலங்களினால் முறிவுபட்டு எம்மை வந்தடைகின்றன. எனவேதான் நமது கண்களுக்கு இவை மின்னுவது போன்று தெரிகின்றது.
நட்சத்திரங்கள் இயற்கையாகவே ஒளியைக் காவுகின்றன. ஆனால் கோள்கள் நட்சத்திங்களிடமிருந்து ஒளியைப்பெற்றே பிரகாசிக்கின்றன. நமது சூரியனும் ஒரு நட்சத்திரமேயாகும். இது நமக்கு அண்மையில் உள்ளமையால் சூரியன் எனப் பெயர் சூட்டி அழைக்கின்றோம். சந்திரன் சூரியனிலிருந்து ஒளியைப் பெற்றுப் பிரதிபளிக்கின்றது. இந்நட்சத்திரங்களில் அல்லாஹ் அவனது படைப்புகளுக்கு பல்வேறு பயன்களை வைத்துள்ளான். அதில் ஒன்றாக மனிதர்களும், பறவைகளும்,  மிருகங்களும் தமது பிரயாணத்தின் போது வழியறிந்து செல்கின்றன. அல்லாஹ் கூறுகிறான் நட்சத்திங்களைக் கொண்டும் அவர்கள் (தங்கள்) வழியை அறிந்து கொள்கின்றனர்”.(16:16)
நீங்கள் இரவு வானை சற்று நேரத்திற்கு அவதானிப்பீர்களானால் எரிநட்சத்திரங்கள் விழுவதைக் காண்பீர்கள். குறைந்தது ஒரு இரவில் 6 எரிநட்சத்திரங்களையாவது காணலாம். உண்மையில் அவை பூமியை நோக்கி வீணாக விழுபவையல்ல. அதில் உள்ள மர்மத்தை அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றான். நிச்சயமாக நாம் (பூமிக்கு) சமீபமாக உள்ள வானத்தை நட்சத்திரங்களின் அழகைக்கொண்டு அலங்கரித்தோம். கட்டுப்படாத ஒவ்வொரு ஷைத்தானிலிருந்தும் பாதுகாப்பதற்காக (அவ்வாறு செய்தோம்) மிக உயர்வான (மலக்குகளின்) கூட்டத்தார்பால் (அவர்களது பேச்சுக்களை மறைந்திருந்து ஷைதான்களாகிய) இவர்கள் செவியேற்க மாட்டார்கள். ஒவ்வொரு பகுதியிலிருந்தும் (எரிகொள்ளிகளால்) எறியப்படுவார்கள்.(37:6-10), (15:16-18), (67:05)
இவ்விடயத்தில் அனுபவப்பட்ட ஜின்களே இவ்வாறு கூறுகின்றன. நாங்கள் வானத்தைத் தொட்டுப் பாரத்தோம். அப்போது வலிமைமிக்க பாதுகாவலர்களாலும் தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டதாக அதனைக்கண்டோம். (முன்பு) அங்கு (பேசப்படுபவற்றைச்) செவியேற்பதற்காக பல இடங்களில் அமர்பவர்களாகவும் இருந்தோம். (தற்போது அவற்றை) எவர் கேட்கிறாரோ அவர் குறிவைத்து (த் தாக்கக்) காத்திருக்கும் நெருப்புப்பந்தத்தை தமக்காகக் காண்பார்”. (72:8,9) இங்கு நெருப்புப்பந்தம் என்பது எரிநட்சத்திரங்களைக் குறிப்பதாக அல்குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்.
சூரிய மண்டலத்திற்கு வெளியே இருந்து யாதாயினுமொன்று புவிமண்டலத்தின் எல்லையை அடைந்தால் அது அங்குள்ள காற்று மண்டலத்துடன் மோதித் தீப்பற்றி (தரையிலிருந்து 100km உயரத்திலேயே) எரிந்து சிதறி சாம்பலாகி விடுகின்றது. அதையும் மீரி வருபவை எரிகொள்ளிகளாக (Meteor) பூமியை அடைகின்றன.
