"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

27 April 2011

பிரபஞ்சத்தின் பிரம்மாண்டம்

யாதுமே இல்லாதிருந்து பின்பு Cosmic agg ஆக உருவாகி அதனுள் ஏற்பட்ட வெப்ப அழுத்தத்தின் காரணமாக வெடித்துச் சிதறியதில் இருந்து (Big Bang) இன்று வரை இக்கணப்பொழுது வரை இப்பிரபஞ்சம் விரிந்துகொண்டேதான் செல்கின்றது. ஒளி செக்கனுக்கு 3 இலட்சம் கி.மீ. வேகத்தில் பயணிக்கின்றது. ஆனால்  இப்பிரபஞ்சம் ஒளியையும் விட வேகமாக விரிவடைகின்றது என்பதனை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதனை அல்குர்ஆன் பின்வுருமாறு கூறுகின்றது.
 (எவரது உதவியுமின்றி) எம் கைகளினாலே நாம் வானத்தை அமைத்தோம். மேலும் நாம் அதனை விசாலப்படுத்துகின்றோம். (51:47)
விண்ணியல் விஞ்ஞானத்தின் கணிப்பின்படி இப்பிரபஞ்சத்தில் 300 பில்லியனுக்கும் அதிகமான பால்வீதிகள் காணப்படுகின்றன. எமது சூரிய மண்டலம் அமைந்துள்ள பால்வீதியில் மாத்திரம் 2000 இற்கும் மேற்பட்ட வெல்லுடுத் தொகுதிகள் (Galaxy) காணப்படுகின்றன. இதில் 100 பில்லியனுக்கும் அதிகமான நட்சத்திரங்கள் அமைந்துள்ளன.
சூரியனின் விட்டம் 13,91>000 km (சுமாராக 1.4 மில்லியன்) களாகும். Rigal எனும் நட்சத்திரம் எமது சூரியனை விட 50,000 மடங்கு பெரியது. Hyper gaint cygnus எனும் நட்சத்திரம் சூரியனைவிட 810,000 மடங்கு பெரியது. இவ்வாறு சூரியனை விடவும் இன்னும் பிரம்மாண்டமான நட்சத்திரங்கள் விண்வெளியில் உள்ளன. அவற்றில் சாதாரணமான ஒன்றுதான் எமது சூரியன்.
அவுஸ்ரேலிய விண்ணியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி பூயில் உள்ள கடற்கரைகளில் காணப்படுகின்ற மணற்துணிக்கைகளின் எண்ணிக்கையைவிடவும் விண்ணில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகமாகும். சூரியன் இம்மணற்துணிக்கைகளில் ஒன்றே! என்கின்றனர்.
ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு பால்வீதியும் மற்றொன்றை விட்டு ஒளியாண்டளவு தூரத்திலேயே அமைந்துள்ளன. சூரியன் வருடத்துக்கு 9,370,800,000,000 கி.மீ வேத்தில் பயணிக்கின்றது. இவ்வாறே ஒவ்வொரு நட்சத்திரங்களும் சூரியனைவிடவும் அதிக கதியில் பயணிக்கின்றன. கோள்களும் பயணிக்கின்றன. கெலக்ஸிகளும் பால்வீதிகளும் இவ்வாறுதான் விண்ணில் பயணித்துக்கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று மோதாதவிதத்தில் பயணிக்கும் அளவுக்கு இப்பிரபஞ்சம் எவ்வளவு விசாலமாக இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.
ஒரு கருந்துளை 1000 கணக்கான நட்சத்திரங்களுக்கு நிகரான சக்தியைக் கொண்டது. Super Nova வெளிப்படுத்தும் சக்தி 100 சூரியன்களுக்கு சமனானது. Quaser கள் 100 பில்லியன் பால்வீதிகளுக்கு சமனான சக்தியை வெளிப்படுத்துகின்றன. இவ்வாறு இப்பிரபஞ்சத்தின் விசாலம் சொல்லி முடிக்க முடியாதளவு மிக மிக மிகப்பிரம்மாண்டமானது. இவை அனைத்துக்கும் மத்தியில்தான் சிறு புள்ளியாக எமது பூமி காணப்படுகின்றது.
இப்பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தைப் பற்றி சிந்திக்கும்போது, அதில் காணப்படும் நுட்பங்களை ஆராயும்போது இதனைப் படைத்த வல்லவனின் மகிமையை உணரும் உள்ளம் உங்களை அறியாமலேயே ஸுப்ஹானல்லாஹ் (அவன் மிகத் தூய்மையானவன்) சொல்வதனை உணர்வீர்கள்.
நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியைப் படைத்ததிலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அவர்கள் நின்ற நிலையிலும் இருந்த இருப்பிலும் தமது விலாப் புறங்களின் மீது சாய்ந்தும் அல்லாஹ்வையே நினைத்து வானங்கள் மற்றும் பூமியின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து எங்கள் இரட்சகா! நீ இவற்றை வீணுக்காகப் படைக்கவில்லை. நீ மிகத் தூய்மையானவன். நரக நெருப்பை விட்டும் எங்களைக் காத்தருள் என்று கூறுவார்கள். (3:190,191)
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...