"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

19 January 2011

பார்வைப் புலன்

ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)

பொதுவாக அனைத்து உயிரினங்களிடமும் காணமுடியுமான ஒரு உறுப்புதான் இந்தக் கண். ஒவ்வொரு உயிரினதும் கண்கள் வித்தியாசமான முறையில் படைக்கப்பட்டுள்ளன. சில உயிரினங்களின் கண்கள் முகத்தின் முன்பகுதியிலும் வேறு சில விலங்குகளின் கண்கள் முகத்தின் இறு புறங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. சிலந்திகள் தலையைச் சூழ எட்டு கண்களைக் கொண்டுள்ளன. தும்பிகளின் இரண்டு பெரிய கண்களிலும் 30,000 சிறிய கண்கள் காணப்படுகின்றன.  ஆந்தை, வெளவால், பூனை போன்ற உயிரினங்கள் இராக் காலங்களிலும் தெளிவாகப் பார்க்கும் அபார சக்தியைப் பெற்றுள்ளன. கழுகு போன்று கூர்மையான பார்வையை உடைய உயிரினங்களும் இருக்கின்றன. இவ்வாறு எம்மைச் சூழவுள்ள இந்த பசுமையான உலகைப் பார்ப்பதற்கும் அதில் எமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கும் நாம் எம் கண்களை மிகச் சிறப்பாகப் பயன்படுத்துகின்றோம்.

முகத்துக்கு அழகையும் வனப்பையும் கொடுப்பதில் கண்களது பங்களிப்பும் உண்டு. கண்குழி என்பினாலும் மென்மையான இமைகளினாலும் இமைகளின் நுனியில் உள்ள மயிர்களினாலும் எமது கண்கள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. மனிதனது கைவிரல் ரேகைகள் எவ்வாறு ஒருவரிலிருந்து இன்னொருவருடன் வித்தியாசப் படுகின்றனவோ அதே போன்றுதான் மனிதனது கண் ரேகைகளும். ஒருவரது கண் ரேகைபோன்று இன்னுமொருவரது கண்ரேகை நிச்சயமாக இருக்காது. அவ்வளவு நுணுக்கமாக அல்லா மனித உருப்புகளைப் படைத்துள்ளான்.

எமது கோள வடிவமான கண்களின் விட்டம் 25mm களாகும். இது வெளித்தோற்றத்தில் முக்கியமாக மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. கண்ணில் பெரிதாக வெண்மையாகக் காணப்படும் பகுதி “ஸ்க்லேரா (Sclera) என்றும் அடுத்த சற்று சிறிதாக அமைந்துள்ள கருமையான, வட்டமான பகுதி விழிவெண்படலம் (Cornea) என்றும் விழிவெண்படலத்தின் மையத்திலுள்ள சிறிய புள்ளியளவிலான மணி கண்மணி (Pupil) என்றும் அழைக்கப்படுகின்றன. அநேகமானவர்களுக்கு இந்த விழிவெண்படலப் பகுதி கருப்பு நிறமுடையதாகவே காணப்படுகின்றது. ஆனால் சிலரது விழிவெண்படலம் நீல நிறமாகவும் கபில நிறத்திலும் இருக்கும். கண் மாற்றுச் சத்திர சிகிச்சை செய்வதென்பது முழுக் கண்ணையும் கலற்றி வேறு கண் மாற்றுவதல்ல. கண்ணில் உள்ள கண்மணி (Pupil) யை மாத்திரம் மாற்றுவதாகும்.

சிசு தாயின் கர்ப்பப்பையில் வளரும் 42 ஆம் நாளிலேயே கண் எளிமையான வடிவில் உருவாகி விடுகின்றது. ஆனால் 28 ஆம் வாரத்தில்தான் கண் விழித்திரை (சுநவiயெ) வெளிச்சத்தை உணரும் தன்மையையும் பார்க்கும் ஆற்றலையும் பெறுகின்றது.

