"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

07 December 2010

அமொரிக்காவின் அந்தரங்கம் விக்கிலீக்ஸினால் அம்பலம்

...ஆலிப் அலி...

“Hillary clinton and thousands of diplomats around the world are going to get heart attacks”(Bredly menin)

உலக மக்களினதும் உலக நாடுகளின் தலைவர்களினதும் கவனத்தைத் தன்பால் குவியச்செய்து சர்வதேச அரங்கில் சூடான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது விக்கிலீக்ஸ் இணையதளம். “Wikileaks” இன்று பல நாட்டுத் தலைவர்களையும் குலைநடுங்கவைக்கும் ஒரு பெயராக மாறியுள்ளது. அமெரிக்காவின் மட்டுமல்ல அமெரிக்காவுடன் நேச உறவாடிய பல நாடுகளினதும் நாட்டுத்தலைவர்களினதும் பசுந்தோலை உரித்து உண்மை முகத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது இந்த இணையதளம்.

திரைமறைவில் இருக்கும் உண்மைகளை அரங்கிற்குக் கொண்டுவரும் நோக்கில் Sunshine press நிறுவனத்தினாhல் 2006 ஆம் ஆண்டு இத்தளம் ஆரம்பிக்கப்பட்டது. 39 வயதுடைய அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த ஜுலியன் பவுல் அஸங்கே (Julian paul Assange) என்பவர் இதன் இஸ்தாபகத் தலைவர்களுள் முக்கியமானவர். உலக நாடுகளையே உளவு பார்த்துத் திரியும் அமெரிக்காவுக்குச் சவாலாக அதன் இலட்சக்கணக்கான இரகசிய இராஜதந்திரத் தகவல்களை விக்கிலீக்ஸ் இணையதளம் உலக அரங்கில் பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்திவருகின்றது.
அமெரிக்க தலைமையில் வட அத்திலான்திக் நாடுகள் (நேட்டோ படைகள்) ஆப்கானிஸ்தானில் நடாத்திவருகின்ற யுத்த சீர்கேடுகள் தொடர்பாகவும் இரகசியச் செய்திப் பறிமாற்றங்கள் தொடர்பாகவும் புலனாய்வுத் தகவல்கள் தொடர்பாகவும் சுமார் 9200 இரகசிய ஆவணங்களை கடந்த ஜுலை மாதத்தில் விக்கிலீக்ஸ் வெளியிட்டது.

பின்னர் ஈராக் யுத்தகளத்தில் 2004 ஆம் ஆண்டு முதல் நடாத்தப்பட்டுவரும் சம்பவங்களை வைத்து அமெரிக்கப் படைகளின் கோர முகத்தை அம்பலப்படுத்தும் வகையில் சுமார் 4 இலட்சம் ஆவணங்களை கடந்த ஒக்டோபர் மாத இறுதியில் வெளியிட்டது. ஈராக் ஆக்கிரமிப்பை அடுத்து அமெரிக்கா தனது ஊடக பலத்தையும் வல்லாதிக்க சக்தியையும் வைத்து எவற்றையெல்லாம் வெகுஜனத்தை விட்டும் மூடி மறைக்க முனைந்ததுவோ அவை அனைத்தையும் விக்கிலீக்ஸ் அப்பட்டமாகவே உலகுக்குத் திரையிட்டுக் காட்டிவிட்டது.

ஈராக் யுத்தத்தில் கொலையுண்டவர்களின் எண்ணிக்கை தொடர்பாக உலக நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் அமெரிக்காவைக் கேள்வி எழுப்பியபோது அதுபற்றியெல்லாம் நாம் கணிப்பீடு செய்வதில்லைஎன அசட்டுத்தனமாகக் கூறிவந்த அமெரிக்காவின் இரகசியத் தரவுப் பதிவுகளின்படி சுமார் 285,000 பேருக்கும் அதிகமான ஈராக்கியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற செய்தியையும் இவ் இணையதளம் பதிவுசெய்துள்ளது. நாளாந்தம் சுமார் 91 பேர் ஈராக்கில் கொலைசெய்யப்பட்டுள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அபூ குரைப் சிறையில் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் தொடர்பாக வெளியான புகைப்படங்கள், வீடியோப் பதிவுகளைவிடவும் மிகக் கொடூரமான காட்சிகளை உள்ளடக்கிய புகைப்படங்களையும் வீடியோப் பதிவுகளையும் விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது. போர்க்கள மரணங்கள் முதல் சிறைக்கூட சித்திரவதைகள்வரை அடுக்கடுக்கான ஆவணங்கள் இதில் கொட்டிக்கிடக்கின்றன.