இவ்வாறு அல்லாஹ் அண்டவெளியிலே இன்னோரன்ன பல அத்தாட்சிகளையும் அற்புதங்களையும் வைத்திருக்கின்றான். அதனை இன்றைய அறிவியல் உலகம் பலவாறு ஆராய்ந்து வருகின்றது. அமெரிக்கா,  ரஷ்யா,  சீனா,  இந்தியா என பல்வேறு நாடுகளும் இந்த விண்வெளி ஆராய்ச்சியில் களமிறங்கி பல மில்லியன் கணக்கான டொலர்களைச் செலவுசெய்து பல செய்மதிகளை விண்ணுக்கு ஏவி NASA போன்ற ஆராய்ச்சி நிறுவனங்களையெல்லாம் நிறுவியும் ஏன் இன்னும் இறை  வல்லமையை இவர்களால் உணர்ந்து ஈமான் கொள்ள முடியவில்லை?
அவ்வாறு அவர்கள் ஈமான் கொள்ளாததற்கான காரணத்தை இங்கு அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான். விண்ணிலே ஒரு வாயிலை நாம் அவர்களுக்குத் திறந்துவிட்டு  அதிலே அவர்கள் (தொடர்ந்து ஆராய்ச்சிகள் செய்து முன்) ஏறிக்கொண்டே இருந்தாலும் (இவ்வேதத்தை உண்மைப் படுத்தமாட்டார்கள். மாறாக) எமது பார்வைகள்தாம் பார்க்க முடியாது தடுக்கப்பட்டு மயக்கப்பட்டுவிட்டன. நாம் சூனியம் செய்யப்பட்ட ஒரு கூட்டத்தினரே என்று கூறுவார்கள்.(15:14-15)
இன்று இந்த ஆராய்ச்சிகள் யாவும் சடவாதத்தினடிப்படையிலேயே வளர்ச்சியுற்றிருக்கின்றன. நவீன விஞ்ஞானமோ,  தொழிற்நுட்பமோ வஹியின் ஒளியில் வளர்ச்சியுறவில்லை. எனவேதான் அல்லாஹ் திருமறையிலே 40 ஆம் அத்தியாயத்தில் 36, 37 ஆம் வசனங்களில் கூறுவதுபோல அன்று பிர்அவ்ன் வானுயர்ந்த கோபுரம் ஒன்றைக் கட்டி வானில் மூஸா நபி கூறிய இறைவன் இருக்கின்றானா என்று தேடினான். இன்று ரஷ்யா தனது ஸ்புட்னிக்-II என்ற விண்னோடத்தை விண்ணில் செலுத்திவிட்டு நாம் விண்ணில் இறைவனைத் தேடினோம் அங்கு இறைவனைக் காணவில்லைஎன்று முட்டாள்தனமாகக் கூறிக்கொண்டது. பிர்அவ்னின் காலத்திற்கும் இன்றைய நவீன காலத்திற்கும் இடையே பல்லாண்டுகால இடைவெளியிருந்தாலும் அறிவு விடயத்தில் இரண்டும் சடவாத சிந்தனையில் சமமாகவே இருக்கின்றன.
 உண்மையில் அல்லாஹ்வின் படைப்புக்கள் மனித அறிவை சத்தியத்தின்பால் அழைப்பனவாகவே உள்ளன. அவற்றை ஆராய்ந்து உணர்வு பெறுவோம்.
ஆலிப் அலி  (இஸ்லாஹியாஹ் வளாகம்)

உங்கள் கருத்து:

1 comments:

Ameera said...

Mashaallah fabulous article brother...
I really appreciate u...May allah always bless u.Barakallahu feek...Please give us more articles comparing today's inventions and the real truth from qura'n...Jazakallahu hair.

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...