கவலை மேலீட்டினாலோ அல்லது அழுகையினாலோ அல்லது சந்தோசத்தின் உச்சகட்டத்தின் போது ஏற்படும் ஆனந்தத்தினாலோ அல்லது கண்ணில் ஏதும் தூசு துணிக்கைகள் சென்றாலோ உடனே எம் கண்கள் கண்ணீரைச் சொறிவதனைப் பார்க்கின்றோம். இதுபோன்ற நேரங்களில் கண்ணின் மேற்பகுதியில் ஓரத்தில் அமைந்துள்ள கண்ணீர் சுரப்பி (Tear Gland) கண்ணீரை சுரக்கின்றது. எமது கண்களை பாதுகாக்கவும் சுத்தம் செய்யவுமாக ஒரு நாளைக்கு இக்கண்ணீர் சுரப்பி ½g கண்ணீரைச் உற்பத்திசெய்கின்றது.

அல்லாஹ் எமது கண்களை மேலும் கீழுமாகவும் இடது வலதாகவும் சுழற்ற முடியுமான விதத்தில் படைத்துள்ளமை ஒரு அருட்கொடையாகும். கண்ணுடன் பிணைக்கப்பட்டுள்ள ஆறு கண்தசைகளின் உதவியுடனே எம்மால் இதனைச் செய்ய முடிகின்றது. இதுவரை எமது கண்களின் இயல்புகளைப் பற்றிப் பார்த்தோம் இனி கண்ணின் முக்கியமான தொழிற்பாட்டைப் பற்றி சற்று நோக்குவோம். 
கண்ணின் முக்கிய தொழிற்பாடு
எமது சூழலை நாம் நோட்டமிட்டால் அங்கு பல்வேறு வடிவங்களையுடைய, பல நிறங்களிலான, சமீபத்திலும் தூரத்திலுமாக பல பொருட்களைக் காண்கின்றோம். அப்பொருட்களின் தோற்றம் ஒளிக்கதிர் வடிவில் விழிவெண்படலம் (Cornea), கண்மணி (Pupil), கண்வில்லை (Lens) என்பவற்றினூடாக கண்ணில் உட்சென்று கண் விழித்திரையில் (Retina) தலைகீழாக விழுகின்றது. மருத்துவத் துறையில் கண் விழித்திரை பற்றியும் அதன் தொழிற்பாடுகள் மற்றும் பயன்பாடுகள் பற்றியும் முதன் முதலில் விளக்கிக் கூறியவர் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மருத்துவ மேதை இப்னு ருஷ்த் அவர்களாவார்.

விழித்திரையில் தலை கீழாகப் பதியப்பட்ட பொருளின் ஒளிக்கதிர்கள் அதிலுள்ள Cones மற்றும் Rods எனும் ஒளியுணர்வாங்கிக் கலங்களால் இரசாயன சமிக்ஞைகளாக (Electrical Signals) மாற்றப்பட்டு மூளையின் பிற்பகுதியில் உள்ள Primary Visual Cortex (PVC) என்பதன் பால் கொண்டுசெல்லப்படுகின்றன. PVC என்பது மூளையில் உள்ள 2.5mm தடிப்புடைய ஆறு படைகளாலான 100 மில்லியனுக்கும் அதிகமான Neurons எனும் நரம்புக்கலங்களாலான ஒரு பகுதியாகும். கண்ணிலிருந்து மூளைக்கு இரசாயன சமிக்ஞைகளைக் கடத்தும் நரம்புக் கலங்கள் எக்கணப் பொழுதிலும் பத்து மில்லியனுக்கும் அதிகமான இரசாயன சமிக்ஞைகளை மூளைக்குக் கடத்தும் ஆற்றல் கொண்டவையாகவே அல்லாஹ் அவற்றைப் படைத்துள்ளான்.