அப்கானிஸ்தான் மற்றும் ஈராக் தொடர்பான கேபிள் ஆவணங்கள் வெளியானபோது அவை ஏழவே பார்த்தும் கேட்டும் அழுத்துப்போன சமாச்சாரங்கள் என்றுதான் பொதுமக்கள் இதுதொடர்பாக அவ்வளவானதொரு கரிசனை எடுத்துக்கொள்ளவில்லை. அது ஒரு வழமையான நிகழ்வாகவே நோக்கப்பட்டது. இந்த செய்தி வெளியீட்டினால் ஓரளவு திக்பிரமையடைந்த அமெரிக்கா தன்னைச் சுதாகரித்துக்கொண்டு எழுவதற்குள் மூச்சுக் குழாயே அடைத்துக்கொள்ளும் படியாக பாரியதொரு இடி அமெரிக்காவின் தலையில் வீழ்ந்தது. கடந்த வாரம் அமெரிக்காவின் மிகவும் அந்தரங்கமான இராஜதந்திர செய்திப் பறிமாற்றங்களடங்கிய 250,000 ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டதுதான் தாமதம் மிக விரைவாக ஒரு பரபரப்பு உலக நாடுகளைத் தொற்றிக்கொண்டது. 

1966 முதல் 2010 பெப்ரவரி மாதம் வரை உலகெங்கிலும் உள்ள 274 அமெரிக்கத் தூதரகங்களுடன் மேற்கொண்ட இரகசியத் தொடர்பாடல்களும் மற்றும் உலக நாடுகளுக்கும் அவற்றின் முக்கியஸ்தர்களுக்கும் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்திற்கும் இடையில் நடந்த இரகசிய செய்தித் தொடர்புகளும் இதில் அடங்குகின்றன. இவற்றில் அதிகமான ஆவணங்கள் அண்மைய நிகழ்வுகளாகப் பதியப்பட்டுள்ளன. 

சவுதி அரேபிய மன்னர் அப்துல்லாஹ் ஈரானைத் தாக்கி அதன் அணு உலைகளை அழித்துவிடுமாறு மீண்டும் மீண்டும் அமெரிக்காவை வேண்டியது குறித்தும் பாகிஸ்தான் அணு செயற்திட்டம் குறித்தும் சீன அரசின் கணணித் தகவல் பரிமாற்றங்கள் குறித்தும் இன்னும் வடகொரியா தொடர்பாக தென்கொரியாவின் ஸியோல் நகரில் உள்ள அமெரிக்கத் தூதுவர் மூலம் அனுப்பப்பட்ட செய்திகள் குறித்தும் பல கேபிள் ஆவணங்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. 

இவை மாத்திரமன்றி இலங்கை தொடர்பாகவும் பல செய்திகள் அமெரிக்காவினால் பரிமாறப்பட்டுள்ளன. இலங்கை இராணுவப் படையினரால் விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்ததன் பின்னர் இலங்கையில் மனித உரிமை நிலவரம் குறித்து ஆராயப்படவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள முக்கயிஸ்தர்களுக்கு அமெரிக்க அரசால் இரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை இவ் இணையதளம் இவ்வாறு பதிவு செய்துள்ளது. 

Wikileaks published : The secret cables sent to U.S.Diplomats in which enquires were made about Sri Lanka.

இச்செய்திப் பறிமாற்றத்தின் பின்புதான் ஐ.நா சபை இலங்கை விடயத்தில் கரிசனைகாட்ட ஆரம்பித்தது. இலங்கையில் மனித உரிமை குறித்து அக்கறை செலுத்தும் அமெரிக்கா ஈராக்கில் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்ட 285,000 பேர் தொடர்பில் என்ன பதில் சொல்லப்போகின்றது? என விக்கிலீக்ஸ் ஸ்தாபர் ஜுலியன் அஸங்கே கேள்வி எழுப்புகின்றார்.