அமெரிக்காவின் நரம்பியல் ஆய்வுக் கல்லுரியொன்று பார்வை நரம்பு தொடர்பாகவும் சிந்தனை நரம்புதொடர்பாகவும் வெளியிட்ட ஒரு ஆய்வு முடிவு இங்கு நோக்கத்தக்கது. ஆண்களது மூளையில் ஒளிக்கதிர்களின் இரசாயன சமிக்ஞைகளைக் கடத்துவதற்கென்று ஒரு நரம்பும்  சிந்தனையைக் கடத்துவதற்கென்று ஒரு நரம்புமாக இரண்டு நரம்புகள் காணப்படுகின்றன. எனவே இச்செயற்பாடு ஆணில் சிறப்பாக நடக்கின்றது. ஆனால் ஒரு பெண்ணிடம் இவ்விரண்டையும் செய்வதற்கு ஒரு நரம்பே காணப்படுகின்றது. எனவே சிந்திப்பதிலும் கிரகிப்பதிலும் சற்று சிக்கலும் தெளிவின்மையும் ஏற்பட வாய்ப்புள்ளது என அவ்வாய்வு கூறுகின்றது. இஸ்லாம் சாட்சி கூறும் விடயத்தில் ஒரு ஆணுக்கு இரண்டு பெண்கள் என்ற அடிப்படையில் கொள்வதற்கு இதுகூட ஒரு காரணமாக இருக்கலாம்.

கண்ணின் தொழிற்பாட்டிலும் பார்வைப் புலனிலும் உள்ள இறை வல்லமையை விளங்க அதனுடன் சேர்த்து மூளையின் பார்வைப் பகுதிகளையும் சற்று விளங்க முயற்சிப்போம். 
மூளையின் பார்வைப் பகுதி

விழித்திரையில் தலைகீழாக விழும் ஒரு பொருளின் உருவத்தை மூளை அதன் சரியான தோற்றத்தில் சீராக காட்டுவதோடு மற்றுமொரு ஆச்சரியமான, நுணுக்கமான, இதுவரை விஞ்ஞானிகளாலும் அறிய முடியாதுள்ள ஒரு மர்மமான விடயம் நிகழ்கின்றது. வல்லவன் அல்லாஹ்வே அதனை அறிந்தவன்.

நீங்கள் காற்றில் அசைந்தாடும் ஒரு பூச்சாடியை சற்று உற்றுப் பாருங்கள். அப் பூச்சாடியின் நிறம், அதன் இரு பரிமாண அல்லது முப்பரிமான வடிவம், அசைவு, அதற்கும் உங்கள் கண்களுக்குமிடையில் உள்ள தூரம் போன்ற பல்வேறு தகவல்களை கண்களுடாக உங்கள் மூளை வௌவ்வேறு பகுதிகளில் பிரித்தறிந்து சேமித்துக்கொள்கின்றது. பின்பு வௌவ்வேறு பகுதிகளில் சேமித்துக்கொண்ட குறித்த சாடியின் தகவல்கள் யாவும் மூளையின் அறியப்படாத ஒரு இடத்தின் செயற்பாட்டினால் ஒன்று சேர்க்கப்பட்டு இறுதி வடிவம் வழங்கப்பட்டு சரியான தோற்றத்தில், அதே நிறத்தில், அதே அசைவுகளோடு எமக்குக் காட்சிப்படுத்தப்படுகின்றன.

இத்தகவல்கள் யாவும் எங்கு எவ்வாறு ஒன்று சேமிக்கப்பட்டு இறுதி வடிவம் கொடுக்கப்படுகின்றன என்பதுதான் விஞ்ஞானிகளுக்கே புரியாத புதிராக உள்ளது. David H.Huble, Torston N.Wiesel போன்ற நரம்பியல் விஞ்ஞானிகளையே ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது. மனிதனைப் பற்றி மனிதனால் கூட சரியாக விளங்கி அறிய முடியாதபோது எவ்வாறு தனக்கும் பிறருக்கும் அவனல் வாழ்க்கைக்கான வழிகாட்டுதலை வழங்க முடியும்.

தற்போது அல்லாஹ்வின் படைப்பாற்றலின் மகிமையைச் சற்று அவதானிப்போம்.

உங்கள் கண்களைச் சிமிட்டியவாறே சற்று நேரத்திற்கு அங்குமிங்கும் பார்வையைச் செலுத்துங்கள்.  உங்கள் பார்வைக்குப் பட்ட காட்சிகள் எவ்வாறு இருந்தன? சீராக இருந்தனவா அல்லது தலைகீழாக இருந்தனவா? அல்லது அக்காட்சிகளைக் கிரகித்துக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டதா? அனைத்தும் சீராகவும் நேர்த்தியாகவும் தான் நடந்திருக்கும்.  நாம் ஒரு பொருளைப் பார்த்ததும் இதுவரை நாம் கற்ற அனைத்துச் தொழிட்பாடுகளினதும் பின்புதான் அதன் முழுத்தோற்றமும் உங்கள் கண்களுக்குத் தென்படுகின்றது. அப்படியாயின் எவ்வளவு விரைவாக எமது கண்கள் செயற்படுகின்றன என்று சற்று சிந்தியுங்கள். 
கண்ணைப்பற்றியும் அதன் தொழிற்பாடுகள் பற்றியும் இதுவரை நான் எத்தனையோ வரிகளில் விளக்கிவிட்டேன். இதுகூட முழுமையான விளக்கமல்ல. ஆனால் கண்கள் இவ்வனைத்துத் தொழிற்பாடுகளையும் 0.1 வினாடிகளில் செய்து முடிக்கின்றது. உலகில் அறிமுகமாகியுள்ள அதி நவீன Sybershot Digital கமாராக்களினால் கூட இவ்வளவு விரைவாக படம்பிடிக்கமுடியாது.

அல்லாஹ்வின் படைப்பாற்றலின் வல்லமையைப் பார்த்தீர்களா? அவனது படைப்புகளில் காணப்படும் நுற்பமும் நேர்த்தியும் ஒழுங்குகளும் அவை அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று அதன்படி செயற்படுகின்றன என்பதை உணர்த்துகின்றன. அல்லாஹ் கூறுகின்றான்
“உங்களுக்குச் செவிப் புலனையும், பார்வைகளையும் இதயங்களையும் அவனே அமைத்தான். (எனினும்) நீங்கள் மிகக் குறைவாகவே (அவனுக்கு) நன்றி செலுத்துகின்றீர்கள்.” (32:09)

உங்கள் கருத்து:

1 comments:

Anonymous said...

அஸ்ஸ‌லாமு அலைக்கும்.

இஸ்லாமிய‌ச் ச‌கோத‌ர‌னுக்கு,

க‌ண்ட‌தே காட்சி கொண்ட‌தே கோல‌ம் என் வாழும் என் இளைய‌ ச‌மூக‌த்தில், இஸ்லாத்திற்காய் ஒரு விட‌லைக்கூட‌ அசைக்காத‌ ம‌னித‌ர்க‌ளுக்கு ம‌த்தியில் ப‌ர்ளு கிபாயாவான‌ ஒரு க‌ட‌மையை செய்து கொண்டிருக்கும் உங்க‌ளை பெறுமையுட‌ன் நோக்குகின்றேன்.

உண்மையில் உங்க‌ள் ஆக்க‌ங்க‌ள் அறிவு பூர்வ‌மான‌தாக‌வும், ஆக்க‌ பூர்வ‌மான‌தாக‌வும் உள்ள‌து.இன்று தான் இர‌ண்டாவ‌து நாளாக‌ உங்க‌ள் த‌ள‌த்தில் வ‌ல‌ம் வ‌ருகிறேன். அத‌ற்குள் ப‌டித்த‌தில் பிடித்த‌வை ப‌ல‌.உண்மையில் அருமையான‌ ஆக்க‌ங்க‌ள். நேற்று வாசித்த "அமெரிக்க ஐரோப்பிய உற்பத்திகளில் பன்றிக்கொழுப்பு"

என்ற‌ ஆக்க‌ம் மிக‌வும் ப‌ய‌னுள்ள‌து. இப்ப‌டி ஒவ்வொரு ஆக்க‌த்திற்கும் நான் விம‌ர்ச‌ன‌ம் எழுதினால் உங்க‌ளுக்கு அழுப்புத்த‌ட்டும் என‌வே "என் க‌ண்ணில்" இருந்து, வ‌ந்து என்னுள் ச‌ங்க‌மித்த‌ வ‌ரிக‌ளை முற்றுப்புள்ளி இட்டு நிறுத்திக்கொள்கிறேன்.

جزاكم الله خيرا في الدارين

shadha

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...