இவ்வாறு விக்கிலீக்ஸ் இணையதளம் ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான், யெமன் என பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்கா தலைமையிலான இராணுவ இரகசியங்கள் மற்றும் கெடுபிடிகளென பல தகவல்களையும் வெளிக்கொணர்ந்துள்ள அதேவேளை இவை குறித்து அமெரிக்க ஒபாமா அரசாங்கம் பதிலளிக்கவேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை தொடர்பாக 3166 இரகசிய கேபில்களும் பங்களாதேஷ் தொடர்பாக 182 கேபில்களும் பாகிஸ்தான் தொடர்பாக 4275 கேபில்களும் இந்தியா தொடர்பாக 5087 கேபில்களும் அப்கானிஸ்தான் தொடர்பாக 7095 கேபில்களும் நேபாளம் தொடர்பாக 2600 கேபில்களும் மற்றும் 8320 சீனா தொடர்பான இரகசிய கேபில்களும் விக்கிலீக்ஸ் மூலம் வெளியிடப்பட்டுள்ளதாக ரிபப்ளிக் இணையதளம் கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி செய்தி வெளியிட்டிருந்தது.

இலட்சக்கணக்கான இரகசிய இராஜதந்திர ஆவணங்களை விக்கிலீக்ஸ் தளம் திருட்டுத்தனமாக சேகரித்து வெளியிட்டுள்ளமை சர்வதேச சமூகத்தின் மீதானதொரு பாரிய தாக்குதலென அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் விசனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Hillary clinton said: The administration was taking aggressive steps to hold responsible those who stole this information.

ஆனால் ஜுலியன் அஸங்கே ஹிலாலி கிளின்டனை அவசியம் பதவி விலகவேண்டுமென செய்திவெளியிட்டமை வெள்ளை மாளிகையை உலுக்கிவிட்டுள்ளது. ஏனெனில் அவர் உலகளவில் உள்ள அமெரிக்க தூதுவராலயங்களில் பணிபுரியும் அதிகாரிகளிடம், வெளிநாட்டு அதிகாரிகளையும் ஐ.நா. சபையின் முக்கியஸ்தர்களையும் உளவு பார்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர்களது சுய விபரங்கள், அவர்கள் பயணம் செய்யும் விமான இலக்கங்கள், கடனட்டை விபரங்கள் மற்றும் கடவுட்சொற்கள், கைவிரல் அடையாளங்கள், மற்றும் மரபணுக்கள் என்பவற்றையெல்லாம்க இரகசியமாகப் பெற்றுத்தருமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். முக்கியஸ்தர்களை உளவு பார்க்கும் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ள ஹிலரி பதவி வகிக்கத் தகுதியற்றவர் என்ற வாதத்தையே ஜுலியன் அஸாங்கே முன்வைத்துள்ளார்.

விக்கிலீக்ஸ் செய்திக் கசிவு தொடர்பானவர்களை கட்டாயம் இனங்கண்டு தண்டிக்கவேண்டுமென்பதை குற்றவியல் விசாரணைச் சட்டமா அதிபர் எரிக்ஹோல்டர்மற்றும் இங்கிலாந்தின் பிரதி ஜனாதிபதி நிக்கி கினேஜ்என்போர் பிரஸ்தாபித்துள்ள அதேநேரம் இதில் நாமும் தாக்கப்படலாம் என்ற யூகத்தில் பல உலக நாட்டுத்தலைவர்களும் இவர்களுடன் கைகோர்த்து விக்கிலீக்ஸிற்கு எதிராகக் குரலெழுப்புகின்றனர். அத்தோடு பெண்டகன் சுற்றுவட்டாரம் இத்தகவல்கள் போலியாக வடிவமைத்து திரிபுபடுத்தப்பட்டவை என்று மறுதலிக்கின்றது.

அதேசமயம் இவ் ஆவண வெளியீட்டின் பின்னணியில் இருப்பது அமெரிக்காதான் என்றும் இது அவர்களாலேயே செய்யப்படும் ஒரு பித்தலாட்டமென்றும் இதனை ஆராய்வதில் யாரும் தமது நேரத்தை வீணடிக்கவேண்டியதில்லை என்றும் ஈரான் ஜனாதிபதி அஹ்மத் நஜாதி தெஹ்ரான் செய்தியாளர் மாநாட்டில் வைத்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

விக்கிலீக்ஸின் ஆவண வெளியீட்டினால் விசனமடைந்துள்ள அமெரிக்கா பலகோணங்களிலிருந்தும் அதனது செயற்பாடுகளை முடக்குவதற்கான அதிதீவிர முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றது. அமெரிக்க வர்த்தக மையத்திலிருந்தும் அமேஸன் தளத்திலிருந்தும் விக்கிலீக்ஸை கணணியூடாக ஊடுருவித் தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன. எனினும் சில மணிநேர இஸ்தம்பித நிலைக்குப் பின் மீண்டும் புதிய தள முகவரியுடன் இத்தளம் மேலெழுந்துள்ளது.

www.wikileaks.org  என்ற தளத்தைத் தாக்கி ஆறு மணிநேரங்களில் மீண்டும் www.wikileaks.ch என்ற புதிய முகவரியுடன் சுவிசர்லாந்திலிருந்து இத்தளம் இயங்க ஆரம்பித்துள்ளது. இணையத்தினூடான தாக்குதல் மாத்திரமன்றி அஸாங்கே இற்கும் பல கொலை அச்சுருத்தல்கள் வந்துள்ளன. அவரைக் கைது செய்தவற்காக ஐரோப்பா பல இடங்களிலும் பிடியாணை பிறப்பித்துள்ளது. ஒரு வல்லரசின் இராஜாங்க இரகசியங்களை வெளியிட்டமையினால் சர்வதேச நாடுகளுக்கிடையில் உள்ள இராஜதந்திர உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஜுலியன் அஸாங்கே இரண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும் அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டு சுவீடன் நீதிமன்றாலும் கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் இதனை அவர் மறுத்துள்ளார். இது தொடர்பில் சர்வதேச பொலிஸ் இன்டர்போலின் இறுதி அறிவித்தலின்பின்னர் (Red Notice) உலகில் மகிவும் தேடப்படுவோரின் பட்டியலில் அவரது பெயரையும் இணைத்து கைது செய்வதற்கான பல முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றது. 

தற்போது ஜுலின் அஸாங்கே தலைமறவாகியுள்ளார். எங்கிருக்கின்றார் என்ற விடயம் உறுதியாகக் கூறப்படாவிட்டாலும் லண்டனில் இருப்பதாகவே சந்தேகிக்கப்படுகின்றது.

உண்மையில் விக்கிலீக்ஸ் விவகாரம் உலகளவில் பலத்த அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாடு மற்றொரு நாட்டில் தங்கி வாழ்வது தவிர்க்க முடியாதவொன்றாக மாறியுள்ள நிலையில் விக்கிலீக்ஸ் விவகாரம் நாடுகளுக்கிடையே விரிசலை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஒபாமா நிர்வாகமோ அடுத்து என்ன பாதகச் செய்திகள் வெளியிடப்படும் என்பதைக்கூட யூகிக்க முடியாமல் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கின்றது. அமெரிக்காவுடன் அந்தரங்க உறவுகளைக் பேணிவந்த உலக நாடுகள் குறிப்பாக நேச நாடுகள்; இனியும் தொடர்ந்து தமது நட்புறவைப் பேணுமா என்பதில் கேள்வி எழுந்துள்ளது. இந்த நாடுகள் மாத்திரமன்றி மூன்றாம் உலக நாடுகள்கூட தாம் சார்பில் என்ன? எத்தனை? சர்ச்சைகளைக் கிளரும் ஆவணங்கள் விக்கிலீக்ஸிடம் உள்ளனவோ என்றும் அவை என்று? எப்பொழுது? வெளியிடப்படுமோ என்றும் குலைநடுக்கத்தில் உள்ளன. இதற்கிடையே ஹிலாரி கிளின்டன் உலகத் தலைவர்களுடன் தொடர்புகொண்டும் அவர்களைச் சந்தித்தும் மன்னிப்புக் கோருவதும் விக்கிலீக்ஸ் குறித்து எச்சரிப்பதுமாக இருக்கின்றார்.

ஏழவே சரிந்துகொண்டிருக்கும் வல்லரசு அமெரிக்காவின் எதிர்காலம் பல கேள்விக் குறிகளுக்கு முன்னால் தொங்கிக்கொண்டிருக்கின்றது. அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கைகளிலும் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத் துறைகளிலும் உலக நாடுகளுக்கிடையிலான இராஜ தந்திர உறவுகளிலும் எதிர்காலத்தில் பாரிய சரிவினை அமெரிக்கா எதிர்கொள்ளப்போகின்றது. தன்பேரில் உள்ள அழுக்குக்கறைகளை முறையாக அகற்ற அமெரிக்கா முயற்சிக்காது விக்கிலீக்ஸ் இணைதளத்தையும் அதன் இஸ்தாபகரையும் முடக்குவதால் மாத்திரம் எப்பயனும் ஏற்படப்போவதில்லை. இந்த ஆவணங்களுக்கு அமெரிக்கா பதில் கூறித்தான் ஆகவேண்டும். ஒன்றன்மேல் ஒன்றாக அமெரிக்கா மீது இடிவிழுந்து வருவது அதன் அந்திமகாலத்தைக் கட்டியம் கூறுகின்றது.

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...